தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஏஆர். முருகதாஸ் இயக்கும் சர்கார் படத்தில் விஜய் நடித்து வருகிறார்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
இப்படத்தை அடுத்த விஜய் யார் இயக்கத்தில் நடிக்க போகிறார்? என்ற கேள்வி நெடு நாட்களாக கோலிவுட்டில் வலம் வருகிறது.
இந்நிலையில் மீண்டும் அட்லியுடன் இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
ஏற்கெனவே இந்த கூட்டணி தெறி மற்றும் மெர்சல் ஆகிய வெற்றிப் படங்களை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விஜய்யின் 63வது படமாக உருவாகும் இப்படத்தை பிரபுவின் சிவாஜி புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் எனவும் கூறப்படுகிறது.
ஒருபுறம் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
அதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஜினியின் மன்னன், சந்திரமுகி, அஜித்தின் அசல் ஆகிய படங்களை தயாரித்த நிறுவனத்திற்கு வெகு நாட்களாக ஒரு படம் செய்ய வேண்டும் என விரும்பினாராம் விஜய். எனவே இந்த நிறுவனத்திற்கே கூடுதல் வாய்புள்ளதாக தெரிய வந்துள்ளது.
Thalapathy 63 likely to direct by Atlee produced by Sivaji Productions