குடிபோதையில் கார் ஓட்டிய சக்தி; ரஜினிக்கு பி.வாசு எழுதின டயலாக் அவர் மகனுக்கு மேட்ச் ஆச்சே!

Big boss Actor Sakthi caught drunk and drive and arrested by policeரஜினி நடித்த மன்னன், சந்திரமுகி, உழைப்பாளி உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் பி.வாசு. இவரின் மகன் சக்தி. இவரும் ஒரு நடிகர் தான்.

நிறைய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சக்தி, தற்போது சில படங்களில் நாயகனாகவும் நடித்து வருகிறார்.

நினைத்தாலே இனிக்கும், ஆட்டநாயகன், சிவலிங்கா, 7 நாட்கள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

மேலும் அண்மையில் கமலின் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக் கொண்டார்.

இந்நிலையில் சென்னையில் மதுபோதையில் காரை ஓட்டி சென்ற இவர் விபத்து ஏற்படுத்தி உள்ளார்.

இதனையடுத்து அங்குள்ள பொதுமக்கள் இவரை பிடித்துள்ளனர்.

அப்போது நிதானமே இல்லாமல் இவர் இருந்துள்ளார்.

மேலும் இடுப்பில் இருக்கும் வேட்டி அவிழ்வது கூட தெரியாமல் மப்பில் இருந்துள்ளார்.

ஆனாலும் கூலிங் கிளாஸை மட்டும் சரியாக மாட்டிக் கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.

(பி.வாசு இயக்கிய மன்னன் படத்தில் ரஜினியை பார்த்து கவுண்டமணி ஒரு டயலாக் பேசுவார். இந்த பிரச்சினையிலும் எப்படிதான் இந்த உடைஞ்ச கூலிங் கிளாஸ போட்டுக் இருக்கியோ? அந்த டயலாக் தற்போது பி.வாசுவின் மகன் சக்திக்கு சரியாக மேட்ச் ஆனதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.)

இவரின் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இவரை கைது செய்துள்ளனர். பின்னர் வழக்கம்போல ஜாமீனில் விடுவித்துள்ளனர்.

Big boss Actor Sakthi caught drunk and drive and arrested by police

Overall Rating : Not available

Related News

ஏஆர். முருகதாஸ் இயக்கும் சர்கார் படத்தில்…
...Read More
பி.வாசு இயக்கத்தில் பிரபு தயாரிப்பில் ரஜினி,…
...Read More
  'பணக்காரன்', 'மன்னன்', உழைப்பாளி, சந்திரமுகி'…
...Read More
ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கவுள்ள படத்தை…
...Read More

Latest Post