இளையராஜாவை சந்தித்து வாழ்த்திய வெங்கட் பிரபு & நாகசைதன்யா டீம்

இளையராஜாவை சந்தித்து வாழ்த்திய வெங்கட் பிரபு & நாகசைதன்யா டீம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு நடிகர் நாகசைதன்யா நடிப்பில் தமிழ்-தெலுங்கு பைலிங்குவல் புராஜெக்ட்டான ‘கஸ்டடி’ படத்தை இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கியுள்ளார்.

இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்துள்ள நிலையில், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் படக்குழு தற்போது ஈடுபட்டுள்ளது.

இசைஞானி இளையராஜா தற்போது, ‘ராஜா லைவ் இன் கான்செர்ட்’ நிகழ்ச்சிக்காக ஹைதராபாத்தில் உள்ளார். எனவே, இந்த இசை நிகழ்ச்சிக்கு முன்னதாக ‘கஸ்டடி’ டீம் அவரை சந்தித்து தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இளையராவுடன் நடந்த சந்திப்புக் குறித்து ஒரு ரசிகனாக நாக சைதன்யா பகிர்ந்து கொண்டதாவது…

‘மாஸ்ட்ரோ இளையராஜாவை சந்தித்தபோது என் முகத்தில் எவ்வளவு பெரிய புன்னகை. அவரது இசை என் வாழ்க்கையில் பல தருணங்களில் முக்கியமானதாக இருந்திருக்கிறது. அவரது இசை ரெஃபரன்ஸ் கொண்டு பல காட்சிகளையும், கதையையும் எனக்குள் நானே கற்பனை செய்து பார்த்திருக்கிறேன்.

இப்போது ‘கஸ்டடி’க்கு அவரே இசையமைத்து இருக்கிறார். உண்மையில் நான் ஆசீர்வதிக்கப்பட்டவன்தான்’ எனக் கூறியுள்ளார்.

கீர்த்தி ஷெட்டி இதில் கதாநாயகியாக நடிக்கிறார். அரவிந்த் சுவாமி வில்லனாக நடிக்க பிரியாமணி வலுவான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும், சரத்குமார், சம்பத் ராஜ், ப்ரேம்ஜி, வெண்ணேலா கிஷோர், ப்ரேமி விஷ்வநாத் உள்ளிட்டப் பலர் நடிக்கின்றனர்.

அக்கினேனி கதாநாயகனாக நடித்தப் படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டப் படங்களில் இதுவும் ஒன்று.

ஸ்ரீனிவாசா சித்தூரி இந்தப் படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் கீழ் தயாரித்துள்ளார். உயர்தரமான தயாரிப்பு மற்றும் தொழில்நுட்பத் தரத்துடன் இந்தப் படம் உருவாகி உள்ளது.

பவன்குமார் இந்தப் படத்தை வழங்குகிறார். அபூரி ரவி வசனம் எழுத, எஸ்.ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

’கஸ்டடி’ திரைப்படம் மே 12, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படும்.

நடிகர்கள்:*

நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி, அரவிந்த் சாமி, பிரியாமணி, சரத் குமார், சம்பத் ராஜ், பிரேம்ஜி அமரன், வெண்ணேலா கிஷோர், பிரேமி விஸ்வநாத் மற்றும் பலர்.

*படத்தின் தொழில்நுட்பக்குழு விவரம்:*

கதை, திரைக்கதை, இயக்கம்: வெங்கட் பிரபு,
தயாரிப்பாளர்: சீனிவாச சித்தூரி,
பேனர்: ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்,
வழங்குபவர்: பவன் குமார்,
இசை: மேஸ்ட்ரோ இளையராஜா, லிட்டில் மேஸ்ட்ரோ யுவன் சங்கர் ராஜா,
ஒளிப்பதிவாளர்: எஸ்.ஆர்.கதிர்,
படத்தொகுப்பு: வெங்கட் ராஜன்
வசனங்கள்: அபூரி ரவி,
தயாரிப்பு வடிவமைப்பாளர்: ராஜீவன்,
சண்டைப்பயிற்சி: ஸ்டன்ட் சிவா, மகேஷ் மேத்யூ,
கலை இயக்குநர்: டிஒய் சத்யநாராயணா,
மக்கள் தொடர்பு: வம்சி சேகர், சுரேஷ் சந்திரா, ரேகா டி’ஒன்,
மார்க்கெட்டிங்: விஷ்ணு தேஜ் புட்டா

Venkat Prabhu & Naga chaitanya team met and greeted Ilaiyaraja

4 வருடங்களுக்கு பிறகு வெளியாகும் வெற்றியின் ‘மெமரீஸ்’

4 வருடங்களுக்கு பிறகு வெளியாகும் வெற்றியின் ‘மெமரீஸ்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எட்டுத் தோட்டாக்கள், ஜீவி, ஜீவி 2 போன்ற வெற்றி படங்களைக் கொடுத்த நடிகர் வெற்றி.

சியாம் பிரவீன் இயக்கத்தில் வெற்றி நடித்துள்ள படம் ‘மெமரீஸ்’.

இப்படத்தில் வெற்றி, பார்வதி அருண், ஹரிஷ் பெராடி, ரமேஷ் திலக் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு கவாஸ்கர் அவினாஷ் இசையமைத்துள்ளார்.

தொழில்நுட்பக் குழுவினர் ஒளிப்பதிவாளர் ஆர்மோ மற்றும் கிரண் நப்டியல் மற்றும் படத்திற்கான எடிட்டிங்கை சான் லோகேஷ் செய்துள்ளார்.

இப்படம் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர், காதல் படமாக இருக்கும்.

கடந்த நான்கு ஆண்டுகளாக படத்தின் வெளியீடு கேள்விக்குறியாக மாறியது.

இந்நிலையில், சமூக ஊடகங்களில் திரைப்பட தயாரிப்பாளர்கள் இப்படத்தை மார்ச் 10ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர்.

மெமரீஸ்

Vetri’s ‘Memories’ to release on March 10

மக்கள் நீதி மய்யம் : முக்கிய பொறுப்பில் இருந்து விலகினார் கமல்ஹாசன்.!

மக்கள் நீதி மய்யம் : முக்கிய பொறுப்பில் இருந்து விலகினார் கமல்ஹாசன்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சினிமாவில் கோலோச்சிய கமல்ஹாசன் திடீரென மக்கள் நீதி மய்யம் என்ற புதிய கட்சியை தொடங்கினார்.

இந்த கட்சி தொடங்கப்பட்டு சமீபத்தில் ஆறு ஆண்டுகள் நிறைவடைந்தது.

தற்போது சினிமா – அரசியல் என இரட்டை குதிரைகளில் சவாரி செய்து வருகிறார் கமல்.. சில தினங்களுக்கு முன் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் நிர்வாக செயற்குழு கூட்டம், நேற்று நடந்தது.

அதில் தி.மு.க., கூட்டணிக்காக கமல் செய்த தேர்தல் பிரசாரத்திற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

இந்நாள் வரை மநீம கட்சி தலைவராகவும், பொதுச் செயலராகவும் பதவி வகித்து வந்தார் கமல்ஹாசன்.

இந்த நிலையில் பொதுச் செயலர் பதவியில் இருந்து நேற்று விலகினார். அந்த பொறுப்பில் அருணாச்சலத்தை நியமித்துள்ளார்.

மேலும் கட்சியின் மகளிர் அணியை வலுப்படுத்த ‘மய்யம் மாதர் படை’ மகளிர் அணியுடன் இணைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இத்துடன் புதிதாக, கமல் பண்பாட்டு மய்யமும் தொடங்கப்பட்டுள்ளது.

Kamal Haasan stepped down from the important role in his party

கவர்ச்சியான ஆடை குறித்து இளைஞர் கேட்ட கேள்வி . பதிலடி கொடுத்த பகாசுரன் நடிகை

கவர்ச்சியான ஆடை குறித்து இளைஞர் கேட்ட கேள்வி . பதிலடி கொடுத்த பகாசுரன் நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மோகன் ஜி யின் பகாசுரன் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது . சமீபத்தில் படத்தில் நடித்த லாவண்யா மாணிக்கம் அணிந்திருந்த உடை குறித்து நிருபர்கள் கேட்ட கேள்வி சர்ச்சையை கிளப்பி உள்ளது . நீங்க வேண்டும் என்றே கவர்ச்சியா உடை அணிந்து உங்கள் முன் அழகை காட்டுறீங்களே இது சரியா? என ஒரு நிருபர் கேட்க , அதற்கு பதில் அளித்த லாவண்யா நீங்கள் கேள்வி தானே கேக்குறீங்க . என் கண்ணை பார்த்து பேசலாம்ல . ஏன் தப்பான கண்ணோட்டத்தோட பாக்குரிங்க னு பதில் அளித்தார் . ஆர்டிஸ்ட் க்ளாமர், ஹோம்லி ரோல் ரெண்டும் பண்ணன்லாம் தப்பு இல்லனு பதில் அளித்தார்.

Youth’s Inappropriate Question To Actress Based On Her Clothes Irked Internet

‘லியோ’ சூட்டிங் ஓவர்..; விஜய் – லோகேஷூக்கு மிஷ்கின் திடீர் கடிதம்

‘லியோ’ சூட்டிங் ஓவர்..; விஜய் – லோகேஷூக்கு மிஷ்கின் திடீர் கடிதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் படம் ‘லியோ’.

இதன் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

இதில் விஜய்யுடன் த்ரிஷா, மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத், மன்சூரலிகான் உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்தப் படப்பிடிப்பில் தனக்கான காட்சிகளை முடித்து விட்டு தற்போது சென்னை திரும்பியுள்ளார் மிஷ்கின்.

தனது பட அனுபவங்களை கடிதம் போல எழுதி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில்…

காஷ்மீரில் ‘லியோ’ படப்பிடிப்பு நடைபெற்றது. என் காட்சிகளை முடித்துவிட்டு தற்போது சென்னை திரும்பி உள்ளேன்.. மைனஸ் 12 டிகிரியில் 500 பேர் கடுமையாக உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.. சண்டைக் காட்சிகளை அன்பறிவு இயக்கினர்.. ஒட்டுமொத்த பட குழுவும் அயராது உழைத்துக் கொண்டிருக்கிறது..

தயாரிப்பாளர் லலித் குமார் ஒரு சகத் தொழிலாளி போல படப்பிடிப்பில் உழைத்துக் கொண்டிருக்கிறார். ஒரு தேர்ச்சி மிகு இயக்குனராக லோகேஷ் உழைக்கிறார்.

எனது காட்சிகளை முடித்துபின் லோகேஷுக்கு முத்தமிட்டு வாழ்த்தினேன்.. ஷூட்டிங் தளத்தில் விஜய் பண்பாக நடந்து கொண்டார்.. லியோ படம் மிகப்பெரிய வெற்றி பெறும்” என தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார் மிஷ்கின்.

Mysskin wraps up Leo shoot, says ‘happy to have worked with team’

விஜய்யின் ‘லியோ’ பட சூட்டிங்கில் கௌதம் வாசுதேவ் மேனன் கொண்டாட்டம்

விஜய்யின் ‘லியோ’ பட சூட்டிங்கில் கௌதம் வாசுதேவ் மேனன் கொண்டாட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் படம் ‘லியோ’.

இதன் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

இதில் விஜய்யுடன் த்ரிஷா, மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத், மன்சூரலிகான் உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்தப் படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் கௌதம் மேனன் தன் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

இது தொடர்பான புகைப்படத்தில் கௌதம் உடன் லோகேஷ் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளனர்.. இந்த படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் விஜய் மற்றும் திரிஷா ஆகியோர் இருக்கும் மற்றொரு ‘லியோ’ புகைப்படமும் இணையத்தில் தற்போது உலா வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Gautham Menon celebrates his birthday at leo shooting

More Articles
Follows