கொல காண்டு ரஜினியை தொடர்ந்து கொல மாஸ் அஜித் வருகிறார்

கொல காண்டு ரஜினியை தொடர்ந்து கொல மாஸ் அஜித் வருகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajithவருகிற 2019 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரஜினி நடித்துள்ள பேட்ட படமும், அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படமும் ரீலீசாகவுள்ளது.

இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் இந்த மோதலை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் நேற்று பேட்ட டிரைலர் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது.

இதில் குடும்பம் பொண்டாட்டி சென்டிமெண்ட் உள்ளவன் எல்லாம் ஓடிப்போயிடு கொல காண்டு இருக்கேன் கொல்லாம விட மாட்டேன் என ரஜினி பன்ச் டயலாக் பேசியிருந்தார்.

இதனையடுத்து சிவா இயக்கியுள்ள விஸ்வாசம் படத்தின் டீசர் அல்லது டிரைலர் வெளியாகுமா? என அஜித் ரசிகர்கள் காத்திருந்தனர்.

அவர்களுக்கு விடை கொடுக்கும் விஸ்வாசம் பட எடிட்டர் ரூபன் ட்விட்டர் பக்கத்தில், கொல மாஸாக ஒரு டிரைலர் வருது. விஸ்வாசம் டிரைலர் விரைவில்.. என்று குறிப்பிட்டுள்ளார்.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

இதில் அஜித்துடன் நயன்தாரா, விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

‘ரூட்டு’ பட விழாவில் விஷாலுக்கு கோரிக்கை வைத்த ஆரி..!

‘ரூட்டு’ பட விழாவில் விஷாலுக்கு கோரிக்கை வைத்த ஆரி..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

aari and vishal‘ஸரோமி மூவி கார்லேண்டு’ நிறுவனம் சார்பில் ஆர்.தங்கப்பாண்டி தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ரூட்டு’.ஏ.சி. மணிகண்டன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகனாக கவித்ரன், கதாநாயகியாக மதுமிதா மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் மைம் கோபி, அப்புக்குட்டி, கூல் சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு விஜய் பிரபு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.

படத்தின் தயாரிப்பாளர் தங்கபாண்டி பேசும்போது, “சென்னை போன்ற பெரிய நகரங்களில் அன்றாடம் நாம் ஒரு இடத்திலிருந்து கிளம்பி, நினைத்த நேரத்தில் இன்னொரு இடத்திற்கு செல்ல முடியுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. அதை மையப்படுத்தி அதனால் ஏற்படும் விளைவுகளை வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. படம் பார்க்கும் ஒவ்வொருவரும் அட இந்த நிகழ்வு நமக்கு நடந்தது போன்று இருக்கிறதே என்கிற உணர்வு நிச்சயம் ஏற்படும். இந்த படத்தின் இயக்குனர் மணிகண்டன் படத்தை சொன்ன நேரத்தில் எடுத்துக்கொடுத்துள்ளார். அவரை தயாரிப்பாளரின் இயக்குனர் என உறுதியாக சொல்வேன்” என்றார்.

முக்கிய வேடத்தில் நடித்துள்ள அப்புக்குட்டி பேசும்போது, “இதில் பள்ளி செல்லும் குழந்தைக்கு தந்தையாக நடித்துள்ளேன். ஒரு அப்பாவுக்கும் மகளுக்குமான பாசப்பிணைப்பை இந்த படம் அழகாக சொல்கிறது. இக்கட்டான நேரத்தில் ஒரு மனிதன் எந்த மாதிரியான முடிவை எடுக்கிறான் என்பதை இந்த படம் விறுவிறுப்பாகச் சொல்கிறது” என கூறினார்.

கில்டு சங்கத் தலைவர் ஜாக்குவார் தங்கம் பேசும்போது, “ஒரு பெரிய ஹீரோவின் படத்திற்கு 3000 தியேட்டர்கள் கிடைக்கின்றன. ஆனால் ஒரு சின்ன படத்திற்கு 3 தியேட்டர்கள் தான் கிடைக்கின்றன இதுதான் இன்றைய சினிமாவின் அவல நிலை. இதுகுறித்து முதல்வர் மற்றும் அமைச்சரிடம் நான் பேசி உள்ளேன். பெரிய பட தயாரிப்பாளர்களுக்கு சிறிய பட தயாரிப்பாளர்களின் வலி தெரிய வேண்டும். அதை உணர்ந்து மற்றவர்களுக்கும் அவர்கள் வழி விட வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். கன்னடத்தில் படம் எடுத்தால் அரசாங்க 10 லட்சம் தருகிறது.. அதேபோல இங்கேயும் நிச்சயமாக சினிமாவை காப்பாற்றும் ஒரு அரசாங்கம் வரும். இந்த அரசாங்கம் தமிழ் மொழியை வளர்க்க வேண்டும்” என்றார் உணர்ச்சி பொங்க.

நடிகர் ஆரி பேசும்போது, ‘இந்த படத்தின் தயாரிப்பாளர் தங்கப்பாண்டி இயக்குனரைப் பற்றி பேசும்போது, தயாரிப்பாளருக்கான இயக்குனர் என்று சொன்னாரே அதுதான் இந்த படத்தின் முதல் வெற்றி. பெரிய படங்களின் விழாக்களுக்கு செல்வதை விட, இதுபோன்ற சின்ன படங்களை கைதூக்கி விடுவதற்கு நான் தயாராக உள்ளேன். அதனால் என்னை எப்போதும் தாராளமாக அழைக்கலாம். எப்போதுமே சமூக வேலைகள் என சுற்றி வருவதால் பட வாய்ப்புகள் எதுவும் இல்லையோ எனக் கேட்கும் அன்பான நண்பர்களுக்கு, தற்போது நான்கு படங்களில் நடித்து வருகிறேன் என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்.

‘ரூட்டு’ என்கிற வார்த்தைக்கு எல்லாருமே ஆளுக்கு ஒரு விளக்கம் சொன்னார்கள். நானும் ஒரு ரூட்டு போட்டு தான் இந்த இடத்துக்கு வந்துள்ளேன். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒரே எம்.ஜி.ஆர் தான். இப்போது எல்லாருமே எம்.ஜி.ஆர் ஆக வேண்டும் நினைப்பதால் தான், பல பிரச்சனைகள் உருவாகின்றன. சமீபத்தில் எனது நண்பர் ஒருவர் பேசும்போது சினிமாவில் இவ்வளவு பிரச்சினைகள் இருக்கின்றன ஆனால் சினிமாக்காரர்கள் ஏன் அரசியலுக்கு வர துடிக்கிறார்கள் என பலரும் கேட்கிறார்கள். இப்போது சினிமாக்காரர்களை ஒழுங்காக சினிமா எடுக்க விடவில்லை என்பதால் தான் அவர்கள் அரசியலை பற்றி பேச ஆரம்பித்துவிடுகிறார்கள். அவர்கள் வேலையை செய்ய குறுக்கே நிற்காதீர்கள்..

இந்த படத்தை இயக்குவதற்கு டைரக்டர் போட்ட ரூட்டு மாதிரி, இந்த படத்தின் தயாரிப்பாளர் இனி பட ரிலீசுக்காக தியேட்டர்களுக்கு ரூட்டு போட வேண்டிய நேரம் வந்துவிட்டது. தயாரிப்பாளர் சங்கம் இந்த சிறிய படங்களுக்கு, யார் இந்த படத்தை ரிலீஸ் செய்கிறார்களோ, அவர்களுக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். பணம் உள்ளவர்கள் மட்டுமே படத்தை ரிலீஸ் செய்ய முடியும் என்றால் மற்றவர்களெல்லாம் படம் எடுக்க முடியாத சூழல் உருவாகிவிடும்.

சமீபத்தில் ஒரு நாளிதழில் ஒரு நடிகர் நடிக்கும் வெப் சீரியஸ் தொடருக்கு ஒரு பக்க விளம்பரம் கொடுத்தார்கள். ஆனால் அதுவே தங்களது திரைப்படங்களுக்கு, தயாரிப்பாளர்கள் செலவழிக்க தயாராக இருந்தும் கூட, அப்படி விளம்பரம் கொடுக்க கூடாது என நிபந்தனை விதித்து இருக்கிறார்கள். இனி வரும் நாட்களில் அமேசான் ப்ரைம், நெட்ப்ளிக்ஸ் போன்றவை எல்லாம் இப்படி சினிமாவிற்கு ஊடுருவ ஆரம்பித்து விடும். இதனால் சிறிய படங்கள் மேலும் தற்கொலைக்கு நிகரான ஒரு நிலைக்கு தள்ளப்படுவார்கள். இதனால் சின்ன படங்கள் தியேட்டருக்கு வர முடியாத ஒரு அபாயகரமான சூழல் ஏற்படும்.

சினிமாவில் எல்லா இடங்களிலும் இரண்டு அணியாக இருக்கிறோம். சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்தில் நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவம் அனைவரும் அறிந்தது தான்.. அதை சரி என சொல்லவில்லை. தற்போது விஷால் அந்த நிகழ்வுக்கு காரணமானவர்கள் மீது நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த இடத்தில் விஷாலுக்கு நாம் வைக்கும் கோரிக்கை என்னவென்றால் தவறுக்கு தண்டனை கொடுப்பது மரபாக இருக்கலாம் ஆனால் அவர்களை தண்டிப்பதை விட, அவர்களை மன்னித்து அவர்களை அரவணைத்து செல்லலாம்.

அவர்களை ஒன்று சேர்த்து முடிவுகளை எடுக்க தவறினால் வரும் நாட்களில் படம் எடுப்பவர்கள் மிகப்பெரிய சங்கடங்களை சந்திக்க நேரிடும். நமது மொத்த சம்பாத்தியத்தையும் வெளியில் இருந்து வருபவர்கள் அள்ளிக்கொண்டு சென்றுவிடுவார்கள் அதனால் தான் தயாரிப்பாளர் சங்கத்தில் நமக்கான ஒரு ஆப், நமக்கான ஒரு வலைதளத்தை உருவாக்கி அதன்மூலம் புதிய வியாபார உத்திகளை கொண்டு வாருங்கள் என நான் அவ்வப்போது வலியுறுத்தி வருகிறேன்” என்றார் ஆரி.

படக்குழுவினரை வாழ்த்தி இயக்குனர் பேரரசு பேசும்போது, “இந்த படத்தில் நடித்துள்ள அப்புக்குட்டி என்னுடைய திருத்தணி படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்தார். அதற்கடுத்து ஒரு படத்திற்காக அவரை அணுகியபோது எத்தனை நாட்கள் கால்ஷீட் என்று கேட்கும் அளவிற்கு வளர்ந்துவிட்டார். நடிகர் திலகம் சிவாஜி போன்ற மிகப்பெரிய நடிகர்களுக்கு கூட கிடைக்காத தேசிய விருது அப்புகுட்டிக்கு கிடைத்திருக்கிறது என்றால் இதைவிட அவருக்கு வேறு என்ன பேரும் புகழும் கிடைத்து விடமுடியும்.. இந்த படத்தின் இயக்குனர் பெயர் மணிகண்டன்.. அதாவது ஐயப்பன் பெயர்.. அதனால் பிரச்சனை வரத்தான் செய்யும்.. அந்த மணிகண்டன் இடத்திற்கு பெண்கள் போகிறார்களோ இல்லையோ, இந்த மணிகண்டன் படத்திற்கு பெண்கள் கூட்டம் கூட்டமாக வரவேண்டும்” என பேசினார்.

படத்தில் இயக்குனர் மணிகண்டன் பேசும்போது, “இந்தப்படத்தை முதலில் வேறொரு தயாரிப்பாளர் தயாரிப்பதாக இருந்தது. இடையில் சில காரணத்தால் அவர் அதிலிருந்து விலகிவிட, அந்த நேரத்தில் என்னிடம் உதவி இயக்குனராக இருந்த தங்கப்பாண்டி தான், இது அருமையான படம் இதை கிடப்பில் போட்டு விடக்கூடாது என கூறி தன்னுடைய சக்திக்கு மீறி இந்த படத்தை தானே தயாரிக்க முன்வந்தார். அதேபோல இந்த படத்தில் நாயகியாக நடிக்க இருந்தவர் படத்தின் முதல் நாள் திடீரென வர முடியாது என கூறி விட, குறைந்த கால அவகாசத்தில் கதாநாயகியாக இந்த படத்திற்குள் வந்தவர் தான் இந்த மதுமிதா ஆனாலும் முதல் நாள் முதல் ஷாட்டிலேயே அவருடைய தேர்வு நியாயமானது என்பதை நிரூபித்து விட்டார்” என கூறினார்.

மலேசியாவில் உச்சத்தை தொடும் ‘பேட்ட’ படத்தின் விளம்பரம்!

மலேசியாவில் உச்சத்தை தொடும் ‘பேட்ட’ படத்தின் விளம்பரம்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

petta rajiniரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘பேட்ட’. இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

உலகம் முழுவதும் இப்படத்தினை வெளியிட மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் நிறுவனம் உரிமம் (இந்தியாவை தவிர) பெற்றுள்ளது.

மலேசியாவில் டிசம்பர் 29 மற்றும் 30 ஆம் தேதியில் நடைபெறும் “DRIFT Challenge 2018” கார் ரேஸில் மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் சார்பாக இந்திய வீரர் தர்ஷன் ராஜ்(19) இந்த ரேசில் கலந்து கொள்ளவிருக்கிறார்.

மலேசியாவில் உள்ள டாப் 20 ரேஸ் வீரர்கள் இப்போட்டியில் கலந்து கொள்கிறார்கள்.

ரேஸ் காரில் ”பேட்ட” படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இது அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும், மலேசியா முழுவதும் பல கார்களில் பேட்ட படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், ”இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்லாமல், இது போன்ற விளையாட்டுகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு விளையாட்டு வீரர்களையும் மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் நிறுவனம் நிச்சயம் ஊக்குவிக்கும்.” என்று பெருமையோடு கூறுகிறார் மாலிக் ஸ்டிரீம் கார்ப்பரேஷன் நிறுவன இயக்குனர் மாலிக்.

நேற்று வெளியான ட்ரெய்லர் ரசிகர்களை மட்டுமல்லாது அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பலமடங்கு எகிறியுள்ளது.

வேற லெவல் ரஜினி; பேட்ட டிரைலர் ஒரே நாளில் 11 மில்லியனை தாண்டியது

வேற லெவல் ரஜினி; பேட்ட டிரைலர் ஒரே நாளில் 11 மில்லியனை தாண்டியது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

petta trailer stillsகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் `பேட்ட’.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இதில் ரஜினியுடன் விஜய்சேதுபதி, நவாசுதீன் சித்திக், சசிகுமார், பாபி சிம்ஹா, சிம்ரன், திரிஷா, முனிஷ்காந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படம் 2019 பொங்கலை முன்னிட்டு வருகிற ஜனவரி 10-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.

இந்நிலையில் பேட்ட படத்தின் டிரைலர் நேற்று காலை சொன்ன நேரத்திற்கு முன்பே திடீரென வெளியானது.

இந்த டிரைலரில் ரஜினிகாந்த் இளமையாக, செம ஸ்டைலாக இருக்கிறார்.

மேலும் ரஜினி பார்முலா படி பன்ச் டயலாக், கெத்தான ஸ்டைல் என அனைத்தையும் செய்திருக்கிறார்.

இதனால் இந்த டிரைலர் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

எனவே ரிலீசான சில நிமிடங்களிலேயே 10 லட்சம் பார்வையாளர்களை கடந்தது. 12 மணி நேரத்தில் 75 லட்சம் பேர் பார்த்தனர். இதுதவிர 5 லட்சத்து 56 ஆயிரம் பேர் டிரைலரை லைக் செய்துள்ளனர்.

இன்று காலை 24 மணிநேரம் கடந்த நிலையில், பார்வையாளர்கள் எண்ணிக்கை 1 கோடி 10 லட்சத்தை தாண்டியது.

நேற்று ட்விட்டரில் உலக அளவில் 6-வது இடத்திலும், இந்தியா அளவில் முதல் இடத்திலும் டிரெண்டாகியது.

மேலும் கெட்ரஜினிபைடு, சூப்பர் ஸ்டார்ரஜினி, பேட்ட பொங்கல் பராக் ஆகிய ஹேஷ்டேக்குகளும் டிரெண்டிங்கில் உள்ளன.

சீமான் இயக்கத்தில் சிம்பு-அனிருத் மெகா கூட்டணி

சீமான் இயக்கத்தில் சிம்பு-அனிருத் மெகா கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu and seemanஇயக்குனர் நடிகர் என அறியப்பட்ட சீமான் தற்போது ஒரு அரசியல்வாதியாக மேடைப் பேச்சாளராக பிரபலமாகி விட்டார்.

இதனிடையில் தவம் என்ற படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் மீண்டும் ஒரு படத்தை இயக்க தயாராகி வருகிறாராம் சீமான்.

இப்படத்தில் நாயகான சிம்பு நடிக்கவுள்ளதாகவும் அனிருத் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படக்கதையை இன்றைய சூழலுக்கு ஏற்ப அமைத்து இருக்கிறாராம் சீமான்.

தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.

இதன் பின்னர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்திலும் கவுதம் மேனன் இயக்கத்தில் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இரண்டாவது பாகத்திலும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

யோகி பாபுவை நாயகனாக்கி படம் இயக்கும் ஜெயம் ரவி

யோகி பாபுவை நாயகனாக்கி படம் இயக்கும் ஜெயம் ரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

yogi babu and jayam raviஜெயம் ரவி நடிப்பில் வெளியான அடங்க மறு படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இவர் சினிமாவில் நாயகனாக நடிக்கும் முன் 2001-ல் வெளியான கமலின் ஆளவந்தான் படத்தில் சுரேஷ் கிருஷ்ணாவிடம் உதவி இயக்குனராக பணி புரிந்தாராம்.

தற்போது சில படங்களில் நடித்துவிட்டாலும் இயக்குனராகவும் ஆசை இதுவரை நிறைவேறவில்லை.

எனவே விரைவில் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

சில ஆண்டுகள் கழித்து எல்லா தரப்பினரும் ரசிக்கும் ஒரு படத்தை இயக்க ஆசையாம்.

அது முழுக்க காமெடி படம் என்பதால் அதில் யோகி பாபுவை நாயகனாக்க உள்ளாராம்.

More Articles
Follows