மணிரத்னம் தயாரிப்பில் அரவிந்த்சாமி இயக்கும் படம்

மணிரத்னம் தயாரிப்பில் அரவிந்த்சாமி இயக்கும் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

arvind swamy mani ratnamதனது முதல் படமான தளபதி படத்திலேயே ரஜினி மற்றும் மம்முட்டியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றவர் அரவிந்த்சாமி.

மணிரத்னம் இளையராஜா கூட்டணி இப்படத்தில்தான் இறுதியாக இணைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது தான் அறிமுகம் செய்த அரவிந்த்சாமியை இயக்குனராகி அழகு பார்க்கவுள்ளார் மணிரத்னம்.

மெட்ராஸ் டாக்கீஸ் சார்பாக மணிரத்னம் தயாரிக்கவுள்ள புதிய படத்தை அரவிந்த்சாமி இயக்குகிறார்.

காதல் கதையாக உருவாகவுள்ள இதில் அரவிந்த்சாமி நடிப்பாரா? எனத் தெரியவில்லை.

Arvind Swamy going to direct movie in Maniratnam production

பாகுபலி பிரபாஸை இயக்கும் சென்னை எக்ஸ்பிரஸ் டைரக்டர்

பாகுபலி பிரபாஸை இயக்கும் சென்னை எக்ஸ்பிரஸ் டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

chennai express teamபாகுபலி என்ற ஒரே படத்தின் மூலம் இந்தியளவில் பிரபலமானவர் பிரபாஸ்.

எனவே இவர் நடிக்கவுள்ள படங்களுக்கு அதிக எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஷாரூக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தை இயக்கிய ரோஹித் ஷெட்டி இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளாராம் பிரபாஸ்.

கமர்சியல் படங்களை இயக்குவதில் ரோஹித் ஷெட்டி வல்லவர் என்பதாலும் இதில் பிரபாஸ் இணையவுள்ளதாலும், இதன் மீதான எதிர்ப்பார்ப்பு இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.

Prabhas going to act in Rohit Shetty direction

அஜித்தின் விவேகம் டிரைலர் ரிலீஸ் தேதி

அஜித்தின் விவேகம் டிரைலர் ரிலீஸ் தேதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith vivegamசிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விவேகம் படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தை ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ள நிறுவனம், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.

அனிருத் இசையமைப்பில் உருவான சர்வைவா, தல விடுதலை மற்றும் காதலடா ஆகிய 3 பாடல்கள் இதுவரை வெளியாகிவிட்டன.

இந்நிலையில் இதன் டிரைலரை ஆகஸ்ட் 3ம் தேதி வெளியிட இருக்கிறார்களாம்.

இப்படத்தில் அஜித்துடன் காஜல் அகர்வால், அக்ஷாராஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Vivegam trailer release date

ஓவியாவை ஓரம் கட்டாதீங்க… ஆதரிக்கும் சிம்பு

ஓவியாவை ஓரம் கட்டாதீங்க… ஆதரிக்கும் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu oviyaஜிஎஸ்டி வரி விதிப்பால் தியேட்டர்களில் கூட்டம் குறைந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஆதரவு பெருகி வருகிறது.

எனவே பிக்பாஸ் பற்றிய செய்திகளே தற்போது மீடியாவை ஆக்ரமித்து வருகிறது.

மேலும் இதில் பங்கேற்றுள்ள ஓவியாவுக்கு ரசிகர்கள் மட்டுமின்றி பல சினிமா பிரபலங்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சிம்பு தன் ஆதரவை தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

“ஒருவர் மற்றவர்களை போல இல்லாமல், வித்தியாசமாக இருந்தால், அவரை குறை சொல்லி ஓரம் கட்ட வேண்டாம். அவரை தனியாக விட்டு விடுங்கள்” என சிம்பு பதிவிட்டுள்ளார்.

STR aka Simbu supports Oviya in BiggBoss show

If someone is different and not like the rest; it’s better to leave them alone than blaming and cornering. #Disheartened #Oviya #SpreadLove
— STR (@iam_str)

சூர்யாவுடன் நடிக்கும் சரவணா ஸ்டோர் ஓனர் சரவணன்

சூர்யாவுடன் நடிக்கும் சரவணா ஸ்டோர் ஓனர் சரவணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Saravana Stores owner Saravan produces Suriyas new movieசென்னையின் மிகப்பிரபலமான அடையாளங்களில் ஒன்றாக திகழும் சரவணா ஸ்டோர்ஸை எஸ்.எஸ்.சரவணன் நிர்வகித்து வருகிறார்.

இக்கடை விளம்பரங்களில் இவர் நடித்து தமிழக மக்களிடையே மிகவும் பிரபலமாகிவிட்டார்.

இவர் புதிய படத்தில் நடிக்க, அவருடன் நயன்தாரா நடிப்பதாக செய்திகள் வெளியானது.

பின்னர் அதற்கு மறுப்பு தெரிவித்து இருந்தார் சரவணன்.

இந்நிலையில் சூர்யா நடிக்கவுள்ள படத்தை தயாரித்து அதில் ஒரு முக்கிய ரோலில் நடிக்கவிருக்கிறாராம்.

இப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்கவுள்ளதாகவும் செய்திகள் கோலிவுட்டில் நிலவுகின்றன.

Saravana Stores owner Saravan produces Suriyas new movie

விஜய்யுடன் நடிக்க 4வது முறை வாய்ப்பு; மறுக்கும் சமந்தா

விஜய்யுடன் நடிக்க 4வது முறை வாய்ப்பு; மறுக்கும் சமந்தா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay samanthaமெர்சல் படத்தை தொடர்ந்து ஏஆர் முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கவிருக்கிறார்.

இப்படத்தில் ராகுல் பிரித்தி சிங் நாயகியாக நடிக்கவுள்ளார் என்பதை பார்த்தோம்.

ஆனால் இதற்கு முன்பு, சமந்தாவை தேடித்தான் இந்த வாய்ப்பு சென்றதாம்.

ஆனால் கால்ஷீட் டைட் காரணமாக அவரால் தேதிகளை ஒதுக்க முடியவில்லையாம்.

ஏற்கெனவே கத்தி, தெறி, மெர்சல் ஆகிய படங்களில் விஜய்யுடன் இணைந்து 3 முறை நடித்துள்ளார் சமந்தா என்பது குறிப்பிடத்தக்கது.

Samantha refuses to act with Vijay in AR Murugadoss Project

More Articles
Follows