அஜித்தின் ‘துணிவு’ படத்தின் டிரைலர் தேதி அறிவிப்பு..!

அஜித்தின் ‘துணிவு’ படத்தின் டிரைலர் தேதி அறிவிப்பு..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘துணிவு’ படத்தை எச்.வினோத் இயக்க போனி கபூர் தயாரித்து வருகிறார்.

இந்த படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்த படம் அடுத்த ஆண்டு 2023 பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளதால் தற்போது போஸ்ட் ப்ரடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது.

இந்நிலையில், ட்ரைலரை வெளியிட்டு அஜித் ரசிகர்களுக்கு புத்தாண்டு விருந்தளிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் ட்ரெய்லர் டிசம்பர் 31-ம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இருப்பினும், படத்தின் தயாரிப்பாளர்கள் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.

Ajith’s ‘Thunivu’ trailer date announcement

தனது மனைவி மஹாலக்ஷ்மியை பார்த்து உணர்ச்சி வசப்பட்ட ரவீந்தர்

தனது மனைவி மஹாலக்ஷ்மியை பார்த்து உணர்ச்சி வசப்பட்ட ரவீந்தர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரையுலகில் “100 நாட்கள்” என்பது ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கான அளவுகோல்களில் ஒன்றாகும்.

இந்த பாணியில் தயாரிப்பாளர் ரவீந்தர் திருமணமாகி 100 நாட்களை கடந்த நிலையில் பிறகு ஃபேஸ்புக்கில் தனது மனைவியும் இருக்கும் படத்தைப் பகிர்ந்து உணர்ச்சிவசப்பட்ட ஒரு பதிவை எழுதியுள்ளார்.

“அம்மு என் மனதில் தோன்றுவதை எழுதுகிறேன்.. 37 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த 100 நாட்களின் ஒவ்வொரு நொடியிலும் மகிழ்ச்சியாக வாழ்ந்தேன் எல்லாம் உன்னால் தான் என பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவு நெட்டிசன்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

கமல்-மணிரத்னம் இணையும் ‘KH234’ படத்தின் ஹாட் அப்டேட்

கமல்-மணிரத்னம் இணையும் ‘KH234’ படத்தின் ஹாட் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சில வாரங்களுக்கு முன்பு கமல்ஹாசனின் 234வது படத்தை மணிரத்னம் இயக்கப் போவதாகவும், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸுடன் இணைந்து இருவரும் இணைந்து தயாரிக்கப் போவதாகவும் அறிவிப்பு வந்தது.

‘கேஎச் 234’க்கான முன் தயாரிப்பு பணிகள் தொடங்கியுள்ளன.

இப்போது பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் இதில் இணைய இருப்பதாக ரெட் ஹாட் அப்டேட் கிடைத்துள்ளது.

‘பொன்னியின் செல்வன்’, ‘வெந்து தணிந்தது காடு’ மற்றும் ‘இந்தியன் 2’ உள்ளிட்ட பல சமீபத்திய படங்களுக்கு ஜெயமோகன் திரைக்கதை எழுதுகிறார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

இயக்குனரை மாற்றிய ரஜினிகாந்த்.; ரசிகர்(கள்) இயக்கத்தில் நடிக்க ஆர்வம்.?

இயக்குனரை மாற்றிய ரஜினிகாந்த்.; ரசிகர்(கள்) இயக்கத்தில் நடிக்க ஆர்வம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கும் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்தப் படத்தை தொடர்ந்து தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லைக்கா தயாரிப்பில் ரஜினி நடிக்க உள்ளார்.

இந்தப் படத்திற்கு ‘லால் சலாம்’ என்று பெயரிட்டுள்ளனர். கெஸ்ட் ரோலில் ரஜினிகாந்த் நடிக்கும் இந்த படத்தில் கதையின் நாயகர்களாக விக்ராந்த் – விஷ்ணு விஷால் நடிக்கின்றனர்.

இந்த படத்தை தொடர்ந்து லைக்கா நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை ‘டான்’ பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது கதையில் மாற்றம் உள்ளதால் மற்றொரு கதையில் ரஜினிகாந்த் நடிக்கும் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குனரான தேசிய பெரியசாமி இயக்கத்தில் ரஜினி நடிப்பார் என்றும் தகவல்கள் வந்துள்ளன.

இல்லையெனில் ‘பேட்ட’ என்ற வெற்றி படத்தை கொடுத்த கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

( இவர்கள் இருவரும் ரஜினியின் தீவிர ரசிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.)

எனவே இது உறுதியாகும் பட்சத்தில் இது குறித்த அறிவிப்பை நாம் விரைவில் எதிர்பார்க்கலாம்.

Rajinikanths Thalaivar 171 director updates

இசையால் வருடும் ‘லிட்டில் மேஸ்ட்ரோ’ RS ரவிப்ரியன்.; புதுவசந்தம் தோழியாக தோள் கொடுக்கும் செண்பா

இசையால் வருடும் ‘லிட்டில் மேஸ்ட்ரோ’ RS ரவிப்ரியன்.; புதுவசந்தம் தோழியாக தோள் கொடுக்கும் செண்பா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாபெரும் இசை கலைஞர் பாலகிருஷ்ணனின் பேரன் வழித்தோன்றலாய் வந்து இசையை முறையாக கற்றுக் கொண்டவர் ஆர் எஸ் ரவிப்பிரியன்.

இவரது பூர்வீகம் தமிழ்நாடு என்றாலும் கனடா நாட்டில் வளர்ந்தார். சைக்காலஜி பயின்ற இவர் படிக்கும்போதே இசை ஆல்பங்களை வெளியிட்டவர்.

நாள்களும் வருடங்களும் செல்ல செல்ல இசை வெறியும் இவருக்குள் ஊறிக் கொண்டே ஆற்றாய் பெருக்கெடுத்துள்ளது.

எனவே மீண்டும் தன் இசைப்பணி தாகம் தீர்க்க தமிழகம் வந்துள்ளார்.

மெட்டுக்கு பாட்டு எழுதுவதை விட பாட்டுக்கு மெட்டு போடுவதே ஒரு இசைக்கலைஞனின் உயர்ந்த செயலாகும் என தெரிவிக்கிறார் இவர்.

சினிமா பாடகர்கள் பலரின் பாராட்டையும் பெற்ற இசையமைப்பாளராக வளர்ந்திருக்கிறார் இவர்.

மேகம் , சாந்தன், உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் ரவிபிரியன்.

ஏ எல் ராஜா இயக்கத்தில் விரைவில் வெளிவர இருக்கும் சூரியனும் சூரியகாந்தியும், கரிமூட்டம், வடசேரி மற்றும் Hi5 உள்ளிட்ட படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.

சில வருடங்களுக்கு முன் இவர் இசையமைத்து வெளிவந்த ”காற்று” என்ற ஆல்பம் பெரியளவில் வரவேற்பைப் பெற்றது.

ரவிப்பிரியன்

11 பாடல்கள் கொண்ட இந்த பிரம்மாண்ட ஆல்பத்தில் சுமார் 22 முன்னணி பாடகர்களை பாட வைத்து சாதனை படைத்துள்ளார் இசையமைப்பாளர் ஆர் எஸ் ரவிபிரியன்.

புகழ்பெற்ற எஷிதா மீடியா நிறுவனத்தால் ஆர் எஸ் ரவிபிரியனுக்கு லிட்டில் மாஸ்ட்ரோ என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், 2022ம் ஆண்டிற்கான ‘திரையிசை காவலன்’ விருதும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

திருக்குறள் பாட்டரங்கம் சார்பில் “திருக்குறள் இசைக்கவி விருது” என்ற விருதும் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பல படங்களை கைவசம் வைத்திருக்கும் இவர், பல ஆல்பங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.

இசைஞானி இளையராஜா ஏ ஆர் ரகுமான் ஆகியோர் தன் மனம் கவர்ந்த இசை அமைப்பாளர்கள் என்று தெரிவித்த இவர் மறைந்த எஸ்.பி பாலசுப்ரமணியம் தான் தன் காட்பாதர் எனவும் தெரிவித்தார்.

இசை குடும்பத்தில் தோன்றி ஒரு இமாலய வெற்றிக்காக காத்திருக்கும் ரவி பிரியனுக்கு இனி வாழ்நாளெல்லாம் புதுவசந்தம் மலர வாழ்த்துக்கள்.

‘புது வசந்தம்’ படத்தில் தன் ஆண் நண்பர்களுக்கு உதவி செய்ய வருபவராக சித்தாரா கேரக்டர் இருக்கும்.

தற்போது பல சித்தாராக்கள் உருவெடுத்து ஒன்றாகி செண்பவாக வந்து என் வாழ்வில் புது வசந்தம் கொடுக்க தோளோடு தோள் நிற்கும் தோழியாக இருக்கிறார் என ரவி பிரியன் தங்கள் நட்பை பற்றி தெரிவித்து இருக்கிறார்.

செண்பா ஒரு முழு நேர கவிஞர் என்றாலும் தன்னுடைய வெற்றிக்காகவும் உழைத்துக் கொண்டிருக்கிறார். அவரை தோழியாக பெற்றது நான் செய்த பாக்கியம் எனவும் ரவி பிரியன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

ரவிபிரியன்

Journey of Music Composer RS Ravi Priyan

மோகன்லால் நடிகராக இல்லையென்றால் ஜெயிலில் இருப்பார்.; ஐகோர்ட் அதிருப்தி

மோகன்லால் நடிகராக இல்லையென்றால் ஜெயிலில் இருப்பார்.; ஐகோர்ட் அதிருப்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2012ஆம் ஆண்டில் மலையாள நடிகர் மோகன்லால் வீட்டில் வருமான வரித்துறை சோதனை செய்தனர்.

அப்போது அவரது வீட்டில் நான்கு ஜோடி யானை தந்தங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து மோகன்லால் மீது கேரள வனத்துறை வழக்கு பதிவு செய்தது.

இதனையடுத்து இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என கேரள அரசு கேட்டுக் கொண்டது.

ஆனாலும் மனுவை தள்ளுபடி செய்த நிலையில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

பின்னர் அடுத்த கட்ட விசாரணையில்.. “மோகன்லால் வீட்டில் வளர்க்கப்பட்ட யானை இறந்து விட்டதால் அதனுடைய தந்தங்களை அவர் வைத்திருப்பதாக கேரள அரசு வழக்கு விசாரணை தெரிவித்தது.

இந்த நிலையில்.. “ஒரு சாமானியனுக்கு இதுபோன்று கேரள அரசு சிபாரிசிக்காக முன் வரவில்லை. ஆனால் ஒரு நடிகருக்காக வந்துள்ளது.

ஒருவேளை மோகன்லால் நடிகராக இல்லாவிட்டால் அவர் நிச்சயம் ஜெயிலில் இருந்திருப்பார் என அதிருப்தி கருத்தை தெரிவித்துள்ளது ஐகோர்ட்.

இது கேரளா மக்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகருக்கு ஒரு சட்டம்.? மக்களுக்கு ஒரு சட்டமா? என மலையாளிகள் மனம் கொதித்துள்ளனர்.

Ivory case Kerala HC reserves Mohanlals petition updates

More Articles
Follows