தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள வேலைக்காரன் படம் வருகிற டிசம்பர் 22ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகவுள்ளது.
இப்படம் செப்டம்பர் 29ஆம் தேதி வெளியாகவிருந்த நிலையில் தயாரிப்பாளர்கள் மற்றும் பெப்சி பிரச்சினைகளால் சூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டது.
தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
இதற்காக படக்குழுவினர் ராஜஸ்தான் சென்றுள்ளனர்.
இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இதன் ஒளிப்பதிவாளராக ராம்ஜி பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் சில தவிர்க்க முடியாத காரணங்களால் இதுநாள் வரை பணியாற்றிய படத்தொகுப்பாளர் விவேக் ஹர்ஷனை மாற்றி எடிட்டராக ரூபனை ஒப்பந்தம் செய்து இருக்கிறார்களாம்.
After some issues Velaikkaran shooting starts at Rajasthan