‘ஞானவேல் ராஜாவால் சூர்யா-கார்த்திக்கு அவமானம்’… தாணு

‘ஞானவேல் ராஜாவால் சூர்யா-கார்த்திக்கு அவமானம்’… தாணு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kalaipuli thanuதமிழகத்தில் நெடுவாசல் போராட்டம் தீவிரமடைந்துள்ள வேளையில், சினிமாவிலும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது.

ஒருபக்கம், சுசித்ராவின் ட்விட்டர் பரபரப்பு. மறுபக்கம் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்.

தற்போது சங்கத் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், இன்று நடிகர் சங்கம் முன்பு தாணு தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

அப்போது தாணு பேசும்போது ஞானவேல் ராஜாவை கடுமையாக தாக்கினார். அவர் பேசியதாவது…

“இந்த இரண்டு ஆண்டு நிர்வாகத்தில் கட்டப்பஞ்சாயத்து எப்போது நடந்தது என்று ஞானவேல் ராஜாவால் கூற முடியுமா?

இவரால் சிவகுமார் குடும்பத்துக்கே அவமானம். சிங்கம் 3 படத்தை எத்தனை முறை தள்ளிப்போட்டு மற்ற தயாரிப்பாளர்களின் வயிற்றில் அடித்தார்?

கொம்பன் படத்தை வெளியிட முடியாமல் இதே ஞானவேல்ராஜா தயாரிப்பாளர் சங்கத்தில் அழுதாரே…

அப்போது துணைநின்று பிரச்சினையைத் தீர்த்து படம் வெளியிட உதவியது இதே தயாரிப்பாளர் சங்கம்தானே… அது கட்டப்பஞ்சாயத்தா?

அந்தப் படத்துக்காக அரசியல் தலைவர்களிடமெல்லாம் பேசி, சுமூகமாக படத்தை வெளியிட்டது இதே தயாரிப்பாளர்கள் தானே அவர்களைப் பற்றிப் பேச ஞானவேல் ராஜாவுக்கு என்ன தகுதி இருக்கிறது?” என்றார்.

Gnanavel Raja insults Sivakumar family says Producer Thanu

தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் விஷாலின் வாக்குறுதிகள்

தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் விஷாலின் வாக்குறுதிகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishal teams Producer Council Election Manifestoதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.

இம்முறை தலைவர் பதவிக்கு கலைப்புலி ஜி.சேகரன், கோதண்டராமையா, ராதாகிருஷ்ணன், டி.சிவா மற்றும் விஷால் ஆகிய ஐந்து பேர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் விஷால் அணியினர் தங்கள் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார்.

அது பற்றிய விவரம் வருமாறு….

 • வெளியிட முடியாமல் இருக்கும் படங்களை வெளியிடவும், அனைத்து படங்களுக்கும் சாட்டிலைட் உரிமம் மூலமாக லாபம் ஈட்டவும் வழிவகை செய்யப்படும்.
 • அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் வந்து சேர வேண்டிய கேபிள் TV வருமானத்தை சரி செய்து, மாதா மாதம் அனைத்து தயாரிப்பாளர்கள் பயன்படும் வகையில் வருமானம் ஈட்டித் தரப்படும்.
 • பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாங்க மானியத்தை மாநில அரசுடன் நட்புறவுடன் பேசி தயாரிப்பாளர்களுக்கு சேர வேண்டிய மானியத்தை பெற்றுத்தரப்படும்.
 • சிறிய படம், பெரிய படம் என்ற பாகுபாடு இல்லாமல், அனைத்து பிரச்சினைகளும் சமமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு ஒரு வாரத்திற்குள் தீர்க்கப்படும்.
 • நலிந்த தயாரிப்பாளர்கள்’ என்ற வார்த்தை தயாரிப்பாளர் சங்க வரலாற்றில் இருந்து அகற்றப்படும்.
 • அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் வீட்டு மனை வழங்கப்படும். இதற்கான நிதி சங்க வைப்பு நிதியில் இருந்து எடுக்காமல் புதிய வருவாய் மூலமாகவே நிறை வேற்றப்படும்.
 • யார் எந்த அணி என்ற பாரபட்சம் இல்லாமல், 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த உறுப்பினர்களுக்கு பென்ஷன் தொகைரூ.5,000/- ல் இருந்து ரூ.10,000/- ஆக உயர்த்தப்படும்.
 • தீபாவளி பரிசு ரூ.10,000/- ரொக்கமாக அனைத்து உறுப்பினர்களின் வங்கி கணக்கில் ஒரு வாரம் முன்பாகவே செலுத்தப்படும்.
 • பொங்கல் பரிசு ரூ.5,000/- ரொக்கமாக அனைத்து உறுப்பினர்களின் வங்கி கணக்கில் ஒரு வாரம் முன்பாகவே செலுத்தப்படும்.
 • சங்க உறுப்பினர்களின் வாரிசுகளுக்கு உயர்கல்வி நிறுவனர்களில் இலவச கல்வி பெற வழிவகை செய்யப்படும்.
 • முந்தைய நிர்வாகிகளைப்போல் சுயநல நோக்கோடும், தொலைநோக்குப் பார்வை அற்றவர்களாகவும் செயல்பட மாட்டோம்.
 • ஒரு வருடத்திற்குள் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் இல்லையேல், அனைத்து நிர்வாகிகளும் ராஜினாமா செய்து விடுவோம்.

 

‘என் அப்பா பிச்சை எடுத்தார். அதான் தேர்தலில் நிற்கிறேன்…’ – விஷால்

‘என் அப்பா பிச்சை எடுத்தார். அதான் தேர்தலில் நிற்கிறேன்…’ – விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Why Vishal nominated in Producers Council Electionதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக கலைப்புலி எஸ் தாணு பதவி வகித்து வருகிறார்.

இவரின் பதவி காலம் முடிவடையும் உள்ளதால், அடுத்த தேர்தல் வருகிற ஏப்ரல் 2ஆம் தேதி சென்னையில் நடைபெறஉள்ளது.

கிட்டதட்ட 1000க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் இத்தேர்தலில் வாக்களிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இம்முறை தலைவர் பதவிக்கு கலைப்புலி ஜி.சேகரன், கோதண்டராமையா, ராதாகிருஷ்ணன், டி.சிவா மற்றும் விஷால் ஆகிய ஐந்து பேர் போட்டியிடுகின்றனர்.

இதுதொடர்பாக ஒவ்வொரு அணியினரும் பத்திரிகையார்களை சந்தித்து தங்கள் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் விஷால் அணியை சேர்ந்த பிரகாஷ்ராஜ், சுந்தர் சி, பாண்டிரஜ், ஞானவேல்ராஜா, எஸ்.ஆர். பிரபு, மன்சூர்அலிகான் உள்ளிட்டவர்கள் பத்திரிகையாகர்களை சந்தித்தனர்.

அப்போது விஷால் பேசும்போது…

சினிமா உலகில் தயாரிப்பாளர்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

அவர்கள் நன்றாக இருந்தால்தான் திரையுலகம் நன்றாக இருக்கும்.

எங்கள் தேர்தல் அறிக்கையாக நாங்கள் ஒருசில வாக்குறுதிகளை தருகிறோம்.

இந்த வாக்குறுதிகளை கண்டிப்பாக ஒரு வருடத்திற்குள் நிறைவேற்றிவிடுவோம். அவ்வாறு நிறைவேற்றாவிட்டால் ராஜினாமா செய்யவும் தயார்’ என்று கூறினார்.

அதே போல் நடிகர் சங்க கட்டிடம் மிக விரைவில் அதாவது அடுத்த மாதம் கட்டிட வேலை துவங்கவுள்ளது.

என்னுடைய தந்தை “ஐ லவ் இந்தியா“, மகாபிரபு போன்ற வெற்றி படங்களை எடுத்தவர்.

என்னுடைய பள்ளி பருவத்தில் என் தந்தை ஒரு லேப்பில் நின்று பிச்சை எடுப்பதை நான் பார்த்தேன்.

அவர் அவர்களிடம் சொன்ன தேதியில் படத்தை வெளியிட வேண்டும் எனக்கு உதவுங்கள். நான் தவறேதும் செய்யவில்லை நான் செய்த ஒரே தவறு இந்த படத்தை எடுத்ததுதான் என்றார்.

அவர் பிச்சை எடுத்ததை நான் கண்ணால் பார்த்தேன் நான் இந்த தேர்தலில் நிற்க காரணம் அதுவாக கூட இருக்கலாம்.

இனி எந்தவொரு தயாரிப்பாளரும் அதுபோல் மற்றவர்களிடம் கையேந்த கூடாது. அதான் இந்த தேர்தலில் நிற்கிறேன்.

அறிக்கையில் கையெழுத்து போடும்போது மட்டுமே, தலைவராக இருப்பேன். மற்றபடி எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பேன்” என்று பேசினார் விஷால்.

Why Vishal nominated in Producers Council Election

vishal team producer council

அட்லி படத்தில் விஜய்-எஸ்.ஜே.சூர்யாவின் கேரக்டர் அப்டேட்ஸ்

அட்லி படத்தில் விஜய்-எஸ்.ஜே.சூர்யாவின் கேரக்டர் அப்டேட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay SJ Suriyaஅட்லி இயக்கத்தில் தன் 61வது படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இதில் இவருடன் சமந்தா, காஜல் அகர்வால், நித்யாமேனன், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யன் உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர்.

இதில் ஒரு கெட்டப்பில் கிராமத்து இளைஞராக வருகிறாராம் விஜய். இவருக்கு ஜோடி நித்யா மேனன்.

அடிப்படை வசதிகள் இல்லாத அந்த கிராமத்துக்கு ஒரு ஊர் தலைவர் போல இருந்து நல்லது செய்து வருகிறாராம்.

எனவே, அவர்களுக்காக ஒரு மருத்துவமனையும் கட்டி தருகிறார் விஜய்.

அந்த ஆஸ்பத்திரியின் டாக்டர் ஆகத்தான் எஸ்.ஜே.சூர்யா நடித்து வருகிறார். இவருடன் நடிகை திவ்யதர்ஷினியும் நடித்து வருகிறார்.

புதிய ஆஸ்பத்திரிக்கு செட் போட்டு அண்மையில் சென்னையிலேயே படமாக்கியிருக்கிறார் அட்லி.

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

‘பிரிலியண்ட் ஜாப் மேன்…’ இப்படி யாரை பாராட்டினார் விஜய்.?

‘பிரிலியண்ட் ஜாப் மேன்…’ இப்படி யாரை பாராட்டினார் விஜய்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rahman karthick narenநல்ல படைப்பை பாராட்ட ஒரு நல்ல மனம் வேண்டும். அது திரையுலகில் ஒரு சிலருக்கு மட்டுமே உண்டு.

அதில் நிச்சயம் இளைய தளபதி விஜய்யின் பெயர் இடம் பெற்றிருக்கும்.

இந்நிலையில் அண்மையில் வெளியான துருவங்கள் பதினாறு படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது.

இப்படத்தை விஜய் சமீபத்தில் பார்த்துள்ளார். எனவே படத்தை இயக்கி தயாரித்த கார்த்திக் நரேனை பாராட்டியுள்ளார்.

அப்போது பிரிலியண்ட் ஜாப் மேன். உங்கள் இயக்கம் அருமை என பாராட்டியுள்ளாராம்.

இதனை கார்த்திக் நரேன் தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Karthick Naren‏ @karthicknaren_M
“Brilliant job man. Really liked the way you treated the emotions. Best wishes for your future”.The caller was ‘Ilayathalapathy vijay’ sir

vijay appreciates Dhruvangal Pathinaaru director Karthick Naren

கோடை விடுமுறை மோதலுக்கு ரெடியாகும் பெரிய படங்கள்

கோடை விடுமுறை மோதலுக்கு ரெடியாகும் பெரிய படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bahubali 2கோடை விடுமுறை வந்தாலே சிலருக்கு ஊட்டி குளிர்தான் ஞாபகம் வரும்.

அட. அங்க எல்லாம் போக எங்கப்பா பைசா இருக்கு. நல்ல ஏசி தியேட்டரா போய் நல்ல படத்தை பாக்கனும் என்று நினைப்பவரா நீங்கள்..? (என் இனமடா நீ…) அப்படின்னா உங்களுக்கான செய்திதான் இது.

இந்த 2017 வருடம் கோடை விடுமுறைக்கு மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்கள் தற்போதே வரிசை கட்ட ஆரம்பித்துவிட்டன.

கிட்டதட்ட ஒரு டஜன் படங்கள் முடிவாகிவிட்டன. மேலும் சின்ன பட்ஜெட் படங்களும் வெளியாக உள்ளது.
இதுவரை உறுதியாகியுள்ள படங்கள்…

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள காற்று வெளியிடை

ராஜமௌலி இயக்கியுள்ள பாகுபலி 2

தனுஷ் முதன்முறையாக இயக்கி நடித்துள்ள பவர்பாண்டி

பி. வாசு இயக்கத்தில் லாரன்ஸ் நடித்துள்ள சிவலிங்கா

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள அன்பானவன் அசராதவன் அடங்காதவன்

அட்லி தயாரிப்பில் ஜீவா நடித்துள்ள சங்கிலி புங்கிலி கதவ தொறடி

சந்தானம் நடித்துள்ள சர்வர் சுந்தரம்

மாதவன், விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள விக்ரம் வேதா

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள துப்பறிவாளன்

List of Tamil movie releases on Summer 2017

More Articles
Follows