அன்றே செய்தார் கமல்.; மீண்டும் மௌனபடம்.; விஜய்சேதுபதி – அரவிந்த் சாமி நடிப்பில் ‘காந்தி டாக்ஸ்’

அன்றே செய்தார் கமல்.; மீண்டும் மௌனபடம்.; விஜய்சேதுபதி – அரவிந்த் சாமி நடிப்பில் ‘காந்தி டாக்ஸ்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய்சேதுபதி, அரவிந்த் சாமி இணைந்து நடிக்கும் படம் ‘காந்தி டாக்ஸ்’.

கிஷோர் பி.பெலேகர் என்பவர் இயக்க ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படம் வசனமே இல்லாமல் மௌனப் படமாக உருவாகியுள்ளது.

இப்படத்தில் அதிதி ராவ் நாயகியாக நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

பிளாக் காமெடி ஜானரில் வசனங்களற்ற மவுனப்படமாக உருவாகி உள்ளது.

இது மவுனப் படமாக இருப்பதால், அனைத்து ‘மொழி’ தடைகளையும் உடைத்து பார்வையாளர்களுக்கு ஒரு பேரனுபத்தை தரும் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் படத்தின் அறிமுக வீடியோ காந்தி பிறந்த நாளான இன்று அக்டோபர் 2ல் வெளியாகியுள்ளது.

கூடுதல் தகவல்…

இதுபோன்று வசனமே இல்லாத படத்தில் 30 வருடங்களுக்கு முன்பே கமல்ஹாசன் மற்றும் அமலா நடித்துள்ளனர். அந்த படத்திற்கு பேசும் படம் என பெயரிட்டது குறிப்பிடத்தக்கது.

Relive the silent film era Gandhi Talks

@ZeeStudios_ proudly presents #GandhiTalks, a dark comedy starring @VijaySethuOffl @thearvindswami @aditiraohydari @SIDDHARTH23OCT in an @arrahman musical.
#ComingSoon

? https://bit.ly/GandhiTalks

@kishorbelekar #Kyoorius
@moviemillent @zeestudiossouth @donechannel1

மீண்டும் சரித்திர படத்தில் விக்ரம்.; கங்கனா & ‘பாகுபலி’ பிரபலத்துடன் கூட்டணி .!

மீண்டும் சரித்திர படத்தில் விக்ரம்.; கங்கனா & ‘பாகுபலி’ பிரபலத்துடன் கூட்டணி .!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘பொன்னியின் செல்வன் 1’ திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி உலகமெங்கும் வசூல் வேட்டையாடி வருகிறது.

இரண்டு நாட்களில் 150 கோடியை கடந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இந்த படத்தை அடுத்து பா ரஞ்சித் இயக்கத்தில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் ‘மைதானம்’ படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த நிலையில் இந்தப் படங்களை முடித்துவிட்டு மீண்டும் ‘பொன்னியின் செல்வன்’ போன்ற ஒரு சரித்திர கதையில் விக்ரம் நடிக்க உள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த படத்தில் Kangana Ranaut கங்கனா ரனாவத் நாயகியாக நடிக்க Alaukik Desai என்பவர் இயக்குகிறார். இந்த படத்திற்கு சீதா (Sita: The Incarnation) எனப் பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்திற்கு பாகுபலி & ஆர் ஆர் ஆர் படங்களுக்கு கதை எழுதிய விஜேந்திர பிரசாத் கதை எழுத உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படம் ஹிந்தி தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உருவாக்கி பான் இந்தியா படமாக வெளியாகும் என தகவல் வந்துள்ளன.

Vikram is part of Kangana Ranauts upcoming Hindi flick Sita The Incarnation

‘ஆரகன்’ ஹைலைட்ஸ்: தமிழகம் வளர்ந்தது திராவிடத்தால் அல்ல – பேரரசு.; ஹீரோக்களுக்காக பாட்டெழுத வரவில்லை – சினேகன்

‘ஆரகன்’ ஹைலைட்ஸ்: தமிழகம் வளர்ந்தது திராவிடத்தால் அல்ல – பேரரசு.; ஹீரோக்களுக்காக பாட்டெழுத வரவில்லை – சினேகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ட்ரெண்டிங் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஹரிஹரன் பஞ்சலிங்கம் தயாரித்துள்ள படம் ‘ஆரகன்’. அறிமுக இயக்குநர் அருண்குமார் இயக்கியுள்ள இந்தப்படத்தில் நடிகர் மைக்கேல் தங்கதுரை கதாநாயகனாக நடித்துள்ளார். இலங்கையை பூர்வீகமாக கொண்ட கவிப்பிரியா கதாநாயகியாக நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் ஸ்ரீரஞ்சனி, கலைராணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சூர்யா ஒளிப்பதிவில், விவேக்-ஜெஸ்வந்த் இரட்டையர் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் பேரரசு, சுப்பிரமணிய சிவா, கவிஞர் சினேகன், இளம் நடிகர்கள் மாஸ்டர் மகேந்திரன், சரண் சக்தி, எழுத்தாளர் பிரபாகரன் மற்றும் நடிகை கோமல் சர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தப்படத்தின் டீசரை தயாரிப்பாளர் ஹரிஹரன் பஞ்சலிங்கம் மற்றும் அவரது சகோதரர்களான வரகுணன் பஞ்சலிங்கம், மதுரதன் பஞ்சலிங்கம் ஆகியோரின் தாயார் கமலாதேவி பஞ்சலிங்கம் வெளியிட, இயக்குனர் பேரரசு உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் அதனை பெற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கும் படக்குழுவினருக்கும் பொன்னியின் செல்வன் நாவல் மற்றும் இரண்டு மரக்கன்றுகளையும் பரிசாக வழங்கி ஆரம்பமே அசத்தலாக இந்த நிகழ்ச்சி துவங்கியது.

இயக்குநர் அருண்குமார் பேசும்போது, “இது எனக்கு முதல் படம்தான்.. கொரோனா காலகட்டத்தில் இந்த படத்தின் தயாரிப்பாளரை நேரில் சந்திக்க முடியாமல் வீடியோ கால் மூலமாகவே பேசி அவரிடம் சம்மதம் வாங்கினேன். அந்த அளவிற்கு என்னை நேரில் பார்க்காமலேயே என்மீது நம்பிக்கை வைத்து இந்தப்படத்தை தயாரிக்கும் அளவிற்கு, ஸ்கிரிப்ட் வலுவாக இருந்தது. அதனால் அவரை கடவுள் அனுப்பி வைத்த ஏஞ்சல் என்றுதான் சொல்வேன்.

இந்த படத்தில் நாயகனாக நடித்துள்ள மைக்கேல் தங்கதுரை ஒரு காட்சியில் குறுகலான ஒரு குகைக்குள் ரொம்பவே சிரமப்பட்டு நடித்தார். அதுமட்டுமல்ல காடுகளில் எடுத்த காட்சிகளில் கூட தனக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவையும் பொருட்படுத்தாமல் அர்ப்பணிப்புடன் நடித்ததை மறக்க முடியாது. ஃபேண்டசி த்ரில்லராக இந்த படம் உருவாகி உள்ளது.. இந்த படத்தில் சினேகன் எழுதியுள்ள நீதானே என்கிற பாடல் நான் திரும்பத்திரும்ப கேட்கும் ஒரு பாடல் ஆகும்” என்றார்.

நாயகன் மைக்கேல் தங்கதுரை பேசும்போது, “நான் நடித்த ஊமைச்செந்நாய் படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய ராஜூ மூலமாகத்தான் இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு வந்தது.. நான் சினிமாவில் நுழைந்து பதினைந்து வருடம் ஆகிவிட்டது. கடின உழைப்பைத்தான் தொடர்ந்து கொடுத்து வருகிறேன். அதற்கான பலன் இந்த படத்தில் கிடைக்கும் என நினைக்கிறேன்” என்று கூறினார்.

தயாரிப்பாளர் வரகுணன் பஞ்சலிங்கம் பேசும்போது, “எங்கள் தயாரிப்பு நிறுவனம் மூலம் வெளிநாட்டில் இரண்டு குறும்படங்களை எடுத்துள்ளோம். அடுத்து திரைப்படம் எடுக்க முடிவு செய்தபோது தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து தமிழகத்திலேயே எடுக்கவேண்டும் என தீர்மானித்து இந்த படத்தை உருவாக்கியுள்ளோம்” என்று கூறினார்.

மாஸ்டர் மகேந்திரன் பேசும்போது, “இப்போதெல்லாம் தயாரிப்பாளர்கள் குறைந்துகொண்டே வருகிறார்கள். மைக்கேல் தங்கதுரை மற்றும் என்னை போன்றவர்களுக்கு தான் கஷ்டம். எனக்கான வலி மற்றும் போராட்டங்கள் தான் மைகேல் தங்கதுரைக்கும்.. நாளை நிச்சயமாக ஹிட் கொடுப்போம் என நம்புகிறேன்.. பொன்னியின் செல்வன் படத்தின் இசையை வெளியிட்டுள்ள அதே டிப்ஸ் மியூசிக் நிறுவனம் தான் இந்த படத்தின் இசையையும் வாங்கி உள்ளது என்பதைக் கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று கூறினார்.

நடிகை கோமல் சர்மா பேசும்போது, “தமிழ்நாட்டில் இருப்பவர்கள் மட்டுமல்ல.. எங்கு இருந்தாலும், ஏழுகடல் தாண்டினாலும் தமிழ் பேசுபவர் எல்லாம் தமிழர் தான்.. எப்போதுமே கடல் தாண்டி வந்தவர்கள் வென்றுள்ளார்கள் என்பது சரித்திரம்.. அதேபோல இந்த ஆரகன் பட குழுவினருக்கும் நிச்சயம் வெற்றி கிட்டும்.” என்று பாராட்டினார்.

இயக்குநர் சுப்பிரமணிய சிவா பேசும்போது, “தமிழ் சினிமாவிற்கு மரியாதை தேடித்தந்தவர்கள் இருவர். ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. அடுத்தது கடல் கடந்து சென்று உலகெங்கிலும் வசிக்கும் தமிழர்கள்.. பொதுவாகவே இப்படி வெளிநாட்டில் இருந்து தமிழர்கள் இங்கே வந்து தயாரிக்கும் படங்கள் தரமான படமாக இருப்பதில்லை.. அதற்கு காரணம் அவர்கள் நல்ல நோக்கத்துடன் வந்தாலும், இங்கே ஒரு தரமான டீம் அவர்களுக்கு அமைவதில்லை. அதை போக்கும் விதமாக இந்த படம் தரமானதாக இருக்கும்” என்று வாழ்த்தினார்.

இந்த படத்தில் ஒரு பாடலை எழுதியுள்ள கவிஞர் சினேகன் பேசும்போது, “இந்த படத்தின் இயக்குனர் அருண்குமார் என்னை பாடல் எழுத அணுகியபோது, படத்தின் பட்ஜெட் குறித்து பேசி எப்படியாவது என்னை சம்மதிக்க வைத்து விட வேண்டும் என முயற்சித்தார். என்னை பொறுத்தவரை ஐநூறு ரூபாய்க்கு பாட்டு எழுதிய போதும் சரி, தற்போது மூன்று லட்ச ரூபாய்க்கு பாட்டு எழுதும்போதும் சரி.. சினிமாவுக்குத்தான் பாட்டு எழுதி வருகிறேனே தவிர, நடிகர்களுக்காகவோ பணத்துக்காகவோ பாட்டு எழுத வரவில்லை. பத்து படங்களில் மூன்று படங்களுக்கு பணம் வாங்காமல் தான் பாட்டு எழுதி தருகிறேன்.

ஈழத்தமிழர்களை உலகத்தமிழர்கள் என்று கூறுவதுதான் சரியாக இருக்கும். இந்த படத்தின் கதையை கேட்டதுமே நான் பயந்துவிட்டேன். ஒருமுறை சதுரகிரி மலைக்கு சென்றபோது அங்கே இருக்கும் சித்தர்கள் மூலமாக நேரிலேயே நடந்த அதிசய நிகழ்வு ஒன்றை பார்த்து அதிசயித்தேன். அப்போதுதான் செடிகளுக்கும் பூக்களுக்கும் கூட எவ்வளவு வீரியம் இருக்கிறது என்பது புரிந்தது. இந்த கதையும் அதை எனக்கு உணர்த்தியது” என்றார்.

இயக்குநர் பேரரசு பேசும்போது, “இன்று வெளியாகியிருக்கும் பொன்னியின் செல்வன் ஒரு படம் அல்ல.. அது ஒரு சவால்.. எம்ஜிஆர், கமல் ஆகியோர் காலத்தில் முயற்சித்து முடியாமல் போனதை, இப்போது மணிரத்னம் சாதித்திருக்கிறார். திருப்பாச்சி படத்தை இயக்க ஆரம்பித்த சமயத்தில் இயக்குனர் சினேகன் எனது படத்தில் பாடல் எழுத வேண்டும் என விரும்பினேன். அப்போது அவரிடம் சொல்வதற்காக நானே டம்மியாக சில வார்த்தைகளைப் போட்டு இப்படித்தான் பாடல் வேண்டுமென எழுதி வைத்திருந்ததை அவரிடம் காட்டினேன். அதை பார்த்துவிட்டு இந்தப்பாட்டே நல்லா தான் இருக்கு என்று கூறி பாட்டு எழுதும் வாய்ப்பை எனக்கே கொடுத்தார். எனக்குள் இருந்த கவிஞனை வளர்த்துவிட்ட சினேக கவிஞன் அவர். விஜய்யும் அதற்கு உற்சாகம் கொடுத்தார்.

கடந்த 50 வருடங்களாக தமிழகம் வளர்ந்தது திராவிடர்களால் என்று இயக்குனர் சுப்பிரமணிய சிவா இங்கே பேசினார். ஆனால் அது உண்மை அல்ல.. தமிழர்களால் தான் தமிழகம் வளர்ந்தது. அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோர் தமிழறிவால் தான் கதை எழுதினார்களே தவிர, திராவிட அறிவால் அல்ல. வெளிநாட்டிலிருந்து இங்கே படம் தயாரிக்க வருபவர்கள் தமிழகத்தில் படப்பிடிப்பு நடத்துகிறார்கள். இங்கிருப்பவர்களோ வெளியூருக்கு ஓடுகிறார்கள்,.

கதாநாயகி கவிப்ரியா பார்ப்பதற்கு குடும்பப்பாங்கான அழகுடன் அழகாக காட்சியளிக்கிறார். இப்போதெல்லாம் குடும்பப்பாங்காக நடிக்கும் பல நடிகைகள் சோசியல் மீடியாவில் கவர்ச்சியாக தங்களது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்..

இதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கும் குடும்பப் பெண் கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த கதாநாயகிகள் கவர்ச்சி பக்கம் செல்லவே கூடாது அப்படி தடம்மாறி செல்பவர்களை பார்க்கும்போது ரசிகர்களுக்கு வெறுப்புதான் ஏற்படும். உங்கள் பலமே அந்த குடும்பப் பாங்கு தான்.. அப்படி மாறினால் அவர்களது மார்க்கெட்டே காலியாகி விடும்.

நான் சினிமாவிற்கு முயற்சித்த காலகட்டத்தில் பல பேரிடம் நேரில் சென்று கதைசொல்லி பலவித கசப்பான அனுபவங்களை பெற்று உள்ளேன் ஆனால் தயாரிப்பாளரை சந்திக்காமல் வீடியோ காலிலேயே கதைசொல்லி வாய்ப்பு பெற்றிருக்கிறார் என்றால் இதுவே இயக்குனர் அருண்குமாருக்கு கிடைத்த முதல் வெற்றி” என்றார்.

தயாரிப்பாளர் ஹரிஹரன் பஞ்சலிங்கம் பேசும்போது… “இயக்குநர் அருண்குமாருடன் முகநூல் மூலமாக தான் பழக்கம் ஏற்பட்டது. அவ்வப்போது சுவையான விஷயங்களை அவர் பேசுவார்.

அதன்பிறகுதான் அவருடன் வீடியோ காலில் இந்த கதை குறித்து பேசினேன். அவர் சொன்ன அந்த கதைக்களம், குறிப்பாக ஃபேண்டசி திரில்லர் கதையாக அது இருந்ததால் எனக்கு மிகவும் பிடித்து விட்டது.

என்னைப் பொறுத்தவரை நான் கதைகளின் ரசிகன். ஏற்கனவே ஆங்கிலத்தில் இரண்டு குறும்படங்களை தயாரித்ததால் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த படத்தை தயாரிக்கும் முடிவுக்கு வந்தோம். இந்தப் படத்தை தயாரிக்க இங்கே ரிஸ்வான், வசந்தா ஆகியோர் உறுதுணையாக இருந்தனர்.

இந்த படத்தில் இரட்டை இசையமைப்பாளர்கள் விவேக் ஜெஸ்வந்த்தின் இசை உலகத்தரத்தில் இருக்கிறது என்று உறுதியாக சொல்வேன். அதனால்தான் பொன்னியின் செல்வன் போன்ற மிகப்பிரமாண்டமான படத்தின் ஆடியோ உரிமையை வாங்கிய டிப்ஸ் மியூசிக் நிறுவனம் இந்தப் படத்தின் ஆடியோ உரிமையையும் வாங்கியுள்ளது” என்று கூறினார்

*தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்*

தயாரிப்பாளர் ; ஹரிஹரன் பஞ்சலிங்கம்

இயக்குநர் ; அருண்குமார்

ஒளிப்பதிவு ; சூர்யா

இசை ; விவேக் – ஜெஸ்வந்த்

படத்தொகுப்பு ; சசி தக்ஷா

பாடல்கள் ; சினேகன், அன்புச்செழியன்

கலை ; ஜெயசீலன்

ஆடை வடிவமைப்பு ; வெண்மதி

மக்கள் தொடர்பு ; A.ஜான்

ஆரகன்

Aaragan movie teaser launch highlights

Here u go for the Teaser of Aaragan

https://youtu.be/T041iD3XVFM

@michael_chennai @TrendingArtsPr1
@kavipriya_2
@VenmathiKarthi
@DuraiMuruganG8
@ivivekp @jeshu1990 @tipsmusicsouth
@Devadevan45 @sasicuts @johnmediamanagr
@ivivekp @jeshu1990
@kumartaurani @sharanyalouis #TipsTamil

இலக்கியா-வில் இணைந்த நந்தன் ஹீமாபிந்து மீனா சதீஷ் டெல்லிகணேஷ்

இலக்கியா-வில் இணைந்த நந்தன் ஹீமாபிந்து மீனா சதீஷ் டெல்லிகணேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் TV- யில் திங்கள் முதல் வெள்ளி வரை நண்பகல் 2 மணியளவில் 8 வருடங்களாக ஒளிபரப்பாகி மக்களிடம் அதிக வரவேற்புப் பெற்ற சந்திரலேகா தொடர் 9ந் தேதியுடன் முடிவடை கிறது.

அடுத்து அக்டோபர் 10ந்தேதி முதல் திங்கள் To வெள்ளி வரை மதியம் 2 மணிக்கு தினமும் இலக்கியா மெகாத்தொடர் ஒளிபரப்பாகிறது.

இந்த மெகாத் தொடரின் கதையை அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் உருவாக்கியிருக்கிறார்கள்.

இந்தத் தொடரில் பிரபலமான தொடர்களில் பணியாற்றிக்கொண்டிருக்கும் பல கலைஞர்கள் இந்தத் தொடரிலும் பணியாற்றுகிறார்கள்.

தந்தை கைவிட்டுப் போன நிலையில் இலக்கியாவின் குடும்பம் தாய்மாமன் மாசிலாமணி வீட்டில் அவர்களின் தயவில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறது. அத்தை சிந்தாமணி எப்போதும் அவர்களை தேளைப்போல வார்த்தைகளால் கொட்டிக்கொண்டே இருப்பாள்.

சிறு வயதில் தங்களை காப்பாற்றிய தாய்மாமனுக்காக இலக்கியா அனைத்தையும் பொறுத்துக்கொள்கிறாள், தான் பல வேலைகள் செய்து கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் மொத்த பணத்தையும் அத்தையிடமே கொடுத்து விடுகிறாள்.

இதற்கிடையில் தம்பியையும் படிக்க வைத்து அம்மாவையும் காக்க போராடுகிறாள். கதையின் நாயகன் கெளதம் பெரிய தொழிலதிபர். அவனின் நட்பு இலக்கியாவிற்கு கிடைக்க, அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் தாய்மாமன் மகள் அஞ்சலி பிரச்சனை செய்கிறாள்.

நல்ல வாழ்க்கை இலக்கியாவிற்கு கிடைத்து விடக்கூடாது என்பதில் உறுதியாய் இருக்கிறாள்.

இலக்கியா அனைத்தையும் சமாளித்து வாழ்க்கைப்பயணத்தை எப்படி வெற்றிகரமாக தொடர்கிறாள்.

அத்தையின் கொடுமையிலிருந்து விடுதலையாகி எப்படி குடும்பத்தை காப்பாற்றப் போகிறாள் என்பதை இலக்கியா மெகாத் தொடர் விளக்குகிறது.

ரூபஸ்ரீ , நந்தன், ஹீமாபிந்து, சுஷ்மா, டெல்லிகணேஷ், சதிஷ், பரத்கல்யாண், ராணி, காயத்ரிப்ரியா, மீனா மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

சரிகம இண்டியா லிமிட்.,சார்பாக B.R. விஜயலட்சுமி தயாரிக்க

கதை : சரிகம கதை இலாகா

திரைக்கதை : கலைமாமணி சேக்கிழார்

வசனம் : குரு சம்பத்குமார்

இயக்கம் : சாய் மருது

கிரியேட்டிவ் ஹெட் : பிரின்ஸ் இமானுவேல்.

இலக்கியா

Nandhan and Hima Bindhu starrer ilakkiya

விக்ரம் – ரஞ்சித் இணையும் ‘சீயான் 61’ பட சூப்பர் அப்டேட்ஸ்

விக்ரம் – ரஞ்சித் இணையும் ‘சீயான் 61’ பட சூப்பர் அப்டேட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சீயான் விக்ரம் நடிப்பில் உருவான ‘கோப்ரா’ மற்றும் ‘பொன்னியின் செல்வன்1’ ஆகிய இரு படங்கள் அடுத்தடுத்து வெளியாகின.

இதனையடுத்து விக்ரம் நடிக்க உள்ள படத்தை ரஞ்சித் இயக்கவிருக்கிறார்.

இதில் நாயகிக்கு முக்கியமான வேடம். கதையை தாங்கி நிற்கும் கேரக்டரில் அவரும் ஒருவர் என தெரிவித்துள்ளார். இந்த படத்தில் நாயகியாக சாய் பல்லவி அல்லது ராஷ்மிகா நடிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

தற்காலிகமாக சீயான் 61 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசை அமைக்கிறார்.

இந்த படத்தின் பூஜை கடந்த ஜூலை மாதம் போடப்பட்டது.

இந்த நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பை அக்டோபர் 10ஆம் தேதி தொடங்க உள்ளதாகவும் இந்த படத்திற்கு ‘மைதானம்’ என்ற பெயரிடப்பட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இதில் விக்ரமின் கதாபாத்திரம் வித்தியாசமானதாக இருக்கும் என்றும் தன்னுடைய கேரக்டருக்கு அவர் முற்றிலும் தன்னை பொறுத்துக் கொள்வார் என தான் நம்புவதாகவும் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

மேலும் இது ஒரு குறிப்பிட்ட இன மக்களை சார்ந்த ஒரு புரட்சி படமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Vikram and Ranjith combo Chiyaan 61 updates

POWDER மேடையை POWERful மேடையாக்கிய திரைப் பிரபலங்கள்.; பரவசத்தில் விஜய்ஸ்ரீ & நிகில் முருகன்

POWDER மேடையை POWERful மேடையாக்கிய திரைப் பிரபலங்கள்.; பரவசத்தில் விஜய்ஸ்ரீ & நிகில் முருகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெற்றிகரமான மக்கள் தொடர்பாளராக இயங்கி வரும் நிகில் முருகன் நாயகனாக நடிக்க, வெள்ளிவிழா நாயகன் மோகன்-குஷ்பு நடிப்பில் ஹரா படத்தை இயக்கி வரும் விஜய் ஸ்ரீ ஜி, இயக்கத்தில் ஜீ மீடியா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “பவுடர்”.

ஓர் இரவில் நடக்கும் பரபரப்பான சம்பவங்களை வைத்து பரபர திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா தமிழ் திரையுலகின் பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிகை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவினில்

இயக்குநர் – திரைக்கதை எழுத்தாளர் – நடிகர் கே பாக்யராஜ் பேசுகையில்…

“இந்தப் படம் மாபெரும் வெற்றியடைய தயாரிப்பாளர் ஜெயஸ்ரீக்கு எனது வாழ்த்துகள். நிகில் முருகன் தனது வாழ்க்கையில் பல சவால்களை சந்தித்தாலும், அதை எப்போதும் தன்னம்பிக்கையுடனும் புன்னகையுடனும் எதிர்கொள்கிறார்.

நடிகராக புது அவதாரத்தின் மூலம் அவர் வெற்றியைக் காணுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்றார்.

இயக்குநர் வசந்த் பேசுகையில்…

, “நிகில் எப்போதும் புதிய விஷயங்களில் கவனம் செலுத்துவதில் ஆர்வமாக இருப்பார், மேலும் பல புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வார். அவர், தனது கடின உழைப்புக்காகவும் அதனை வெற்றிகரமாக மாற்றுவதிலும் வல்லவர் ஆவார். கடந்த 26 ஆண்டுகளாக தொடர்ந்து தனது வெற்றியை நிரூபித்து வருகிறார். படத்தின் டிரெய்லர் நம்பிக்கை தருகிறது, மேலும் இந்த படம் மாபெரும் வெற்றியடைய ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துகள்.”

இயக்குநர் எழில் பேசுகையில்..

“எனக்கு நிகிலை அவர் பிஆர்ஓ ஆவதற்கு முன்பே தெரியும். எங்கள் நட்பு 23 ஆண்டுகளாக நீடிக்கிறது. ஆடியோ மற்றும் திரைப்படம் தொடர்பான நிகழ்வுகளின் போது ஒரு பிஆர்ஓ-வாகவும், இப்போது பெரிய திரைகளில் நடிகராகவும் தனது வீரியத்தை காட்ட இருக்கிறார் அவருக்கு வாழ்த்துகள்.”

இயக்குநர் பிரபு சாலமன் பேசுகையில்…

“நிகில் ஒரு இயல்பான நடிகர் என்பது இந்தப் படத்தின் டிரைலரில் இருந்து தெரிகிறது. நிகில் தனது தொழிலில் அயராத அர்ப்பணிப்பை கொடுத்து, சரியான நம்பிக்கையைப் பெற்றுள்ளார். ஒரு வெற்றிகரமான நடிகராக அவர் பல மைல்கள் பயணிக்க உள்ளார், அவருக்கு எனது நல்வாழ்த்துக்கள்.”

இயக்குனர் சசி பேசுகையில்..

“நிகில் எப்போதும் உற்சாகம் தரும் நபர், இந்த படம் அவருக்கு பெரிய வெற்றியை கொடுக்க வாழ்த்துகிறேன்.”

இயக்குநர் அறிவழகன் பேசுகையில், “சசி சார் சொன்னது போல் நிகில் சார் ஒரு உற்சாகமிக்க நபர். அவர் எப்பொழுதும் கடின உழைப்பு கொண்ட ஒரு சிறந்த மனிதர். அவர் நடிகராகி, வெற்றியைக் காணப்போகிறார். இயக்குநர் விஜய் ஸ்ரீ ஒரு திறமையான திரைப்பட இயக்குநர் என்பதும், இந்த படத்தில் அவர் ஒரு குறிப்பிடத்தக்க பணியை செய்திருப்பதும் டிரெய்லரில் தெரிகிறது. படக்குழுவிற்கு எனது வாழ்த்துகள்.”

எஸ் ஆர் பிரபாகரன் பேசுகையில், “நேர்த்தியான காட்சிகளும், மேக்கிங் ஸ்டைலும் டிரெய்லரில் நமக்கு தெரிகிறது, எல்லாமே மிகச் சரியாகவும், தொழில் ரீதியாகவும் அமைந்துள்ளது. விஜய் ஸ்ரீ நிச்சயம் ஒரு சிறந்த திரைப்பட இயக்குநராக வருவார். இசை அமைப்பாளரின் இசையில் ஒலியின் தரம் மிகவும் பிரமிக்க வைக்கிறது. இந்தப் படத்தில் நடித்துள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் எனக்கு நண்பர்களாகவும், பழக்கமான முகங்களாகவும் இருக்கிறார்கள், படக்குழுவின் பங்களிப்பு படத்தின் வெற்றிக்குக் காரணமாக இருக்கும். நிகில் முருகன் இந்தப் படத்தின் மூலம் ஆக்‌ஷன் ஹீரோவாக நல்ல பெயரைப் பெறுவார். அவர் நடிப்பது மிகவும் இயல்பாக இருக்கிறது. ஒட்டுமொத்த அணியும் மாபெரும் வெற்றிபெற வாழ்த்துகிறேன்,” என்றார்.

தயாரிப்பாளர் சமீர்.. “எனக்கு நிகில் சாரை பத்தாண்டுகளுக்கு மேல் தெரியும். கமல் சார் மூலம்தான் அவரைப் பற்றி தெரிந்து கொண்டேன். அவர் தொடர்ந்து ஆடைகளை மாற்றுவதில் பெயர் பெற்றவர், ஆனால் நட்பை அவர் மாற்றுவதில்லை. இந்தப் படம் வெற்றிபெற அவருக்கு எனது வாழ்த்துகள்” என்றார்.

தயாரிப்பாளர் டி.சிவா பேசுகையில், “நடிகராக நிகிலின் வளர்ச்சி கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் நல்ல உத்வேகமும், ஒருங்கிணைப்பும் கொண்ட கடின உழைப்பாளி. அனைவரும் இந்த படத்திற்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்தப் படம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்”.

தயாரிப்பாளரும் இயக்குநருமான CV குமார் பேசுகையில், “நிகில் முருகன் என்னுடைய நெருங்கிய நண்பர், அவர் எனது படங்களுக்கு பிஆர்ஓவாக இருந்துள்ளார். அவரது அதிக ஆற்றல் மற்றும் அர்ப்பணிப்புக்காக அவரை எனக்கு பிடிக்கும். இந்தப் படம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துகள்” என்றார்.

அஜயன் பாலா பேசுகையில், “அனைத்து படங்களுக்கும் சுறுசுறுப்புடன் கூடிய உழைப்பை கொடுக்கும் கடின உழைப்பாளி தான் நிகில். பல படங்களின் வெற்றிக்கு முதுகெலும்பாக இருந்தவர். அவரது நேர்மையும் கடின உழைப்பும் அவருக்கு இன்று தமிழ் சினிமாவில் நடிகர் என்ற இந்த அந்தஸ்தை பெற்றுத் தந்துள்ளது. ‘பவுடர்’ என்ற தலைப்புக்கு நிறைய முக்கியத்துவமும், மதிப்பும் உள்ளது. இந்தப் படம் மாபெரும் வெற்றியடைய ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.”

பாடலாசிரியர் சினேகன் பேசுகையில், “நிகில் முருகன் நடிகராக வளர்ந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இப்படி ஒரு படத்தை இயக்கியதற்காக இயக்குநர் விஜய்யை பாராடியாக வேண்டும். இசையமைப்பாளரின் பணி பாராட்டத்தக்கது, இது அவரது முதல் படம் போல் இல்லை. முதல் படத்திலேயே நிகில் போலீஸ் சீருடை அணிந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் படத்தை தயாரித்திருக்கும் தயாரிப்பாளர் வெற்றியடைய வாழ்த்துகிறேன்” என்றார்.

இசையமைப்பாளர் லியாண்டர் லீ மார்டி பேசுகையில்,
“நான் முதல்முறையாக சந்தித்ததில் இருந்தே நிகில் சார் ஒரு சிறந்த நலம் விரும்பியாக இருந்து வருகிறார். விஜய் ஸ்ரீ ஜி உடனான எனது பயணம் தாதா 87ல் இருந்து, இன்னும் பல படங்களில் தொடரும். இந்தப் படத்தின் இசை உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன். நாங்கள் சிறப்பான பணியினை செய்துள்ளோம். இந்தப் படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்”
என்றார்.

நடிகர் ரோபோ ஷங்கர் பேசுகையில், “நிகில் முருகனுக்கு அபாரமான கமாண்டிங் பவர் உண்டு. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் முதன்மை விருந்தினராக கலந்து கொண்ட 16 வயதினிலே திரைப்படத்தின் டிஜிட்டல் ரீ-ரிலீஸ் உட்பட பல நிகழ்வுகளில் நான் அதைப் பார்த்திருக்கிறேன். நிகில் அவர்கள் மொத்த கூட்டத்தையும் இயக்குவதை நான் பார்த்தேன். எனவே நடிகராகவும் சிறப்பாக பணியாற்றியிருப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்தப் படம் மாபெரும் வெற்றியடைய ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துகள்” என்றார்.

ஒளிப்பதிவாளர் ராஜா பேசுகையில்..
இப்படத்தில் பணியாற்ற வாய்ப்பளித்த இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நிகில் சார் ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்

நடிகர் வையாபுரி பேசுகையில், “இந்தப் படத்தில் கதாநாயகியின் அப்பாவாக நடித்துள்ளேன். இந்தப் படம் எனக்கு ரீ-என்ட்ரி போன்றது, இந்த வாய்ப்பை வழங்கிய நிகிலுக்கு நன்றி. அவர் எனக்கு காட்பாதர் போன்றவர், இந்த வாய்ப்பால் எனக்கு தற்போது அதிக வாய்ப்புகள் கிடைத்து தற்போது 4 படங்களில் நடித்து வருகிறேன். நான் 400 படங்களில் நடித்திருக்கிறேன், பவர் போன்ற எந்தப் படமும் எனக்கு முழு திருப்தியைத் தரவில்லை.”

நடிகர் பார்த்திபன் அனுப்பிய குரல் குறிப்பில், “பிஆர்ஓவாக ஷோஸ்டாப்பராக இருந்த நிகில் முருகன், அனைத்து நிகழ்ச்சிகளிலும் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் மேஜிக் கொண்டவர். இந்தப் படத்தின் மூலம் நடிகராக அனைவரின் மனதையும் வெல்வார் என்று உறுதியாக நம்புகிறேன். திரையுலகில் உள்ள அனைத்து துறைகளையும் பற்றி அவருக்கு நல்ல அறிவு இருக்கிறது, மேலும் இந்த படம் மாபெரும் வெற்றியடைய ஒட்டுமொத்த டீமையும் வாழ்த்துகிறேன்.”

நடிகர் ஆதவன் பேசுகையில், “நான் பல முன்னணி நடிகர்களுக்கு மிமிக்ரி செய்துள்ளேன், ஆனால் எனது மிமிக்ரிக்கு பிறகு ஒருவர் நடிகராக வருவது இதுவே முதல் முறை. அவரது கடின உழைப்பு இன்று அவருக்கு தொழில்துறையில் ஒரு பெரிய இடத்தைப் பெற்றுத்தந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்றார்.

நடிகை அனித்ரா நாயர் பேசுகையில், “இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பளித்த நிகில் சார், தயாரிப்பாளர்கள், விஜய் ஸ்ரீ ஜி சாருக்கு நன்றி. நல்ல கதை கொண்ட திரைப்படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். வித்தியாசமான கதையில் உருவாகும் இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். இந்தப் படத்துக்கு உங்கள் ஆதரவை தாருங்கள்” என்றார்.

தயாரிப்பாளர் மோகன்ராஜ் பேசுகையில், “நல்ல நகைச்சுவை கலந்த க்ரைம் திரில்லர் திரைப்படம். இதன் முதல் பிரதியை பார்த்தேன், ஒவ்வொரு ஷாட்டும் நன்றாகப் படமாக்கப்பட்டுள்ளதால் இந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நீங்கள் அனைவரும் இத்திரைப்படத்தை ஆதரித்து வெற்றியடையச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி பேசுகையில், “படம் முழுவதும் தயாரிப்பாளர் மோகன் சார் எனக்கு பெரும் உறுதுணையாக இருந்தார். நிகில் சார் மிகச்சிறப்பான பணி செய்திருக்கிறார். ஒரு இரவு பின்னணியில் கதை என்பதால் முழு திரைப்படமும் இரவில் மட்டுமே படமாக்கப்பட வேண்டிய வகையில் இருந்தது. துரதிர்ஷ்டவசமாக, கொரோனா காலத்தில் இரவு ஊரடங்கு இருந்ததால் படப்பிடிப்பு கெட்டுப்போனது. பலத்த சவால்களுக்கு மத்தியில் இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளோம். படக்குழுவினர் அனைவரும் இந்த படத்திற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர். அனைவரும் இந்தப் படத்தை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.”

கூல் சுரேஷ் பேசுகையில், “இப்படத்தின் ரிலீஸ் தேதியில் தியேட்டர்கள் கைதட்டல், விசில், பாராட்டுகள் என நிரம்பி வழியும் என்று நான் நம்புகிறேன். நிகில் ஒரு அதீத ஆற்றல் மிக்க நபர், அவருடைய அர்ப்பணிப்பும் ஒழுக்கமும் இந்தப் படத்தின் மூலம் அவரது நட்சத்திர அந்தஸ்தை உயர்த்தப் போகிறது. இந்தப் படம் மாபெரும் வெற்றியடைய ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துகள்” என்றார்.

நடிகர் நிகில் முருகன் பேசுகையில், “எனக்கு வழிகாட்டிய முன்னோடிகள், எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர் நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி. என் தாய், தந்தை, மனைவிக்கு நன்றி. இதுவரை நான் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். நான் நடிகராக வருவது இதுவே முதல் முறை. சிறப்பான கதை உள்ளடக்கம் கொண்ட ஒரு நல்ல திரைப்படத்துடன் நாங்கள் வந்துள்ளோம். இந்தப் படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறோம். உலகளாவிய திரையரங்கு வெளியீட்டுடன் கூடிய விரைவில் உங்களை பெரிய திரையில் சந்திப்போம் நன்றி.”

அனித்ரா நாயர், சாந்தினி தேவா, ‘மொட்டை’ ராஜேந்திரன், சிங்கம்புலி, வையாபுரி, ஆதவன், ‘சில்மிஷம்’ சிவா, விக்கி ஆகியோர் நடித்துள்ள பவுடர் படத்தை விஜய் ஸ்ரீ ஜி இயக்க, ஜி மீடியா பேனரில் ஜெயஸ்ரீ விஜய் தயாரித்துள்ளார்.

பவுடர் தொழில் நுட்ப குழு

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் – விஜய் ஸ்ரீ ஜி

இசை – லியாண்டர் லீ மார்ட்

ஒளிப்பதிவு – ராஜபாண்டி

மக்கள் தொடர்பு – நிகில் முருகன்

படத்தொகுப்பு – குணா

கலை இயக்குநர் – சரவணா

சண்டைக்காட்சி – விஜய்

உடைகள் – வேலவன்

புகைப்படங்கள் – ராஜா

சவுண்ட் ஸ்டுடியோ – சவுண்ட் ஹோலிக் ஸ்டுடியோ

ஒலி வடிவமைப்பு – பிரேம்குமார்

ஒலிக்கலவை – நவீன் ஷங்கர்

டிஐ வண்ணம்: வீரராகவன்

வடிவமைப்பு – ஜி டிசைன்ஸ்

தயாரிப்பு மேலாளர் – சரவணன்

தயாரிப்பு நிறுவனம் – ஜி மீடியா

தயாரிப்பாளர் – ஜெய ஸ்ரீ விஜய், கோவை எஸ் பி மோகன் ராஜ்

ஆடியோ லேபிள் – டிவோ

பவுடர்

Powder Audio and Trailer Launch highlights

More Articles
Follows