தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இன்று மார்ச் 1 ஆம் தேதி திமுக தலைவர் முக ஸ்டாலின் தன் பிறந்த நாளை கொண்டாடினார்.
திமுக தொண்டர்கள் பலரும் இதனை பண்டிகை போல கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தன் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
அவரின் வாழ்த்தில்…
அன்பு சகோதரர் திரு. @mkstalin அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். தமிழகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராகவும், மக்களுக்காகவும் உங்கள் குரல் இன்னும் நிறைய நாட்கள் ஒலித்திட “என் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.
இதுபற்றி நெட்டிசன்கள் பலரும் பல விதமான கமெண்ட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்தியன் 2 விபத்து.; நாளை ஆஜராக கமலுக்கு சம்மன் அனுப்பிய மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
2021 தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைக்கும் என ஸ்டாலின் கூறிவருகிறார். ஒருவேளை அவர் சொல்வது போல வந்துவிட்டால் தன் ஆட்சியிலேயே அநீதி இருக்கிறது என அவர் சொல்ல போவதில்லை.
இப்போது கமல் சொல்வதை பார்த்தால்… அப்படியானால் ஆட்சியில் வேறு ஒருவர் இருப்பார். நீங்கள் அப்போதும் அநீதிக்கு எதிராக மக்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டே இருங்கள் என்கிறாரா? என நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.
மேலும் கமலும் தானே ஆட்சி அமைக்க போராடி வருகிறார். ஒரு வேளை இவர் ஆட்சி அமைத்தால் அதில் அநீதி நடக்குமா? அல்லது இவர் ஆட்சிக்கு வரமாட்டார் என்பதை முன்பே கணித்துவிட்டாரா? எனவும் குழம்பியுள்ளனர்.
ஆக… கமல் வழக்கம்போல அனைவரையும் குழப்பியுள்ளார் என்றே தெரிகிறது. உலகநாயகனுக்கே உண்மை தெரியும். ஆகட்டும் ஆண்டவரே…
Kamal Birthday wishes to MK Stalin with twist tweet
அன்பு சகோதரர் திரு. @mkstalin அவர்களுக்கு
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.தமிழகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராகவும், மக்களுக்காகவும் உங்கள் குரல் இன்னும் நிறைய நாட்கள் ஒலித்திட “என் மனமார்ந்த வாழ்த்துக்கள்”
— Kamal Haasan (@ikamalhaasan) March 1, 2020