‘பைரவா’ படத்திற்கு தடை… விஜய்க்கு அடுத்த தலைவலி

vijay bairavaaஅண்மை காலமாக தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகும் சமயத்தில் வழக்கு, தடை என பல செய்திகள் வெளியாகின்றன.

இதில் விஜய் படங்களுக்கு கூடுதலாகவே எதிர்ப்புகள் வருகின்றன.

இந்நிலையில், சேலத்தைச் சேர்ந்த பொருள்தாஸ், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நாய் ஒன்றை முதன்மை கதாபாத்திரமாக வைத்து ஒரு அனிமேஷன் கதையை தயாராக வைத்திருக்கிறாராம்.

மேலும் அதை பைரவா என்ற பெயரில் தயாரிக்க முடிவு செய்துள்ளதாகவும், கடந்த 2015ஆம் ஆண்டு பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையில் விஜய் படத்துக்கும் பைரவா என பெயர் சூட்டப்பட்டுள்ளதால், விஜயா புரொடக்ஷனுக்கு நோட்டீஸ் அனுப்பியதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

தனது கோரிக்கையை படத் தயாரிப்பு நிறுவனம் ஏற்காததால், தனது படத் தலைப்பான பைரவாவை பயன்படுத்த தயாரிப்பாளர் ரவிச்சந்திரனுக்கு தடை விதிக்க வேண்டுமெனவும் மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றம், மனுதாரர் கடைசி நேரத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால், எதிர் மனுதாரரின் கருத்தை கேட்காமல் இடைக்கால தடை விதிக்க முடியாதென தெரிவித்தது.

மேலும், இந்த வழக்கில் பைரவா படத்தயாரிப்பாளர் இன்று பதில் மனு தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தது.

Bairavaa movie title case at High Court

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Latest Post