தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
RP Films சார்பில் RP பாலா தயாரித்து இயக்க, பரத் – வாணி போஜன் நடிப்பில் காதல் த்ரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள படம் ‘லவ்”.
ஜூலை 28ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதனை முன்னிட்டு படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
இந்த சந்திப்பில் நடிகை வாணி போஜன் பேசியதாவது..
நான் நிறையப் படங்கள் நடித்திருக்கிறேன். ஆனால் சில படங்களே மனதிற்கு முழு திருப்தியை கொடுக்கும். இந்தப்படத்தில் நான் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன் என்ற திருப்தி எனக்கு உள்ளது.
இந்தப் படத்தில் நானும் பரத்தும் நிறைய சண்டைகள் போட்டுள்ளோம், அடிகளும் பட்டது. ஆனால் அது படத்திற்காக மட்டும் தான், படம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது உங்களுக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும் நன்றி.
நடிகை சுயம் சித்தா பேசியதாவது…
எனக்குத் தமிழ் கொஞ்சமாகத்தான் தெரியும். கோவிடுக்கு பிறகு வந்த முதல் படம் இது. எனக்கு மிகவும் நெருக்கமான படம், பட வாய்ப்பு தந்த RP பாலா சாருக்கு நன்றி, படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.
Love is full satisfied says Vani Bhojan