வட்டத்தை இவ்ளோ நாள் தாங்கிப் பிடித்ததே ட்ரீம் வாரியர்ஸ் தான்.. – ஆண்ட்ரியா

வட்டத்தை இவ்ளோ நாள் தாங்கிப் பிடித்ததே ட்ரீம் வாரியர்ஸ் தான்.. – ஆண்ட்ரியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு & எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில், இயக்குனர் கமலகண்ணன் இயக்கத்தில், நடிகர் சிபிராஜ், ஆண்ட்ரியா, அதுல்யா ரவி நடித்துள்ள படம் “வட்டம்”. வாழ்க்கையில் வித்தியாசமான தருணங்களை அழகான டிரமாவாக படம் பிடித்து காட்டும் இப்படம் ஜூலை 29 டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் நேரடி திரைப்படமாக, உலகளாவிய அளவில் ப்ரீமியர் ஆகிறது. இதனை ஒட்டி படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

இந்த நிகழ்வினில்..

தயாரிப்பாளர் SR பிரபு கூறியதாவது..

கமலகண்ணன் இயக்கிய ‘மதுபான கடை’ திரைப்படம் எனக்கு பிடித்திருந்தது, அதனால் அவரிடம் கதை கேட்டு படம் எடுக்க முடிவு செய்தோம். இது ஒரு மெயின் ஸ்ட்ரீம் படம். சமூகத்தில் ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையே ஒரு குற்ற உணர்வு இருக்கும், அதை இந்த படம் பேசும்.

நடிகர் சிபி தான் இந்த கதையை எடுத்து செல்ல சரியாக இருப்பார் என நினைத்து இந்த படத்திற்குள் அவரை கொண்டு வர நினைத்தோம். பின்னர் அதுல்யா, ஆண்ட்ரியா இந்த படத்திற்குள் வந்தது மேலும் பலம். படத்தில் பங்கு பெற்ற அனைத்து கலைஞர்களும் இந்த படத்தை மெருக்கேற்ற பெரிய உழைப்பை கொடுத்துள்ளனர். இந்த படத்தில் ஐந்து பாடல்கள் இருக்கிறது, பாடல்கள் சிறப்பாக வந்துள்ளது.

ஜூலை 29 இந்த படம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது, அவர்களுடன் எங்களுக்கு மூன்றாவது படம். படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.

நடிகர் சிபிராஜ் கூறியதாவது..

வட்டம் எனது திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் உடன் இணைந்தது எனக்கு தன்னம்பிக்கையை கொடுத்துள்ளது. அவர்கள் தொடர்ந்து கதையை மையப்படுத்தி படம் எடுத்து வருகிறார்கள்.

இந்த கதையை நான் கேட்கும் போது, நான் செய்து கொண்டு இருந்த படங்களிலிருந்து மாறுபட்டு, இந்த கதை ஒரு வித்தியாசமான உணர்வை கொடுத்தது. இயக்குநர் கமலகண்ணன் மற்றும் கவிநயம் இந்த படத்தை எழுதியுள்ளனர். படத்தின் திரைக்கதை சிறப்பாக இருந்தது.

இயக்குநர் கமலகண்ணன், இயக்குனர் மணிவண்ணன் போல கருத்துக்கள் கொண்டவர்.மிக சிறப்பாக படத்தை எடுத்துள்ளார். இது எனது முதல் ஓடிடி படம், முதல் படமே டிஸ்னி போன்ற பெரிய தளத்தில் அமைந்தது மகிழ்ச்சி. நான் ஆண்ட்ரியா உடைய மிகப்பெரிய ரசிகன், அவருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. ஜூலை 29 இந்த படம் வருகிறது. படத்தை பார்த்து உங்கள் ஆதரவை தாருங்கள்.

இயக்குனர் கமலகண்ணன் கூறியதாவது…

“இந்த படத்தில் நிறைய வித்தியாசமான தருணங்கள் இருக்கிறது. எனது முதல் படம் நிறைய வரவேற்பை கொடுத்தது. அந்த படத்தில் இருந்து இந்த படம் முழுதாக வேறுபட்டு இருக்கும். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் உடன் பணிபுரிந்த போது, இயக்குநராக எனது வேலையை மட்டுமே செய்ய கூடி மன சுதந்திரம் கிடைத்தது. நாம் அதிகமாக திரில்லர் படங்களை விரும்ப ஆரம்பித்துவிட்டோம்.

ஆனால் இந்த சமூகத்தில் அதை விட பல திரில்லிங் தருணங்கள் இருக்கிறது. அது இந்த திரைப்படத்திலும் இருக்கிறது. இது எங்கள் எல்லோருடைய படம். ஓடிடி நிறுவனத்தின் மூலம் பலரை சென்றடையும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையேயான பார்வையை கருத்தை இந்த படம் சொல்ல முயற்சித்து இருக்கிறது. படத்தை பார்த்து உங்கள் ஆதரவை தாருங்கள்.

நடிகை ஆண்ட்ரியா கூறியதாவது..

ட்ரீம் வாரியர் என்ற பெரிய நிறுவனம் தான் இந்த படத்தை இவ்வளவு நாள் தாங்கி பிடித்து இருந்தது. நிவாஸ் உடைய பாடல்கள் சிறப்பாக இருக்கிறது.

சிபி ஒரு கூலான மனிதர். அவருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. அவருடன் இரவில் காரில் ஷூட்டிங்கில் சுற்றி ரோட்டுக்கடையில் சாப்பிட்டதெல்லாம் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. கமலக்கண்ணன் படத்தை மிக தெளிவாக எடுத்துள்ளார். படத்தை பார்த்து உங்களது ஆதரவை தாருங்கள்.

நடிகை அதுல்யா ரவி கூறியதாவது..

எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்த, தயாரிப்பு நிறுவனத்துக்கு நன்றி. வட்டம் திரைப்படம் என் மனதிற்கு நெருக்கமான படம். இந்த படம் கோயம்புத்தூர் பகுதிகளில் படமாக்கப்பட்டது. நான் நடிக்கும் முதல் ஓடிடி படம் இது. படம் நன்றாக வந்துள்ளது. அனைவருக்கும் பிடிக்கும்படியான படமாக இப்படம் இருக்கும்

நக்கலைட்ஸ் சசி கூறியதாவது..

எனக்கும் சிபி சாருக்கும் காம்பினேஷன் குறைவாக தான் இருக்கிறது. ஆனால் அவருடன் பயணித்த அனுபவம் சிறப்பாக இருந்தது. நடிக்கும் ஆர்வத்துடன் சுற்றி கொண்டிருந்த எனக்கு இவ்வளவு பெரிய பேனரில் நடித்தது பெருமையாக இருக்கிறது. இயக்குநருக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்.

இசையமைப்பாளர் நிவாஸ் K பிரசன்னா கூறியதாவது..

இந்த படத்தில் பணிபுரிந்தது மகிழ்ச்சி, இந்த படத்தில் வித்தியாசமான முயற்சிகளை செய்ய நிறைய ஸ்கோப் இருந்தது. தயாரிப்பாளர் பிரபு உடன் இணைந்தது மகிழ்ச்சி. தொடர்ந்து கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் ட்ரீம் வாரியருக்கு இந்த படம் கண்டிப்பாக வெற்றிப்படமாக அமையும்.

இது ஒரு முக்கியமான தத்துவத்தை சொல்லும் படமாக இருக்கும். படத்திற்கு ஆதரவு தாருங்கள்.

ஜூலை 29 டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் “வட்டம்” நேரடி திரைப்படமாக வெளியாகிறது.

Andrea speech at vattam trailer launch

மாயாஜாலமிக்க சினிமாவில் நடிப்பேன் என நினைக்கவில்லை – ஸ்ருதிஹாசன்

மாயாஜாலமிக்க சினிமாவில் நடிப்பேன் என நினைக்கவில்லை – ஸ்ருதிஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நட்சத்திர வாரிசாக திரையுலகில் அறிமுகமாகி, தன்னுடைய தனித்துவமான நடிப்பால் பார்வையாளர்களை கவர்ந்தவர் நடிகை ஸ்ருதிஹாசன் இவர் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி என பன்மொழி திரைப்படங்களில் நடித்து பதிமூன்று ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார்.

கமல்ஹாசன் – சரிகா தம்பதிகளுக்கு மூத்த வாரிசாக பிறந்தவர் நடிகை ஸ்ருதிஹாசன். கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ஹே ராம் எனும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தாலும், 2009 ஆம் ஆண்டில் நடிகர் இம்ரான் கான் ஜோடியாக ‘லக்’ எனும் இந்தி திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்த அவர், சூர்யா நடிப்பில் வெளியான ‘ஏழாம் அறிவு’ எனும் படத்தின் மூலம் தமிழிலும் நடிகையாக அறிமுகமானார்.

இதனை அடுத்து ‘3’, ‘பூஜை’, ‘புலி’, ‘வேதாளம்’, ‘சிங்கம் 3’, ‘லாபம்’ ஆகிய தமிழ் படங்களில் நடித்திருக்கும் இவர் திரையுலகில் பணியாற்ற தொடங்கி பதிமூன்று ஆண்டை நிறைவு செய்திருக்கிறார்.

இதற்காக தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து, காணொளி ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது…

” திரையுலகில் நடிகையாக அறிமுகமாகி பதிமூன்று ஆண்டுகளை அற்புதமான ஆண்டுகளாக நிறைவு செய்திருக்கிறேன். வாழ்நாள் முழுவதும் ரசிகர்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிக் கொண்டே இந்த பதிமூன்று ஆண்டு நிறைவை உற்சாகத்துடன் கொண்டாடுகிறேன்.

என்னுடைய திரையுலக வாழ்க்கை, ஒரு மாயாஜாலமிக்கது. திரைப்படத்தில் நடிப்பேன் என்று ஒருபோதும் நினைக்கவில்லை. ஏதேனும் எனக்கு விருப்பமான துறையில் பணியாற்ற வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணமாக இருந்தது. அதே தருணத்தில் எனக்கு விருப்பமான வேலையை எப்படி நேசிக்க வேண்டும் என்பதையும் கற்றுக் கொண்டேன்.

மாயாஜாலம் மிக்கதாக கடந்த பதிமூன்று ஆண்டுகள் கழிந்தது. ஒரே ஒரு படத்தில் தான் நடிப்பேன் என நினைத்திருந்தேன். அதே தருணத்தில் நான் நடிகையாக இருக்க வேண்டும் என்றும் நினைக்கவில்லை.

பிறகு அதனை நேசிக்க கற்றுக் கொண்டேன். சினிமா என் வாழ்க்கையில் மிகப்பெரிய மகிழ்ச்சியாக மாறியுள்ளது. இதற்கு நான் உண்மையில் நன்றி உள்ளவளாக இருக்கும் வகையில் வாழ்க்கை என்னை மாற்றி அமைத்திருக்கிறது.

வெற்றி, தோல்விகளை எப்படி எதிர்கொள்வது என்பதையும், நம்பிக்கையுடன் எப்படி பணியாற்றுவது என்பதையும், கதைகளை கேட்பதிலும், அதனை தேர்ந்தெடுப்பதிலும் அதிலுள்ள நேர்மறையான விசயங்களை பாராட்டுவது எப்படி என்பதனையும் கற்றுக் கொண்டேன். இதனை இதற்கு முன் கற்றுக் கொண்டதில்லை.

எனக்கு கிடைத்து வரும் அன்பு மற்றும் பாராட்டிற்கு நான் மிகவும் நன்றி உள்ளவளாக இருக்கிறேன். பதிமூன்று ஆண்டுகளாக என் மீது மாறாத அன்பு காட்டி வரும் அனைவருக்கும் என்னுடைய பணிவான நன்றி நன்றி நன்றி.” என குறிப்பிட்டிருக்கிறார்.

இதனிடையே நடிகை ஸ்ருதி தற்போது பிரபாஸ் நடிப்பில் தயாராகி வரும் ‘சலார்’ எனும் திரைப்படத்திலும், மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் ‘வால்டர் வீரய்யா’ எனும் திரைப்படத்திலும், நட்சத்திர நடிகர் பாலகிருஷ்ணா நடித்து வரும் பெயரிடப்படாத படத்திலும் இவர் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

I never thought I would act – Shruti Haasan

சைட் அடித்த விஷால் – உதயநிதி.; விஜய் பாராட்டு.. நடிகர் சங்கத்தில் கலைஞர் ஸ்டாலின்..; ‘லத்தி’ டீசர் விழாவில் எஸ்.ஜே.சூர்யா கலகல

சைட் அடித்த விஷால் – உதயநிதி.; விஜய் பாராட்டு.. நடிகர் சங்கத்தில் கலைஞர் ஸ்டாலின்..; ‘லத்தி’ டீசர் விழாவில் எஸ்.ஜே.சூர்யா கலகல

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நிறைய அடிபட்டு நடித்திருக்கிறார் விஷால் – உதயநிதி ஸ்டாலின், வரலாற்று படைக்கும் நடிகர் சங்க கட்டிடத்தில் கலைஞர் ஐயா மற்றும் ஸ்டாலின் ஐயா பெயரும் இடம்பெற வேண்டும் உதயநிதியிடம் விஷால் கோரிக்கை,

இப்படத்தின் டீஸர் வெளியானதும் பார்க்கிறேன்; எனக்கும், விஷாலுக்கும் வாழ்த்துக்கள் கூறினார் நடிகர் விஜய் – நடிகை சுனைனா

தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் லத்தி படத்தின் பிரமாண்ட டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

இப்படத்தை வினோத் குமார் இயக்க, ராணா புரோடக்ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ரமணாவும், நந்தாவும் தயாரிக்கிறார்கள். அப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு பேசியதாவது :

நடிகர் விஷால் பேசும்போது,

லத்தியால் நான் அடி வாங்கியதில்லை. ஆனால், பீட்டர் ஹெயின் தவிர இந்த படத்தில் அடி வாங்காத ஆள் இல்லை.

டீஸரில் ‘ஊர்ல இருக்க பொறுக்கி பொறம்போக்கு எல்லாம் என்னை போட்டு தள்ள தாண்டா தேதி குறிச்சீங்க.. இப்ப எவனும் தப்பிக்க முடியாது வாங்கடா’ என் படத்தில் நான் பேசும் இந்த வசனம் எனக்கு மிகவும் பிடிக்கும்.

நடிகர் மனோபாலா பேசும்போது..

இந்த யூனிபார்மை நான் கிட்டதட்ட 400 படங்களுக்கு மேல் உடுத்தியுள்ளேன். அதிகம் உடுத்தியது நான் தான் என்றார்.

எம்ஜிஆர், சிவாஜி, ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், அஜித் குமார், விஜய், பிரபு, சூர்யா, கார்த்தி என அனைத்து முன்னணி நடிகர்கள் காவல்துறை அதிகாரிகளாக நடித்த படங்களில் இருந்து சில காட்சிகள் போடப்பட்டது.

விஷாலிடம் யுவனை பற்றி கேட்டபோது…

நாங்கள் கிட்ட தட்ட 18 வருடங்கள் நண்பர்களாக இருக்கிறோம். என்னை பட்டி தொட்டி எங்கும் சேர வைத்தது யுவன் தான். என் முதல் படத்திற்கு யுவன் தான் இசையமைத்தார். தாவணி போட்ட பாடல் பட்டிதொட்டி எல்லாம் என்னை கொண்டு சேர்த்தது. அவர் பின்னணி இசையை சிறப்பாக அமைப்பார்.

அவர் சும்மா கம்போஸ் பண்ணும்போதே நான் ரெக்கார்ட் செய்துவிடுவேன். அவரின் கை விளையாடும். அவர் எங்கிருந்தாலும் அவரின் கான்சர்ட்க்கு வாழ்த்துக்கள். அவருடன் பழகிய பாக்கியம் தான் ‘துப்பறிவாளன் 2’ படத்தில் அவரின் தந்தை “இசைஞானி இளையராஜா” இசையமைக்கிறார்.

யுவனுடைய பாடல்களும், ராஜா சாரின் பாடல்களும் நான் உட்பட தினம் தினம் கேட்காத ஆட்களே இல்லை. அந்த அளவிற்கு அவர்கள் நம் ரத்தத்தில் ஊறிவிட்டார்கள்.

நீண்ட நேரம் பயணம் என்றால் ராஜா சார் தான். இதை யுவனிடமே கூறியிருக்கிறேன்.

அடுத்ததாக யுவன்-விஷால் இருவரின் பயணத்தை காணொளியாக காட்சியிடபட்டது.

ரமணா – நந்தா – விஷால் மூவரின் பயணத்தையும் காணொளியாக காட்சியிடப்பட்டது.

தயாரிப்பாளர்கள் ரமணா – நந்தா பேசியபோது…

நந்தா, நம்பிக்கை தான் எங்கள் மூவரையும் ஒன்று சேர்த்து வைத்திருக்கிறது. அது தான் இந்த படத்திற்கும் எங்கள் நட்பிற்கும் காரணம். பெண் குழந்தைகளுக்கு கல்வி கொடுத்து கொண்டிருக்கிறார்.

இந்த விழாவில் பூங்கொத்து பொன்னாடைக்கு ஆகும் செலவை 5 பெண் குழந்தைகளின் கல்வி செலவிற்கு கொடுக்கிறோம் என்று கூறி 5 பெண் குழந்தைகளுக்கு காசோலை வழங்கினர்கள்.

ரமணா பேசியபோது..

இவ்விழாவிற்கு அழைத்தவுடன் வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி. நடிகர்களாகிய நாங்கள் தயாரிப்பாளராக மாறியற்கு விஷால் தான் காரணம்.

ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் சொன்னதன் பேரில் நந்தா தான் முதலில் கதை கேட்டார். பின் நான் கேட்டேன். அதன் பிறகு விஷால் கேட்டார். வழக்கமாக விஷால் ஏதேனும் கதை பிடிக்கவில்லை என்றால் 2 மணி நேரம் வீணாகியதற்கு விஷால் எங்களை வீட்டிற்கு அழைத்து அடிப்பார்.

ஆனால், இந்த படத்திற்கு ஒரு நாள் கழித்து இந்த படம் தான் நான் அடுத்து நடிக்க போகிறேன். அதை நீங்கள் தயாரிக்க வேண்டுமென்றார்.

இந்த படத்தின் முதல் காட்சியில் இருந்தே 8 வயது பையனுக்கு தந்தையாக நடிக்கிறார். ஆகையால், ஒரு நாள் அவகாசம் எடுத்து இப்படத்திற்கு சம்மதம் தெரிவித்தார். அது எங்கள் ஆசையும் கூட. அதை விஷாலே சொல்லி செய்தது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி என்றார்.

நடிகர், தயாரிப்பாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது…

‘லத்தி’ சார்ஜ் படக்குழுவினர் அனைவர்க்கும் நன்றி. நான் நீண்ட காலமாக முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். ஆனால், நீங்கள் இருவரும் சுலபமாக கால்ஷீட் வாங்கி விட்டீர்கள்.

சரியோ தவறோ நாங்கள் இதுவரை நட்பாக இருக்கிறோம்.
நானும் விஷாலும் சேர்ந்து படம் பண்ண வேண்டியது. ஆனால், இது வரை நடக்கவில்லை. நானும் விஷாலும் பள்ளிக்கு ஒன்றாக சென்றோம்.. கல்லூரிக்கு ஒன்றாக சென்றோம்.. அவ்வளவுதான் .. அதற்கு மேல் சொல்ல முடியாது.

விஷால் இதற்கு முன்னதாக அசிஸ்டன்ட் கமிஷனர், கமிஷனர் என அனைத்து கதாபாத்திரத்திலும் நடித்து தற்போது ப்ரோமோஷனில் கான்ஸ்டபிள் ஆகியுள்ளான்.

நான் சமீபத்தில் நடித்த ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படத்தில் சண்டை, பாட்டு என ஏதும் இருக்காது. நான் தேர்வு செய்யும் கதையில் சண்டை இருக்காது. ஆனல் விஷால் அதற்கு நேர்மாறாக இருப்பான்.

இந்த படத்தில் நடிக்கும் போது விஷாலுக்கு நிறைய அடிபட்டது என கேள்விப்பட்டேன். இவ்வளவு மெனக்கெடலுக்கு வாழ்த்துக்கள்.

இந்த படத்தை பார்த்தால் விஷால் திரையை விட்டு வெளியே வந்து அடித்து விடுவார் போல காட்சிகள் இருக்கிறது. அவ்வளவு ஆக்‌ஷன் காட்சிகள். அதே போல் நடிகர் சங்கம் கட்டிடத்தை விரைவில் கட்டவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். விஷால் அதை வைத்து தான் கல்யாணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்.

பாலு சார் என்னுடைய ஒளிப்பதிவாளர். அவருக்கு வாழ்த்துக்கள். அவர் ஒரு நடிகருடன் வேலை செய்தால் அவருடனே தான் சிறு காலம் பயணிப்பார். விஷாலுடன் இது அவருக்கு நான்காவது படம். சுனைனா ரெட் ஜெயண்ட் நிறுவனத்தில் ‘நீர் பறவை’ என்ற படத்தில் நடித்திருந்தார்கள். அவருக்கும் வாழ்த்துக்கள்.

உதய் – விஷால் இருவரிடமும் பள்ளி பருவத்தை பற்றி கேட்டபோது…

முதலில், எங்கிருந்தாலும் என்ன வேலையில் இருந்தாலும் ஒரு பத்து நிமிடம் எனக்காக ஒதுக்கி ‘லத்தி’ படத்தின் டீசரை வெளியிட வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டதன் பேரில் வந்த உதயநிதிக்கு நன்றி.

பள்ளியில் யோசிக்கால் பொய் சொல்வது நான் தான் என்றார் உதய். ஒவ்வொரு கல்லூரிக்கும் சைட் அடிப்பதற்காக பள்ளி விழாவின் அழைப்பிதழ் கொடுக்க நாங்களே செல்வோம் என்றார் விஷால்.

மேலும், வரலாற்று படைக்கும் நடிகர் சங்க கட்டிடத்தில் கலைஞர் ஐயா மற்றும் ஸ்டாலின் ஐயா பெயரும் இடம்பெற வேண்டும் என்று உதயநிதியிடம் விஷால் தன் ஆசையெய் தெரிவித்தார்.

இயக்குனர், நடிகர் எஸ்.ஜே.சூர்யா பேசியபோது,

லத்தி படத்தின் தெலுங்கு டீசரை நான் வெளியிட்டதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படம் நிச்சயம் வெற்றியடையும். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மட்டுமல்ல, பீகார் வரைக்கும் மாஸ் ஹீரோவாக விஷால் தான் இருக்கிறார்.

இந்த துறையில் எனக்கு ஒரு சகோதரர் கிடைத்திருக்கிறார். மார்க் ஆண்டணி படத்தில் அவருடன் நடிக்கிறேன். விஷால் மிக மிக நல்ல மனிதர். இப்படி ஒரு பிள்ளையை அவர் அம்மா பெற்றிருக்கிறார். திரையில் மட்டுமில்லாது திரைக்கு வெளியேயும் எல்லோருக்கும் உதவக் கூடிய மனிதர்.

பீட்டர் ஹெயின்,
‘சும்மாவே வெடி வெடிப்பான்.. தீபாவளி கிடைத்தால் விடுவானா’ என்று கூறுவது போல, விஷாலே கிடைத்திருக்கிறார் என்று அவரை உருண்டு புரள வைத்து சண்டைக் காட்சிகளை அமைத்திருக்கிறார்.

ரமணா – நந்தா இணைந்து ராணா புரொடக்ஷன்ஸ் என்று பெயர் வைத்துள்ளார்கள். நிச்சயம் இந்த படம் வெற்றிபெறும்.

விஷாலுக்கு இந்த படத்தின் மூலம் அவரின் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்குகிறது என்றார்.

இடையில் விஷால் பேசும்போது,

எஸ்.ஜே.சூர்யா அவர்களுக்கு தெரியாது. நான் லயோலா கல்லூரியில் படிக்கும் போது இவர் ஹாஸ்டலில் தங்கியிருப்பார்.

அப்போதிலிருந்தே அவருக்குள் இருந்த உற்சாகம் இதுவரை குறையவில்லை. அது தான் அவரின் வெற்றிக்கு காரணம்.

நான் கேரளா ஃபிரண்ட் உடன் நேரம் செலவழிப்பதை விட. எஸ்.ஜே.சூர்யா சாருடன் தான் அதிகம் இருக்க விரும்புவேன்.

அவரிடன் பேச பேச அவ்வளவு எனர்ஜி இருக்கும். எங்களின் கெமிஸ்ட்ரி தான் அதிகம் பேசப்படும் என இயக்குநர் ஆதிக் கூட சொல்லுவார் என்றார்.

கன்னட டீசரை வெளியிட்ட நடிகர் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் பேசும்போது,

உண்மையாகவே எனக்கு மூச்சு முட்டுகிறது. அந்த அளவிற்கு உணர்ச்சிவசப்பட்டு உள்ளேன். விஷாலுக்கு ஆயுதம் ஏதும் தேவை இல்லை. அவரே ஒரு ஆயுதம் தான்.

அந்த ஆயுதத்துடன் தான் 6 வருடம் பயணித்து வருகிறேன். அவர் எப்போது யாரிடம் பாய்வார் என்று தெரியாது.

ரமணா-நந்தாவின் உழைப்பு மிக பெரியது. சங்கத்திற்காக அந்த அளவு வேலை செய்துள்ளார்கள். மலேசியாவில் நடத்திய ஈவண்ட் அந்த அளவிற்கு பெரியது. லத்தியை விட 100 மடங்கு உழைப்பு அது. அதை மீண்டும் எங்களை தவிர வேற யாராலும் செய்ய முடியாது.

விஷால் நண்பர்களுக்காக எதை வேண்டுமானாலும் இழப்பார். அதோடு சேர்த்து எதிரிகளையும் சம்பாதித்துக் கொள்வார். அந்த அளவு நன்மை செய்யும் மனிதர் அவர்.

நடிகர் மனோபாலா பேசும்போது,

பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டபோது, விஷால் சும்மாவே அடிப்பானே லத்தியை குடுத்தா என்ன பண்ணுவான் என்று ரமணாவிடம் கேட்டேன். அதேபோல் டீசரில் மிரட்டியுள்ளார் விஷால். படம் வெற்றிபெற வாழ்த்துக்கள் என்றார்.

நடிகர் ரோபோ சங்கர் பேசும்போது…

நான் மாலை 4 மணிக்கெல்லாம் உடையணிந்து இந்த விழாவிற்கு வந்துவிட்டேன். இங்கு வந்து பார்த்தால் ஆர்ட்டிஸ்டை அழைத்து வர சொன்னார்கள். இனி சினிமா சார்ந்த விழாக்களுக்கு கருப்பு உடை அணிந்து வரக் கூடாது என்பது அப்போது தான் புரிந்தது. மேலும் நான் ஒரு கவிதை எழுதியுள்ளேன்

“குட்டி குட்டி கடைகளில் தேடுவான் மசால் .. ஆனால், எவ்வளவு தடைகள் வந்தாலும் சமாளிப்பான் தம்பி விஷால்”. என்றார்.

நடிகர் சூரி பேசும்போது,

விஷாலுடன் நான் 6 படங்கள் நடித்திருக்கிறேன். மிக மிக நல்ல மனிதர். படப்பிடிப்பு தளத்தில் யாருக்காவது ஒரு கஷ்டம் என்றால் உடனே உணர்ச்சிவசப் படுவார்.

அவருடைய உதவியாளரை அழைத்து என்ன என்று விசாரித்து உதவி செய்ய சொல்லுவார். அதே போல், ஒளிப்பதிவாளர் பாலு அண்ணன் ஒரு தீ க்கு ஷாட் வைத்தால் கூட அதை அள்ளி முத்தம் இட வேண்டும் என்பது போல் இருக்கும். அவருடன் நான் 6 படங்கள் பணியாற்றியுள்ளேன்.

அப்போது சூரி மற்றும் ரோபோ ஷங்கர் பற்றி பேசிய விஷால்,

சினிமாவில் நான் சம்பாதித்த சொத்து ரோபோ ஷங்கர் மற்றும் சூரி போன்றோர்கள் தான். என்னை சிரிக்க வைப்பது இவர்கள் தான். நாங்கள் எப்போதும் அடித்துக் கொண்டு தான் விளையாடுவோம்.

ஒரு முறை நான் சூரியை அறைந்துவிட்டேன் என நினைத்து சங்க பொறுப்பு வந்ததும் விஷால் திமிர் பிடித்து ஆடுகிறான் என்றார்கள். அவர்களிடம் நாங்கள் விளையாடினோம் என்பதை புரியவைப்பதே போராட்டமாகிவிட்டது என்றார்.

சண்டை இயக்குனர் பீட்டர் ஹெயின் பேசும்போது,

விஷாலை பற்றி இங்கு பலர் பேசியதை கேட்டுக் கொண்டிருந்தேன். அனைவரும் அவரை பற்றி பேசும்போதும், நான் மூன்று மாதம் அவருடன் வேலை பார்த்த போதும், நான் வரும் காலத்தில் படம் இயக்கினால் இவரை வைத்து இயக்க வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது. நடிப்பில் மட்டுமல்ல, படப்பிடிப்பு தளத்தில் கேரவனில் இருக்க மாட்டார். அங்கிருக்கும் நாய்களுக்கு தன் கையால் உணவளிப்பார்.

விஷால் வெளியே சிரித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்.

காவல்துறையினர் படும் இன்னல்களையும், துயரங்களையும் இப்படத்தின் மூலம் விஷால் பேசியுள்ளார். இந்த படத்திற்கு விஷால் தான் சரியான தேர்வு.

பாகுபலி படமோ மற்ற படமோ, எனக்கு ஒரு 15 நிமிட காட்சிக்கான வேலை தான் இருக்கும். ஆனால் வினோத் என்னிடம் கதை சொல்லும் போது, 50 நிமிட காட்சி எனக்குள்ளது என்றார். அது என்னுடைய முழு திறமையையும் வெளிக்காட்ட ஒரு வாய்ப்பாக அமைந்தது.

நாம் காலை நேரத்தில் வேலைக்கு செல்லும்போது சிக்னலில் இருக்கும் போலீஸ் தான், மாலை வீடு திரும்பும் போதும் இருப்பார்கள். அதிர்ஷ்டம் இருந்தால் நிழலில் இருப்பார்கள். இல்லையென்றால் ரோட்டில் தான் இருப்பார்கள்.

லத்தி சார்ஜ் படத்தினால் வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் விடுதலை படத்தின் இரண்டு சண்டை காட்சிகளை நான் இழந்துவிட்டேன். அதே போல் சில படங்கள் தவறின.

என்னுடைய 27 வருட அனுபவத்தில், ஹிர்த்திக் ரோஷன் நான் சொல்லுவதை 100 சதவீதம் முழுமையாக செய்வார். அதன் பிறகு விஷால் தான் அதை செய்துள்ளார். ஒரு சண்டை காட்சியில் கயிறு கட்டாமலே விஷால் சார் மேல் ஏறி வந்தார். அப்போது தான் அவருக்கு கைகளில் காயம் ஏற்பட்டது.

அவர் ஒரு ஸ்டண்ட் மேனாகவே மாறிவிட்டார். நாங்கள் சாப்பாட்டிற்காக இந்த வேலையை செய்கிறோம். ஆனால், இவர் விருப்பதிற்காக இதை செய்கிறார்.

பீட்டர் ஹெயின் பற்றி பேசிய விஷால்,

பீட்டர் ஹெயின் என்னைப் பார்த்து பயந்தேன் என்று கூறினார். ஆனால், நாங்கள் தான் அவரைப் பார்த்து பயந்தோம். படம் ஆரம்பித்தது தான் நாங்கள். ஆனால், முடித்தது பீட்டர் ஹெயின் தான். என்னுடைய ஆசையைத் தீர்க்கும் அளவிற்கு பணியாற்றியிருக்கிறார். இப்படத்தில் கதாநாயகன் என்று நினைத்து நடிக்கவில்லை. சண்டை இயக்குனராக நினைத்துக் கொண்டு தான் நடித்தேன் என்றார்.

நடிகை சுனைனா பேசும்போது,

நான் எப்போதும் விமானத்தில் செல்லும் போது ஹெட் செட் போட்டு கொண்டு தூங்கி விடுவது வழக்கம். அப்படித்தான் நேற்றும் இவ்விழாவிற்கு வருவதற்காக என் வழக்கப்படி தூங்கி கொண்டிருந்தேன். அப்போது யாரோ என் வலது தோளை தட்டினார்கள். யார் என்று பார்த்தேன். உங்களை அவர் அழைக்கிறார் என்று கூறினார்கள். திரும்பி பார்த்தால் விஜய் சார் இருந்தார்.

‘தெறி’ படத்தைப் பற்றி பேசி விட்டு இப்போது எதற்காக சென்னைக்கு வருகிறீர்கள் என்று கேட்டார். லத்தி டீஸர் வெளியீட்டு விழாவிற்கு என்று கூறினேன். நானும் டீசரை யூடுயூபில் பார்க்கிறேன் என்று கூறினார். எனக்கும் விஷாலுக்கும் வாழ்த்துக்கள் கூறினார்.

பாலு சாருடன் 3 படங்கள் நடித்திருக்கிறேன். அவர் என்னுடைய அபிமான ஒளிப்பதிவாளர்.

நான் என்ன உழைத்தேனோ அந்த அளவுக்கு மாஸ்டர் ராகவும் உழைத்திருக்கிறான். மேல் இருந்து கீழே குதி என்றால் குதித்து விடுவான் என்றார்.

சிறுவன் ராகவ் பேசும்போது,

இப்படத்தில் விஷால் அண்ணன் கூட நடித்ததில் மகிழ்ச்சி. இந்த படத்தில் என்னை தூக்கி கொண்டு குதிக்கும் காட்சிகள் 3 இருக்கும். அதில் நான் விழுந்து விடக் கூடாது என்று என்னை இறுக்கமாக பிடித்துக் கொள்வார். அப்போது அவருக்கு அடிபட்டு கையில் ரத்தம் வந்தது. மேலும், விஷால் சார் நன்றாக மேஜிக் செய்வார். என் வயிற்றைத் தொட்டு பார்த்தே நான் என்ன சாப்பிட்டேன் என்று கூறி விடுவார்.

சுனைனா அக்கா நன்றாக பேசினார்கள். இயக்குனர் சார் என்ன செய்ய வேண்டும் என்று சரியாக சொல்லி விடுவார். நானும் அதை கேட்டபடியே செய்வேன். நான் நடித்து முடித்ததும் என்னை பாராட்டுவார். பீட்டர் ஹெயின் அண்ணா சூப்பராக சண்டைக் காட்சிகள் அமைப்பார். அவர் கூறியதை செய்வேன். தினமும் அவர் ஒவ்வொரு உடை மற்றும் ஷூ விதவிதமாக அணிந்து வருவார்.
அதைப் பார்த்து நானும் 2 ஷூ வாங்கினேன். அவரைப் போலவே நானும் இன்று ஷூ அணிந்து வந்திருக்கிறேன்.

பாலு சார் ஒவ்வொரு டேக் முடிந்ததும் என்னிடம் காட்டுவார். நான் சூப்பர் என்று சொல்லுவேன். கார்த்தி, சரத், சுகுமார், ரமேஷ் வெங்கட், சக்தி, சிவா, விஷ்வா எல்லா அண்ணா மற்றும் பிரீத்தி அக்கா என்னுடன் சந்தோசமாக பேசுவார்கள். ரமணா அண்ணா, நந்தா அண்ணா என்னை ஊக்குவிப்பார்கள். இப்படத்தில் பணிபுரிந்து அனைவருக்கும் நன்றி என்றார்.

இயக்குனர் வினோத் குமார் பேசும்போது,

உதவி இயக்குனராக இருந்த என்னிடம் கதை கேட்டு, இயக்குனராக அறிமுகமாக்கி தயாரிப்பாளர்களை கொடுத்த விஷால் சாருக்கு நன்றி. இப்படத்தை நன்றாக கொடுத்திருக்கிறார். அவருக்கு நான் எப்போதும் கடமைப் பட்டிருக்கிறேன்.

லத்தி சார்ஜ் ஒரு சாதாரண கான்ஸ்டபிளோட அசாதாரணமான வாழ்க்கை சூழலை சொல்லி இருக்கும் படம்.

எல்லோருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும். சாதாரண கமர்சியல் படமாக இருக்காது. கிளாசிக் கமர்சியல் படமாக இருக்காது. விஷால் படங்களிலேயே இது வித்தியாசமான படமாக இருக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது.

சுனைனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். ராகவ் இரண்டாவது கதாநாயகன் என்று கூறும் அளவிற்கு நடித்திருக்கிறார்.

எனக்கு கைகளாக இருந்தது உஷாவும், கலை இயக்குனரும், கண்களாக இருந்தது பாலா சார். முதுகெலும்பாக இருந்தது விஷால் சார். மூளையாக இருந்தது பீட்டர் ஹெயின் மாஸ்டர். இப்படம் எடுப்பதற்கு நிறைய சக்தி தேவைப்பட்டது. இப்படத்திற்கு நிறைய செலவானது. ரமணாவும் நந்தாவும் செய்து கொடுத்தார்கள் என்றார்.

ஒளிப்பதிவாளர் பாலு பேசும்போது,

நாங்கள் எதாவது ஆசிரமத்தில் விழாவிற்கு ஏற்பாடு செய்தால் 10 நாட்களுக்கு முன்பே சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு மணி நேரத்துக்கு முன்னால் கூறினாலே நாம் போவதற்குள் அவர் வந்து விடுவார்.

சினிமாவில் நான் 40 படங்களில் பணியாற்றியிருக்கிறேன். எனக்கு பிடித்த நாயகன் விஷால் தான் என்றார்.

விஷால் பேசியபோது,

அவன்-இவன் படத்தில் நான் நடித்த பின்பு தான் என்னுடைய நடிப்பின் மீதான மரியாதை கிடைத்தது. அந்த படத்தில் கடைசி 10 நிமிடம் பாலா சார் எனக்கு கொடுத்தார். அதே போல் இந்த படத்தில் இயக்குனர் வினோத் எனக்கு கடைசி 10 நிமிட காட்சி கொடுத்திருக்கிறார்.

அப்போது ரமணா மற்றும் நந்தாவிடம் 12 கேமராக்கள் வைத்துவிடுங்கள். நான் என்ன நடிக்க போகிறேன் எப்படி நடிக்க போகிறேன் என்று தெரியாது. மீண்டும் அதை நடிக்க முடியுமா என்றும் தெரியாது என்றேன். அதே போல் அந்த காட்சி படமாக்கப்பட்டது. இது போன்ற வாய்ப்புகள் தான் ஒரு நடிகனுக்கு மரியாதையை ஈட்டி தரும்” என்றார்.

வழக்கமாக நான் படப்பிடிப்பில் இருக்கும் போது எனக்கு ஏதேனும் அடிபட்டால் “இவனுக்கு தையல் போட்டு கூட்டிட்டு வர்றதே இவருக்கு வேலையா போச்சி” என்று கனல் கண்ணன் மாஸ்டரை அம்மா திட்டுவார்கள். ஆனால், இம்முறை பீட்டர் ஹெயின் மாஸ்டர் எந்த திட்டும் வாங்கவில்லை. இவன் அடிபட்டாலும் சரி செய்துவிட்டு மீண்டும் நடிக்க தான் செல்லுவான் என்று அம்மாவுக்கே ஒரு புரிதல் வந்துவிட்டது. விஜய் பாபு அவர்கள் எனக்கு இன்னொரு அப்பா.
என் படத்தைப் பார்த்துவிட்டு அது எப்படி இருக்கிறது என்று முகத்துக்கு நேர் பளிச்சென்று கூறிவிடுவார் எனது தங்கை ஐஸ்வர்யா. என் ஒவ்வொரு படத்தையும் இரண்டு மூன்று முறை நான் பார்த்துவிட்டு தான் அவருக்கு காட்டுவேன்.

இந்த குடும்பம் உழைக்காமல் “லத்தி” பான் இந்திய திரைப்படமாக உருவாகியிருக்காது. அனைவருக்கும் நன்றி என்றார்.

Laththi teaser launch highlights

ஸ்ரீகாந்த் நட்டி பூர்ணா ஆகியோருடன் ரங்கராஜ் பாண்டே இணையும் ‘சம்பவம்’

ஸ்ரீகாந்த் நட்டி பூர்ணா ஆகியோருடன் ரங்கராஜ் பாண்டே இணையும் ‘சம்பவம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘சம்பவம்’ பட துவக்க விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குனர் திருமலை, மகேந்திரகுமார் நாகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதில் ஸ்ரீகாந்த், நட்டி கதை நாயகர்களாக நடிக்க, கதை நாயகிகளாக பூர்ணா, ஸ்வேதா அவஸ்தி நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் ரங்கராஜ் பாண்டே நடிக்கிறார்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு சுந்தரா டிராவல்ஸ் படத்தின் நாயகி ராதா நடிக்கிறார். மேலும் இயக்குனர் ஏ.வெங்கடேஷ், ஜெயபிரகாஷ், கே.ராஜன், மகேந்திரகுமார் நாகர், சிங்கம்புலி, நாஞ்சில் சம்பத், விஜய் டிவி முல்லை மற்றும் பல நடிகர் நடிகைகள் நடிக்கிறார்கள்.

உயிருக்கு போராடும் தனது மகளை காப்பாற்ற துடிக்கும் ஒரு தந்தையும், இந்த சமூகத்தால் பாதிக்கப்பட்ட ஒரு சாதாரண மனிதனும் சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் போது நடைபெறும் சம்பவமே கதையின் மையக்கரு.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார் பா.ரஞ்சித்குமார், இவர் இயக்குனர் ஏ.வெங்கடேஷிடம் இணைஇயக்குனராக பணிபுரிந்தவர்.

ஒளிப்பதிவை இனியன் ஜே ஹாரிஸ் கவனிக்க இசை அம்ரீஷ், படத்தொகுப்பு சந்திரகுமார், பாடல்கள் கவிஞர் முருகானந்தம் எழுத, கலையை ஏ.பழனிவேல் கையாளுகிறார். ஸ்டண்ட் ராஜசேகர், தயாரிப்பு மேற்பார்வை சங்கர், நிர்வாக தயாரிப்பு ஜோஸ், வரைகலை தினேஷ் அசோக், மக்கள் தொடர்பு ஆர்.குமரேசன்.

மைனா, சாட்டை, மொசக்குட்டி, சௌகார்பேட்டை, பொட்டு, கா ஆகிய படங்களை தொடர்ந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிப்பாளர் ஜான்மேக்ஸ் இப்படத்தை தயாரிக்கிறார்.

Rangaraj Pandey joins on board for Sambavam

சல்யூட் ஆபிசர்.; சென்னை விமான நிலையத்தில் அஜித் செய்த செயல்

சல்யூட் ஆபிசர்.; சென்னை விமான நிலையத்தில் அஜித் செய்த செயல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித்குமார்.

இவர் தற்போது மூன்றாவது முறையாக போனி கபூர் மற்றும் வினோத்துடன் இணைந்து ஏகே 61 படத்திற்காக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் அந்தப் படத்தின் வெளிநாட்டு சூட்டுங்கை முடித்துக் கொண்டு சென்னை திரும்பியுள்ளார்.

சென்னை விமானத்தில் அஜித் வந்து இறங்கியதும் அவரது உதவியாளர்கள் அவரை கார் வரை அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது அஜித்துக்கு உதவியாக சில காவலர்களும் கார் வரை வந்து உதவியுள்ளனர்.

இதனையடுத்து அந்த காவலர்களுக்கு கை கொடுத்து தன் நன்றியை தெரிவித்துள்ளார் நடிகர் அஜித்.

அஜித்தை கண்டதும் சில ரசிகர்கள் செஃல்பி எடுக்கவும் முயன்றனர். மேலும் அஜித்தின் இந்த வீடியோவை இணையத் தளங்களில் பதிவிட்டுள்ளனர்

தன்னை ஒரு பெரிய நடிகராக நினைக்காமல் சக மனிதரை மதிக்கும் அஜித்தின் உயர்ந்த பண்பு பாராட்டு கூறியதுதான்.

Ajith Kumar respect others with love never ends

பிரபுதேவாவை ஒற்றைக்காலுடன் ஆட வைத்த சதீஷ்.; பிட்டு பட இயக்குனருடன் கூட்டணி.; ‘பொய்க்கால் குதிரை’ விழா ஹைலைட்ஸ்

பிரபுதேவாவை ஒற்றைக்காலுடன் ஆட வைத்த சதீஷ்.; பிட்டு பட இயக்குனருடன் கூட்டணி.; ‘பொய்க்கால் குதிரை’ விழா ஹைலைட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘‘ஹர ஹர மகாதேவகி’ , ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ போன்ற அடல்ட் படங்களிலிருந்து விலகி, இயல்பாக இயக்கியிருக்கும் திரைப்படம் தான் ‘பொய்க்கால் குதிரை” என படத்தின் இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார்.

டார்க் ரூம் பிக்சர்ஸ் மற்றும் மினி ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘பொய்க்கால் குதிரை’. ‘நடனப்புயல்’ பிரபுதேவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில், அவருடன் நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிகர்கள் ஜான் கொக்கேன், ஜெகன், பரத், குழந்தை நட்சத்திரம் பேபி ஆரியா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

பள்ளூ ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இந்தத் திரைப்படத்தின் முன்னோட்டம், இசை மற்றும் ‘பொய்கால் குதிரை’ படம் வெளியாகும் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் விழா, பத்திரிக்கையாளர்களின் முன்னிலையில் நடைபெற்றது.

இவ்விழாவில் ‘நடனப்புயல்’ பிரபுதேவா, இசையமைப்பாளர் டி இமான், பாடலாசிரியர் மதன் கார்க்கி, ஒளிப்பதிவாளர் பள்ளூ, வசனகர்த்தா மகேஷ், நடிகை வரலட்சுமி சரத்குமார், தயாரிப்பாளர் வினோத் குமார் மற்றும் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பட குழுவினர் கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் வினோத்குமார் பேசுகையில்…

” இயக்குநர் சந்தோஷ் இயக்கியிருக்கும் ‘பொய்க்கால் குதிரை’ ஒரு திரில்லர் திரைப்படம். சந்தோஷ் குமார் என்னை சந்தித்து பிரபுதேவாவிடம் கதை சொல்லி சம்மதம் வாங்கியிருக்கிறேன் என்று சொன்னவுடன், எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. ஏனெனில் நான் சிறுவயதிலிருந்தே பிரபுதேவாவின் ரசிகன்.

அவர் நடிப்பில் வெளியான ‘முக்காலா முக்காபுலா..’ என்ற பாடலை என்னுடைய சொந்த ஊரில் வருடம் முழுவதும் ஒலிக்க வைத்திருக்கிறேன். என்னுடைய நண்பர் வட்டாரத்தில் அனைவரிடமும்,‘ பிரபுதேவா அனைவரும் ரசிப்பது போல் ஒரு நடன கலைஞர் மட்டுமல்ல, அவர் ஒரு தேர்ந்த நடிகரும் கூட. அதற்கான வாய்ப்பு கிடைக்கும் போது அவர் தன் திறமையை நிரூபிப்பார்’ என சொல்வேன்.

அது இந்த படத்தில் நடைபெற்றிருக்கிறது. ஒற்றைக் காலுடன் அற்புதமான வேடத்தில் நடித்திருக்கிறேன். படத்தில் பணியாற்றிய நடிகர் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

நடிகை வரலட்சுமி சரத்குமார் பேசுகையில்…

” நடிகர் ஆர்யாவின் பரிந்துரையில் தான் இயக்குநரை சந்தித்து, படத்தின் கதையைக் கேட்டு, நடிப்பதற்கு ஒப்புக்கொண்டேன். நடிகர் ஆர்யா தான் இப்படத்தின் தயாரிப்பு ஒருங்கிணைப்பை மேற்கொண்டார்.

மேலும் இந்த படத்தில் நான் ஒப்புக்கொண்டதற்கு என்னுடைய நடன குரு ‘இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன்’ பிரபுதேவா தான் முக்கிய காரணம்.

பொதுவாக நான் நடித்த படத்தை உடனடியாக திரையரங்கு சென்று பார்ப்பதில்லை. ஆனால் இந்த படத்தின் திரைக்கதை வித்தியாசமாக இருக்கிறது என்பதால், படத்தை உடனடியாக பார்க்க வேண்டும் என்று ஆவல் இருக்கிறது.

ரசிகர்கள் எதிர்பார்த்தவை எல்லாம் இல்லாமல், புதிய பாதையில் இப்படத்தின் திரைக்கதை அமைந்திருக்கிறது. பிரபுதேவா உடன் பணியாற்றியது மறக்க இயலாத அனுபவமாக இருந்தது.” என்றார்.

இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் பேசுகையில்…

, ” இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்திற்கு பிறகு கஜினிகாந்த் என்ற படத்தை இயக்கினேன். ‘யூ’ சர்டிபிகேட் படமான அந்த படம் ஒரு ரீமேக் படம் என்பதால், எனக்கான அடையாளம் கிடைக்கவில்லை.

அதன் பிறகு சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக எனக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. என்னுடைய சூழல் என்னை திசை மாறி பயணிக்க வைத்து விட்டது.

அதே தருணத்தில் நீண்ட காலமாக திரில்லர் ஜானரில் ஒரு திரைப்படத்தை இயக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இது போன்ற வித்தியாசமான ஜானரில் படத்தை இயக்குவதற்காகத் தான் திரையுலகில் அறிமுகமானேன். இனிமேல் இயல்பான கதைகளை மட்டுமே படமாக்கத் திட்டமிட்டிருக்கிறேன்.

கஜினிகாந்த் படத்தில் எனக்கு கிடைத்த ஒரு திரையுலக வழிகாட்டி.. நண்பர் ஆர்யா. முன்பெல்லாம் தொடர்புகளுக்காக ‘யெல்லோ பேஜஸ்’ என்ற ஒரு பத்திரிக்கையை வைத்திருப்போம்.
என்னுடைய யெல்லா பேஜஸ் ஆர்யா தான்.

தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவரது முகவரியும் தொடர்பு எண்ணும் அவருடைய டைரியில் இருக்கும். பிரபுதேவாவிடம் கதை சொல்ல வேண்டும் என்றவுடன், ஆர்யா, இயக்குநர் ஏ. எல். விஜய்யை தொடர்பு கொண்டு பேசினார். அதன் பிறகு ஏ எல் விஜய் மூலமாக பிரபுதேவாவை சந்தித்து, கதையை விவரித்தேன். கதையைக் கேட்டவுடன், ‘பிடித்திருக்கிறது. இணைந்து பணியாற்றுவோம்’ என்றார்.

நிறைய தயாரிப்பாளர்கள் சந்தோஷ், அடல்ட் படத்தை தான் இயக்குவார் என்று என் மீது முத்திரை குத்தினார்கள்.

இந்த தருணத்தில் தான், ‘பிரபுதேவாவை வைத்து பொய்க்கால் குதிரை என்ற திரில்லர் ஜானரில் படத்தை இயக்குகிறேன்’ என்று வினோத்குமாரை தொடர்பு கொண்ட போது, அவர் எந்த மறுப்பும் சொல்லாமல் உடனடியாக படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்டார். படத்தை இயக்குவதற்கு முழு சுதந்திரமும் அளித்தார்.

இமான் அவர்களிடம் வேறு ஒரு (மேட்டர் மாணிக்கம்) படத்திற்காக சென்று பேச்சுவார்த்தை நடத்தினோம். அது நடைபெறவில்லை. அதன் பிறகு இந்த படத்தில் பணியாற்ற ஒப்புக் கொண்டார்.

பாடலாசிரியர் மதன் கார்க்கி, அவருடன் இணைந்து பணியாற்றுவது அற்புதமான அனுபவம். பாடல் எந்த சூழலில் இடம் பெறுகிறது என்பதனை ஒரு குறிப்பாக சொன்னால் போதும். அவர் அதனை உணர்ந்து. ஏராளமான வார்த்தைகளையும், வாக்கியங்களையும் அமைத்து, கவிதைகளாக்கிக் கொடுப்பார். அதிலிருந்து நாம் தேர்வு செய்வதுதான் கஷ்டமாக இருக்கும்.

‘பொய்க்கால் குதிரை’ படத்தை பற்றி நான் பேசுவதை விட, படம் நிறைய பேசும். நான் வித்தியாசமாக முயற்சி செய்திருக்கிறேன் என்று சொல்லவில்லை இயல்பாக படமெடுத்திருக்கிறேன். படம் அனைத்து தரப்பினருக்கும் நிச்சயமாக பிடிக்கும்.” என்றார்.

நடிகர் பிரபுதேவா பேசுகையில்….

” இந்தப் படத்தில் நடன இயக்குநராக பணியாற்றியிருக்கும் சதீஷ், ‘ஜூன் போனால் ஜூலை..’ எனும் பாடலில் எனது சகோதரருடன் ஆடி இருப்பார். அப்போதே அவருடைய உற்சாகமான நடனத்தை கண்டு ரசித்தேன்.

இந்தப் படத்தில் ஒற்றைக்காலுடன் நடனமாட வேண்டியதிருந்தது. சதீஷ் இதனை நன்றாக வடிவமைத்திருந்தார். அவருடைய உதவியாளர்கள் நன்கு பயிற்சி எடுத்து, என்னை விட நன்றாக ஆடினார்கள். நாங்கள் ஏழு மாதத்திற்கு ஒரு முறை பாடல் காட்சியில் வரும்போது நடனமாடுகிறோம்.

மிகவும் கஷ்டப்பட்டு கடுமையாக உழைத்து நடனமாடியிருக்கிறேன். நடன இயக்குநரின் கனவை ஓரளவு நிறைவேற்றி இருக்கிறேன் என நம்புகிறேன்.

பாடலாசிரியர் மதன் கார்க்கியுடன் ஏற்கனவே ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றிருக்கிறோம். இந்த படத்தில் அனைத்து பாடல்களையும் அவரே எழுதியிருக்கிறார்.

அதிலும் குறிப்பாக ‘சிங்கிள்..’ என்ற பாடலில் ‘கால் போனால் கல் கடுக்கும்…’என்றொரு வரி இடம்பெற்றிருந்தது. அதற்கான அர்த்தத்தை கேட்டு வியந்தேன்.

சில காட்சிகளை படப்பிடிப்பு தளத்தில் பார்வையிடுவோம். சில காட்சிகளை பின்னணி பேசும்போது பார்வையிடுவோம். இந்தப் படத்தின் பின்னணி இசைக்குப் பிறகு, படத்தைப் பார்க்கும் போது நான் நன்றாக நடித்திருப்பதாக உணர்ந்தேன். இதற்கு காரணம் இசையமைப்பாளர் டி இமானின் பின்னணி இசை தான். அதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

டி இமான் இசையமைப்பாளர் என்ற எல்லையை கடந்து, ‘மை டியர் பூதம்’ என்ற படத்தில் இரண்டு புதிய இசைக்கலைஞர்களை பின்னணி பாடகர்களாக அறிமுகப்படுத்தியிருக்கிறார். அவருடைய மனிதநேயத்தை அறிந்து வாழ்த்துகிறேன்.

படத்தில் ஒற்றைக்காலுடன் சண்டைக் காட்சிகளில் நடித்த போது எந்த சிரமமும் இல்லை . சண்டை பயிற்சி இயக்குநர் தினேஷ் காசி, ஒவ்வொரு காட்சியையும் எளிதாகவும், விரைவாகவும், நேர்த்தியாகவும் படமாக்கினார். அவருடைய தந்தையுடன் உதவியாளராக பணியாற்றிய அவருக்கு அனுபவம் கை கொடுத்தது.

சில படங்களில் பாடல் காட்சிகள் சிறப்பாக இருக்கும். சில படங்களில் சண்டைக் காட்சிகள் சிறப்பாக இருக்கும். சில படங்களில் ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கும். ஆனால் பொய்க்கால் குதிரை படத்தில் படத்தொகுப்பு சிறப்பாக இருக்கும்.

ஏனெனில் நான் கதையை கேட்கும்போதே, ‘இந்த கதை ரசிகர்களுக்கு புரியுமா?’ என்று தான் இயக்குநரிடம் கேட்டேன். ஆனால் படம் பார்த்த பிறகு படத்தொகுப்பாளர் மற்றும் இயக்குநர் இணைந்து மாயாஜாலம் நிகழ்த்தியிருக்கிறார்கள். இந்தப் படத்தில் படத்தொகுப்பு பாணி வித்தியாசமாக இருக்கும். இதற்காக படத்தொகுப்பாளர் ப்ரீத்திக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

நடிகை வரலட்சுமி அழகான பெண் மட்டுமல்ல. திறமையான நடிகையும் கூட. சிலர் திரையில் நடிக்கும் போது தான் அவரது திறமை வெளிப்படும். ஆனால் நடிகை வரலட்சுமி திரையில் தோன்றினால் போதும். ரசிகர்களை கவர்ந்து விடுவார்.

தயாரிப்பாளர் வினோத்குமார், தீவிரமான செயல்பாடு உடையவர். இந்திய கிரிக்கெட் அணிக்கு விராட் கோலி எப்படி உத்வேகத்துடன் செயல்படுவாரோ.. அதேபோல் பட குழுவில் அவருடைய செயல்பாடு இருக்கும். இது போன்ற வேகமாகச் செயல்படும் தயாரிப்பாளர்கள் தற்போது தமிழ் திரையுலகிற்கு தேவை. அவர் சொல்வதை நிறைவேற்றுவார்.

இயக்குநர் சந்தோஷ் குமார் இதற்கு முன்னர் வேறு மாதிரியான படங்களை இயக்கியிருக்கிறார் என்று சொன்னார்கள். ஆனால் நான் யாரையும் மதிப்பீடு செய்வதில்லை. சந்தோஷ் என்னிடம் சொன்ன கதை பிடித்திருந்தது. சொன்ன விதமும் பிடித்திருந்தது. படப்பிடிப்பு தளத்தில் ஒரு இயக்குநருக்கு தேவையான ஆளுமை திறன் அவரிடம் இருந்தது. விரைவாகவும், திட்டமிட்ட படியும் படப்பிடிப்பை நடத்தினார்.

இதன் மூலம் அவர் தயாரிப்பாளர்களின் இயக்குநராக இருந்தார். என்னிடமிருந்து நல்லதொரு நடிப்பை வெளிக் கொண்டுவந்தார். ‘பொய்க்கால் குதிரை’ நல்லதொரு திரில்லர் திரைப்படமாக உருவாகி இருக்கிறது. அனைவரும் திரையரங்குகளில் பார்த்து, ரசித்து, ஆதரவு தர வேண்டும்.” என்றார்.

இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில், பிரபுதேவா நடிப்பில் தயாராகியிருக்கும் பொய்க்கால் குதிரை எனும் திரைப்படம் எதிர் வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதியன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Poikkal Kuthirai audio launch high lights

More Articles
Follows