ஆர்யா- சுந்தர்.சி நடிப்பில் ”அரண்மனை 3” ராஜ்கோட்டில் படப்பிடிப்பு ஆரம்பமானது.

Aranmanai 3அவ்னி மூவிஸ் சுந்தர்.சி தயாரிப்பில் “அரண்மனை3” படப்பிடிப்பு குஜராத் அருகே ராஜ்கோட் என்ற இடத்தில் வான்கெனர் பேலஸ் எனப்படும் பிரமாண்டமான அரண்மனையில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 30 நாட்கள் இங்கு படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அரண்மனை, அரண்மனை2 மாபெரும் வெற்றியை தொடர்ந்து அதன் 3ஆம் பாகமான ’அரண்மனை3’ எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ளது. இதில் ஆர்யா, சுந்தர்.சி, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, விவேக், யோகிபாபு, சம்பத் குமார், நந்தினி, விச்சு, மனோபாலா, சாக்சி அகர்வால் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இயக்கம் – சுந்தர்.சி
இசை- சத்யா
ஒளிப்பதிவு-U.K. செந்தில் குமார்.

Overall Rating : Not available

Latest Post