அஜித்தால் வாய்ப்பு இழந்தவருக்கு வாய்ப்பளித்த ஆர்யா

அஜித்தால் வாய்ப்பு இழந்தவருக்கு வாய்ப்பளித்த ஆர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director nandha periyasamyஆஞ்சநேயா, மங்காத்தா உள்ளிட்ட படங்களில் போலீஸ் ஆக நடித்திருந்தார் அஜித்.

ஆனால் இப்படங்களுக்கு முன்பே ஒரு படத்தில் அஜித் போலீஸ் ஆக நடிக்க ஒப்புக் கொண்டு சில நாட்களில் சூட்டிங்கிலும் கலந்துக் கொண்டாராம்.

ஆனால் அப்படம் பாதியிலே நிறுத்தப்பட்டது.

அதுபற்றிய தகவல்கள் தற்போது அப்பட இயக்குனரால் இணையங்களில் வலம் வருகிறது.

அவர்தான் இயக்குனர் நந்தா பெரியசாமி. அஜித் நடித்த மகா என்ற படத்தை இயக்கினார்.
இதன் சூட்டிங் இடையில் அஜித்துக்கு விபத்து ஏற்படவே சூட்டிங் நிறுத்தப்பட்டதாம்.

அதன் பின்னர் தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்திக்கும் அஜித்துக்கும் பிரச்சினை ஏற்படவே அப்படம் முற்றிலும் கைவிடப்பட்டது.

இதனால் இயக்குனராக அறிமுகம் ஆக வேண்டிய நந்தா பெரியசாமியால் முடியவில்லை.

அதன்பின்னரே ஆர்யா நடித்த ஒரு கல்லூரியின் கதை என்ற படத்தை இயக்கி சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார்.

அஜித்தை இயக்கியிருந்தால் இன்று தன் நிலை உயர்ந்திருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Ajiths first cop movie dropped updates

ஜல்லிக்கட்டு தொடர்பான கலவரத்தால் சூர்யா எடுத்த முடிவு

ஜல்லிக்கட்டு தொடர்பான கலவரத்தால் சூர்யா எடுத்த முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya in si3ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் சி3.

இப்படத்தின் ரீலீஸ் தேதி எத்தனை முறை மாறியிருக்கிறது என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

இறுதியாக குடியரசு தினமான ஜனவரி 26ஆம் தேதி கண்டிப்பாக ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டது

படத்தின் ரிசர்வேசன் கூட தொடங்கியதாக சொல்லப்படுகிறது.

ஆனால் ஜல்லிக்கட்டு போராட்டம், அதன் பின்னர் நடந்த கலவரம் என தமிழகமே உணர்ச்சி பெருக்கில் இருக்கிறது.

முற்றிலும் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.

இதனால் ‘சி3’ படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைத்துள்ளனர்.

எனவே, அடுத்த வாரம் பிப்ரவரி 3ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் நண்பன் கூட்டணி…. விஜய்யுடன் இணையும் பிரபலம்

மீண்டும் நண்பன் கூட்டணி…. விஜய்யுடன் இணையும் பிரபலம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor vijayஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடித்த படம் நண்பன்.

இதில் சத்யன் காமெடி வேடத்தில் கலக்கியிருந்தார்.

மேலும் துப்பாக்கி படத்திலும் விஜய்யுடன் நடித்திருந்தார்.

இந்நிலையில் அட்லி இயக்கத்தில் ‘விஜய் 61’ படத்தில் நடிக்கவிருக்கிறார் இளைய தளபதி.

இதில் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது இப்படத்தில் காமெடி நடிகர் சத்யன் நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடங்கவுள்ளது.

‘என்னை பழிவாங்க இது நேரம் அல்ல…’ விஷால் உருக்கம்

‘என்னை பழிவாங்க இது நேரம் அல்ல…’ விஷால் உருக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishalஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க காரணமான பீட்டா அமைப்பை தடை செய்ய இளைஞர்கள் குரல் கொடுத்தனர்.

மேலும் அந்த அமைப்பில் தொடர்புடையதாக கூறப்படும் த்ரிஷா, விஷால் உள்ளிட்டவர்கள் அதிலிருந்து விலக வேண்டும் எனவும் குரல் கொடுத்தனர்.

த்ரிஷாவுக்கு அதில் தொடர்பில்லை என அவரது தாயார் உமா தெரிவித்த இருந்தார் என்பதை பார்த்தோம்.

தற்போது, இது தொடர்பாக விஷால் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது…

“மறுபடியும் என்னை பற்றி தவறான செய்தி இணையங்களில் பரவி வருகிறது.

மாணவர்கள் மீது தடியடி சரிதான் என்று நான் கூறியதாக அந்த செய்தி வெளியாகியுள்ளது.

தயவு செய்து சொல்கிறேன் என்னை பழி வாங்க இது நேரம் அல்ல, அப்படி என்னை பழி வாங்க வேண்டுமா அதற்கு வேறு தளம் தேடுங்கள்.

இந்த மாணவர்கள் போராட்ட விஷயத்தில் வேண்டாம்” என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Dont take revenge on me in students protest issue says Vishal

‘தமிழக அரசை குறை சொல்லாதீர்கள்…’ கமல் ஓபன் டாக்

‘தமிழக அரசை குறை சொல்லாதீர்கள்…’ கமல் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal hassanஜல்லிக்கட்டு போராட்டம், போலீஸ் தடியடி உள்ளிட்டவைகளை பற்றி தன் கருத்தை தெரிவிக்க தற்போது கமல் பத்திரிகையாளர்கள் சந்தித்து வருகிறார்.

அப்போது அவர் பேசியதாவது….

நம் இளைஞர்கள், மாணவர்கள் அறவழியில் போராட்டங்களை நடத்தினார்கள்.

அவர்களுக்கு தலைவன் இல்லை. ஆனால் அவர்களின் நோக்கம் ஒரே குரல்தான். அது ஒரே குரலாக ஒலித்தாலே போதும்.

சிலர் இன்றும் (ஜனவரி 24, 2017) மெரினாவில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு ஒரு நோக்கம் இருக்கலாம்.

அதற்காக அவர்களை சதிகாரர்கள், விஷமிகள் என கேவலப்படுத்தாதீர்கள்.

அதுபோல் தமிழக அரசும் தன்னால் முயன்ற அனைத்தையும் செய்துள்ளனர்.

இன்னும் சிறப்பாக அவர்கள் செய்திருந்தால் சந்தோஷம்.

அதற்காக அவர்கள் ஒன்றுமே செய்யவில்லை என கூறை சொல்லாதீர்கள்.

வன்முறையில் ஈடுபட்ட போலீஸாரின் காட்சிகளை பார்த்த போது, இது காவல்துறையாக இருக்காது என்றே நம்பினேன்.

என்னைப்போல் சில நடிகர்களாக இருப்பார்கள் என்றே நம்புகிறேன். அவர்கள் தண்டிக்கப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட வேண்டும்.

இது தொடர்பாக விளக்கம் வரும் என நம்புகிறேன்.

இது சாதாரண மனிதனை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கும். எப்போது வேண்டுமானாலும், நாம் அவர்களால் பாதிக்கப்படக்கூடும் என பயம் கொள்வான்” என்று பேசினார்.

மேலும் சபாஷ் நாயுடு சூட்டிங்கில் விரைவில் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவித்தார்.

‘பீட்டாவுக்கு தடை தேவையில்லை..’ கமல் பரபரப்பு பேச்சு

‘பீட்டாவுக்கு தடை தேவையில்லை..’ கமல் பரபரப்பு பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamalஜல்லிக்கட்டு போராட்டம் முடிவடையும் நிலையில், திடீரென கலவரமானது.

இது தொடர்பாக தற்போது பத்திரிகையாளர்களை சந்தித்து பேசி வருகிறார் கமல்ஹாசன்.

அப்போது அவர் கூறிவருவதாவது…

ஜல்லிக்கட்டை தடை செய்ய Peta சொல்வதால், நாம் பீட்டாவை தடை செய்யுங்கள் என்று சொல்ல வேண்டாம்.

ஆனால், அதில் சிலவிதிமுறைகளை மாற்ற வேண்டும்.

நெடுஞ்சாலைகளில் கார்களில் அடிப்பட்டு நாய்கள் கொல்லப்படுகின்றன. அதற்காகவும் அவர்கள் குரல் கொடுக்கின்றனர்.

கார்களில் மனிதர்கள் கூட அடிப்படுகிறார்கள். அதற்காக காரை தடை செய்ய முடியுமா?

சில இடங்களில் ஸ்பீட் பிரேக் மற்றும் ஸ்பீட் லிமிட் செய்வது போல் ஒழுங்கப்படுத்த வேண்டும்.

ஆனால் மாட்டை சாப்பிடுவதற்கு அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை. அவர்கள் இரட்டை வேடம் போடுகின்றனர்.

இவர்கள் இல்லையென்றால் நாளை வேறு ஒரு அமைப்பு வரலாம். அதற்காக எல்லாம் அமைப்புகளை தடை செய்ய சொல்ல முடியாது.

அவர்கள் அமைப்பில் சில விதிமுறைகளை ஒழுங்குப்படுத்த வேண்டும்.” என்று பேசினார்.

More Articles
Follows