நயன்தாரா-அனிருத் கூட்டணியில் ரஜினி ரசிகன் *பிஜிலி ரமேஷ்*

coco posterநயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘கோலமாவு கோகிலா’ படத்தை நெல்சன் இயக்கியுள்ளார்.

லைகா தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் முக்கிய வேடங்களில் யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடிக்க, சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படத்தை வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெறும் ‘கபீஸ்கபா’ என்ற பாடலின் புரமோ வீடியோவை அனிருத் வெளியிட்டுள்ளார்.

இதில் சமீபகாலமாக யூ-டியூபில் மிகவும் பிரபலமான ரஜினி வெறியர் பிஜிலி ரமேஷ் நடனமாடியுள்ளார்.

அவருடன் லொள்ளு சபா மனோகர், தீப்பெட்டி கணேசன் ஆகியோரும் நடனமாடியுள்ளனர்.

இனி இந்த பாடலும் வைரலாகும் என்பதில் ஐயமில்லை.

Overall Rating : Not available

Latest Post