தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘பிரம்மாஸ்திரா’ டிஜிட்டல் வெளியீட்டிற்கு முன்னதாக, நடிகை மௌனி ராய் அவரது கதாபாத்திரத்தைப் பற்றி பேசினார்.
மேலும் ‘பிரம்மாஸ்திரா’வில் தான் பெற்ற அனுபவத்தை வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருப்பதாக பகிர்ந்து கொண்டார் மௌனி.
“பிரம்மாஸ்திரம் எப்போதுமே மிகவும் சிறப்பானதாக இருக்கும்.
இது போன்ற புராணக்கதைகளுடன் பணிபுரியும் வாய்ப்பை எனக்கு வழங்கியமைக்கு நான் நன்றி கடன் பட்டுள்ளேன்.
பிரம்மாஸ்திராவில் பணியாற்றிய நாட்களை நான் வாழ்நாள் முழுவதும் பொக்கிஷமாக கருதுவேன் என்றார்.