தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒவ்வொரு வருட முடிவிலும் உலகளவில் கூகுள் சேர்ச் என்ஜினில் அதிகம் தேடப்பட்ட நபர்களின் பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டு வருகிறது.
இதில் அதிகம் தேடப்பட்ட சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள், இசை கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு துறை சார்ந்தவர்களும் அடங்குவர்.
இந்த பட்டியலில் ஆசியளவில் கொரியாவை சேர்ந்த பாடகர் BTS V முதல் இடம் பிடித்துள்ளார்.
இந்தியாவை சேர்ந்த பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் – 7, நடிகை ஆலியா பட் 8, நடிகை பிரியங்கா சோப்ரா 9வது இடத்திலும் மற்றும் கிரிக்கெட் வீரர் விராட் கோலி 10ம் இடத்திலும் உள்ளனர்.
இந்த டாப் 100 பட்டியலில் நடிகர் விஜய் 15வது இடத்தில் உள்ளார். இவர் கடந்தாண்டு 2021ல் 19வது இடத்தை பிடித்து இருந்தார்.
நடிகர் சூர்யா 45, நடிகர் தனுஷ் 46வது இடத்திலும் உள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த் 68வது இடத்திலும், நடிகர் அஜித் 78வது இடத்திலும் உள்ளனர்.
Vijay tops the list of most searched Tamil actors on Google in 2022