தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வழக்கு எண் 18/9 படத்தில் பள்ளி மாணவியாக அறிமுகமானவர் மனீஷா யாதவ்.
இதனையடுத்து ஆதலால் காதல் செய்வீர், த்ரிஷா இல்லனா நயன்தாரா, ஜன்னல் ஓரம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
அண்மையில் வெளியான ஒரு குப்பை கதை படத்தில் தன் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் பாராட்டையும் பெற்றார்.
தற்போது சண்டமுனி என்ற திகில் படத்தில் நடித்து வருகிறார்.
இதனையடுத்து டைரக்டர் வெற்றிமாறன் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கிறார்.
இப்படத்தை திருநாள் படத்தை இயக்கிய ராம்நாத் இயக்குகிறார்.
இப்படத்திலும் மனீஷாவுக்கு ஓர் அழுத்தமான கிராமத்து பெண் வேடம் தானாம்.
Manisha Yadav next movie with Producer Vettrimaaran