தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அட்லி இயக்கத்தை தொடர்ந்து பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய்.
தற்காலிகமாக ‘விஜய் 60’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் சூட்டிங் தற்போது ஐதராபாத்தில் நடக்கிறது.
நாகிரெட்டியின் விஜயா புரொடக்சன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.
பொதுவாக ஒரு படத்தில் நடிக்கும்போதே தனது அடுத்த படத்தை விஜய் முடிவு செய்துவிடுவார்.
எனவே இவரின் அடுத்த படத்திற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது தொடங்கியுள்ளது.
விஜய் 61 படத்தை லைகா தயாரிக்கவுள்ளதாக செய்தியை நம் தளத்தில் படித்திருப்பீர்கள்.
இப்படத்தை அட்லி இயக்க அதிக வாய்ப்புள்ளதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளன.
இந்த தகவல் உறுதியாகும் பட்சத்தில் கத்திக்கு பிறகு லைகாவும், தெறிக்கு பிறகு அட்லியும் விஜய்யுடன் இரண்டாவது முறையாக இணைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.