கெஸ்ட் ரோலுக்கு கூட ஃபைட் பண்ணி அண்ணன்கிட்ட சான்ஸ் கேட்டேன்… – பிரேம்ஜீ

கெஸ்ட் ரோலுக்கு கூட ஃபைட் பண்ணி அண்ணன்கிட்ட சான்ஸ் கேட்டேன்… – பிரேம்ஜீ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கஸ்டடி’. இது அவரது இயக்கத்தில் உருவாகும் 11 வது படமாகும்.

இதில் நாகசைதன்யா மற்றும் கீர்த்தி ஷெட்டி இணைந்து நடித்துள்ளனர்.

முக்கிய வேடங்களில் சரத்குமார், அரவிந்த்சாமி, பிரேம்ஜி நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசை அமைத்துள்ளனர்

இந்த படம் மே 12ல் உள்ள நிலையில் இந்தப் படக்குழுவினர் நேற்று மே 5ம் தேதி மாலை செய்தியாளர்களை சென்னையில் உள்ள பிரசாத் லேபில் சந்தித்தனர்.

அப்போது நடிகர் பிரேம்ஜி பேசியதாவது…

“இந்தப் படத்தில் நான் சண்டை போட்டு சான்ஸ் வாங்கினேன். கெஸ்ட் ரோல் என்றால் கூட ஓகே என்று அண்ணனிடம் சண்டை போட்டு வாய்ப்பு வாங்கினேன். ஷூட்டிங் ஜாலியாக சென்றது. படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”. என்றார்.

Premgi speech at custody event

என்னோட படம்னாலே ஜாலி என நினைப்பவர்களுக்கு ‘கஸ்டடி’ வேற அனுபவம் – வெங்கட் பிரபு

என்னோட படம்னாலே ஜாலி என நினைப்பவர்களுக்கு ‘கஸ்டடி’ வேற அனுபவம் – வெங்கட் பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன், ஸ்ரீனிவாசா சித்தூரி புரொடக்ஷன்ஸ், பவன்குமார் வழங்கும் ’வெங்கட்பிரபுவின் ஹண்ட்’ என்ற டேக் லைனோடு நடிகர் நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி நடிப்பில் ‘கஸ்டடி’ டிரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது.

இந்த சந்திப்பில் இயக்குநர் வெங்கட்பிரபு, ஹீரோ நாக சைதன்யா, ஹீரோயின் கீர்த்தி ஷெட்டி, தயாரிப்பாளர் சீனிவாசா, நடிகர் பிரேம்ஜி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

நிகழ்வில் இயக்குநர் வெங்கட்பிரபு பேசியதாவது…

‘கஸ்டடி’ என்னுடைய முதல் தெலுங்கு படம். நாக சைதன்யாவின் முதல் தமிழ் படம். படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. அதிக செலவில் எடுக்கப்பட்ட என்னுடைய முதல் படம் இது. அந்த அளவு இந்த கதை மேல் நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி.

நாகசைதன்யாவிடம் முதலில் கதை சொன்னதும் அவருக்கு பிடித்துப் போனது. என்னுடைய முதல் தேர்வும் அவராகதான் இருந்தார். பிறகுதான் தயாரிப்பாளரிடம் கதை சொன்னேன். படம் முழுவதும் ஆக்‌ஷன் மோடிலேயே இருக்கும்.

வெங்கட்பிரபு படம் என்றாலே ஜாலியாகதான் இருக்கும் என்று நினைப்பவர்களுக்கு இந்தப் படம் புது அனுபவமாக இருக்கும்.

தீவிரமான கதைக்களம் கொண்டதாக இருக்கும். நாக சைதன்யாவுடன் சேர்ந்து முக்கியமான கதாபாத்திரம் செய்திருப்பவர் அரவிந்த்சாமி சார். அவரிடம் கதை சொல்லி கன்வின்ஸ் செய்வது கஷ்டம். கதை பிடித்து போய் ஒத்துக் கொண்டார்.

சரத்குமார், பிரியாமணி எல்லாருக்கும் நன்றி. கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். எனக்கு தெலுங்கு புரியும். சைதன்யாவுக்கு தமிழ் தெரியும். மற்றவர்களும் தமிழ் நடிகர்கள் என்பதால் வேலை செய்தது எளிது.

ராஜா சாரின் பெயர் என் படத்தில் வர வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. அது இதில் நிறைவேறியுள்ளது. யுவனும் அருமையாக இசையமைத்துள்ளார்.

தமிழில் பிரேம் கதாபாத்திரத்தை தெலுங்கில் வெண்ணெல்லா நடித்துள்ளார். இது ஆக்‌ஷன் படம் என்பதால் பார்த்துவிட்டு சொல்லுங்கள். இதற்கு பிறகு மே 9ம் தேதி ஒரு ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்டும் வைத்துள்ளோம். படம் மே 12 அன்று வெளியாகிறது, பார்த்துவிட்டு சொல்லுங்கள் “. என்றார்.

Custody gives you different experience says venkat prabhu

விக்ரம் வீடு வரை தேடி வந்த ரசிகர்.; நெகிழ்ச்சியால் சீயான் செய்த காரியம்

விக்ரம் வீடு வரை தேடி வந்த ரசிகர்.; நெகிழ்ச்சியால் சீயான் செய்த காரியம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த மாதம் ஏப்ரல் 28ஆம் தேதி விக்ரம் நடிப்பில் உருவான ‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் வெளியானது.

இந்த படம் ரிலீஸாவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே அப்பட பிரமோஷன் பணிகளில் பிஸியாக இருந்தார் விக்ரம்.

PS2 படம் ரிலீஸ் ஆன ஓரிரு நாட்களில் ‘தங்கலான்’ பட ஷூட்டிங்கில் கலந்து கொண்டார் விக்ரம்.

அப்போது விக்ரமின் விலா எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது, இதனால் அவர் தற்போது ஓய்வில் இருக்கிறார்.

இந்த நிலையில் விக்ரமின் தீவிர ரசிகரான சிவா என்பவர் நடிகர் வீட்டுக்கு சென்று கேட்டில் நின்றுகொண்டு விக்ரம் விரைவில் குணமடைய வேண்டும் என்ற பதாகையுடன் நின்று ஒரு புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

உடனே அதற்கு நடிகர் விக்ரம் பதிலளித்தார்.

Sending you all my love n hug @chiyaan wishing you a speedy recovery ! ❤️
என்றும் உங்களுடன் நாங்கள்.
Love yu moreee… #ChiyaanVikram ✨

“Waiting for your Comeback & Oscar’s waitin’ for you.” 😎
#Thangalaan 🔥

@Kalaiazhagan15 @sooriaruna
@chiyaanCVF @mugeshsharmaa @proyuvraaj https://t.co/VJwRKAi8s6

மிக்க நன்றி சிவா. 💛வீடு வரை வந்து உங்கள் அன்பை தெரிவித்ததற்க்கு. நீங்கள் எல்லோரும் என்னுடன் இருக்கும்போது எனக்கு வேறு என்ன வேண்டும். I’ll be back. 😁

A fan who came to Vikram’s house.; Something that vikram did out of resilience

ரஜினி படத்தால் தள்ளிப்போன ஷாரூக் படம்.; ஜெயிலருக்கு வழிவிட்ட ஜவான்

ரஜினி படத்தால் தள்ளிப்போன ஷாரூக் படம்.; ஜெயிலருக்கு வழிவிட்ட ஜவான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பெரும் எதிர்பார்ப்புக்குள்ளான ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர்’ படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து ஏற்கனவே இதே நாளில் வெளியிட திட்டமிட்டிருந்த படங்கள் தற்போது தங்கள் படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைத்து வருகின்றன.

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ‘மாவீரன்’ படம் ஏற்கனவே ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் ‘ஜெயிலர்’ பட ரிலீஸ் அறிவிப்பால் அந்தப் படத்தின் ரிலீஸை மாற்றி அமைத்தனர்.

அதாவது ஜூலை 14ஆம் தேதி மாவீரன் படம் ரிலீஸ் ஆகும் என அறிவித்தனர்.

இந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்ட ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படமும் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை செப்டம்பர் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜவான்’ படத்தை அட்லீ இயக்கியுள்ளார்.

முக்கிய இடங்களில் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி இருவரும் நடித்துள்ளனர்.

இந்த படம் ஒரே ஹிந்தி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை ஷாருக்கான் தயாரித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Jawaan release postponed due to Rajini’s jailer

#Jawan from Septempber 7, 2023 🔥

@iamsrk @Atlee_dir @RedChilliesEnt @anirudhofficial #Jawan #JawanTeaser #SRK #ShahRukhKhan #Atlee #Anirudh #JawanFromSeptember7 #filmistreet

‘துணிவு’ இயக்குநர் வினோத்தின் சீடர் இயக்கிய ‘துரிதம்’ படம்

‘துணிவு’ இயக்குநர் வினோத்தின் சீடர் இயக்கிய ‘துரிதம்’ படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் ஹெச்.வினோத்தின் சீடரான சீனிவாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘துரிதம்’.

தமிழ் சினிமாவில் ரொம்பவே அரிதாக வெளியாகும் ரோடு மூவி ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்தில் சண்டியர் பட நாயகன் ஜெகன் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ஈடன் நடித்துள்ளார்.

முக்கிய வேடங்களில் இயக்குனர் ஏ.வெங்கடேஷ், பாலசரவணன், மறைந்த நடிகர் பூ ராமு ஆகியோர் நடிக்க வில்லனாக ராமச்சந்திரன் (ராம்ஸ்) நடித்துள்ளார்.

இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் உளுந்தூர்பேட்டையை மையமாக வைத்து சென்னை, சேலம், மதுரை உள்ளிட்ட நெடுஞ்சாலைகளில் பல நாட்கள் படமாக்கப்பட்ட்டுள்ளது.

இந்த படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் ஹெச்.வினோத் படத்தை பாராட்டியதுடன் படம் ரிலீஸ் தொடர்பாக சில ஆலோசனைகளையும் படக்குழுவினருக்கு வழங்கியுள்ளார்.

இந்தப்படத்திற்காக அறிமுக இசையமைப்பாளர் அமுதன் ஆத்ம சாந்தி இசையமைப்பில் ஆண்ட்ரியா பாடிய “நில்லாமலே..” என்கிற பர்ஸ்ட் சிங்கிள் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. படத்திற்கு நரேஷ் என்பவர் பின்னணி இசையமைத்துள்ளார்.

இதைத் தொடர்ந்து அடுத்த மாதம் படத்தை திரையரங்குளில் வெளியிட திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்

தயாரிப்பு ; ஜெகன்

இயக்கம் ; சீனிவாசன்

இசை ; அமுதன் ஆத்ம சாந்தி & நரேஷ்

ஒளிப்பதிவு ; வாசன்

படத்தொகுப்பு ; நாகூரான்

ஆக்சன் ; மணி

மக்கள் தொடர்பு ; KSK செல்வா

Thunivu director Vinoth assistant’s Thuridham

நிமிரவே விடமாட்டார் நெல்சன்..; 2 வருசம் தாடியோடு அலைந்தேன் – ‘ஜித்தன்’ ரமேஷ்

நிமிரவே விடமாட்டார் நெல்சன்..; 2 வருசம் தாடியோடு அலைந்தேன் – ‘ஜித்தன்’ ரமேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஃபர்ஹானா’. ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் அனுமோல், ஐஸ்வர்யா தத்தா, கிட்டி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

மே 12ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது நடிகர் ஜித்தன் ரமேஷ் பேசும்போது,

2 வருடங்களாக தாடியுடன் சுற்றிக் கொண்டிருந்ததற்கு இப்போது படம் வெளியாவதில் மகிழ்ச்சி. நெல்சன் வெங்கடேசன் கதை கூறியதும், எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

படப்பிடிப்பு தளத்தில் என்னை நிமிர்ந்து நிற்கவே விடமாட்டார். இப்படத்திற்காக 7 கிலோ உடல் எடையைக் குறைத்தேன். என்னுடைய உடைகள் மிகவும் தளர்வாக இருக்கும். தனியாக என்னை யாராவது பார்த்தால் பிச்சைக்காரன் என்று முடிவெடுத்து விடுவார்கள். ஐஸ்வர்யா ராஜேஷ் பற்றி சொல்லியே ஆக வேண்டும். கேமராவிற்கு பின்பும் ஃபர்ஹானாவாகவே இருப்பார். அந்தளவிற்கு அர்ப்பணித்து நடித்திருக்கிறார்.

நடன இயக்குநர் என்னை நன்றாக ஆட வைத்தார். எஸ்.ஆர்.பிரபு சாருக்கு நன்றி என்றார்.

Jithan Ramesh speech at Farhana press meet

More Articles
Follows