நான் பிரம்மித்து பார்க்கிற ஒருவர் சக்தி.. ‘அஸ்வின்ஸ்’ என் படமல்ல – வசந்த் ரவி

நான் பிரம்மித்து பார்க்கிற ஒருவர் சக்தி.. ‘அஸ்வின்ஸ்’ என் படமல்ல – வசந்த் ரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தருண் தேஜா இயக்கத்தில் வசந்த் ரவி, விமலா ராமன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் ‘அஸ்வின்ஸ்’.

இப்படம் ஜூன் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

இந்த சந்திப்பில் நடிகர் வசந்த் ரவி பேசியதாவது…

“இந்தப் படம் எனக்கு மிகவும் முக்கியமானது. ‘தரமணி’, ‘ராக்கி’ ஆகிய படங்களை முடித்துவிட்டு என்ன மாதிரியான படங்களில் நடிக்கலாம் என்ற கேள்வி இருந்து கொண்டே இருந்தது.

அப்படி தருண் மூலமாக என்னைத் தேடி வந்த படம்தான் ‘அஸ்வின்ஸ்’. ஹாரர் செய்ய வேண்டாம் என்று இருந்த என்னை இந்த கதை கேட்டதுமே நடிக்கலாம் என்று தோன்ற வைத்தது.

’தரமணி’, ‘ராக்கி’ படங்களுக்கு தந்த ஆதரவு போலவே, இந்தப் படத்தையும் நீங்கள் உங்கள் படமாக எடுத்துப் போய் மக்களிடம் கொடுத்தால் சந்தோஷப் படுவேன். ஏனெனில் படத்தின் இறுதியில் முக்கியமான மெசேஜ் உள்ளது.

இப்படத்திற்கு ‘யூ/ஏ’ சான்றிதழ் கிடைக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால், ‘ஏ’ கிடைத்திருக்கிறது. இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களின் நெகட்டிவிட்டி குழந்தைகளை எப்படி பாதிக்கிறது என அவர்களுக்கான மெசேஜ்தான் இது.

தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்துள்ள பாபி சாருக்கும் இது முக்கியமான படம். நிறைய தயாரிப்பாளர்கள் தெலுங்கில் இருந்து தமிழுக்கு வருவது ஆரோக்கியமான விஷயம்.

விமலாராமன், சரஸ்வதி, முரளி என அனைவரும் மிரட்டலான நடிப்பைக் கொடுத்துள்ளனர். படத்தின் ரியல் ஹீரோ இசையமைப்பாளர் விஜய்தான். அவருக்கு நன்றி. இந்த சினிமாத் துறையில் நான் பிரம்மித்து போய் பார்க்கிற ஒருவர் என்றால் அது சக்திவேலன் சார்தான்.

இவருடைய பேனரில் போனால் எல்லாப் படங்களும் ஹிட். சினிமா தற்போதுள்ள சூழ்நிலையில் வருகிற சின்ன படங்கள் எல்லாவற்றையும் ஹிட்டாக்குவது சாதாரண விஷயம் கிடையாது. இந்த வரிசையில், ‘அஸ்வின்ஸ்’ படமும் அவர் பிடித்து வெளியிட்டுள்ளார். ’அஸ்வின்ஸ்’ என் படம் கிடையாது, உங்கள் படம்”. என்றார்.

Asvins is not my movie says Vasanth Ravi

எனக்கு பிடித்தால் தான் வாங்குவேன். அதுதான் ‘அஸ்வின்ஸ்’ – சக்திவேலன்

எனக்கு பிடித்தால் தான் வாங்குவேன். அதுதான் ‘அஸ்வின்ஸ்’ – சக்திவேலன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தருண் தேஜா இயக்கத்தில் வசந்த் ரவி, விமலா ராமன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் ‘அஸ்வின்ஸ்’.

இப்படம் ஜூன் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

இந்த சந்திப்பில் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்தி பேசியதாவது…

“சமீபத்தில் ஒரு பெரிய நடிகருடன் பேசிக் கொண்டிருந்தபோது, ‘’யாத்திசை’, ‘குட்நைட்’ போன்ற படங்களுக்குப் பேசியது போலதான் ‘போர் தொழில்’ படத்திற்கும் புகழ்ந்து பேசினீர்கள் என்று நினைத்தேன்.

ஆனால், இந்தப் படம் நன்றாக போய்க் கொண்டிருக்கிறதாமே!’ என்று விசாரித்தார். உண்மையில், எனக்குப் பிடித்த படங்களை மட்டும்தான் பார்த்து வாங்குவேன். அதுபோல, ஒரு அனுபவமாக ‘அஸ்வின்ஸ்’ எனக்கு பிடித்திருந்தது.

தொழில்நுட்பம், நடிப்பு என ஹாரர் படத்தில் வித்தியாசமான ஒரு அனுபவம் கொடுத்தது இந்தப் படம். சிறந்த சவுண்ட் எபெக்ட்ஸோடு வந்த படத்திற்கு உதாரணமாக இதை சொல்வேன். எனக்குப் பிடித்துதான் இந்தப் படத்தை வெளியிடுகிறேன்.

தெலுங்கில் ‘விரூபாக்‌ஷா’ போன்ற பல வெற்றிப் படங்களைக் கொடுத்த தயாரிப்பாளர் தமிழுக்கு வருவது பெரிய விஷயம். பார்வையாளர்களுக்கு அடுத்த தலைமுறைக்கான ஒரு அனுபவமாக ’அஸ்வின்ஸ்’ இருக்கும் என நம்புகிறேன்”.

நடிகர் முரளிதரன் பேசுகையில்…

“இயக்குநர் தருணும் நானும் கல்லூரியில் இருந்தே நண்பர்கள். நான் அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்ததும் நடிக்க ஆரம்பிக்கலாம் என்று இருந்தேன். பிறகு லாக்டவுணில் இந்தக் கதையில் வேலை பார்க்க ஆரம்பித்தோம்.

சிறப்பான கதையை தருண் கொடுத்துள்ளார். வசந்த் ரவி, விமலா ராமன் என அனைவருமே கடினமான சூழலைக் கூட பொருட்படுத்தாமல் நடித்துள்ளனர். தொழில்நுட்பக் குழுவுக்கும் நன்றி. உங்கள் ஆதரவு தேவை”.

If I liked movie sure i will buy says Distributor Sakthivelan

எல்லாவிதமான உணர்ச்சிகளும் தரக்கூடியவர் வசந்த் ரவி.. – இயக்குநர் தருண் தேஜா

எல்லாவிதமான உணர்ச்சிகளும் தரக்கூடியவர் வசந்த் ரவி.. – இயக்குநர் தருண் தேஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ராவின் (SVCC) BVSN பிரசாத் தயாரித்திருக்க, பாபிநீடு பி வழங்கும் அறிமுக இயக்குநர் தருண் தேஜா இயக்கத்தில் வசந்த் ரவி, விமலா ராமன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் ‘அஸ்வின்ஸ்’ படத்தின் பத்திரிக்கையாளகள் சந்திப்பு நடந்தது.

இதில் இயக்குநர் தருண் தேஜா பேசியதாவது…

“கொரோனா சமயத்தில் ஒரு ஷார்ட்ஃபிலிம் நாங்கள் எடுத்திருந்தோம். அதை விமலா ராமன் பார்த்துவிட்டு தயாரிப்பு தரப்பிடம் காண்பித்தார். பின்பு நான் பாபி சாரிடம் வீடியோ காலில் கதை சொல்லி சம்மதம் வாங்கினேன்.

இந்த கதைக்கு எல்லாவிதமான உணர்ச்சிகளும் தரக்கூடிய ஒரு நடிகர் தேவை என நினைத்திருந்தபோது, வசந்த் ரவி உள்ளே வந்தார்.

கதை சொல்லும்போதே நாங்கள் நல்ல நண்பர்களாகிவிட்டோம். சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளார்.

அதேபோல, படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவருமே சிறப்பான உழைப்பைக் கொடுத்துள்ளனர். இந்த கடின உழைப்பிற்காகவே இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என ஆசைப்படுகிறேன். உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். நன்றி!”.

இசையமைப்பாளர் விஜய் சித்தார்த்

“’அஸ்வின்ஸ்’ கதை பிடித்துப் போய் அதற்கு இவ்வளவு பெரிய பிளாட்ஃபார்ம் உருவாக்கித் தந்த பாபி சாருக்கும், எங்களை அழைத்து போன பிரவீன் சாருக்கும் நன்றி. இயக்குநர் தருண் தேஜாவுக்கு வேறு பெரிய இசையமைப்பாளர்களிடம் போவதற்கான வாய்ப்பு இருந்தும், என் வேலை மீது நம்பிக்கை வைத்து என்னை தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. வசந்த் ரவி, விமலா மேம், சரஸ்வதி என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.

லாக்டவுண் சமயத்தில் இருந்து படம் முடியும் வரை எந்தவிதமான டென்ஷனும் இல்லாமல் முழு ஒத்துழைப்போடு வேலை பார்த்துக் கொடுத்த தொழில்நுட்பக் குழுவுக்கும் நன்றி”.

Vasanth Ravi will give all kind of emotions says Tarun Teja

விமான நிலையத்தில் ‘இந்தியன் 2’ சூட்டிங் திடீர் நிறுத்தம்; ஓ இதான் காரணமா.?

விமான நிலையத்தில் ‘இந்தியன் 2’ சூட்டிங் திடீர் நிறுத்தம்; ஓ இதான் காரணமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசன் தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார்.

‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் ஜூன் 19-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இதற்காக, 1 கோடியே 24 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் விமான நிலைய நிர்வாகத்துக்கு, தயாரிப்பு நிறுவனமான லைகா செலுத்தியுள்ளது.

இந்தியன் 2

ஆனால், படப்பிடிப்பு தொடர்பான பாதுகாப்புக்கு சென்னை விமான நிலைய காவல் துறையினரிடம் திரைப்பட குழு அனுமதி பெறவில்லை என புகார் எழுந்துள்ளது.

அதே சமயம், மத்திய தொழிலகப் பாதுகாப்பு வீரர்கள் பாதுகாப்போடு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

மேலும், விமானம் புறப்படும் பகுதியில் மட்டுமே படமெடுக்க அனுமதி வழங்கப்பட்டதாக தெரிகிறது.

ஆனால், படக்குழுவினர் விமான நிலையத்தின் கழிவறை பகுதியில் ஒரு காட்சியை படமாக்கியுள்ளனர்.

இதனால் விமான நிலைய அதிகாரிகள் முறையான அனுமதி இல்லை எனக் கூறி படப்பிடிப்பை நிறுத்தும்படி உத்தரவிட்டனர்.இதனால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது.

அதன்பின்னர் அனுமதியுடன் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Kamal ‘s ‘Indian 2’ shooting stopped by Chennai Airport authorities suddenly

‘ஆதிபுருஷ்’ படத்திற்கு தடை விதிக்க கோரி மோடிக்கு சினிமா தொழிலாளர்கள் கடிதம்

‘ஆதிபுருஷ்’ படத்திற்கு தடை விதிக்க கோரி மோடிக்கு சினிமா தொழிலாளர்கள் கடிதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து வெளியான படம் ‘ஆதிபுருஷ்’.

இப்படத்தில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர்.

பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளனர்.

‘ஆதிபுருஷ்’ படம் கடந்த ஜூன் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அதே சமயத்தில், ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் வெளியான இரு தினங்களுக்குள்ளேயே இப்படத்தின் காட்சிகள் மற்றும் வசனங்கள் குறித்து பல சர்ச்சைகள் உருவாகி வருகின்றன.

இந்த நிலையில், பிரபாஸ் நடிப்பில் வெளியான ‘ஆதிபுருஷ்’ திரைப்படத்தை உடனே தடை செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு அனைத்து இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.

அந்த கடிதத்தில் “ஆதிபுருஷ் படத்தில் ராமர், அனுமனை விடியோ கேம் கதாபாத்திரம் போல சித்தரித்தும் அவதூறு செய்யும் வகையில் படத்தில் வசனம் இடம்பெற்றிருப்பது உலகத்தில் உள்ள இந்தியர்கள் மனதை புண்படுத்துகிறது.

சனாதன தர்மத்தை அவமதிக்கு இந்த படத்தை உடனே தடை செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், ‘ஆதிபுருஷ்’ திரைப்படத்தை ஓடிடி தளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என கடித்ததில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ban adipurush movie all india cinema workers association letter to modi

இயக்குநர் பாலாவின் மகளும் நடிகையுமான ரஞ்சனா தயாரிக்கும் 2 படங்கள்

இயக்குநர் பாலாவின் மகளும் நடிகையுமான ரஞ்சனா தயாரிக்கும் 2 படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘துப்பறிவாளன்’, ‘இரும்புத்திரை’, ‘அண்ணாத்த’, ‘டைரி’, ‘நட்பே துணை’ உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரஞ்சனா நாச்சியார்.

ராமநாதபுரம் சமஸ்தானம் ராஜா பாஸ்கர சேதுபதியின் பேத்தியான இவர் இயக்குநர் பாலாவின் உடன்பிறந்த அண்ணன் மகள் ஆவார்..

பொறியியலில் எம்.எஸ்.சி, எம் டெக் மற்றும் எல்எல்பி (ஹானர்ஸ்) என மிகப்பெரிய படிப்புகளை படித்துவிட்டு சினிமா மீது உள்ள ஆர்வத்தால் தமிழ் திரையுலகில் நுழைந்தவர் தான் ரஞ்சனா நாச்சியார்.

ரஞ்சனா நாச்சியார்

‘துப்பறிவாளன்’ படத்தில் அறிமுகமான இவர் அதன்பிறகு நல்ல கதையும்சம் மற்றும் கதாபாத்திரம் கொண்ட படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

ரஜினிகாந்துடன் நடித்த ‘அண்ணாத்த’ மற்றும் அருள்நிதி நடித்த ‘டைரி’ ஆகிய படங்கள் இவரை இன்னும் அதிக அளவில் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தன.

இந்த நிலையில் நடிப்பை தொடர்ந்து அடுத்ததாக தயாரிப்புத் துறையிலும் அடியெடுத்து வைத்துள்ளார் ரஞ்சனா நாச்சியார்.

தற்போது ஸ்டார் குரு ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ள ரஞ்சனா நாச்சியார் ஒரே சமயத்தில் இரண்டு படங்களைத் தயாரிக்கும் துணிச்சலான முடிவையும் எடுத்து *தமிழ்த் திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்*.

இதில் ஒரு படத்தை ‘குட்டிப்புலி’ புகழ் நகைச்சுவை நடிகரும் ‘பில்லா பாண்டி’, ‘குலசாமி’, ‘கிளாஸ்மேட்ஸ்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநருமான சரவண சக்தி இயக்குகிறார்.

இன்னொரு படத்தை விஜய் டிவி புகழ் நடிகரான அறிமுக இயக்குநர் சங்கர பாண்டியன் இயக்குகிறார். இரண்டு படங்களுமே கிராமத்து கதைக்களத்தில் உருவாக இருக்கின்றன.

திரைப்படத் தயாரிப்பில் இறங்கியது குறித்து நடிகை ரஞ்சனா கூறும்போது…

“மிகப்பெரிய குடும்பத்திலிருந்து சினிமாவிற்கு வந்தபோதும் கூட சினிமாவில் பெரிய அளவில் உன்னால் ஜெயிக்க முடியாது என்று தான் பலரும் கூறினார்கள். ஆனால் ஒரு நடிகையாக நல்ல இடத்தைப் பிடித்துள்ள நான் அடுத்ததாக படம் இயக்கவும் முடிவெடுத்துள்ளேன்.

அதன் முதற்கட்டமாக படங்களைத் தயாரித்து அதுபற்றிய நுணுக்கங்களை முழுவதும் அறிந்து கொள்வதற்காகவே தயாரிப்பு நிறுவனம் துவங்கி படங்களைத் தயாரிக்க முடிவு செய்தேன்.

பெரும்பாலும் ஆண்களே ஒரு படத்தை தயாரித்து முடித்த பின்னர்தான் அடுத்த படத்தை ஆரம்பிப்பார்கள், ஆனால் பெண்களாலும் வெற்றிகரமாக சாதிக்க முடியும் என்பதற்காகவே நான் ஒரே நேரத்தில் இரண்டு படங்களைத் தயாரிக்கும் துணிச்சலான முடிவை எடுத்துள்ளேன்.

இந்த இரண்டு படங்களிலும் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்” என்று கூறினார்.

Actress Ranjana Nachiyar stuns producer She produces 2 movies

More Articles
Follows