இயக்குனர் லோகேஷின் LCU வில் இணைகிறாரா ஜெயம் ரவி?

இயக்குனர் லோகேஷின் LCU வில் இணைகிறாரா ஜெயம் ரவி?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் மற்றும் முன்னணி ஹீரோ ஜெயம் ரவி இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிஸியான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘பொன்னியின் செல்வன்’ நடிகருக்கு ஒரு ஸ்கிரிப்ட் விவரிக்கச் சென்றதாக கூறப்படுகிறது.

‘தளபதி 67’ படத்தின் நடிகர்களுடன் ரவி இணைந்தாரா அல்லது லோகேஷ் தயாரிப்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இது எதிர்காலத்தில் லோகேஷ் இயக்க இருக்கும் ‘கைதி 2’, ‘விக்ரம் 3’ போன்ற படத்திற்கான பேச்சு வார்த்தையாக கூட இருக்கலாம் . அதிகாரப்பூர்வ வார்த்தைக்காக காத்திருப்போம்.

Breaking! Jayam Ravi joins LCU?

22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விஜய் ; ‘வாரிசு’ படத்தின் புதிய அப்டேட்..?

22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விஜய் ; ‘வாரிசு’ படத்தின் புதிய அப்டேட்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் ‘வாரிசு’.

இப்படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள்.

இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வருகிறது.

இந்த படத்தை 2023 பொங்கல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் தனது நடிப்பு வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் பெரும்பாலான திரைப்படங்களில் அவரது உண்மையான பெயரை தனது திரைப் பெயராக வைத்திருந்தார்.மேலும், அவர் கடைசியாக 2000 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான ‘பிரியமானவளே’ திரைப்படத்தில் தனது உண்மையான பெயரை திரைப்பெயராக பயன்படுத்தினார்.

ஆனால் 22 ஆண்டுகளுக்குப் பிறகு, விஜய் தனது உண்மையான பெயரை ‘வரிசு’ படத்தில் திரைப் பெயராகப் பயன்படுத்த முடிவு செய்துள்ளார்.

இப்படத்தில் அவரது கதாபாத்திரத்தின் பெயர் ‘விஜய் ராஜேந்திரன்’ என்று கூறப்படுகிறது.

இப்படத்தின் டிரைலர் இன்று (ஜனவரி 4) மாலை 5 மணிக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது படக்குழு.

Varisu movie Vijay’s character name gets revealed

ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்? – ‘துணிவு’ vs ‘வாரிசு’ ஒரே நாளில் மோதவில்லையா?

ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்? – ‘துணிவு’ vs ‘வாரிசு’ ஒரே நாளில் மோதவில்லையா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு அஜித் மற்றும் விஜய் நடித்த படங்கள் ஒன்றாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டதில் இருந்தே ‘துணிவு vs வாரிசு’ அனைத்து சமூக ஊடக தளங்களிலும் அதிக ட்ரெண்டிங்கில் உள்ளது.

2 மணி நேரம் 25 நிமிடங்கள் ஓடக்கூடிய ‘துணிவு’ படம் ஜனவரி 11ஆம் தேதி புதன்கிழமை வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாரிசு படம் திட்டமிட்டபடி ஜனவரி 12 வியாழன் அன்று உலகம் முழுவதும் திரைக்கு வரும் மற்றும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜனவரி 4 ஆம் தேதி டிரெய்லர் வெளியீட்டில் எதிர்பார்க்கப்படுகிறது.

Breaking! Sudden change in release dates? – No ‘Thunivu’ vs ‘Varisu’ same day clash?

கோல்டன் குளோப்ஸ் விழாவில் திரையிடப்படும் ‘ஆர்ஆர்ஆர்’

கோல்டன் குளோப்ஸ் விழாவில் திரையிடப்படும் ‘ஆர்ஆர்ஆர்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோல்டன் குளோப்ஸ் திரையிடலின் ஒரு பகுதியாக லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள TCL சீன திரையரங்கில் ‘RRR’ திரையிடப்பட உள்ளது .

எஸ்.எஸ்.ராஜமௌலி, ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் மற்றும் எம்.எம்.கீரவாணி ஆகியோர் இதில் பங்கேற்க இருக்கிறார்கள் .

மேலும் ஐமேக்ஸ் திரையிடல் ஜனவரி 9ஆம் தேதி நடைபெறவுள்ளது.

2023 கோல்டன் குளோப்ஸ் ஆங்கிலம் அல்லாத பிற மொழித் திரைப்படத் திரையிடல் ஆர்வத்துடன் கவனிக்கப்பட கூடியதாக உள்ளது .

80வது கோல்டன் குளோப் விருதுகள் ஜனவரி 11ம் தேதி காலை 6:30 மணிக்கு நடைபெற உள்ளது.

உங்களை விடாது சினிமா.. ‘பிகினிங்’ ஜெகன் ஜொலிப்பார்..; லிங்குசாமி நம்பிக்கை

உங்களை விடாது சினிமா.. ‘பிகினிங்’ ஜெகன் ஜொலிப்பார்..; லிங்குசாமி நம்பிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திருப்பதி பிரதர்ஸ் சார்பில் இயக்குநர் லிங்குசாமி வெளியிடும் படம் #பிகினிங். ஆசியாவின் பிளவு திரையில் (SPLIT SCREEN) எடுக்கப்பட்ட திரைப்படம். இப்படத்தை அறிமுக இயக்குநர் ஜெகன் விஜயா இயக்க, வினோத் கிஷன், கௌரி மற்றும் பலர் நடித்திருக்கிருக்கிறார்கள்.

இன்று 2023 ஜனவரி 3ஆம் தேதி இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் பேசியதாவது:

இயக்குநர் லிங்குசாமி பேசும்போது…

இப்படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரும் அதாவது, ஒளிப்பதிவாளர் இந்த லென்ஸை உபயோகப்படுத்தினேன் என்றார், கலை இயக்குநர் புதியதாக ஒன்றை பயன்படுத்தினோம் என்றார்.

அது தான் புதியதாக படம் எடுப்பவர்களுக்கு கிடைக்க வேண்டிய அனுபவம். ஆனந்தம் படம் எடுத்தபோது என்ன உணர்ந்தேனோ, அதை இந்த படத்திலும் உணர்கிறேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த படத்தை வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

மிக சவாலாக இந்த படத்தை எடுத்திருக்கிறார்கள் என்பது நன்றாக தெரிகிறது. மிகவும் திறமையான இயக்குநர், நுணக்கமான அழகான இயக்குநர் என்பது அவரது பேச்சிலேயே தெரிகிறது.

இப்படம் எடுப்பதற்கு ஜெகன் அம்மா தான் நிலத்தை விற்று பணம் கொடுத்தார் என்று தெரிந்ததும், இப்படத்தின் ஆதரமான அடித்தளம் அங்கேயே தொடங்கிவிட்டது.

உனது அம்மாவும், எனது அம்மாவும் உணர்வு வேறு வேறு அல்ல. ஒரு சரியான நபருக்கு துணையாக இருக்கிறோம் என்று மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆகையால், அவ்வளவு சாதாரணமாக இந்த துறையை விட்டு செல்ல மாட்டீர்கள், இந்த சினிமா துறையும் உங்களை விடாது.

இப்படத்தை பிருந்தா சாரதியும், எடிட்டர் லெனினும் பார்த்து விட்டு, இது விருது படமோ, ஓடிடி படமோ கிடையாது.

திரையரங்கிற்கான படம் என்றார்கள். அதை 3 திரையரங்கில் உணர்ந்தேன். அதேபோல், இப்படம் வெளியானதும் இருக்கும் என்று நம்புகிறேன். பிகினிங் படத்தைத் தொடர்ந்து திருப்பதி பிரதர்ஸ் மற்றும் மாஸ்டர்பீஸ்-ம் பல நல்ல படங்களை வெளியிடும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல், இவர்களைப் போல் சரியான ஆட்கள் இருந்தால் நிச்சயம் அவர்களுக்கு ஆதரவளிப்பேன். சினிமா என்பது ஒரு கூட்டு முயற்சிதான். என் பின்னாடி 40 பேர் இருக்கிறார்கள். அனைவரும் ஒரே எண்ணத்தில் சேர்ந்த கூட்டு முயற்சி தான் வெற்றியாகும். இதுவரை வெற்றிபெற்ற பெரிய கலைஞர்களுக்கும் அது நிகழ்ந்துள்ளது.

இப்படத்தில் நடித்த அனைவரையும் நன்றாக நடித்திருக்கிறீர்கள். பாராட்டினால் எல்லோரும் இயக்குநர் தான் காரணம் என்று கூறுவார்கள். இயக்குநர் அனைவரிடமும் நன்றாக வேலை வாங்கியிருக்கிறார்.

எதிர்காலத்திலும் என்னுடைய நிறுவன படங்களிலும் உங்களை பயன்படுத்துவேன்.

என் இயக்கத்தில் இரண்டு, மூன்று மாதங்களில் படப்பிடிப்பு ஆரம்பமாகும்.”

இவ்வாறு லிங்குசாமி பேசினார்.

Lingusamy confidence on Beginning Director Jagan

பாபநாசத்திற்கு பதிலாக உத்தம வில்லன்.; கமல் கொடுத்த க(ந)ஷ்டம்..; லிங்குசாமி ஒபன் டாக்

பாபநாசத்திற்கு பதிலாக உத்தம வில்லன்.; கமல் கொடுத்த க(ந)ஷ்டம்..; லிங்குசாமி ஒபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜெகன் இயக்கத்தில் வினோத், கௌரி கிஷன், ரோகிணி உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள படம் ‘பிகினிங்’.

இந்த படம் இந்தியாவின் முதல் பிளவுத் திரை (ஸ்பிலிட் ஸ்கிரீன் மூவி) எனக் கூறப்படுகிறது.

இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ள லிங்குசாமி இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார்.

அப்போது ‘உத்தம வில்லன்’ படத்தால் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் கமலுடன் ஏற்பட்ட பிரச்சினை குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு லிங்குசாமி பதில் அளித்ததாவது…

“முதலில் நாங்கள் முடிவெடுத்தது #பாபநாசம் தான். ஆனால், கமல் சார் ஆசைப்பட்டதால் ‘உத்தம வில்லன்’ படத்தை எடுத்தோம். அது அவருக்கும் தெரியும்.

உத்தமவில்லன் படத்தை திறமையாக, கடின உழைப்போடு தான் எடுத்தார்கள். ஆனால், அப்படம் மிகப்பெரிய பொருளாதார பின்னடைவை சந்தித்தது உண்மை தான்.

உத்தமவில்லன் படத்தின் நஷ்டத்தை ஈடுசெய்ய கமல் சார் ஒரு படம் நடித்து தருகிறேன் என்று கூறியிருக்கிறார்” என்றார்.

பிகினிங்

Lingusamy open talk about Kamal movie loss

More Articles
Follows