தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விவேகம் படம் ரிலீஸ் ஆனபின்னர் ஒரு ஆப்பரேசனை முடித்துவிட்டு தற்போது ஓய்வு எடுத்து வருகிறார் அஜித்.
இதனையடுத்து அஜித் மீண்டும் சிவா இயக்கத்தில் நடிப்பார் என கூறப்பட்டது.
ஆனால் விவேகம் படத்திற்கு கிடைத்த நெகட்டிவ்வான விமர்சனங்களால் தற்போது அந்த முடிவில் மாற்றம் ஏற்ப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ரஜினி நடித்துள்ள ‘2.0’ படத்தைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கவுள்ள அடுத்த படத்தில் அஜித் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அனிருத் இசையமைக்க இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஷங்கர் – அஜித் கூட்டணியை உருவாக்கியதும் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தான் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுவாகவே அஜித் பேட்டி எதுவும் கொடுக்கமாட்டார். தற்போதுதான அவர் ஆப்பரேசனை முடித்துள்ளார்.
எனவே அவர் முழுவதும் குணமானவுடனேதான் இதற்காக விடை தெரியும் என எதிர்பார்க்கலாம்.