காவி கொடி… கல்லூரி பார்ட்டி.; மோகன் பிறந்தநாளில் விஜய்ஸ்ரீ கொடுத்த ‘ஹரா’ ட்ரீட்

காவி கொடி… கல்லூரி பார்ட்டி.; மோகன் பிறந்தநாளில் விஜய்ஸ்ரீ கொடுத்த ‘ஹரா’ ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1980களில் தமிழக ரசிகர்களை கவர்ந்த நடிகர் மோகன் ரீஎன்ட்ரி கொடுக்கும் படம் ‘ஹரா’. ஹரா என்றால் பகையை வென்றவன் என்று பொருள்.

இந்த படத்தை ‘தாதா 87’ மற்றும் பவுடர் படங்களின் இயக்குனர் விஜய்ஸ்ரீ இயக்கிவருகிறார். (பவுடர் படம் விரைவில் வெளியாகவுள்ளது)

‘ஹரா’ பட டைட்டில் டீசரை தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியிட்டனர்.

மோகன் ஜோடியாக குஷ்பு நடிக்கிறார். இவர்களின் மகளாக சுவாதி என்பவர் நடிக்கிறார்.

இவர்களுடன் முக்கிய வேடங்களில் யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, ஜெயக்குமார், ரயில் ரவி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

மனோ மற்றும் பிரஹத் ஆகியோர் ஒளிப்பதிவு செய்ய லியாண்டர் லீ இசை பணியை மேற்கொள்கிறார். குணா எடிட்டிங் செய்கிறார்.

இந்த நிலையில் இன்று மே 10ல் மோகன் தன் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு சென்னை எத்திராஜ் கல்லூரியில் மாணவிகள் மத்தியில் மோகன் பிறந்தநாளை கொண்டாடியுள்ளது படக்குழு.

மேலும் மோகனுக்கு பிறந்தநாள் பரிசு அளிக்கும் விதமாக MOHAN BIRTHDAY GLIMPSE வீடியோவை விஜய்ஸ்ரீ வெளியிட்டுள்ளார்.

முழுக்க முழுக்க ஆக்சன் அவதாரம் எடுத்துள்ளார் மோகன். மேலும் பால்தாக்கரே வேடத்தில் சாருஹாசன் தோன்றுகிறார். ராமை வரச்சொல் என்கிறார் ஒருவரிடம் .

ஆனால்.. நான் ராம் இல்லடா.. தாவூத் இப்ராஹிம் என மோகன் சொல்கிறார். ஆக இந்த படம் இந்து – முஸ்லீம் மதம் பற்றி சில விஷயங்களை சொல்ல வருகிறது என்பதை நம்மால் யூகிக்க முடிகிறது.

இறுதியில் காவி கலர் கொடி பறக்கிறது… அதில் விஜய்ஸ்ரீ பெயர் வருகிறது.

ஆக ஏதோ ஒரு சம்பவம் செய்ய போகிறது ஹரா என்பது மட்டும் நிச்சயம்.

இந்தாண்டு தீபாவளிக்கோ அல்லது அதற்கு முன்போ படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக விஜய்ஸ்ரீ தெரிவித்துள்ளார்.

Glimpse of Haraa released by VijaySri on Mohan birthday

தமிழ் இயக்குநர்கள் கவனிக்க.: 2 வாரங்களில் மட்டும் 4 ரீமேக் படங்கள்.; கதைக்கு இவ்ளோ பஞ்சமா.?

தமிழ் இயக்குநர்கள் கவனிக்க.: 2 வாரங்களில் மட்டும் 4 ரீமேக் படங்கள்.; கதைக்கு இவ்ளோ பஞ்சமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அண்மைக்காலமாக இந்திய சினிமாவில் தெலுங்கு கன்னடம் ஹிந்தி மற்றும் மலையாளம் படங்கள் தரமான படங்கள் வரிசையில் இடம் பெற்று வருகின்றன.

மேலும் வசூலிலும் பாக்ஸ் ஆபிஸில் சக்கைப் போடு போட்டு வருகின்றன.

கன்னட மற்றும் தெலுங்கு நட்சத்திரங்களும் ஆர்வத்துடன் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று புரமோசன் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இதனால் மற்ற மொழி நடிகர்களுக்கு தமிழ் நாட்டில் ரசிகர்கள் உருவாக ஆரம்பித்துள்ளனர்.

ஆனால் தமிழ் சினிமாவில் பான் இந்தியா படங்கள் என்ற பெயரில் 4 மொழிகளில் வெளியிட்டாலும் விஜய், அஜித் ஆகியோர் புரோமோசன் பணிகளில் ஈடுபடுவதில்லை.

இந்த நிலையில் மற்ற மொழி படங்களின் ரீமேக் படங்கள் தமிழ் சினிமாவில் அதிகரித்து வருகிறது.

எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய நாவலின் தலைப்பே ஒரு படத்தின் தலைப்பாய் சூட்டப்பட்டது. அதுதான் ‘பயணிகள் கவனிக்கவும்’. கடந்த ஏப்ரல் 28ல் ஆஹா ஓடிடி தளத்தில் ரிலீசானது.

நெட்டிசன்களுக்கு எச்சரிக்கை..; பயணிகள் கவனிக்கவும் விமர்சனம்

இதில் விதார்த், லட்சுமி பிரியா, கருணாகரன் உள்ளிட்டோர் நடித்து இருந்தனர். எஸ்.பி சக்திவேல் என்பவர் இயக்கியிருந்தார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி ரசிகர்களை கவனிக்க வைத்த ‘விக்ருதி’ படத்தின் ரீ-மேக்தான் இது. விதார்த் கேரக்டரில் பிரபல மலையாள காமெடி நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு நடித்து இருந்தார்.

இதை தொடர்ந்து 3 ரீமேக் படங்கள் கடந்த் மே 6ஆம் தேதி ரிலீசானது.

இதில் 2 படங்கள் மலையாள படத்தின் ரீமேக் ஆகும்.

ஆர். கே. சுரேஷ் நடித்த ‘விசித்திரன்’ மற்றும் கே.எஸ். ரவிக்குமார் நடித்த ‘கூகுள் கூட்டப்பா’ ஆகிய படங்கள் ரிலீசானது.

விசித்திரன் விமர்சனம் 3.75/5 ; மெடிக்கல் மாஃபியாக்களுக்கு மரண அடி

மலையாளத்தில் ஜோசப் என்ற பெயரில் வெளியான படத்தின் ரீமேக் தான் இந்த ‘விசித்திரன்’. பத்மகுமார் இயக்கியிருந்தார். இவரே தான் தமிழிலும் இயக்கியுள்ளார்.

மலையாளத்தில் கதையின் நாயகனாக ஜோஜூ ஜார்ஜ் நடித்திருந்தார்.

மற்றொரு படம் ‘கூகுள் குட்டப்பா’. இது மலையாளத்தில் ‘ஆன்ட்ராய்டு குஞ்சப்பன் 5.25” என்ற பெயரில் வெளியானது. இதில் பிரபல மலையாள காமெடி நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு நடிக்க தமிழில் கேஎஸ் ரவிக்குமார் நடித்துள்ளார்.

கூகுள் குட்டப்பா விமர்சனம் 3.25/5..; நீ GOOD அப்பா…

தமிழில் தர்ஷன் லொஸ்லியா யோகிபாபு ஆகியோர் நடிக்க சபேஷ் சரவணன் என இருவர் இயக்கியிருந்தனர்.

மற்றொரு படம் ‘அக்கா குருவி’.

மஜித் மஜிதி இயக்கி மாபெரும் வெற்றி பெற்ற Children of Heaven என்று படத்தை தமிழில் மறுஉருவாக்கம் செய்து ‘அக்கா குருவி’ என்ற பெயரில் இயக்கியிருக்கிறார் சாமி . இளையராஜா இசையமைத்துள்ளார்.

அக்கா குருவி விமர்சனம் 3.5/5..; ஒரு ஜோடி ஷூவில் கட்டப்பட்ட பாசமலர்கள்

இந்த நான்கு படங்களுமே தமிழக ரசிகர்களிடையே நல்ல வரவேற்றை பெற்றது. தரமான படங்களுக்கு ரசிகர்கள் என்றுமே தங்கள் ஆதரவை அளித்து வருகின்றனர்.

ஆனால் இது தமிழக இயக்குனர்களின் கதை வறட்சியை தான் காட்டுகிறது. இப்படியே சென்றால் தமிழக ரசிகர்கள் தங்கள் ரசனையை மாற்றிக் கொள்வார்கள்.

தற்போது ஓடிடி தளங்களில் மற்ற மொழி படங்களும் வெளியாவதால் அதனை நேரடியாக அங்கேயே பார்த்துவிடுவார்கள். தமிழில் ரீமேக் செய்தாலும் பெரிய பலன் இருக்காது என்பதே நிதர்சனமான உண்மை.

இனிமேலாவது ரசிகர்களின் ரசனையை புரிந்து இங்குள்ள தமிழ் இயக்குனர்கள் தங்களின் சொந்த படைப்பை திரைப்படமாக்குவார்கள் என நம்புவோம்.

Common man Request to Tamil film directors

3ஆம் தர அரசியல் மேடையாக்கி்ட்டீங்க.. மீண்டும் நடிகர் சங்கத்தை கடனில் சிக்க வைக்க விஷால் திட்டம்.; உதயா கண்டனம்

3ஆம் தர அரசியல் மேடையாக்கி்ட்டீங்க.. மீண்டும் நடிகர் சங்கத்தை கடனில் சிக்க வைக்க விஷால் திட்டம்.; உதயா கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளர் விஷாலுக்கு வணக்கம்,

நான் நடிகர் உதயா.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர் என்ற உரிமையிலும், சக நடிகர்கள் மற்றும் அனைத்து உறுப்பினர்களின் நலன் கருதியும் இந்த கடிதத்தை தங்களுக்கு எழுதுகிறேன்.

நடிகர் சங்க தேர்தலில் தங்கள் அணி வெற்றி பெற்றதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் கடந்த ஞாயிறன்று சென்னையில் நடைபெற்றது.

தங்களது அணியின் வெற்றி குறித்த மாற்றுக்கருத்துக்கு இடையிலும் சங்கத்தின் ஒற்றுமை மற்றும் வலிமை தான் முக்கியம் எனக் கருதி தேர்தலில் தங்களை எதிர்த்து போட்டியிட்ட அணியை சேர்ந்தவர்களும் இக்கூட்டத்தில் முழுமனதுடன் கலந்து கொண்டோம்.

சங்க வளர்ச்சி நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கவும் தயாராக இருந்தோம், இருக்கிறோம், இருப்போம்.

தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டவர்களே இத்தனை பெருந்தன்மையாக இருக்கும் போது, வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நீங்கள், அதுவும் தற்போது அனைவருக்கும் பொதுவான பொறுப்பில் இருக்கும் நீங்கள், எவ்வளவு பெருந்தன்மையுடன் இருந்திருக்க வேண்டும். ஆனால் நடந்தது என்ன?

கூட்டத்தில் பேசிய நீங்கள் அதை ஏதோ மூன்றாம் தர அரசியல் மேடை போல ஆக்கியதோடு, சங்கத்தின் மாண்பையும் குறைத்து விட்டீர்கள்.

ஜனநாயக முறைப்படி உங்களை எதிர்த்து போட்டியிட்டவர்களை வைரஸ் என்று வர்ணித்தீர்கள்.

கொரோனா காலத்தில் மட்டுமில்லாமல் சங்க உறுப்பினர்களுக்கு எப்போதும் உண்மையாக உழைப்பவர்கள், உதவுபவர்கள் யார் என்பதை நம் அனைத்து உறுப்பினர்களும் அறிவார்கள்.

மேலும், தமிழ் திரையுலகின் வைரஸ் யார் என்பதையும் அனைவரும் அறிவார்கள், அறிந்தே உள்ளார்கள். உங்கள் பெயரும், வைரஸும் ‘வி’ எனும் ஆங்கில எழுத்தில் தொடங்குவதால் உங்களுக்கு அதன் மேல் அத்தனை பற்று போலும்.

அது மட்டுமா? பல்லாண்டு கால சீரிய முயற்சிகளுக்குப் பின்னர் சங்கத்தை கடனில் இருந்து மீட்ட நிலையில், கடன் சுழலில் அதை மீண்டும் சிக்க வைக்கும் வகையில் வங்கிக் கடன் வாங்கி கட்டிடம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது அனைத்து உறுப்பினர்களையும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்த முடிவு தற்கொலைக்கு சமமானது. இதனால் வறுமையில் வாடும் நமது சக சகோதர, சகோதரிகளுக்கு எந்த நன்மையும் கிடைக்காது. சங்க கட்டிடத்தை நடிகர்களாகிய நாமே நம்மால் இயன்ற பங்களித்து கட்டி முடிக்க முடியும் என்பது அனைவரும் அறிந்ததே.

அப்படி செய்தால் மட்டுமே அதில் வரும் வருவாயைக் கொண்டு நலிந்த நிலையில் உள்ள உறுப்பினர்களுக்கு உதவ முடியும், நம் மூத்தோர்களின் ஆன்மாக்களையும், மனங்களையும் குளிர்விக்க முடியும்.

எனவே, மேற்சொன்ன கருத்துகளை எதி(ரி)ர்மறை விமர்சனமாக பார்க்காமல், நம்மனைவரின், நம் சங்கத்தின் நலனுக்கான ஆக்கப்பூர்வ ஆலோசனையாக எடுத்துக் கொண்டு அனைவரின் கருத்துகளுக்கும் மதிப்பளித்து சங்கத்தின் வளர்ச்சியை முன்னெடுத்து செல்வீர்கள் என்று நம்புகிறோம்.

தங்கள் நேர்மறை நடவடிக்கைகளுக்கு என்றும் ஆதரவளிக்க தயாராகவே உள்ளோம்.

உண்மையுடன்,

உதயா
நடிகர்/
நடிகர் சங்க உறுப்பினர்
(7068)

Actor Udhaya wrote letter to Vishal

தளபதிக்கு ஏஜ் எப்டி ரிவர்ஸ் கியரில் போகுது.? வைரலாகும் நியூ லுக்.; விஜய் பிறந்தநாளில் ‘தளபதி 66’ ட்ரீட்.

தளபதிக்கு ஏஜ் எப்டி ரிவர்ஸ் கியரில் போகுது.? வைரலாகும் நியூ லுக்.; விஜய் பிறந்தநாளில் ‘தளபதி 66’ ட்ரீட்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் நடித்து வருகிறார் தமிழ் நடிகர் விஜய்.

தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். “தனது கெரியரிலேயே பெஸ்ட்டான ஆல்பத்தை கொடுக்கப் போவதாகவும் உறுதியளித்துள்ளார் தமன்.

இப்படத்திற்கு தற்காலிகமாக ‘தளபதி 66‘ என பெயரிட்டுள்ளனர்.

இதில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

இப்படத்தில் ஷ்யாம் மற்றும் யோகிபாபு முக்கிய வேடங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

காதலுக்கும் குடும்ப உறவுகளுக்கும் முக்கியத்துவம் தரும் வகையில் இப்படம் உருவாகி வருகிறது.

தற்போது இதன் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

‘தளபதி 66’ படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் பற்றிய விவரத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன் படி சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஜெயசுதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர் என்ற செய்தியை நம் FILMISTREET தளத்தில் பார்த்தோம்.

இப்படம் அடுத்தாண்டு 2023-ஆம் ஆண்டு பொங்கலன்று வெளியாகவுள்ளது.

இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ஜூன் 22ல் விஜய்யின் பிறந்தநாளில் வெளியாகவுள்ளது.

எனவே விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

இந்நிலையில், ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து விஜய் வீடியோ கால் பேசும் படங்கள் வைரலாகியுள்ளது.

இதில் விஜய்யின் நியூ லுக் பார்த்து.. தளபதியே. உனக்கு எப்படி ஏஜ் ரிவர்ஸ் கியரில் போகுது? என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

Vijay new look goes viral on social media

‘அக்கா குருவி’-க்கு இளையராஜா உயிர் கொடுக்க சாமி உணர்வு கொடுத்துள்ளார்.; சிலிர்க்கும் சீமான்

‘அக்கா குருவி’-க்கு இளையராஜா உயிர் கொடுக்க சாமி உணர்வு கொடுத்துள்ளார்.; சிலிர்க்கும் சீமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் சாமி இயக்கிய அக்கா குருவி படத்தை பார்த்து சீமான் பேசியதாவது :

என்னுடைய தம்பி இயக்குனர் சாமி தயாரித்து இயக்கிய படம் அக்காக் குருவி. உலகத் திரைப்பட விழாவில் மஜித் மஜிதி எடுத்த சில்ரன் ஆஃப் ஹெவன் பார்த்தோம். அப்படம் உலகப்புகழ் பெற்ற திரைப்படம்.

நாங்கள் வியந்து ரசித்த படம். அதை சாமி மறுபதிப்பு செய்து இருக்கிறார். ஆனால், அத்திரைப்படத்தை ஏனோதானோ என்று இல்லாமல் மிகுந்த பொறுப்புணர்வோடு கொஞ்சமும் சிதையாமல் எடுத்திருக்கிறார்.

சில்ட்ரன் ஆஃப் ஹெவன் 83 நிமிடங்கள். ஆனால் அக்கா குருவி 153 நிமிடங்கள் நீட்டித்திருக்கிறார். இருப்பினும், தேவையற்ற காட்சிகளை வலிந்து திணிக்கிறார் என்று சொல்ல முடியாத அளவிற்கு முதன்மையான உணர்வை கெடுக்காமல் மக்களின் ரசனைக்கு ஏற்ப திரைக்கதை அமைத்து சிறப்பாக செய்திருக்கிறார் தம்பி சாமி.

அதற்கு அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அவருடைய முந்தைய படங்களை விட மிகவும் உணர்வுபூர்வமான கவித்துவமான காவியம் என்று தான் சொல்ல வேண்டும். இதில் என்னவென்றால் இதுபோன்ற படங்களில் தயாரிக்க யாரும் முன்வர மாட்டார்கள்.

ஆகையால், அவருடைய கனவு தொழிற்சாலை, முத்து மூவிஸ் என 9 பேர் இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள். ஏனென்றால் இன்றைய திரையுலக சூழல் அப்படி ஆகிவிட்டது.

நட்சத்திரமாக நடித்து இருக்கும் குழந்தைகள் மிகவும் அருமையாக நடித்து இருந்தார்கள். மேலும், நிறைய புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள்.

ஆனாலும் புதுமுகங்கள் மாதிரி தெரியவில்லை அனைவரும் கதாபாத்திரத்தோடு ஒன்றி தங்களுடைய திறனை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். படம் பார்க்கும் உணர்வே எனக்கு வரவில்லை அந்த அளவிற்கு எல்லோரும் வாழ்ந்திருக்கிறார்கள். அது இப்படத்திற்கு பெரிய வெற்றி.

இப்படத்தின் ஒளிப்பதிவாளர் உத்பல் வி. நாயனார் மலையாளத்தில் பல படங்களில் பணியாற்றி இருக்கிறார். கலை இயக்குனர் என்னுடைய தம்பி வீரசமர்.

இசையைப் பற்றி சொல்லத் தேவையில்லை. ஈடு இணையற்ற இசை மேதை இளையராஜா இசையமைத்திருக்கிறார். அவர் இசையமைத்து இருக்கிறார் என்பதைவிட ஒவ்வொரு காட்சிக்கும் உயிர் கொடுத்து இருக்கிறார் என்பதே பொருத்தமாக இருக்கும்.

இசையால் இப்படத்தை வருடிக் கொடுத்து இருக்கிறார். அண்ணன் இருக்க தனது பங்களிப்பை இளையராஜா கொடுத்திருக்கிறார். இப்படம் பார்த்தால் அனைவருக்கும் பிடிக்கும். சாதாரண படத்திற்கு சிறப்பாக இசை அமைத்துக் கொடுத்தவர், இந்த மாதிரி படங்களை விடுவாரா என்ன?! மிகவும் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்.

படம் திரையரங்கிற்கு வந்து ஓடுகிறது. என் அன்பு உறவுகள் அனைவரும் பார்க்க வேண்டும். அப்போதுதான் புதிதாக முயற்சிக்கும் படைப்பாளிகளுக்கு ஊக்கமும். நம்பிக்கையும் வரும். இது எனது அன்பான வேண்டுகோள்.

மேலும் இந்த வகையில் இப்படத்தை தவறவிடக் கூடாது குழந்தைகள் குடும்பம் குடும்பமாக பார்க்கவும்.

வன்முறை ஆபாசம் தேவையற்ற காட்சிகள் உரையாடல்கள் என்று ஒரு துளிகூட கிடையாது. மிக சிறந்த படைப்பு. இப்படிப்பட்ட ஒரு படத்தை யாரும் தயாரிக்க வில்லை என்றால் நாமே துணிந்து எடுப்போம் என்ற என்னுடைய தம்பி இயக்குனர் சாமிக்கு என்னுடைய பாராட்டுக்களும் நன்றியும்.

அவருக்கு துணையாக இருந்தவர்  என்னுடைய சகோதரர். இவர் ராஜு மதுரவனின் மைத்துனர். இவர்கள் அனைவரும் இணைந்து அவரவர்களுக்கு இயன்ற அளவு பணம் கொடுத்து எடுத்திருக்கிறார்கள்.

இது ஒரு போர்தான். சாமி 9 பேர் இணைந்து தயாரித்து இருக்கிறோம் என்றார். நாங்கள் 50 பேர் இணைந்து ஒரு படம் தயாரிக்க இருக்கிறோம் என்று கூறினேன். இதுபோன்ற முயற்சி எடுக்கும் பிள்ளைகளை ஊக்கப்படுத்த வேண்டும்.

ஒருமுறை படம் பாருங்கள். படம் உங்களை உறுதியாக ஏமாற்றாது.. மிகுந்த மன நிறைவை தரும் சிறந்த படம். எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

என்னுடைய பாராட்டை படைப்பாளிகளுக்கு, இப்படத்தில் உழைத்த தொழில்நுட்ப கலைஞர்களுக்கு குறிப்பாக என்னுடைய தம்பி சாமிக்கு வாழ்த்துக்களை சொல்வதில் பெரிதும் மகிழ்கிறேன்.

இப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என்று அன்பாக வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். நன்றி, வணக்கம் என்றார் சீமான்.

Maestro Ilaiyaraaja given life to Akka Kuruvi says Seeman

BREAKING ரஜினியை அரசியலுக்கு வராவிடாமல் செய்தவர் அவரே..; உதயநிதி மேடையில் உளறிய யுகபாரதி

BREAKING ரஜினியை அரசியலுக்கு வராவிடாமல் செய்தவர் அவரே..; உதயநிதி மேடையில் உளறிய யுகபாரதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹிந்தியில் சூப்பர் ஹிட்டான ஆர்ட்டிகிள் 15 பட தமிழ் ரீமேக் உரிமையை போனி கபூர் பெற்று தமிழில் ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற பெயரில் உருவாகியுள்ளார்.

‘கனா’ படத்தை இயக்கிய அருண் ராஜா காமராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இதில் உதயநிதியுடன், தன்யா ரவிச்சந்திரன், ஆரி அர்ஜுனன் , ஷிவானி ராஜசேகர், ரவி வெங்கட்ராமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

வசனங்களை தமிழரசன் எழுதியுள்ளார்.

கனா படத்திற்கு இசையமைத்த திபு நினன் தாமஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சென்சாரில் இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

வருகிற மே 20ல் இப்படம் ரிலீசாகவுள்ள நிலையில் இன்று மே 9ல் சென்னை சத்யம் தியேட்டரில் ‘நெஞ்சுக்கு நீதி’ பட இசை வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது.

இதில் அமைச்சர் அன்பில் மகேஷ், சிவகார்த்திகேயன் மற்றும் ஆர்யா சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்.

இந்த விழாவில் இப்படத்தில் பாடல் எழுதியுள்ள யுகபாரதி பேசியதாவது…

அருண்ராஜாவே ஒரு பாடலாசிரியர். ரஜினிக்கு கபாலி படத்தில் ‘நெருப்புடா..’ என்ற பாடல் எழுதி அவரை அரசியலுக்கு வராவிடாமல் செய்து விட்டார்.”

அருண்ராஜாவின் நண்பர் சிவகார்த்திகேயனும் ஒரு பாடலாசிரியர் தான். அப்படி இருக்கையில் என்னை பாடல் எழுத அழைத்தார். அந்த பாடல் பற்றி இப்போது சொன்னால் சரியிருக்காது. பிறகு சொல்கிறேன்” என பேசினார்.

Yugabharathi talks about Rajini at Udhayanidhi movie audio launch

More Articles
Follows