காலா படத்தில் ரஜினியுடன் இணையும் மம்மூட்டி.?

காலா படத்தில் ரஜினியுடன் இணையும் மம்மூட்டி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini kaala mammotyரஞ்சித் இயக்கி வரும் காலா படத்தில் ரஜினிகாந்துடன் ஹீமா குரேஷி, அஞ்சலி பட்டீல், சமுத்திரக்கனி உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.

இதில் கௌரவ தோற்றத்தில் இளவயது ரஜினியாக தனுஷ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் மிக முக்கிய கேரக்டரில் மலையாள மெகா ஸ்டார் மம்மூட்டி நடிக்கக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தகவல் படத்தின் நாயகி ஹூமா குரேஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட திரைக்கதை பேப்பரில் இருந்து கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது கதைப்படி ஒரு சில காட்சிகளில் சட்ட மாமேதை பீம்ஜி என்றழைக்கப்படும் டாக்டர் அம்பேத்கர் தோன்றுவாராம். (பழைய காலத்தில்)

அந்த கேரக்டரில்தான் மம்மூட்டி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு படத்தில் மம்முட்டி நடித்திருந்தார். எனவேதான் அவரை தேர்வு செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

கடந்த 1991ஆம் ஆண்டே தளபதி படத்தில் ரஜினியும் மம்முட்டியும் இணைந்து நடித்திருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Rajinikanth and Mammootty to come together after 25 years for Kaala movie

Rajinikanth and Mammootty to come together after 25 years for Kaala movie

சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் பர்ஸ்ட் லுக் எப்படி..?

சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் பர்ஸ்ட் லுக் எப்படி..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

velaikaran 1st lukரெமோ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் வேலைக்காரன் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ரெமோ வெற்றியை தக்க வைப்பாரா? என்ற ஒரு காரணமும், இப்படத்தில் நடித்து வரும் நட்சத்திர பட்டாளமும் மற்றொரு காரணம் ஆகும்.

மோகன்ராஜா இயக்கிவரும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா, ஸ்நேகா, பஹத்பாசில், பிரகாஷ்ராஜ், ரோகினி, சதீஷ், ஆர்ஜே. பாலாஜி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

அனிருத் இசையமைக்க, 24ஏஎம் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

மற்ற படங்களை போல் இல்லாமல், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போது வெளியாகும்..? என ரசிகர்களை காத்திருக்க செய்யவில்லை படக்குழு.

காரணம் படத்தின் பூஜை தேதி, பர்ஸ்ட் லுக், வியாபார தேதி முதல் படத்தின் ரிலீஸ் தேதியை வரை அனைத்தையும் அறிவித்திருந்தனர்.

அதன்படி இன்று (ஜீன் 5, 2017) மாலை 6 மணிக்கு இதன் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில்…

வேலைக்காரன் டைட்டிலில் உழைக்கும் வர்க்கத்தின் ஆயுதங்கள் காணப்படுகிறது.

சிவகார்த்திகேயன் கையில் அருவாள் வைத்துக் கொண்டு டிசன்டாக பேன்ட் சர்ட் போட்டுக் கொண்டு டை கட்டி இருக்கிறார்.

மேலும் அவரது சட்டையின் மேல் ரத்தகறையும் படிந்துள்ளது.

ஒரு புறம் மிகவும் குப்பைகளாகவும் மறுபுறம் சிட்டி போன்று மிக சுத்தமான காணப்படுகிறது.

குப்பையான புறத்தில் சிவகார்த்திகேயன் கையில், ஒரு பேக் மட்டும் வைத்திருக்கிறார்.

ஆனால் மற்றொரு புறத்தில் சுத்தமாக இருந்தபோதும் அந்தப் பக்கம் அவர் சட்டையில் ரத்தக்கறை இருக்கிறது. மேலும் அந்த பக்க கையில்தான் அருவாள் வைத்திருக்கிறார்.

இது சமூகம் சார்ந்த கதை என இதன் மூலம் தெரிகிறது.  நேர்மையாக நாம் வாழ்கின்ற போதும் நம்மை பாதுகாக்க அருவாள் போன்ற ஆயுதம் இருக்க வேண்டும் என உணர்த்துவதாக தெரிகிறது.

தங்களின் முதலாளியை வாழ்த்திய விஜய்-அட்லி-சமந்தா

தங்களின் முதலாளியை வாழ்த்திய விஜய்-அட்லி-சமந்தா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mutrali Ramaswamy birthday stillஅட்லி இயக்கிவரும் விஜய்யின் 61வது படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் சார்பாக முரளி ராமசாமி தயாரித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

அங்கு விஜய் மற்றும் சமந்தாவின் காட்சிகளை படமாக்கி வருகிறார் அட்லி.

இந்நிலையில் இப்படத்தின் முதலாளி எனப்படும் தயாரிப்பாளர் முரளி ராமசாமியின் பிறந்தநாள் விழாவை படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடியுள்ளனர்.

அப்போது விஜய், அட்லி, சமந்தா உள்ளிட்ட படக்குழுவினர் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அஜித் இல்லாமல் இணைந்த ‘என்னை அறிந்தால்’ கூட்டணி

அஜித் இல்லாமல் இணைந்த ‘என்னை அறிந்தால்’ கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Gautham Menon and ArunVijayகௌதம்மேனன் இயக்கும் படங்களில் ஹீரோவுக்கு இணையான வேடம் வில்லனுக்கும் இருக்கும்.

இதுவே அவரது வெற்றி பார்முலாவும் இதுதான் என கூறப்படுகிறது.

அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக கலக்கியிருந்தார் அருண்விஜய்.

தற்போது வில்லன் அருண்விஜய்யை ஹீரோவாக வைத்து, ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறாராம் கௌதம்மேனன்.

இதன் சூட்டிங் ஊட்டியில் தொடங்கிவிட்டதாகவும், விரைவில் படத்தலைப்புடன் இதன் அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

விஜய் 61 படத்தில் மூன்றாவதாக இணைந்த சூப்பர் காமெடியன்

விஜய் 61 படத்தில் மூன்றாவதாக இணைந்த சூப்பர் காமெடியன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

comedy actor yogibabu in vijay 61காமெடி நடிகர்கள் எல்லாம் தற்போது ஹீரோவாகி கொண்டிருக்கும் காலம் இது.

இந்த கேப்பில் தனக்கான இடத்தை ஃபில்அப் செய்து வருபவர்களின் முக்கியமான காமெடி நடிகர் யோகிபாபு.

சுமாரான படத்தை கூட இவரது காமெடியால் ரசிக்க வைக்கிறார்.

இந்நிலையில் இவர் தற்போது அட்லி இயக்கத்தில் விஜய்61 படத்தில் இணைந்திருக்கிறாராம்.

இவருக்கு முன்பே வடிவேலு, சத்யன் உள்ளிட்ட காமெடி நடிகர்கள் இப்படத்தில் நடித்து வருவது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

விஜய் பிறந்தநாளில் (ஜீன் 22ஆம் தேதி) இதன் பர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comedy actor Yogibabu teams up with Atlee Vijay in Thalapathy61

மலையாள நடிகையை பக்கத்து வீட்டுக்கு அழைத்த பார்த்திபன்

மலையாள நடிகையை பக்கத்து வீட்டுக்கு அழைத்த பார்த்திபன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

parthibanஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் LLP தயாரிப்பில் “இயக்குநர் இமயம்” பாரதிராஜா, விதார்த் இணைந்துள்ள படம் குரங்கு பொம்பை.

நித்திலன் இயக்கும் இப்படத்தில் நாயகியாக தமிழில் அறிமுகமாகிறார் மலையாள நடிகை டெல்னா டேவிஸ்.

இவர்களுடன் தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன், குமரவேல், கஞ்சா கருப்பு, பாலாசிங், கிருஷ்ணமூர்த்தி, ரமா உள்ளிட்டோரும் நடிக்க, அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டனர்.

அப்போது பார்த்திபன் பேசியதாவது…

“இந்தப்பட நாயகி, டெல்னா டேவிஸை எல்லோரும் பக்கத்து வீட்டு பெண் போல அழகாக இருக்கிறார் என்றார்கள்.

என் பக்கத்து வீட்டுல யாரும் டெல்னா டேவிஸ் மாதிரி அழகா இல்ல.

எனவே டெல்னா டேவிஸ், நீங்க என் பக்கத்து வீட்டுக்கு வாடகைக்கு வந்தீங்கன்னா, நானும் உங்களை என் பக்கத்து வீட்டு பொண்ணுன்னு சொல்லிப்பேன்” என்றார்.

Parthiban speech about Delna Davis at Kurangu Bommai audio launch

Parthiban speech about Delna Davis at Kurangu Bommai audio launch

 

More Articles
Follows