சிவகார்த்திகேயன் தயாரிக்கும் *கனா*-வில் அனிருத்தின் நாட்டுப்புற பாட்டு

Anirudh to Enthrall Folk number for Sivakarthikeyans Kanaaமரகத நாணயம் படத்தின் இசை மூலம் எல்லோருடைய இதயத்தையும் கவர்ந்த இளம் இசை அமைப்பாளர் திபு நினன் தாமஸ்.

இவர் இசையமைப்பாளர் அனிருத்தின் குரலில் “கனா” படத்தில் ஒரு பாடலை பதிவு செய்து உள்ளார்.

“அனிருத்தின் ஸ்டுடியோவில் ஒரு நள்ளிரவில் முறையான அமைப்பு இல்லாமல் அந்த பாடலை பதிவு செய்தோம். அவருடன் வேலை செய்வது அவ்வளவு எளிதானது.

அந்த பாடல் பதிவின் முழு அமர்விலும் எங்களுக்கு நேர்மறை எண்ணங்கள் தோன்றியது, அதுவே பாடல்கள் மிகச்சிறப்பாக வரவும் உதவியது “என்கிறார் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ்.

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘கனா’ படத்திற்காக ஒரு புதிய பரிமாணத்தில் நாட்டுப்புற பாடலை உருவாக்கியிருக்கிறார் திபு.

“நாங்கள் நாட்டுப்புற வகையில் புதிய பாணியில் ஏதாவது ஒன்றை உருவாக்க முயற்சித்தோம். வழக்கமாக, பியானோ மற்றும் ஸ்ட்ரிங்க்ஸ் போன்ற கருவிகள் மெல்லிய ரொமாண்டிக் பாடல்களில் தான் அதிகம் உபயோகப்படுத்தப்படும்.

ஆனால் நாங்கள் அதை பாரம்பரியமான தவில் மற்றும் நாதஸ்வரத்துடன் கலந்து இந்த பாடலை உருவாக்கியிருக்கிறோம்” என்கிறார் திபு.

மேலும், அனிருத் பல நாட்டுப்புற பாடல்களை பாடியிருந்தாலும் இது அவரது லிஸ்டில் புதியதாக இருக்கும் என்று குறிப்பிடுகிறார்.

இந்த அழகான நாட்டுப்புற பாடல் வரிகளை பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். இது ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் தர்ஷன் ஆகியோர் நடிக்க படமாக்கப்படுகிறது.

தர்ஷன் ஐஸ்வர்யாவை காதலிக்கிறார், அவர் தனது காதலி ஐஸ்வர்யாவை நேசிப்பதை சொல்லும் பாடலாக இது அமைந்திருக்கிறது.

புதிதாக துவங்கப்பட்டுள்ள சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் பெண்கள் கிரிக்கெட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த கனா திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார் சிவகார்த்திகேயன்.

ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் ஆகியோரின் நடிப்பில் உருவாகியிருக்கும் கனா படத்தின் இசை வரும் ஆகஸ்ட் 23 ம் தேதி மிகப்பிரமாண்டமாக வெளியிடப்பட இருக்கிறது.

தனது சினிமா வாழ்க்கையின் மூன்று முக்கிய தூண்களான இயக்குனர் பாண்டிராஜ், இசையமைப்பாளர்கள் அனிருத் மற்றும் டி இமான் ஆகியோர் இந்த படத்தின் இசையை வெளியிடுவார்கள் என அறிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்மிரிதி மந்தனா இந்த விழாவிற்கு கௌரவ விருந்தாளியாக அழைக்கப்பட்டு இருக்கிறார்.அவரே இசையை வெளியிட போகிறார்.

இயக்குனர் அருண்ராஜா காமராஜின் கனா ஒரு உண்மைக்கதை அல்ல. ஆனால் ஒரு கிரிக்கெட் வீரராக சாதிக்க ஆசைப்படும் ஒரு பெண்ணின் கனவை சொல்லும் ஒரு கற்பனையான படம்.

Anirudh to Enthrall Folk number for Sivakarthikeyans Kanaa

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Related News

நடிகர், பாடகர், பாடலாசிரியர் என வலம்…
...Read More
சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், மற்றும் தர்ஷன்…
...Read More
டெக்னோ பீட்ஸ் மற்றும் மேற்கத்திய இசை…
...Read More

Latest Post