சிக்கலில் சித்தப்பு.; பிச்சை எடுக்குற மாதிரிருந்த சரவணனுக்கு சோறு போட்டேன் – முதல் மனைவி சூர்யாஸ்ரீ

சிக்கலில் சித்தப்பு.; பிச்சை எடுக்குற மாதிரிருந்த சரவணனுக்கு சோறு போட்டேன் – முதல் மனைவி சூர்யாஸ்ரீ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1990 களில் வெளியான ‘பார்வதி என்னை பாரடி’ உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்திருந்தவர் சரவணன்.

அதன் பின்னர் படங்களே இல்லாமல் இருந்த அவருக்கு கார்த்தி நடித்த ‘பருத்திவீரன்’ பட பெரும் பெயரை பெற்று தந்தது. அதில் அவர் ஏற்ற சித்தப்பு கேரக்டர் இன்றளவும் பிரபலமாக உள்ளது.

பின்னர் சில படங்களில் நடித்து வந்த அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழக ரசிகர்களிடையே மேலும் பிரபலமானார்.

சமீபத்தில் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கிய நடித்த ‘நான் கடவுள் இல்லை’ என்ற படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

மேலும் கௌதம் கார்த்திக் – வெண்பா நடித்த ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தில் இவர்களின் தந்தையாக நடித்திருந்தார்.

இந்த நிலையில் அவர் தன் குடும்ப விவகாரம் குறித்து புகார் மனு அளித்திருந்தார் நடிகர் சரவணன்.

அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது..

“எனக்கு இரு மனைவிகள். முதல் மனைவியிடம் எனக்கு குழந்தை இல்லை என்பதால் 2015 இல் நான் மறுமணம் செய்தேன்.

சென்னை – போரூர் முகலிவாக்கத்தில் 2014 இல் லேக்வியூ அபார்ட்மென்டில் செண்பகராமன் என்பவரிடம் இரு பிளாட்களை வாங்கினேன். இதை எனக்கு முடித்துக் கொடுத்தவர் புரோக்கர் ராமமூர்த்தி.

4 பிளாக்குகளில் தலா 4 வீடுகள் இருந்தன. நான் இரு வீடுகளை வாங்கியதால் எனக்கு 2 கார் பார்க்கிங் கொடுக்கப்பட்டது.

இரு வீட்டின் யூடிஎஸ் எனக்கு 700 அல்லது 800 சதுர அடி வரும்.

இரண்டாவது மனைவி வந்த பிறகு முதல் மனைவியுடன் எனக்கு தகராறு ஏற்பட்டதால் இந்த வீட்டுக்கே நான் வருவதை நிறுத்திக் கொண்டேன்.

நான் இங்கு இல்லாததை பயன்படுத்தி ராமமூர்ததி என்பவர் கார் பார்க்கிங்கில் ஒரு கடையை கட்டி அதற்கு மின் இணைப்புடன் அந்த இடத்திற்கு வரி கட்டி விட்டதாகவும் கூறியிருந்தார். இப்படியாக என்னை ஏமாற்றி வந்தார்.

ராமமூர்த்தியின் மனைவி என் இடத்தில் இருந்து கொண்டு என்னை வெட்டுவேன் குத்துவேன் என்கிறார். ராமமூர்த்தி & அவரது மனைவி ஜெயமணி ஆகியோர் பெயரில் புகார் கொடுத்துள்ளேன்.

இந்த பிரச்சினை குறித்து அமைச்சர் தாமோ அன்பரசன் அவரிடம் மனு கொடுத்தேன்.” என்றார்.

நடிகர் சரவணனின் மனைவி சூர்யாஸ்ரீ, ராமமூர்த்தி, மனைவி ஜெயமணி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில்…

“நான் சரவணனின் மனைவி சூர்யாஸ்ரீ. அவர் சொல்வதில் எதுவுமே உண்மை இல்லை.

என்னை காதலித்து கல்யாணம் செய்து ஏமாற்றிவிட்டார்,

ஒரு பெண்ணை வீட்டோட வைத்துக் கொண்டு என்னை டென்ஷன் செய்கிறார்.

எனக்கு விவாகரத்தே கொடுக்கவில்லை சரவணன். அப்புறம் எப்படி அவருக்கு 2வது மனைவி வருவாங்க.

அவர் அந்த பெண்ணை கீப் வைத்துக் கொண்டிருக்கிறார். அவர் சொன்ன முகலிவாக்கம் இடத்தில் அவருக்கு எந்த பங்கும் இல்லை.

அந்த வீட்டை நான் காசு கொடுத்து வாங்கினேன். நான் சம்பாதித்த காசில் அவர் பெயரில் நான் வாங்கினேன். அதுதான் நான் செய்த பெரிய தவறு.

ரூ. 12 லட்சம் ரூபாய் நான் கட்டினேன். மீதமுள்ள 36 லட்சம் பணத்திற்கு லோன் போட்டுள்ளேன். அதற்கு EMI நான்தான் கட்டி வருகிறேன்.

‘பருத்தி வீரன்’ படத்திற்கு பிறகு சினிமா சான்ஸ் இல்லாமல் பிச்சை எடுக்கும் நிலையில் இருந்தார். நான்தான் அவருக்கு சோறு போட்டேன். இதை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட அவர் கூறியிருக்கிறார்.”

இவ்வாறு சரவணன் மனைவி சூர்யாஸ்ரீ தெரிவித்துள்ளார்.

I provided food to Saravanan who pretended to beg – First wife Suryashri

திருமாவளவன் பாராட்டு எங்கள் தேசிய விருது.; ‘இராவண கோட்டம்’ படக்குழு

திருமாவளவன் பாராட்டு எங்கள் தேசிய விருது.; ‘இராவண கோட்டம்’ படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் சாந்தனு, ஆனந்தி, சஞ்சய், இளவரசு, பிரபு, தீபா உள்ளிட்டோர் நடிக்க நேற்று வெளியானது ‘இராவண கோட்டம்’.

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருந்த இந்த படத்தை தொழிலதிபர் கண்ணன் ரவி என்பவர் தயாரித்திருந்தார்.

இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே மிகவும் எதிர்பார்ப்புக்குள்ளான படமாக கருதப்பட்டது.

அதற்கு முக்கிய காரணம் ராமநாதபுரம் மாவட்டத்தின் தண்ணீர் பஞ்சத்தையும் சீம கருவேல மரங்களால் அழிக்கப்படும் நில வளத்தையும் இந்த படம் கதைக்களமாக கொண்டிருந்தது.

மேலும் இந்த படத்தில் மேல் சாதி கீழ் சாதி பிரிவினையும் காட்டப்பட்டிருந்தது.

இந்த படத்தை பார்த்த பலரும் பலவிதமான கருத்துக்களை கூறி வரும் நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் இந்த படத்தை நேற்று மாலை படக்குழுவினருடன் பார்த்துள்ளார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.

தொல் திருமாவளவன் இந்த படத்தை பாராட்டியது தங்களுக்கு கிடைத்த தேசிய விருதாகவே கருதுகிறோம் என படக்குழுவினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராடி வரும் சமூக நீதி காவலர் ஐயா தொல் திருமாவளவன் அவர்களின் வாழ்த்தை எங்களுக்கு கிடைத்த தேசிய விருதாகவே கருதுகிறோம்.

At a special screening today in chennai
#TholThirumaSupportsRaavanaKottam
#RaavanaKottam

Thirumavalavan appreciation is like national award-‘Ravana Kottam’ film crew

ரஜினி நடிக்கும் ‘மொய்தீன் பாய்’ கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தவர் யார் தெரியுமா.?

ரஜினி நடிக்கும் ‘மொய்தீன் பாய்’ கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தவர் யார் தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் லைக்கா தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘லால் சலாம்’.

இதில் விஷ்ணு விஷால் – விக்ராந்த் இருவரும் இணைந்து நடித்து வருகின்றனர். ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் ரஜினிகாந்த். அவரது காட்சிகள் கிட்டத்தட்ட 25 நிமிடங்கள் மட்டுமே இடம் பெறுகிறதாம்.

இதனையடுத்து ரஜினி நடிக்க உள்ள கேரக்டர் பெயர் சமீபத்தில் வெளியானது.

மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் ரஜினி நடிக்க அந்த இஸ்லாமிய தோற்றம் சமீபத்தில் வெளியானது. இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

ரஜினியின் லுக் ரசிகர்களை கவரவில்லை என்பதே பெரும்பாலான கருத்தாக உள்ளது.

இந்த நிலையில் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் முதலில் நடிக்கவிருந்தவர் மம்மூட்டி தானாம்.

தன் மகள் ஐஸ்வர்யாவிடம் ரஜினி கதை கேட்டபோது அவருக்கு மொய்தீன் பாய் கேரக்டர் பிடித்திருந்ததால் தானே நடிப்பதாக ஒப்புக்கொண்டாரம் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

Do you know who was the first to play the character of ‘Moideen Bhai’ played by Rajini?

‘இராவண கோட்டம்’ பட இயக்குநர் விக்ரம் சுகுமார் நடித்த படங்களும் அவரது பின்னணியும்.; ஒரு ப்ளாஷ்பேக்

‘இராவண கோட்டம்’ பட இயக்குநர் விக்ரம் சுகுமார் நடித்த படங்களும் அவரது பின்னணியும்.; ஒரு ப்ளாஷ்பேக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்ரம் சுகுமாரன் தமிழ்நாட்டின், இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்தவர். நடிகராகும் ஆசையில் சென்னைக்கு வந்தார்.

பாலு மகேந்திராவிடம் உதவியாளராக இணைந்தார். 1999இல் தொடங்கி 2000 வரை வெளியான கதை நேரம் வரிசையில் வெளியான 56 குறும்படங்கள், ஜூலி கணபதி திரைப்படம் போன்றவற்றில் பாலுமகேந்திராவிடம் பணிபுரிந்தார்.

வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன் படத்தில் நடிகராக அறிமுகமானார். பின்னர் கொடிவீரன் படத்திலும் நடித்தார்.

மதுரையைக் களமாக கொண்ட ஆடுகளம் படத்திற்கு உரையாடல் எழுதினார். மதயானைக் கூட்டம் படத்தின் வழியாக இயக்குநராக அறிமுகமானார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தன் இரண்டாவது படமாக இராவண கோட்டம் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படம் நேற்று மே 12-ல் வெளியாகி உலகமெங்கும் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.

பிள்ளைகளை பெற்றவர்கள் தான் அவர்களுக்கு பெயர் சூட்ட முடியும் மற்றவர்கள் அல்ல என்ற பழமொழி இவருக்கு நூறு சதவிகிதம் பொருந்தும்.

தன் மனதில் தோன்றிய கதைகளுக்கு இவர் எண்ணத்தில் வரும் பெயர்களை பாருங்கள் முதல் படமான ‘மதயானை கூட்டம்” இந்த டைட்டில் அனைவரையும் கவர்ந்தது.

அதுபோலவே தன் இரண்டாவது படைப்பிற்கும் “இராவணகோட்டம்’
பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கும் பெயர்கள்.

வெறும் பெயர்களில் மட்டுமே இவர் பெயர் எடுக்கவில்லை. ஏனென்றால் பயின்ற இடம் பாலு மகேந்திரா என்ற பாட சாலை.
அப்படி ஒரு பாட சாலையில் இருந்து வந்த இந்த விக்ரம் சுகுமார் தமிழ் சினிமாவில் சோடை போவாரா, நிச்சயம் கிடையாது என்பதை தன் இரண்டு பிரம்மாண்ட படைப்புகள் மூலம் நிரூபித்திருக்கிறார்.

இவர் இயக்கும் படைப்புகள் தான் ஒரு சில வருட இடைவெளிகள் விட்டு வருமே தவிர இவரது கதைகளை திரைப்படமாக பார்க்கும் பொழுது நிச்சயமாக பார்க்கும் ரசிகர்களுக்கு அந்த இடைவெளி மறந்து போவது நிஜம்.

நம் தமிழ் மண் வாசம் மாறாத படம் இயக்கும் ஒரு சில இயக்குனர்களில் விக்ரம் சுகுமார் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நிரந்தர இடம் பிடிப்பார் என்பது நிச்சயம்.

நீண்ட நாட்கள் நடித்தும் இவருக்கு சரியாக நடிப்பு வரவில்லை என்று ரசிகர்களால் பேசப்பட்ட பல நடிகர்களை தன் படங்களில் நல்ல கதாபாத்திரம் கொடுத்து நடிக்க வைப்பதில் கைதேர்ந்தவர் இந்த விக்ரம் சுகுமார்.

உதாரணம் நடிகர் சாந்தனு அவர் நடித்த படங்களிலேயே இந்த “இராவணக்கோட்டம்” படம் ஒரு கேடயம், அதற்குக் காரணம் இயக்குனர் விக்ரம் சுகுமார்.

ஒரு திரைப்படம் என்றால் அதில் கதைக்களமாக நாம் சொல்ல வந்த விஷயத்தை படத்தின் முதலில் ஆரம்பித்து இறுதிவரை சொல்லியே ஆக வேண்டும் என்று கவனமாக இருப்பார்.

எப்பேர்ப்பட்ட பைக் ரேஸ் வீரராக ஆக இருந்தாலும், குத்து சண்டை வீரராக இருந்தாலும், கபடி வீரராக இருந்தாலும், ஏதாவது ஒரு முறை அடி சறுக்குவது நிச்சயம். அதுபோல சின்ன சின்ன சறுக்கல்களை சந்தித்த இயக்குனர் விக்ரம் சுகுமார் தளராத மனமும், திடமான உறுதியும் கொண்டு தான் தமிழ் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று இன்றுவரை மட்டுமல்ல இன்னும் பல வருடங்கள் நல்ல கதைகளை கொடுத்து நிச்சயமாக முன்னணி இயக்குனர்கள் வரிசையில் வந்து அமர்வார் இந்த விக்ரம் சுகுமார்.

‘Raavana Kottam’ director Vikram Sukumar’s films and background story

இளையராஜா – யுவன் ஷங்கர் ராஜாவை தூக்கி ஜெயில்ல போடுங்க; நாடு நல்ல இருக்கும்

இளையராஜா – யுவன் ஷங்கர் ராஜாவை தூக்கி ஜெயில்ல போடுங்க; நாடு நல்ல இருக்கும்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘கஸ்டடி’.

இப்படத்தில் நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி, அரவிந்த்சாமி, சரத்குமார், பிரியாமணி, பிரேம்ஜி அமரன், பிரேமி விஷ்வநாத், வென்னேலா கிஷோர் உட்பட பலர் நடித்துள்ளனர்.

மேலும், ‘கஸ்டடி’ படத்தில் ஜீவா, ராம்கி இருவரும் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்கள்.

ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் தயாரித்துள்ள, இப்படத்துக்கு இளையராஜா – யுவன்சங்கர் ராஜா இணைந்து இசை அமைத்துள்ளனர்.

‘கஸ்டடி’ திரைப்படம் மே 12-ஆம் தேதி இன்று முதல் தமிழ், தெலுங்கில் மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது.

‘கஸ்டடி’ படம் மக்களிடையே எதிர்மறையான விமர்சனங்களை பெற்றுவருகிறது.

இந்நிலையில், ‘கஸ்டடி’ படம் பார்த்து வெளியே வந்து பொது விமர்சனம் (Pubilc review) போது ஒரு நபர் “இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா, வெங்கட் பிரபு, பிரேம்ஜி இவர்களை தூக்கி ஜெயில்ல போடுங்க; நாடு நல்ல இருக்கும்” என கூறினார்.

இதனால் இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளார்கள்.

இளையராஜா – யுவன் ஷங்கர் ராஜாவை தூக்கி ஜெயில்ல போடுங்க; நாடு நல்ல இருக்கும் | Custody Public Review

Ilayaraja – Put Yuvan Shankar in Jail says custody film review by pubilc

‘ஹிட் லிஸ்ட்-டில் இணையும் சமுத்திரக்கனி & KGF பிரபல நடிகர்

‘ஹிட் லிஸ்ட்-டில் இணையும் சமுத்திரக்கனி & KGF பிரபல நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பழம்பெரும் இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா ‘ஹிட்லிஸ்ட்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

இதில், கவுதம் மேனன், சரத்குமார் மற்றும் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

சூரியக்கதிர் மற்றும் கார்த்திகேயன் இயக்கும் இப்படம் ஆக்‌ஷன் திரில்லர் படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

இயக்குனர் கார்த்திகேயன் கூறுகையில்,

“கௌதம் மேனன் இப்படத்தில் நெகட்டிவ் ரோலில் நடிக்கிறார். க்ளைமாக்ஸில் ஆக்‌ஷன் காட்சிகள் இருக்கும் அவர், முதல்முறையாக சில சண்டைக்காட்சிகளை நிகழ்த்தவுள்ளார். அவர் ஏற்கனவே தனது பகுதிகளை படமாக்கிவிட்டார்.”

கேஜிஎஃப் புகழ் கருடா ராமச்சந்திராவும் எதிரிகளில் ஒருவராக இருப்பார்.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக சமுத்திரக்கனி இருப்பதாகவும், விரைவில் அவரது பகுதிகளின் படப்பிடிப்பில் இருப்பதாகவும் கார்த்திகேயன் வெளிப்படுத்துகிறார்.

“அவருக்கு மூன்று நாட்கள் படப்பிடிப்பு உள்ளது, மேலும் அவரது கதாபாத்திரம் கிளைமாக்ஸிலும் தோன்றும்,” என்று அவர் கூறுகிறார்.

படத்தின் முக்கிய பகுதிகள் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் படமாக்கப்பட்டது.

“கடந்த அக்டோபரில் படத்தின் படப்பிடிப்பை தொடங்கினோம்.

தற்போது, ​​படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் உள்ளது” என கூறினார் கார்த்திகேயன்.

Samuthirakani to play key role in Hitlist film

More Articles
Follows