தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சிவா இயக்கத்தில் தல 57 படத்தில் நடித்து வருகிறார் அஜித்.
இதனையடுத்து, அவர் யார் படத்தில் நடிப்பார் என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
இதனிடையில் சுந்தர் சியின் அரண்மணை படத்தை தயாரித்த விஷன் ஐ மீடியாஸ் நிறுவனம் அஜித்தை சந்தித்து கால்ஷீட் கேட்டுள்ளதாம்.
இதற்கு அஜித்தும் ஓகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது.
இப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையில் அஜித்துக்காக ஒரு கதையுடன் ஷங்கர் காத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
ஷங்கர், முருகதாஸ் இருவரும் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர்கள். எனவே யாருக்கு கால்ஷீட் கொடுப்பது என அஜித்திற்கே நிச்சயம் குழப்பம் வரலாம்.