தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தினேஷ், மனீஷா இணைந்து நடித்த ஒரு குப்பைக் கதை படத்தில் வில்லனாக நடித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றவர் நடிகர் கிரண் ஆர்யா.
நந்தினி சீரியலில் நடித்து தமிழ் மக்கள் அனைவரது அன்பையும் பெற்றுள்ள கிரண் ஆர்யா தன் சினிமா அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்துக் கொண்டார்.
சிறு வயது முதலே எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது ஆசை ஏன் என்றால் என் சித்தப்பா ஒரு இயக்குனர். அப்போதிலிருந்தே சினிமா மீது எனக்கு காதல்.
கல்லூரி முடித்து சொந்தமாக ஒரு தொழில் துவங்கி வேலை செய்து கொண்டிருந்தேன் அப்போது என் நண்பர் குறும்படத்தில் என்னை நடிக்க வைத்தார் அப்போதிருந்து என் சினிமா வாழ்க்கை ஆரம்பமாகி விட்டது.
பிறகு தகடு என்ற தமிழ் படத்தில் கதாநாயகனாக அறிமுகமானேன். பிறகு பாலுமகேந்திரா ஐயா அவரது கூத்துப் பட்டறையில் நடிப்பு பயின்று வந்தேன் அப்போது பார்த்த இயக்குனர் காளி ரங்கசாமி என்னை ஒரு குப்பைக் கதை படத்தில் வில்லன் காதபாத்திரத்தில் நடிக்க வைத்தார்.
படத்தில் என்னை நம்பி பெரிய கதாபாத்திரம் கொடுத்தார் இயக்குனர். அந்த நம்பிக்கையை நான் காப்பாற்றி விட்டேன் என்று படம் வந்த பிறகு தெரிந்து கொண்டேன்.
ஒரு குப்பைக்கதை படத்திற்கு பிறகு சுந்தர்சியின் அவுனி மூவீஸ் தயாரிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் நந்தினி சீரியலில் நடிக்க ராஜ்கபூர் சார் எனக்கு வாய்ப்பு கொடுத்தார் அந்த நன்றியை நான் எப்போதும் மறக்கமாட்டேன்.
ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் 100 சதவீதம் லவ் பண்ணி உழைத்துக் கொடுக்கணும். நான் தமிழ் சினிமாவில் தான் நடிக்க வேண்டும் என்று எப்போதும் ஆசைப்படுவேன் காரணம் இங்கே உள்ள ரசிகர்கள் நடிகர்களுக்கு கொடுக்கிற வரவேற்பு, ஆதரவு எல்லாம் எனக்கு ரொம்ப பிடித்தது.
அதனால் தமிழ் கத்துக்கொண்டு நடித்தேன். நாம நடிக்கிற கதாபாத்திரம் எப்பவும் சரியானதாக இருக்கணும் கதையின் திருப்பு முனையாக இருக்கணும்.
ஹீரோ, வில்லன், காமெடி என எதுவாக இருந்தாலும் சும்மா மிரட்டணும். ரசிகர்களிடையே அப்பா இவன் செம்ம நடிகன் டா இவன் நடிச்சா பார்க்கலாம் என்ற பெயர் மட்டும் எனக்கு போதும்.
ஒரு குப்பைக் கதை என் சினிமா வாழ்கையில் பெரிய திருப்புமுணை. அதற்காக எனக்கு வாய்பளித்த படத்தின் தயாரிப்பாளர் அஸ்லாம் மட்டும் இயக்குனர் காளிரங்கசாமி ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இப்போது இயக்குனர் சுந்தர்.சி தயாரிப்பில் ஹிப் ஹாப் ஆதி நடிக்கும் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறேன். மற்றும் பெயர் சூட்டப்படாத இரண்டு படங்களிலும் நடித்துக்கொண்டிருக்கிறேன்.
தொடர்ந்து எனக்கு ஆதரவு தருமாறு அனைத்து பத்திரிக்கை, ஊடக நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன் நன்றி.
Oru Kuppai Kathai villain Kiran Arya shares his Cinema entry