ரஜினி-விஜயசாந்தி பாணியில் மோதும் சிவகார்த்திகேயன்-நயன்தாரா.?

ரஜினி-விஜயசாந்தி பாணியில் மோதும் சிவகார்த்திகேயன்-நயன்தாரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyan and Nayanthara movie one line story like Mannan movieபி.வாசு இயக்கத்தில் பிரபு தயாரிப்பில் ரஜினி, விஜயசாந்தி நடித்த படம் மன்னன்.

இப்படம் மாபெரும் வசூல் சாதனை புரிந்தது. இப்படத்தில் ரஜினியும் விஜயசாந்தியும் மோதும் காட்சிகள் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் தற்போது இதுபோன்ற கதைக்களம் சிவகார்த்திகேயன் படத்திலும் இருக்கிறதாம்.

ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் ராஜேஷ் இயக்கும் படத்தில்தான் இதுபோன்ற கதைக்களம் அமைக்கப்பட்டு உள்ளது.

இதில் நயன்தாரா நாயகியாக நடிக்கவுள்ளதாகவும் மன்னன் படத்தில் விஜயசாந்தி நடித்தது போன்று அவர் நடிக்கப்போவதாக செய்திகள் வந்துள்ளன.

இந்த படம் மன்னன் கதை போல் சீரியசாக இல்லாமல் காமெடியுடன் உருவாகிறதாம்.

Sivakarthikeyan and Nayanthara movie one line story like Mannan movie

மீண்டும் விஜய்சேதுபதியை இயக்கும் எஸ்.பி.ஜனநாதன்

மீண்டும் விஜய்சேதுபதியை இயக்கும் எஸ்.பி.ஜனநாதன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Sethupathi and SP Jananathan teams up again for new projectஇயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு ஆகிய தரமான படங்களை இயக்கியவர் எஸ்.பி.ஜனநாதன்.

இதில்புறம்போக்கு படத்தில் ஆர்யா, ஷாம், விஜய்சேதுபதி ஆகிய மூவரும் இணைந்து நடித்திருந்தனர்.

அந்த படத்திற்கு பின் மூன்று வருடங்களாக ஜனநாதன் எந்த படத்தையும் இயக்கவில்லை.

இந்நிலையில், மீண்டும் விஜயசேதுபதியிடம் ஒரு கதை சொல்லி கால்சீட் வாங்கியிருக்கிறாராம்.

இதில் பொதுவுடைமை பேசும் தோழர் வேடத்தில் விஜயசேதுபதி நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.

Vijay Sethupathi and SP Jananathan teams up again for new project

தவறு செய்பவர்களை களையெடுக்க ரஜினிகாந்த் அமைத்த டீம்

தவறு செய்பவர்களை களையெடுக்க ரஜினிகாந்த் அமைத்த டீம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini forms 6 member disciplinary panel for his Rajini Makkal Mandramஒரு பக்கம் சினிமா, மறுபக்கம் அரசியல் என அதிரடியாக செயல்பட்டு வருகிறார் ரஜினிகாந்த்.

ஜீன் மாதம் முதல் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

எனவே தற்போது மாவட்டம் மற்றும் கிளை வாரியாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை நியமித்து வருகிறார் அவர்.

இதுவரை அமைக்கப்பட்ட குழுவினர் பற்றி பல தரப்பிலிருந்தும் புகார்கள் வரத் தொடங்கியுள்ளன.

இதனால் தவறான நபர்கள், தவறு செய்கிறவர்களை பற்றி விசாரித்து களையெடுக்க ஒழுங்கு நடவடிக்கை குழுவை அமைத்துள்ளார் ரஜினிகாந்த்.

இந்த குழுவில் டாக்டர் இளவரசன், ராமதாஸ், என்.கோவிந்தராஜ், கே.கே.துரைராஜ், பரமேஸ்வரன் பகவான், வி.எம்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

புகார்கள் மற்றும் கருத்துக்களை இந்த குழுவினரிடம் மன்றத்தினர் தெரிவிக்கலாம்.

இந்த குழு மாதம் ஒரு முறை கூடி விசாரித்து நடவடிக்கை எடுக்கும்.

இந்த தகவல் ரஜினி மக்கள் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rajini forms 6 member disciplinary panel for his Rajini Makkal Mandram

ஜி.வி.பிரகாஷ்-ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் 3 ஹீரோயின்கள்

ஜி.வி.பிரகாஷ்-ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் 3 ஹீரோயின்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

3 heroines teams up with GV Prakash and Adhik Ravichandrans projectஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘செம’ படம் இந்த மே மாதம் 25ஆம்ட தேதி வெளியாகவுள்ளது.

இதனையடுத்து அவரது நடிப்பில் ‘4ஜி’, ‘ஐயங்கரன்’, ‘அடங்காதே’, ‘குப்பத்துராஜா’, ‘100% காதல்’, ‘சர்வம் தாளமயம்’ ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

இந்த படங்களை அடுத்து ஏஏஏ புகழ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார் ஜிவி. பிரகாஷ்.

இப்படத்தை ஷங்கரின் 2.0 பாணியில் ‘3 டி’ தொழில் நுட்பத்தில் உருவாக்கி வருகின்றனர்.

இதில், ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக அமிராதஸ்தர் நடிக்கிறார். இவர் அனேகன் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்திருந்தார்.

இந்நிலையில் மற்ற இரண்டு முக்கிய கேரக்டர்களில் சோனியா அகர்வாலும்,
சஞ்சிதா ஷெட்டியும் இணைந்துள்ளனர்.

3 heroines teams up with GV Prakash and Adhik Ravichandrans project

பள்ளி புத்தகத்தில் இளையராஜா-ஏ.ஆர்.ரஹ்மான் பற்றிய பாடங்கள்

பள்ளி புத்தகத்தில் இளையராஜா-ஏ.ஆர்.ரஹ்மான் பற்றிய பாடங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Music composers Ilayaraj and ARRahman lessons in TN School Booksதமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் பள்ளிப் பாடத்திட்ட நூல்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நூல்களை சில தினங்களுக்கு முன் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்தார்.

1,6,9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு மட்டும், வரும் கல்வி ஆண்டில், புதிய பாடத்திட்டத்தின்படி புத்தகங்கள் அறிமுகமாகி உள்ளன.

இதில், 11-ம் வகுப்புக்குரிய ‘பொது தமிழ்’ பாடப்புத்தகத்தில் ‘இசைத் தமிழர் இருவர்’ என்ற தலைப்பில், ஒரு பாடம் உள்ளது.

சிம்பொனி தமிழர்’ என்ற பெயரில் இளையராஜா குறித்த பாடமும் ‘ஆஸ்கர் தமிழர்’ என்ற பெயரில் ஏ.ஆர்.ரஹ்மான் குறித்த பாடமும் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Music composers Ilayaraj and ARRahman lessons in TN School Books

தணிக்கை குழுவினரிடம் சிக்கி தவித்த கமலின் விஸ்வரூபம்-2

தணிக்கை குழுவினரிடம் சிக்கி தவித்த கமலின் விஸ்வரூபம்-2

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

CBFC orders 17 cuts for Kamalhaasans Vishwaroopam 2கமல்ஹாசன் நடித்து தயாரித்து இயக்கியுள்ள ‘விஸ்வரூபம்-2’ படம் விரைவில் வெளியாகவுள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் இப்படம் வெளியாகிறது.

இப்படத்தில் பூஜாகுமார், ராகுல்போஸ், ஆண்ட்ரியா, சேகர் கபூர் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் முதல்பாகம் பல எதிர்ப்புகளில் சிக்கி தவித்தது.

அதன் பின்னர் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிய பிறகே வெளியானது.

முதல் பாகத்தை போலவே தற்போது ‘விஸ்வரூபம்-2’ படமும் தணிக்கை குழுவினரின் கெடுபிடியில் சிக்கியுள்ளது.

இதனால் 17 சர்ச்சை காட்சிகளை நீக்கி யூஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

இதற்கு படக்குழுவினர் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

CBFC orders 17 cuts for Kamalhaasans Vishwaroopam 2

More Articles
Follows