ரஜினிக்கு அடுத்த இடத்தை உறுதி செய்த சூர்யா

ரஜினிக்கு அடுத்த இடத்தை உறுதி செய்த சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth Suriyaசிங்கம்3 படம் வெளியாவதை தொடர்ந்து அதன் ரிலீசுக்கு முன்னர் அப்படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது அப்படத் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசும்போது, ஆந்திர மார்கெட்டில் ரஜினிக்கு அடுத்த இடத்தை சூர்யா பிடித்துள்ளார் என்றார்.

இதனையடுத்து சி3 படமும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகியுள்ளது.

தற்போது ஞானவேல்ராஜா சொன்னதைப் போலவே, இப்படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளதாம்.

அதாவது இரண்டு நாட்களில் அங்கு மட்டும் அங்கு ரூ. 13.5 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படம் அங்கு Yamudu 3 என்ற பெயரில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

After Rajinikanth suriya set record in Box office Collection

தமிழக அரசியல் பற்றி அமிதாப்பிடம் ரஜினி ஆலோசனை.?

தமிழக அரசியல் பற்றி அமிதாப்பிடம் ரஜினி ஆலோசனை.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini Amithabதமிழகத்தில் ஆட்சி அமைப்பது குறித்து அதிமுகவை சேர்ந்த, முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் சசிகலா இடையே மோதல் வலுத்துள்ளது.

இந்நிலையில் ரஜினிகாந்த் இதுகுறித்து சில பிரமுகர்களுடன் ஆலோசித்து வருவதாக வட இந்திய ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.

அதில்… சில நாட்களில் தன் ரசிகர் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் ரஜினி கூட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் தன்னுடைய நெருங்கிய நண்பரான அமிதாப்பச்சனுடன் ரஜினி ஆலோசனை கேட்டதாகவும் தெரிகிறது.

ஆனால், அரசியலில் இறங்க வேண்டாம் என ரஜினியிடம் அமிதாப் கூறியதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Whether Rajini met Amithab to consult about entering politics

அஸ்வின்-ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் ஹாலிவுட் ஸ்டண்ட்மேன் கிரேக் ப்யூரிட்ஜ்

அஸ்வின்-ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் ஹாலிவுட் ஸ்டண்ட்மேன் கிரேக் ப்யூரிட்ஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Idhu Vedhalam Sollum Kathai movie news updates‛இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா மற்றும் ‛ஜீரோ உள்ளிட்ட படங்களில் நடித்த அஸ்வின் அடுத்து நடிக்கும் படம் ‛இது வேதாளம் சொல்லும் கதை’.

இதில் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.

இவருடன் ‛ஜோக்கர்’ படப்புகழ் குரு சோமசுந்தரம் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்.

அறிமுக இயக்குனர் ரத்தீந்திரன் பிரசாத் இப்படத்தை இயக்க, ஜிப்ரான் இசையமைக்கிறார்.

இப்படத்திற்கு ‛ஹாரிபாட்டர்’ படத்தில் பணியாற்றிய ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர் ‛கிரேக் ப்யூரிட்ஜ் சண்டை பயிற்சி அளித்துள்ளார்.

மேலும் இவர் ஒரு முக்கிய வேடம் ஒன்றிலும் நடித்துள்ளார். இவர் பிரபல ஹாலிவுட் திரைப்படமான உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றி உள்ளார்.

றெக்க படத்தை தயாரித்த காமன்மேன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது.

விரைவில் இதன் அதிகாரப்பூர்வ டீசர் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Idhu Vedhalam Sollum Kathai Press meet news updates

idhu vedhalam sollum kadhai

ஆரிக்கு ஆதரவளிக்கும் இயக்குனர்கள் அமீர்-கரு.பழனியப்பன்

ஆரிக்கு ஆதரவளிக்கும் இயக்குனர்கள் அமீர்-கரு.பழனியப்பன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Directors Ameer and Karu Palaniyappan launches Nagesh Thiraiyarangam First lookநெடுஞ்சாலை, மாயா ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து நடிகர் ஆரி கதாநாயகனாக நடித்து வரும் படம் ‘நாகேஷ் திரையரங்கம்’.

ட்ரான்ஸ் இண்டியா மீடியா&எண்டெர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிக்கும் இப்படத்தை அகடம் என்ற படத்தை சிங்கிள் ஷாட்டில் எடுத்து கின்னஸில் இடம் பிடித்த இசாக் இயக்குகிறார்.

இப்படத்தில் கதாநாயகியாக ஆஷ்னாசாவேரி நடிக்கிறார். நகைச்சுவை வேடத்தில் காளிவெங்கட், சுவாமிநாதன் நடிக்கின்றனர்.

இவர்களுடன் படத்தில் அதி முக்கிய கதாப்பாத்திரங்களில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு லதா, சித்தாரா, போன்றோர் நடிக்கின்றனர்.

வெகு வேகமாக மிகப்பிரம்மாண்டமாக வளர்ந்து இப்படத்தின் பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகிறது.

இயக்குனர்கள் அமீர் மற்றும் கரு.பழனியப்பன் இதை வெளியிடுகிறார்கள்.

Directors Ameer and Karu Palaniyappan launches Nagesh Thiraiyarangam First look

aari ameer

நந்தினி சீரியல் மூலம் சினிமாவை டிவிக்கு கொண்டுவரும் ராஜ்கபூர்

நந்தினி சீரியல் மூலம் சினிமாவை டிவிக்கு கொண்டுவரும் ராஜ்கபூர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nandhiniசன்டிவியில் ஒளிப்பரப்பாகும் நந்தினி சீரியல் மிகப்பிரபலம். இதுகுறித்து இயக்குனர் ராஜ்கபூர் கூறியுள்ளதாவது…

இயக்குநர் சுந்தர்.C – இன் அவினி சினிமேக்ஸ் (P) லிமிடெட் மற்றும் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சன்.டிவியுடனும் இணைந்து நாங்கள் உருவாக்கிய திட்டம் தான் இந்த “ நந்தினி “ தொடர்.

இந்தியாவிலேயே முதல் முறையாக படத்தயாரிப்பு ( Film Making) செய்து தொடருக்கு வழங்குகிறோம். 4K தொழில்நுட்பத்தில் இத்தொடரை படம்பிடித்து 5.1-ல் மிக்ஸ் ( MIX ) செய்து வழங்குகிறோம்.

இது ரசிகர்களுக்கு தொடர் நிகழ்ச்சி பார்த்த அனுபவமாக இல்லாமல் திரைப்படம் பார்த்த ஒரு அனுபவத்தை கொடுக்கும். சிறந்த தரமான தயாரிப்பை நாங்கள் செய்துவருகின்றோம் இது தொடரும். இதில் பணியாற்றும் அனைவரும் திரைப்பட துறையை சார்ந்தவர்கள்.

இதை நாங்கள் சினிமாவாகவே எடுத்து அதை தொடராக உங்களுக்கு கொடுக்கின்றோம். அதனால்தான் இந்த நந்தினி தொடர் பரபரப்பாக பேசப்படுகிறது.

இதுவே எங்களுக்கு கிடைத்த முதல் வெற்றியாகும். இது மிகவும் பிரம்மாண்டமான தொடராக இருக்கும்.

எங்கள் தொடர் மிகபிரம்மாண்டமாக வர இயக்குநர் சுந்தர்.C மிகவும் அதிகமாக சினிமாக்கு இணையாக செலவுகளை செய்துவருகிறார்.

கிராமப்புறங்களில் இருந்த மக்களிடமிருந்து முற்றிலும் சினிமாவை பார்த்த அனுபவங்கள் தான் உள்ளது என்று அறிக்கை வந்துகொண்டு இருக்கிறது.

நந்தினி தொடர் பிரம்மாண்டதின் உச்சம் என்று தான் சொல்லவேண்டும். ஒரு பாம்புக்கும் பேய்க்கும் இடையில் நடக்கும் ஒரு சண்டை தான் நந்தினி தொடரின் கதையாகும். இதில் பாம்பாக ஒரு பெண்ணும் பேயாக இன்னொரு பெண்ணும் நடிக்கிறார்கள்.

இத்தொடரில் நடிகர் விஜயகுமார் , சச்சு அம்மா, காயத்ரி ஜெயராம், விஜயலட்சுமி, சிங்கம்புலி, சூப்பர்குட் பவா அண்ணன் போன்ற சினிமா கலைஞர்களை பயன்படுத்தியுள்ளோம்.

நந்தினி தொடருக்கு அரண்மனை போன்ற மிக பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. குற்றாலம் அருகே கல்லிடைக்குறிச்சியில் 10 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடைபெற்றது.

இந்த தொடர் மற்ற தொடர்களை காட்டிலும் முற்றிலும் மாறுபட்டு மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும். பல்வேறு தொழில்நுட்பங்கள் உள்ள கேமராவினால் இத்தொடரின் படப்பிடிப்பு நடக்கிறது.

இத்தொடரில் நடிகர் விஜயகுமார் தான் மிகவும் முக்கியமான கதாபாத்திரமேற்று நடித்துள்ளார். இந்த தொடரை பொறுத்தவரை. நடிகர் விஜயகுமாருக்கு சகோதரியாக சச்சு அம்மா நடித்துள்ளார்.

இந்த தொடரில் நந்தினி கதாபாத்திரம் தான் பாம்பு. இத்தொடரின் ஷூட்டிங்கை பார்க்கும் எல்லோரும் இது சினிமா ஷூட்டிங் என்று தான் நினைத்தனர். பெரும்பாலும் இரவில் தான் அதிக கட்சிகள் எடுத்தோம்.

சிலசமயம் தொடரில் கலைஞர்களே பயந்துவிடுவார்கள்.

திரையில் பாம்பைக் காட்டும்போது ஓரு மிகப்பெரிய விளைவுயை ஏற்படுத்த பல்வேறு முறைகளில் மற்ற தொடரில் வருவது போல் இல்லாமல் சிறப்பாக இருக்கவேண்டும் என்று புதிய தொழில்நுட்பத்தில் கேமரா வேலையை மிகவும் சிறப்பாக செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் செந்தில்குமார். இந்த வருடம் விருது அவருக்கு தான்.

இந்த தொடருக்காக அனைவரும் கடுமையாக உழைத்ததால் நல்ல பெயர் கிடைத்துள்ளது. இந்த தொடர் மொத்தம் நான்கு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிட்டுள்ளோம்.

தமிழ்,கன்னடம்,தெலுங்கு,மலையாளம் போன்ற நான்கு மொழிகளில் பணியாற்றும் கலைஞர்கள் மொத்தமாக கலந்து வேலைசெய்வதால் இது இந்த தொடரின் சிறப்பு அம்சமாக அமைந்துள்ளது.

அதிதி என்ற ஒரு குழந்தை கதாபாத்திரம் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளது. இந்த தொடரை யாரும் குறைசொல்லும் அளவிற்கு இடமே இல்லாமல் சிறப்பாக வந்துள்ளது.

இந்த தொடரை எல்லோரும் தவறாமல் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை பார்த்தால் ஒரு சினிமாவை பார்ப்பதுபோல் ஒரு அனுபவம் இருக்கும். அனைவரும் தங்கள் ஆதரவை தரவேண்டும். இந்த தொடரை வெற்றிபெற செய்யவேண்டும் என்றார் இயக்குநர் ராஜ் கபூர்.

Director Rajkapoor talks about his Nandhini TV Serial making

 

nandhini team

 

கடலுக்கு அடியில் படமாக்கப்பட்ட தேசப்பற்று படம் ‘காஸி’

கடலுக்கு அடியில் படமாக்கப்பட்ட தேசப்பற்று படம் ‘காஸி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ghaziநம் இந்திய நாட்டைப் பற்றியும் நாட்டுப்பற்றைப் பற்றியும் பேசி வெளிவந்துள்ள பல படங்கள் மக்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. அந்தக் கால கப்பலோட்டிய தமிழன் தொடங்கி 1921, ஜெய்ஹிந்த்.மதராசப்பட்டினம் , லகான் வரை ஒவ்வொன்றும் ஒரு விதத்தில் தேசம் பற்றிப் பேசியவை.

அந்த வகையில் ஒரு படமாக ‘காஸி’ படமும் உருவாகியுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வின் அடிப்படையில் படக்கதை உருவாகியிருக்கிறது.

கண் முன்னே எதிரில் நின்று போர் தொடுக்காமல் எதிரி நாடு மறைந்து கொண்டு நீர்மூழ்கிக் கப்பல் மூலம் நம் நாட்டின் மீது போர் தொடுக்கிறது. அதை நம் நாட்டு வீரர்கள் எப்படி எதிர்கொண்டு எதிர்க்கிறார்கள்?

எதிரிகளிடமிருந்து அவர்கள் எப்படி நம் நாட்டைக் காப்பாற்றுகிறார்கள் என்பதே கதைக்களம்.

பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தில் ராணா டகுபதி கதாநாயகனாக நடித்திருக்கிறார்.டாப்சி தான் கதாநாயகி. இவர்களுடன் கே.கே.மேனன், அதுல் குல்கர்னி, ஓம்புரி, நாசர் போன்ற அனுபவ நட்சத்திரங்கள் பலரும் நடித்திருக்கிறார்கள்.

சங்கல்ப் ரெட்டி இயக்கியிருக்கும் இப்படத்தை பிவிபி சினிமா நிறுவனம் மேட்டினி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கிறது.

நீர்மூழ்கி கப்பல் சம்பந்தப்பட்ட கதை என்பதால் பெரும்பாலான காட்சிகள் கடலிலும், கடலுக்கு அடியிலும் படமாக்கப்பட்டுள்ளன.

கடலில் எடுக்கப்பட்டவை மட்டுமல்ல படத்தில் வரும் அந்தக் கடலடிக் காட்சிகளும் ரசிகர்களுக்கு புதிய காட்சி அனுபவத்தைத் தரும் என்கிறது படக் குழு.படத்தின் தணிக்கை முடிந்து விட்டது. யூ சான்றிதழ் பெற்றுள்ளது. இம்மாதம் 17 ஆம் தேதி வெளியாகிறது.

தேசம் பற்றிப் பேசும் இப்படம் மொழி எல்லை கடந்தது அல்லவா? ‘காஸி’ திரைப்படம் தமிழ்,தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும் வெளியாகவுள்ளது.

More Articles
Follows