தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

premalatha vijayakanthநடிகரும் தேமுதிக பொதுச் செயலாளருமான விஜயகாந்துக்கு கடந்த 22-ம் தேதி லேசான அறிகுறியுடனான கொரோனா தொற்று இருந்தது.

எனவே சிகிச்சைக்காக அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சில தினங்களில் கொரோனா பாதிப்பில் இருந்து விஜயகாந்த் குணமடைந்துவிட்டதாக கூறப்பட்டது.

இன்று இரவு விஜயகாந்த் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் தொடர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருக்க மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியிருக்கிறார்களாம்.

இந்த நிலையில் விஜயகாந்தின் மனைவியும் தே.மு.தி.க பொருளாளருமான பிரேமலதாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாம்.

தற்போது அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Premalatha Vijayakanth tests positive for Corona

‘நாம் தமிழர் கட்சி’ சீமான் மருத்துவமனையில் அனுமதி.; ஏன்? என்னாச்சு?

‘நாம் தமிழர் கட்சி’ சீமான் மருத்துவமனையில் அனுமதி.; ஏன்? என்னாச்சு?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

seemanஇயக்குனர் மற்றும் நடிகர் என அறியப்பட்ட சீமான் தற்போது நாம் தமிழர் கட்சியிர் ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார்.

இவரின் மேடை பேச்சுக்கென்று தனி ரசிக தொண்டர் படையே உள்ளது.

அவ்வப்போது மிக மிக அவசரம் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், இன்று சென்னை வடபழனியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சீமான் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் இது வழக்கமான பரிசோதனைக்காகவே அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

எனவே இன்று இரவே வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது

NTK leader Seeman was admitted in Vadapalani private hospital

அஜித் வந்தாரா? ஆறுதல் சொன்னாரா? அது பிரச்னையில்ல.. அது தேவையில்ல ..; – சரண் ஆவேசம்

அஜித் வந்தாரா? ஆறுதல் சொன்னாரா? அது பிரச்னையில்ல.. அது தேவையில்ல ..; – சரண் ஆவேசம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

spb charan ajithபாடகர் நடிகர் எஸ்பிபி மரணம் தொடர்பாக MGM தனியார் மருத்துவமனை செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

அதில் பங்கேற்ற எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகன் சரண் பல கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அப்போது நடிகர் அஜித் அஞ்சலி செலுத்தினாரா? போன் பேசினாரா? என்ற கேள்விக்கு எழுப்பப்பட்டது.

அந்த கேள்விக்கு அவர் உணர்ச்சிப்பூர்வமாக பதிலளித்தார்.

‘அப்பா இறுதிச் சடங்கிற்கு அஜித் வந்தாலும் வராவிட்டாலும் அது விஷயம் இல்லை.

அவர், என் நண்பர். அவர், வந்தாரா? வரவில்லையா என்பதை என்பது பிரச்னை இல்லை.

அவர், எனக்கு போன் செய்து பேசினாரா என்பதெல்லாம் பிரச்னை இல்லை. தற்போது, எனக்கு என் அப்பா இல்லை’ என பேசினார்.

மேலும் சிகிச்சை கொடுத்த மருத்துவர்களுக்கு நன்றி.

அப்பா இறந்த துக்கத்தில் இருந்து எங்கள் குடும்பம் மீள்வதற்குள் நிறைய புரளிகள் வருவது வருத்தமாக உள்ளது.”

இவ்வாறு பேசினார் எஸ்பி.சரண்

SP Charan about Ajith not attending SPBs funeral

எவ்வளவு பேரைக் காயப்படுத்துவீர்கள்.? நாங்களே சொல்றோம்.. SPB சிகிச்சை கட்டணம் குறித்து எஸ்பி.சரண் பேச்சு

எவ்வளவு பேரைக் காயப்படுத்துவீர்கள்.? நாங்களே சொல்றோம்.. SPB சிகிச்சை கட்டணம் குறித்து எஸ்பி.சரண் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

SPB and SPB charanபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனா தொற்றால் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கிட்டத்தட்ட 50 நாட்கள் மருத்துவமனையில் உயர் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 25-ம் தேதி காலமானார்.

அவரின் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதனையடுத்து எஸ்பிபி சிகிச்சைக்கு எம்.ஜி.எம் மருத்துவமனை அதிகப்படியான பில் போடப்பட்டதாகவும், இதனை கட்ட எஸ்பிபி குடும்பத்தினரால் முடியாத சூழல் ஏற்பட்டதாகவும் சில தகவல்கள் பரவியது.

ஆஸ்பிட்டல் பில் 10 கோடி வந்தா உங்களுக்கென்ன..? போன் செஞ்சு புரளி பத்தி கேட்காதீங்க.!?. – எஸ்பி சரண்

இதற்கு விளக்கம் கொடுப்பது தொடர்பாக எஸ்பிபி சரண் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்;

” மருத்துவமனை கட்டணம் வசூலிக்கப்பட்டது குறித்து வதந்தி ஒன்று வந்திருக்கிறது.

நாங்கள் ஏதோ பணம் கட்டியதாகவும், ஆனால் இன்னும் பணம் பாக்கி இருந்ததாக கூறப்படுகிறது.

அதன் பின்னர் தமிழக அரசிடம் கோரியதாகவும், அவர்கள் மறுத்ததால் குடியரசுத் துணைத் தலைவரிடம் நான் கோரிக்கை வைத்ததாகவும் தகவல் உலவுகிறது.

அஜித் வந்தாரா? ஆறுதல் சொன்னாரா? அது பிரச்னையில்ல.. அது தேவையில்ல ..; – சரண் ஆவேசம்

இவை அனைத்தும் சுத்த அபத்தங்கள். பொய்கள்.

இதுபோன்ற வதந்திகளைத் தெளிவுபடுத்த ஒரு செய்தி அறிக்கையை தரப்போகிறோம்.

மருத்துவமனைக் கட்டணங்கள் தொடர்பான விவரங்கள் விரைவில் வெளியாகும்.

இப்படி ஒரு விஷயத்தை நாங்கள் செய்ய வேண்டியுள்ளது என்பதே வருத்தமாக உள்ளது.

எம்ஜிஎம் ஹெல்த்கேர் எங்கள் குடும்பத்துக்குச் செய்த உதவிகளுக்கு என்றும் நன்றியுடன் இருப்போம்.

அப்பாவைப் பார்த்துக் கொண்ட செவிலியர்களை இன்றும் நினைத்துப் பார்க்கிறேன்.

தயவுசெய்து வதந்திகளைப் பரப்பாதீர்கள். நீங்கள் எவ்வளவு பேரைக் காயப்படுத்துகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியவில்லை.

இவ்வாறு எஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார்.

https://t.co/VVZTcF1mPx #MGMHospital #MGMHealthcare #mgm

SPB Charan on father SP Balasubrahmanyam’s health treatment cost

ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக்.; இனி குடும்பத்தில் ஒருவருக்குத்தான் பொருட்கள் வாங்க அனுமதி

ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக்.; இனி குடும்பத்தில் ஒருவருக்குத்தான் பொருட்கள் வாங்க அனுமதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

biometric in ration shop tamilnaduதமிழகத்தில் மட்டும் சுமார் 35 ஆயிரம் ரேஷன் கடைகள் உள்ளன.

இதில் அண்மைக்காலமாக ஸ்மார்ட் கார்டு மூலம் மட்டுமே மக்களுக்கு அரிசி, சர்க்கரை, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

ஸ்மார்ட் கார்டில் உள்ள பார்கோர்ட்டை கடை ஊழியரிடம் காட்ட அது பாயிண்ட் ஆப் சேல் மிஷினில் ஸ்கேன் செய்யப்பட்டது.

இதனால் ஸ்மார்ட் கார்டு காட்டி அவரது குடும்ப உறுப்பினர் / வீட்டு வேலைக்காரன், நண்பர்கள், தெரிந்தவர்கள் என யாரென்றாலும் பொருட்களை வாங்க முடியும்.

இதில் சில முறைகேடுகள் நடைபெற்றன.

தற்போது இந்த முறைகேட்டை தடுக்க ரேசன் கார்டுதாரர்களின் கைரேகையை பதிவு செய்து, பொருட்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் விரல் ரேகையை பதிவு செய்து மட்டுமே, பொருட்களை வாங்கும் திட்டம் நடைமுறைக்கு வருகிறது.

ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு கடந்த 25, 26 ஆகிய தேதிகளில் புதிய விற்பனை முனைய இயந்திரம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இனி குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் மட்டுமே ரேசன் பொருட்களை பெற்று செல்லமுடியும்.

Biometric method Implemented in TN Ration Shops

கொரோனா தொற்று சிகிச்சை..; எப்படி இருக்கிறார் கேப்டன் விஜயகாந்த்.?

கொரோனா தொற்று சிகிச்சை..; எப்படி இருக்கிறார் கேப்டன் விஜயகாந்த்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijayakanthநடிகரும் தே.மு.தி.க. பொதுச் செயலாளருமான விஜயகாந்த், கொரோனா தொற்று காரணமாக தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கொரோனா தொற்று லேசான அறிகுறியுடன் இருந்ததால் எவ்வித பிரச்னையும் இல்லையாம்.

தற்போது அவர் நலமாகவும், ஆரோக்கியத்துடன் இருக்கிறாராம்.

திட உணவுகளைவிட ஜூஸ், சூப் போன்ற நீர் ஆகாரங்களை மட்டும் அருந்தி வருகிறாராம்.

தொடர் சிகிச்சை பலன் அளித்துவருவதால் விஜயகாந்த் விரைவில் வீடு திரும்புவார் என கூறப்படுகிறது.

Latest update on DMDK leader Vijayakanth’s health

More Articles
Follows