தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
திரைப்பட இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் இந்த கூட்டணி மட்டும் சரியாக அமைந்து விட்டால் அந்தப் படத்தின் வெற்றி பாதி நிர்ணயிக்கப்பட்ட ஒன்றாக அமைந்துவிடுகிறது.
இந்த கூட்டணியை நாம் பல படங்களில் பார்த்திருக்கலாம்.. உதாரணமாக மணிரத்னம் & இளையராஜா என்று இருந்த ஒரு காலகட்டம் பல வெற்றி படங்களை கொடுத்தது.
அதன் பிறகு மணிரத்னம் – ஏ ஆர் ரகுமான் கூட்டணி வந்தது. பின்னர் ஷங்கர் – ஏ ஆர் ரகுமான்..
அது போல பி வாசு – இளையராஜா.. பாலா – இளையராஜா.. கௌதம் மேனன் – ஹாரிஸ் ஜெயராஜ்.. வெற்றிமாறன் – யுவன் சங்கர் ராஜா.. வெற்றிமாறன் – ஜிவி பிரகாஷ் செல்வராகவன் – யுவன் சங்கர் ராஜா ஆகியோரது வெற்றி கூட்டணிகளை சொல்லலாம்.
இந்த வரிசையில் இணைந்திருப்பவர்கள் தான் அமீர் மற்றும் யுவன் சங்கர் ராஜா.
இவர்களது கூட்டணியில் உருவான பருத்தி வீரன், ராம் பல படங்கள் வெற்றி வாகை சூடி உள்ளன.
இந்த நிலையில் யுவனின் YSR ஃபிலிம்ஸ் மற்றும் இயக்குனர் அமீரின் அமீர் ஃபிலிம் கார்ப்பரேஷன் ஆகிய இரண்டு நிறுவனங்களின் இணைந்து ஒரு புதிய படத்தை தயாரித்துள்ளனர்.
இந்தப் படத்தில் அமீர் நாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தை நாங்கள் இணைந்து வெளியிடுகிறோம் என அமீர் தரப்பில் அறிக்கை வெளியாகி உள்ளது.
படத்தின் தலைப்பு மற்றும் மற்ற விவரங்களை விரைவில் வெளியிடுவோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
-@afcmovies and @thisisysr ‘s @YSRfilms join together to release a new film in which @directorameer plays a lead role!
Title Announcement Coming Soon…
#AmeerYuvanShankarRajaJoinHands
Yuvan release Ameer’s new film