ரஜினி-அஜித்தை அடுத்து மம்முட்டியுடன் இணையும் பிரபல நடிகர்

ரஜினி-அஜித்தை அடுத்து மம்முட்டியுடன் இணையும் பிரபல நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rk sureshமலையாள சினிமாவின் மெகா ஸ்டார் மம்முட்டி.

இவர் அவ்வப்பது நேரடி தமிழ் படங்களில் நடித்து, சொந்த குரலில் டப்பிங் செய்தும் வருகிறார்.

மணிரத்னம் இயக்கிய தளபதி படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்திருந்தார்.

கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் என்ற படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்திருந்தார்.

தற்போது பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ் அவர்கள் மம்முட்டியுடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறார்.

இந்தப் படத்தை புலிமுருகன் படத்தை இயக்கிய வைசாக் இயக்குகிறார்.

RK Suresh joins with Mammootty with Pulimurugan director

நீதி கிடைக்காவிட்டால் தற்கொலை செய்துக் கொள்வேன்.- ஸ்ரீரெட்டி

நீதி கிடைக்காவிட்டால் தற்கொலை செய்துக் கொள்வேன்.- ஸ்ரீரெட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sri reddyதமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் தனக்கு வாய்ப்பு தருவதாக கூறி படுக்கையை பகிர்ந்துக் கொண்டனர்.

ஆனால் அவர்கள் தனக்கு வாய்ப்பு தரவில்லை என அதிரடியான பாலியல் புகார்களை தினம் தினம் கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் ஸ்ரீரெட்டி.

இதனிடையில் வாராகி என்பவர் ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் மலையாள சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த ஸ்ரீரெட்டி,

“மலையாள நடிகை ஒருவர் பாதிக்கப்பட்டபோது அவருக்கு ஆதரவாக ஒட்டுமொத்த திரையுலகமே நின்றது.

ஆனால் நான் தனி மனுஷியாக எந்த ஆதரவுமின்றி இருக்கிறேன்.

என் பெற்றோர் கூட என் பக்கம் இல்லை. தொடர்ந்து என்னை ஒரு விலைமாது போலவே சித்தரிக்கின்றனர்.

இதனால் தற்கொலை எண்ணமே மேலிடுகிறது. எனக்கான நீதி கிடைக்காத பட்சத்தில் என்னை நானே அழித்துக்கொள்வதை தவிர வேறு வழியில்லை” என உருக்கமாக கூறியுள்ளார் நடிகை ஸ்ரீரெட்டி.

பரபரப்பை ஏற்படுத்திய *பசுமை வழிச்சாலை* பெயரில் புதிய படம்

பரபரப்பை ஏற்படுத்திய *பசுமை வழிச்சாலை* பெயரில் புதிய படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Pasumai Vazhi Salai Movie news updatesஉண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு அவ்வப்போது திரைப்படமாவது வழக்கமான ஒன்றுதான்.

அதிலும் அரசியல் சார்ந்த படங்கள் என்றால் நம் இயக்குனர்களுக்கு அல்வா சாப்பிடுவது போன்றது.

அந்த வரிசையில் அண்மைக்காலமாக பரபரப்பை ஏற்படுத்திய பசுமை வழிச்சாலை (சேலம் சென்னை) என்ற பெயரில் ஒரு படம் உருவாகுகிறது.

சென்னையில் இருந்து சேலத்திற்கு அமைக்கப்பட இருக்கும் 8 வழி பசுமைவழிச் சாலையை மையமாக வைத்து இப்படத்தை தயாரிக்கிறார்கள்.

சத்வா புரொடக்ஷன் என்ற நிறுவனத்தின் சார்பில் நிருபமா தயாரிக்கிறார் சந்தோஷ் இயக்குகிறார்.

இது 100 சதவிகிதம் உண்மையான கதை. சம்பந்தபட்ட மக்களின் வாழ்வில் நடந்த உண்மையான சம்பவங்களுடன் தயாராகிறது.

வழக்கமான சினிமாவில் இருந்து மாறுபட்ட சினிமாவாக இருக்கும் என்கிறார் இயக்குனர் சந்தோஷ்.

Pasumai Vazhi Salai Movie news updates

விஸ்வரூபம்-3 எப்போது..? நடிப்புக்கு முழுக்கா.? கமல் பேட்டி

விஸ்வரூபம்-3 எப்போது..? நடிப்புக்கு முழுக்கா.? கமல் பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Kamalhassan talks about Viswaroopam 3கமல் தயாரித்து இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம் 2 படம் ஆக., 10ல் வெளியாகிறது.

இப்படத்தின் புரேமோசன் பணிகளில் கமல் கலந்துக் கொண்டு வருகிறார்.

இப்படம் குறித்து கமல் கூறியதாவது…

விஸ்வரூபம் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இந்த விஸ்வரூபம் 2 படம் இருக்கும்.

நான் அரசியலுக்கு வரும் முன்பே இந்த படத்தை எடுத்து முடித்து விட்டேன்.

படத்தில் அரசியல் கருத்து எதுவும் திணிக்கவில்லை. எனவே எதிர்ப்பு இருக்காது என நம்புகிறேன்.

அப்படி வந்தால் அது தமிழக அரசியல்வாதிகளின் கெட்டிக்காரத்தனமாக இருக்காது.

இப்படத்தின் வெற்றி ரசிகர்களின் மனநிலையை பொறுத்து 3-ம் பாகம் வரலாம்.

என் தொழில் வேறு; அரசியல் வேறு. நான் வசதியாக இருக்கிறேன். நான் திருட மாட்டேன். அதை தான் மக்களும் நம்புகிறார்கள்.

எம்.எல்.ஏ., சீட் வந்தால் கூட நான் நடிப்பதை நிறுத்த வேண்டும். எம்.எல்.ஏ., ஆகி கூட எம்ஜிஆர் நடித்துள்ளார்.

என் அரசியல் பணிகளுக்கு இடைஞ்சலாக இருக்கும் போது பட்சத்தில் படத்தில் நடிப்பதை நிறுத்தி விடுவேன்.

சபாஷ் நாயுடு படம் 40 சதவீதம் முடிந்துள்ளது.” இவ்வாறு கமல் பேசினார்.

Actor Kamalhassan talks about Viswaroopam 3

விஸ்வரூபத்திற்கு விட்டுக் கொடுக்கும் கோலமாவு கோகிலா

விஸ்வரூபத்திற்கு விட்டுக் கொடுக்கும் கோலமாவு கோகிலா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

coco vishwaroopam 2நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் படம் ‘கோலமாவு கோகிலா’.

‘லைகா புரொடக்‌ஷன்ஸ்’ தயாரித்திருக்கும் இந்த படத்தில் நயன்தாராவுடன் யோகிபாபு, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்க, அனிருத் இசை அமைத்திருக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தை ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் முதலில் முடிவு செய்திருந்தனர்.

ஆனால் இப்போது ‘கோலமாவு கோகிலா’வின் ரிலீஸை ஒரு வாரம் தள்ளி வைத்திருக்கிறார்கள்.

ஆகஸ்ட் 17-ஆம் தேதி வெளியாகும் என்ற புதிய தகவலை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

கமலின் ‘விஸ்வரூபம்-2’ ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

*கொலைகாரன்* முதற்கட்ட சூட்டிங்கை முடித்த விஜய் ஆண்டனி

*கொலைகாரன்* முதற்கட்ட சூட்டிங்கை முடித்த விஜய் ஆண்டனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kolaigaranகணேஷா இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் ‘திமிரு புடிச்சவன்’ படத்தின் வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இப்படத்தின் இசை விழா & படம் விரைவில் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரம் மற்றொரு புறம் விஜய் ஆண்டனி நடித்துள்ள ’கொலைகாரன்’ படத்தின் படப்பிடிப்பு வேலைகளும் நடந்து வருகிறது.

ஆன்ட்ரியு லூயிஸ் இயக்கும் இந்த படத்தில் அர்ஜுன் வில்லனாக நடிக்க,. ஆஷிமா நர்வால் கதாநாயகியாக நடிக்கிறார்.

வழக்கம் போல விஜய் ஆண்டனியே இப்படத்திற்கும் இசை அமைக்கிறார்.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பில் விஜய் ஆண்டனி, அர்ஜுன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கியுள்ளனர்.

இப்போது அந்த முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டது.

‘தியா மூவீஸ்’ என்ற நிறுவனம் சார்பில் பி.பிரதீப் தயாரிக்கும் இந்த படத்திற்கு முகேஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.

கலை இயக்கத்தை வினோத் ராஜ்குமார் கவனிக்கிறார். ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பு செய்கிறார்.

More Articles
Follows