பான் இந்தியா படம் தயாரித்து இயக்கும் அர்ஜூன்.; ஹீரோ & ஹீரோயின் யார்.??

பான் இந்தியா படம் தயாரித்து இயக்கும் அர்ஜூன்.; ஹீரோ & ஹீரோயின் யார்.??

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆக்ஷன் கிங் அர்ஜுன் தனது ஸ்ரீ ராம் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் மூலம் தயாரிக்கும் 15 வது படத்தை அவரே கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.

தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாக்க இருக்கிறார்.

கன்னட சினிமாவில் பிரபல நடிகரான உபேந்திராவின் அண்ணனின் மகனான நிரஞ்சன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

கதாநாயகியாக அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் நடிக்கிறார். மற்றும் சத்யராஜ், பிரகாஷ் ராஜ், ஜெயராம் முக்கிய கதாபாதிரத்தில் நடிக்க இவர்களுடன் அர்ஜுனும் இணைந்து நடிக்கிறார்.

ஒளிப்பதிவு – பாலமுருகன்.
உலகமுழுக்க பிரபலமான கே. ஜி. எப் படத்தின் இசையமைப்பாளர் ஹித்தேஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் அர்ஜுன்.

படப்பிடிப்பு இன்று முதல் ஹைதராபாத்தில் துவங்கியது.

சத்யராஜ் மற்றும் நாயகன் நிரஞ்சன், நாயகி ஐஸ்வர்யா அர்ஜுன் நடிக்கும் காட்சிகள் பரபரப்பாக படமாக்கப்பட்டு வருகிறது.

Action king Arjuns New Pan India movie updates

நம்மை குலுங்கி சிரிக்க வைத்த இயக்குநர் சித்திக் மரணத்திற்கு திலையுலகம் அஞ்சலி

நம்மை குலுங்கி சிரிக்க வைத்த இயக்குநர் சித்திக் மரணத்திற்கு திலையுலகம் அஞ்சலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல மலையாள இயக்குனரான சித்திக் இஸ்மாயில் (வயது 63).

இயக்குனர் சித்திக் தமிழில் விஜய்- சூர்யா நடிப்பில் வெளியான ‘பிரண்ட்ஸ்’ திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

இதைத்தொடர்ந்து, ‘எங்கள் அண்ணா’, ‘சாது மிரண்டா’, ‘காவலன்’ படத்தையும் இயக்கியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக கல்லீரல் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார்.

நோய் தீவிரமடைந்ததையடுத்து கடந்த மாதம் கொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.  

அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதால் எக்மோ கருவி பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியானது.

இயக்குனர் சித்திக் விரைவில் குணமடைய வேண்டும் என பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சித்திக் நேற்று இரவு உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கூடுதல் தகவல்கள்…

1989 ஆம் ஆண்டில் முதல் மலையாள படத்தை இயக்கினார். 1984 ஆம் ஆண்டு சஜிதா என்ற பெண்ணை திருமணம் செய்தார் இந்த தம்பதியருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

2010 ஆம் ஆண்டில் மலையாளத்தில் திலீப் & நயன்தாரா நடித்த ‘பாடிகாட்’ என்ற படத்தை இயக்கினார். இதன் பின்னர் இதே படத்தை தமிழில் விஜய்யை வைத்து ‘காவலன்’ என்ற பெயரில் ரீமேக் செய்தார்.

அதன் பின்னர் ஹிந்தியில் 2011 ஆண்டில் ஹிந்தியில் சல்மான் கான் நடித்த பாடிகாட் என்ற படத்தையும் இயக்கி பாலிவுட்டில் நுழைந்தவர் சித்திக்.

2015 ஆம் ஆண்டில் மலையாளத்தில் பாஸ்கர் தி ராஸ்கல் என்ற படத்தை இயக்கியிருந்தார். இதில் மம்முட்டி நயன்தாரா ஜோடியாக நடித்திருந்தனர்.

இதே படத்தை தான் தமிழில் அரவிந்தசாமி மற்றும் அமலாபால் நடித்த ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ என்ற தலைப்பில் ரீமேக் செய்தார். இந்த படம் தமிழில் 2018 ஆம் ஆண்டில் வெளியானது.

இவர் மலையாளத்தில் இயக்கிய பல படங்கள் மற்ற மொழிகளில் ரீமேக் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2020 ஆம் ஆண்டில் மோகன்லால் வைத்து பிக் பிரதர் என்ற படத்தை இறுதியாக இயக்கி இருந்தார்.

malayalam director Siddique Ismail passes away

கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘SK21’ பட சூட்டிங் அப்டேட்

கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘SK21’ பட சூட்டிங் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன், ‘மாவீரன்’ படத்தை தொடர்ந்து தற்போது ‘எஸ்கே21’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை ‘ரங்கூன்’ படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.

இப்படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார்.

இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

‘எஸ்கே21’ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

‘எஸ்கே21’ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் இடைவெளி இல்லாமல் நடைபெற்று வருவதாகவும் இந்த மாதம் முழுவதும் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

மேலும், இப்படத்தின் ஒரு கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Sivakarthikeyan’s ‘SK21’ movie shooting update

இது ரீலு இல்ல ரியலு..; இந்திய ராணுவ சேவையில் நடிகர் அஜித்குமார்

இது ரீலு இல்ல ரியலு..; இந்திய ராணுவ சேவையில் நடிகர் அஜித்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் & பல்கலைக்கழக விமானவியல் துறை சார்பாக தக்சா நிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்திற்கு நடிகர் அஜித் ஆலோசகராக இருந்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

2018ல் தக்சா நிறுவனம் உலக அளவில் நடைபெற்ற ட்ரோன் போட்டியில் பங்கெடுத்தது. இந்தியாவின் சார்பில் அஜித்தை ஆலோசகராக கொண்ட தக்சா நிறுவனமும் தேர்வு செய்யப்பட்டது.

மேலும் மாநில அளவில் ட்ரோன் தயாரிப்பில் தக்சா நிறுவனம் கடந்த ஆண்டு மத்திய அரசுக்கு ட்ரோன்களை தயாரிக்கவும் தேர்வாகியிருந்தது.

இந்த நிலையில் இந்திய ராணுவத்திற்கு ரூ 165 கோடி மதிப்பிலான 200 ட்ரோன்களை தயாரித்து வழங்க ஒப்பந்தமாகியுள்ளது.

அடுத்த 1 ஆண்டில் இந்த ட்ரோன்கள் தயாரிக்கப்பட்டு இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கும் என கூறப்படுகிறது.

ட்ரோன்கள் தயாரிக்க இந்திய ராணுவத்துடன் இணைகிறார் நடிகர் அஜித்குமார். 165 கோடி ரூபாய் மதிப்பிலான ட்ரோன்களை இந்திய ராணுவத்திற்காக தயாரித்து வழங்கும் ஒப்பந்தத்தை அஜித் ஆலோசகராக இருக்கும் தக்ஷா குழு பெற்றுள்ளது.

அஜித்குமார்

Actor Ajith mentored Dhaksha to supply drones to Indian Army

80 நொடிகளுக்கு ராம்சரணின் இடைவிடாத நடனம்.; 25 பட பட்ஜெட் ஒரே பாட்டுக்கு செலவழித்த ஷங்கர்

80 நொடிகளுக்கு ராம்சரணின் இடைவிடாத நடனம்.; 25 பட பட்ஜெட் ஒரே பாட்டுக்கு செலவழித்த ஷங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் ஷங்கர் தற்போது ராம்சரண் நடிப்பில் ‘கேம் சேஞ்ஜர்’ படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் கியாரா அத்வானி,அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, சுனில், ஸ்ரீகாந்த், ஜெயராம், நவீன் சந்திரா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

‘கேம் சேஞ்ஜர்’ திரைப்படத்தில் நடிகர் ராம் சரண் 80 வினாடிகளுக்கு தொடர்ந்து நடனமாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இந்தப் படத்தின் பாடல் காட்சிகளுக்காக இயக்குனர் ஷங்கர், ரூ.90 கோடி செலவழிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Did Shankar spend 90 crores on ram charan’s Game Changer’s one songs alone?

நடிகர் விஜய் ராகவேந்திரா மனைவி மரணம்.; வெளிநாட்டில் என்ன நடந்தது.?

நடிகர் விஜய் ராகவேந்திரா மனைவி மரணம்.; வெளிநாட்டில் என்ன நடந்தது.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மாஸ் லீடன்’, ‘ஜானி’, ‘லால்குடி டேஸ்’ போன்ற கன்னடப் படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகர் விஜய் ராகவேந்திரா.

இவரது மனைவி ஸ்பந்தனா. இவர்கள் இருவருக்கும் கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

விஜய் ராகவேந்திரா- ஸ்பந்தனா தம்பதிக்கு சவுர்யா என்ற மகன் உள்ளார்.

விஜய் ராகவேந்திரா கன்னட நடிகர் ராஜ்குமார், புனித் குமாரின் பேரனானவர்.

நடிகர் விஜய் ராகவேந்திரா குடும்பத்தினருடன் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றிருந்த போது அவருக்கு குறைந்த ரத்த அழுத்தம் இருந்ததால், நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அங்கு ஸ்பந்தனாக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஸ்பந்தனாவின் உடல் இன்று பெங்களூர் கொண்டுவரப்படும் என்றும் அங்கு அவரின் இறுதிச் சடங்குகள் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.

Kannada Actor Vijay Raghavendra’s Wife Spandana Dies

More Articles
Follows