ஆர்யாவின் ‘அரண்மனை 3’..; மர்ம முடிச்சுக்களை அவிழ்த்து விடும் சுந்தர் சி

ஆர்யாவின் ‘அரண்மனை 3’..; மர்ம முடிச்சுக்களை அவிழ்த்து விடும் சுந்தர் சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘அரண்மனை 3’ திரைப்படத்தை பார்க்க வாய்ப்பு கிடைத்த சிலர் படத்தின் Climax காட்சிகள் இதுவரை தமிழ் சினிமாவில் இல்லாத அளவுக்கு மிகப்பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டடுள்ளதாகவும், படத்தின் VFX, CG காட்சிகள் மிக தத்ரூபமாக அமைந்துள்ளதாகவும் சிலாகிக்கின்றனர்.

‘அரண்மனை 3’ படத்தில் யோகிபாபு மற்றும் விவேக் காம்பினேஷனில் நகைச்சுவை காட்சிகள் பட்டையை கிளப்பியுள்ளதாக படம் பார்த்த சிலர் சொல்கின்றனர்.

தியேட்டரில் ரசிகர்கள் வயிறு குலுங்க சிரித்து சிதறப்போவது உறுதியாகியுள்ளது.

அரண்மனை சீரீஸ் படங்களில் ஃப்ளாஷ் பேக் காட்சிகள் மனதை உருக்கும் வகையில் இடம்பெற்றிருக்கும்.

அரண்மனை 3‘ படத்தில் இடம் பெற்றிருக்கும் ஃப்ளாஷ் பேக் காட்சிகள் முந்தைய இரண்டு படங்களை விட மிகவும் உருக்கமாகவும் தாய்மார்கள் கண்ணீர் சிந்துவது போலவும் அமைந்துள்ளதாம்.

பொதுவாகவே அரண்மனை படங்களுக்கு தாய்மார்கள் ஆதரவு அதிகம்.

அரண்மனை 3 திரைப்படத்திற்கு தாய்மார்களின் அதீத ஆதரவு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

‘அரண்மனை 1’ மற்றும் 2 படங்களில் வரும் கதாநாயகர்கள் கதாபாத்திரத்தை விட அரண்மனை 3 படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள ஆர்யாவின் கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.

ஆர்யாவின் சினிமா கேரியரில் அரண்மனை 3 ஒரு முக்கியமான படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

பொதுவாக அரண்மனை சீரிஸ் படங்களில் இயக்குனர் சுந்தர் C ஏற்று நடிக்கும் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் .

அதே போல் அரண்மனை 3 படத்தில் பல மர்ம முடிச்சுக்களை அவிழ்த்து பல திருப்பங்களை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாம்.

இயக்குனர் சுந்தர் C படங்களில் கதா நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கும். அதுவும் குறிப்பாக அரண்மனை சீரீஸ் படங்களில் மிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது .

Sundarc plays an important role in Aranmanai 3

தீபாவளிக்கு ரஜினியுடன் மோதும் எம்ஜிஆர்.; தயாரிப்பாளர் சூர்யாவை வாழ்த்திய ஐசரி கணேஷ்

தீபாவளிக்கு ரஜினியுடன் மோதும் எம்ஜிஆர்.; தயாரிப்பாளர் சூர்யாவை வாழ்த்திய ஐசரி கணேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டாக்டர் குமரகுருபரன் வழங்க கே.எம்பையர் மூவீஸ் சார்பில் டாக்டர் சூர்யா தயாரிப்பில் நாமக்கல் எம்.ஜி.ஆர்.நடித்த ” உழைக்கும் கைகள்” படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை வேல்ஸ் இன்ஸ்டிடியூட்டின் வேந்தரும் பிரபல திரைப்பட தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ் வெளியிட்டு வாழ்த்தினார்.

இந்த நிகழ்வில் நாயகனாக நடித்துள்ள நாமக்கல் எம்.ஜி.ஆர், பல் மருத்துவரும்
படத்தின் தயாரிப்பாளருமான குமரகுருபரன், கில்டு தலைவர் ஜாகுவார் தங்கம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் என். விஜயமுரளி , நாட்டியாலயா பிரேம்நாத், கணேசன் ஆகியோர் கலந்துக் கொண்டு வாழ்த்தினார்கள்.

தீபாவளியை அடுத்து “உழைக்கும் கைகள்” படத்தினை உலகம் முழுவதும் திரையரங்குகளில் திரையிட தயாரிப்பாளர் குருபரன் திட்டமிட்டு செயலாற்றி வருகிறார்.

இந்தாண்டு தீபாவளிக்கு ரஜினி நடித்த ”அண்ணாத்த’ படம் ரிலீசாகிறது.

கிரண்மை, ஜாகுவார் தங்கம், போண்டாமணி ஆகியோர் நடித்துள்ள இதற்கு சங்கர்கணேஷ் இசையமைத்துள்ளார்.

Rajini and MGR movies to clash in this diwali

பிரபாஸின் 25வது படத்தை இயக்கும் ‘அர்ஜுன் ரெட்டி’ பட இயக்குனர்

பிரபாஸின் 25வது படத்தை இயக்கும் ‘அர்ஜுன் ரெட்டி’ பட இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரமாண்ட பட்ஜெட்டில் டி சீரிஸ் என்டெர்டெயின்மென்ட் தயாரிக்கவுள்ள நடிகர் பிரபாஸின் 25-வது படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்கவுள்ளார்.

இந்த திரைப்படத்திற்கு ‘ஸ்பிரிட்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

‘அர்ஜுன் ரெட்டி’ மற்றும் ‘கபிர் சிங்’ ஆகிய படங்களை இயக்கியுள்ள சந்தீப், பிரபாஸ் நடிக்கும் அகில இந்திய திரைப்படமான ஸ்பிரிட்டுக்காக முன்னெப்போதும் திரையில் வந்திராத கதைக்களம் ஒன்றை தேர்ந்தெடுத்துள்ளார்.

‘சலார்’ மற்றும் ‘ஆதி புருஷ்’ படங்களில் தற்போது நடித்து வரும் பிரபாஸ், ‘புரோஜெக்ட் கே’ எனும் திரைப்படத்திலும் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

அவரது 25-வது படமான ‘ஸ்பிரிட்’ படப்படிப்பு அடுத்த வருடம் தொடங்கவுள்ளது.

‘சாஹோ’, ‘ராதே ஷியாம்’ மற்றும் ‘ஆதி புருஷ்’ ஆகிய படங்களுக்காக பிராபஸுடன் கைகோர்த்த டி சீரிஸ் என்டெர்டெயின்மென்ட், யுவி கிரியேஷன்ஸ் உடன் இணைந்து ‘ஸ்பிரிட்’ திரைப்படத்தை பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறது. இயக்கம்: சந்தீப் ரெட்டி வங்கா

Prabhas25 to be directed by Arjun Reddy director

நரேன் நடிக்கும் ‘குரல்’.; அசத்தலான ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கார்த்தி

நரேன் நடிக்கும் ‘குரல்’.; அசத்தலான ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நரேன் நடிக்கும் ‘குரல்’ படத்தின் பட வேலைகள் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் அவருடைய பிறந்த நாளான இன்று நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ‘குரல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ள நிலையில், இந்த ஃபர்ஸ்ட் லுக் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிப்பால் தனக்கென ஒரு பாதையை வகுத்துக் கொண்டவர் நரேன்.

‘சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’, போன்ற படங்களில் நடித்த நரேனின் நடிப்பு இப்போதும் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன.

நல்ல கதைகளில் நடிக்க கவனமாக இருக்கும் நரேன் தற்போது பிரபல மலையாள இயக்குநர் சுகீத் இயக்கத்தில் ‘குரல்’ படத்தில் நடித்து வருகிறார்.

மலையாளத்தில் பல ஹிட் கொடுத்த இயக்குநர் சுகீத் இயக்கும் முதல் தமிழ் படம் இது.

இதில் நாயகியாக ஷ்ர்தா சிவதாஸ் நடிக்கிறார். இவர் ‘தில்லுக்கு துட்டு-2’ படத்தில் நடித்தவர்.

முக்கிய வேடங்களில் பால சரவணன், காளி வெங்கட், கனிகா உட்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இவர்களுடன் பிலிப்பைன்ஸை சேர்ந்த ஷெரிஸி சீன் (Sherizze Sean) நடிக்கிறார்.

ரசிகர்களை கவரும் விதத்தில் இந்த திரைப்படத்தின் த்ரில்லர் காட்சிகள் அட்டகாசமாக உருவாகியுள்ளது. குறிப்பாக நரேனின் மாறுபட்ட கெட்டபும், நடிப்பும் சினிமா ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடைபெற்றுவரும் வேளையில் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு அதற்கு ரசிகர்கள் மத்தியிலும் திரையுலகினர் மத்தியிலும் பாராட்டு குவிந்துள்ளது.

இந்தப் படம் ‘கைதி’ சூப்பர் ஹிட்டுக்கு பிறகு நரேன் நடிக்கும் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள்:

நடிகர், நடிகைகள்:

நாயகன் : நரேன்

நாயகி : ஷ்ர்தா சிவதாஸ்

முக்கிய நடிகர்கள் : பால சரவணன், காளி வெங்கட், கனிகா, ஷெரிஸி சீன் (பிலிப்பைன்ஸ்).

தொழில்நுட்பக் கலைஞர்கள்:

இசை : ஷஷ்வத், மங்கள்

ஒளிப்பதிவு : விவேக் மேனன்

எடிட்டிங் : நவீன்

கலை : ராஜீவ்

சவுண்ட் டிசைனிங் : ஷிஜின் மெல்வின் மன்ஹட்டன், அபிஷேக்

மக்கள் தொடர்பு : ப்ரியா

Karthi released Narain’s next film first look

எனக்காக தன் திறமையை மறைத்தவர் சந்திரஹாசன்..; ‘அப்பத்தாவ ஆட்டைய போட்டுட்டாங்க’ பற்றி கமல் உருக்கம்

எனக்காக தன் திறமையை மறைத்தவர் சந்திரஹாசன்..; ‘அப்பத்தாவ ஆட்டைய போட்டுட்டாங்க’ பற்றி கமல் உருக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் கமல்ஹாசனின் 2வது அண்ணன் சந்திரஹாசன்.

இவர் கமலின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவன பணிகளை கவனித்து வந்தவர் ஆவார்.

மேலும் சில படங்களில் நடிப்பதும் உண்டு.

இவர் அண்மையில் கிட்டதட்ட 3 ஆண்டுகளுக்கு முன்பு காலமானார்.

அதற்கு முன் சந்திரஹாசன் கதையின் நாயகனாக நடித்துள்ள படம் தான் ‘அப்பத்தாவ ஆட்டைய போட்டுட்டாங்க’

இந்த படம் வருகிற 8ம் தேதி சோனி லைவ் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

இதுகுறித்து கமல் தன் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது…

என் திறமையை வெளிப்படுத்தும் பேரார்வத்தில் தன்திறமையை திரையில் காட்டாமலே போய்விட்டவர் சந்திரஹாசன். அவர் நடித்த கடைசி படம் ‘அப்பத்தாவ ஆட்டைய போட்டுட்டாங்க’ அக்டோபர் 8ம் தேதி @SonyLIV -ல் வெளியாகிறது. என்னை வாழ்த்தியவரை வணங்க கடமைப்பட்டுள்ளேன் ‘ஐயா.. அப்பா.. உங்கள் படம் 8ம் தேதி ரிலீஸ்’திரைப்படத்தின் டிரெய்லர்: https://youtu.be/DdrqUxQW4g8

Kamal Haasan released his brother film trailer

தளபதி விஜய் 66 படத்தில் சூப்பர் ஸ்டாரின் மகள்

தளபதி விஜய் 66 படத்தில் சூப்பர் ஸ்டாரின் மகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை முடித்த பின்னர் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிக்கவுள்ளார் விஜய்.

தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் இவர், விஜய்யுடன் கூட்டணி அமைப்பது இதுவே முதன்முறை.

இவர்கள் இணையும் பிரம்மாண்ட படத்தை தில் ராஜு தயாரிக்க உள்ளார்.

தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் இப்படம் தயாராக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்க உள்ளனர்.

இந்த நிலையில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் மகள் சிடாரா இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாம்.

எனவே விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Super Star’s daughter to play important role in Thalapathy 66

More Articles
Follows