அல்லு அர்ஜுன் – ராஷ்மிகா இணையும் ‘புஷ்பா 2’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

அல்லு அர்ஜுன் – ராஷ்மிகா இணையும் ‘புஷ்பா 2’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2021ம் ஆண்டில் டிசம்பர் மாதத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘புஷ்பா’.

தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகி பான் இந்தியா படமாக வெளியானது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத்தைத் தயாரித்து இருந்தது.

ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்திருந்தார். இவர்களுடன் பஹத் பாசில் கன்னட நடிகர் தனஞ்செயா, சுனில், அஜய் கோஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் இடம்பெற்ற ‘ஊ.. சொல்றியா மாமா… ஊஹூம் சொல்றியா மாமா…. & ஹே.. மாமா..ஹே சாமி.. ஆகிய பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது.

அதுவும் ஆன்ட்ரியா பாடிய பாடலுக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைப்பில் சமந்தா ஆடிய “ஊ சொல்றீயா மாமா…” பாடலுக்கு தமிழக தியேட்டர்களில் ரசிகர்கள் ஆட்டம் போட்டது குறிப்பிடத்தக்கது.

செம்மரக் கடத்தலை மையப்படுத்தி இந்த படம் உருவானது.

மாபெரும் வெற்றி பெற்ற இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்தனர்.

இந்த நிலையில் ‘புஷ்பா’ படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல்வாரம் தொடங்கும் என கூறப்படுகிறது.

சீனா, ஜப்பான், ஹாங்காங் உள்ளிட்ட வெளிநாடுகளை கதையின் பின்னணியாக கொண்டு ‘புஷ்பா 2’ உருவாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Allu Arjun – Rashmika Join ‘Pushpa 2’ Latest Update

PRINCE RELEASE POSTPONED : ஈவு இரக்கமில்லாத டார்ச்சர்.. PAN WORLD STAR ஆகிறாரா சிவகார்த்திகேயன்.? MUST WATCH VIDEO

PRINCE RELEASE POSTPONED : ஈவு இரக்கமில்லாத டார்ச்சர்.. PAN WORLD STAR ஆகிறாரா சிவகார்த்திகேயன்.? MUST WATCH VIDEO

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் ரிலீசான டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் மூலம் 100 கோடி ரூபாய் பாக்ஸ் ஆஃபீஸ் கிளப்பில் இணைந்தன.

தற்போது தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள படம் ‘பிரின்ஸ்’.

சிவகார்த்திகேயனை கோலிவுட்டின் பிரின்ஸ் என ரசிகர்கள் அன்புடன் அழைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் முதல் படமும் இதுதான்.

உக்ரைன் நடிகை மரியா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர்.

தமன் இசையமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

எனவே படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடத்தி போஸ்ட் புரொடக்ஷன் பணிகளையும் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

ஆகஸ்ட் 30ல் விநாயகர் சதூர்த்திக்கு இப்படம் வெளியாகும் என முன்பு அறிவித்தனர்.

இந்த நிலையில் பிரின்ஸ் படத்தை இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட உள்ளதாக அனுதீப் சிவகார்த்திகேயன் சத்யராஜ் நடிகை மரியா உள்ளிட்டோர் இணைந்து ஒரு புதிய வீடியோ உருவாக்கி வெளியிட்டுள்ளனர்.

அந்த சிறப்பான கல்கலப்பான வீடியோவை பார்த்து ரசிக்க…

Sivakarthikeyans Prince will be released on Diwali 2022

Celebration gets bigger and brighter #PrinceForDiwali ?


https://www.youtube.com/watch?v=GoA-0tHI_4k&feature=youtu.be

Sivakarthikeyan’s Prince Release date announcement video

“ஜோதி” திரைப்படத்தின் முதல் பாடல் “போவதெங்கே” கல்லூரி மாணவர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது

“ஜோதி” திரைப்படத்தின் முதல் பாடல் “போவதெங்கே” கல்லூரி மாணவர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் 11 மாநிலங்களில் 43 இடத்தில் நடந்த மனதை உலுக்கும் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவான “ஜோதி” திரைப்படத்தின் முதல் பாடல் “போவதெங்கே” நேற்று SRM கல்லூரியில் ஆயிரம் மாணவ மருத்துவர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

தயாரிப்பாளர் “SP ராஜா சேதுபதி”, இயக்குனர் “AV கிருஷ்ண பரமாத்மா”, (மண்டேலா) படத்தின் நாயகி “ஷீலா ராஜ்குமார்”, இசையமைப்பாளர் “ஹர்ஷவர்தன் ரமேஷ்வர்”, பாடலாசிரியர் “கார்த்திக் நேத்தா”, துணை நடிகர் “ஹரி க்ரிஷ்” ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சி அனைத்து மாணவ மருத்துவகள் முன்னிலையில் தயாரிப்பாளர் வீடியோ எடுக்க, “Let’s launch Povathengea from JOTHI” என்று மாணவர்கள் கரகோஷமிட படத்தின் முதல் பாடல் காட்சி திரையிடப்பட்டது.

இப்பாடலின் இறுதியில் வரும் கடைசி மூன்று shots ஒரு ஹைக்கூ கவிதை போன்று இருந்ததாகவும், படத்தை பார்க்க மிகுந்த ஆர்வத்தை தூண்டுகிறது என மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.

அதன்பின் மாணவர்களின் வேண்டுகோளை ஏற்று படத்தின் முதல் பத்து நிமிட காட்சியை மாணவர்களுக்கு திரையிடப்பட்டது.

காட்சி முழுவதும் அதிர்ச்சியில் உரைந்திருந்த அரங்கு “ஜோதி ஜூலை வெளியீடு” என்று நிறைவு பெற்றவுடன் விசில் சத்தம் அரங்கு முழுவதும் நிறைந்திருந்தது. இந்த ஆரவாரம் போன்றே மக்கள் மத்தியிலும் நிகழும் என படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

இப் படத்தை பற்றி தயாரிப்பாளர் “SP ராஜா சேதுபதி” கூறியதாவது.

சதுரங்க வேட்டை படத்தொகுப்பாளராகிய நான் இந்த படத்தை தயாரித்தற்கு முக்கிய காரணமே சென்னை உயர்நீதிமன்ற வழக்கு ஒன்றில் சதுரங்க வேட்டை படத்தை மேற்கோள் காட்டி தீர்ப்பு வழங்கப்பட்டது,

அதுபோலவே ஜோதி படத்தின் கரு சாமானிய பெண்களுக்கு எதிராக நடத்தப்பட்ட மனதை உலுக்கும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டிருந்ததால் சமூக அக்கறை உள்ள நல்ல திரைப்படங்களை மக்கள் எப்போதும் கைவிட்டது இல்லை.

இதன் கருவும், நடந்த சம்பவமும், இதன் பின்னணியும் என் தூக்கத்தை தொலைத்தது. இதனால் ஜோதி திரைப்படத்தை தயாரித்திருக்கிறேன். என்று கூறினார்.

இப்படத்தை பற்றி இயக்குனர் “AV கிருஷ்ண பரமாத்மா” கூறியதாவது.

சமூக அக்கறைகொண்ட கதை கருவை விறுவிறுப்பான திரைக்கதையுடனும், எதார்த்தமான வசனங்களுடனும் எடுக்கப்பட்ட “ஜோதி ” திரைப்படம் எமோஷனல் கலந்த கிரைம் திரில்லராக வந்திருக்கிறது.

இப்படத்தின் முதல் பாடலாகிய போவதெங்கே பாடலை மாணவ மருத்துவர்கள் முன்னிலையில் வெளியிடுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அனைவரும் குடும்பத்துடன் வந்து திரையில்காணும்படி கேட்டுக்கொள்கிறேன் என பேசினார்.

இப்படத்தைப் பற்றி பாடலாசிரியர் “கார்த்திக் நேத்தா” கூறியதாவது.

இப்படத்திற்கும் எனக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு, எனது சொந்த வாழ்வின் நிகழ்வை இப்படம் பிரதிபலிப்பதால் அனைத்து பாடல் வரிகளும் மிகவும் ஆழமாகவும், அற்தமுள்ளதாகவும் அமைக்க முடிந்தது. படத்தில் அமைக்கப்பட்ட காட்சிகள் என் வரிகளுக்கு உயிரோட்டமாக அமைந்துள்ளது.

முதல் பத்து நிமிட காட்சியை கண்டு மிரண்டு விட்டேன். இப்படத்தையும்,பாடல்களையும் மக்கள் பெரிதும் வரவேற்பார்கள் என்று நம்புகிறேன் என கூறினார்.

இப்படத்தைப் பற்றி இசையமைப்பாளர் “ஹர்ஷவர்தன் ரமேஷ்வர்” கூறியதாவது.

அர்ஜுன் ரெட்டி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் போலவே இந்த படமும் பெரிய ஹிட்டாகும். இந்த படத்துல நாலு பாடல்கள் இருக்கு, ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு டைப்ல இருக்கும், அதுல முதல் பாடலா இருக்கற போவதெங்கே சாங் “கார்த்திக்” பாடியிருக்கிறாரு.

இந்த படத்துக்கு background music அமைக்கும் போது
எல்லாருக்கும் அழுதுட்டாங்க. அதன் தாக்கம் ரொம்ப நாள் இருந்திச்சுனு சொன்னாங்க.என கூறினார்.

இப்படத்தை பற்றி துணை நடிகர் “ஹரி க்ரிஷ்” கூறியதாவது.

ஜோதி படத்துல முக்கியமான கேரக்டர் ஒன்னு பண்ணியிருக்கேன். அது ரொம்ப நல்ல கேரக்டர்.படம் ரிலீஸ் க்கு அப்புறம் ரொம்ப பேசப்படும் கேரக்டரா இருக்கும். அது எந்தளவுக்கு நல்ல கேரக்டர்னா நடிச்சிக்கிட்டு இருக்கும்போது என்னோட கால் ஒடைஞ்சிருச்சி, ஒரு மாசம் ரெஸ்ட் எடுக்கனும்னு டாக்டர் சொல்லிட்டாரு, பட் நா ரெஸ்டே எடுக்காம அடுத்த நாளே சூட்டிங்கு வந்துட்டேன்.அந்த கேரக்டர்
உங்க எல்லாருக்கும் பிடிச்ச கேரக்டராவும் இருக்கும் என பேசினார்.

இப்படத்தைப் பற்றி நடிகை “ஷீலா ராஜ்குமார்” கூறியதாவது

முழு ஜோதி படத்தையும் நா பாத்தது இல்ல, இப்பதான் ஃபஸ்ட் டைமா படத்தோட ஃபஸ்ட் பத்து நிமிஷம் பாக்குறேன்.

ஸ்கிரிப்ட்ல என்ன இருந்ததோ அதைவிட விஷூவலா பாக்கறப்ப ரொம்ப நல்லா வந்திருக்கு, உடனே முழு படமும் பாக்கணும் போல இருக்கு, AV கிருஷ்ண பரமாத்மா ரொம்ப நல்லா இயக்கிய இருக்காரு.ஜோதி படத்துல எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் மிக்க நன்றி என கூறினார்.

The first song of the movie “Jothi” “Povathenge” was released in the presence of college students

2 வருட உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்! – உற்சாகத்தில் ’O2’ ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன்

2 வருட உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்! – உற்சாகத்தில் ’O2’ ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெங்கட் பிரபுவின் ’மன்மதலீலை’ படத்தின் படப்பிடிப்பு முழுவதையும் 18 நாட்களில் முடித்து கோலிவுட்டை வியப்பில் ஆழ்த்திய ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன், தனது அடுத்த படமான ’O2’ மூலம் கோலிவுட் மட்டும் இன்றி ஒட்டு மொத்த இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

அறிமுக இயக்குநர் ஜி.எஸ்.விக்னேஷ் இயக்கத்தில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் நயன்தாரா முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள ’O2’ திரைப்படம் இன்று டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருப்பதோடு, ஊடகங்களின் பாராட்டையும் பெற்றுள்ளது.

மண்சரிவில் சிக்கிக்கொள்ளும் பேருந்து ஒன்று முழுமையாக மண்ணுக்குள் புதைந்துவிட, அதனுள் இருக்கும் பயணிகள் உயிருடன் மீட்கப்பட்டார்களா இல்லையா, என்பது தான் ’O2’ படத்தின் கதை. மிக வித்தியாசமான அதே சமயம் சவாலான இந்த கதைக்களத்திற்கு மிக நேர்த்தியாக திரைக்கதை மற்றும் காட்சிகளை இயக்குநர் ஜி.எஸ்.விக்னேஷ் அமைத்திருந்தாலும், அவற்றை திரையில் மிக தத்ரூபமாக கொண்டு வந்து படம் பார்ப்பவர்களையும் பதற வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன்.

படத்தை பார்த்த பத்திரிகையாளர்களும், ரசிகர்களும் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ஆச்சரியத்தோடு பார்ப்பதோடு, படத்தில் நடக்கும் சம்பவங்கள் தங்களுக்கு நடப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது, என்று சொல்வதோடு ஒளிப்பதிவாளரின் உழைப்பும், அவரது திறமையும் தான் அத்தகைய உணர்வுக்கு மிக முக்கிய காரணம் என்றும் பாராட்டி வருகிறார்கள்.

’O2’ படத்தின் முதுகெலும்பாக இருக்கும் ஒளிப்பதிவாளர் தமிழ் அகழனிடம் படத்தில் பணியாற்றிய அனுபவம் பற்றி கேட்ட போது, ”இயக்குநர் ஜி.எஸ்.விக்னேஷ் என் நண்பர். அவர் இந்த கதையை என்னிடம் 2019 ஆம் ஆண்டு சொன்ன போதே நான் கதையோடு பயணிக்க தொடங்கி விட்டேன். ரசிகர்கள் நம்பும் வகையில் காட்சிகள் இருக்க வேண்டும், அப்போது தான் படம் ரசிகர்களிடம் சென்றடையும் என்பதை முன்பே முடிவு செய்ததோடு, அதை எப்படி சாத்தியமாக்குவது என்பதை சிந்திக்க தொடங்கிவிட்டேன். பிறகு படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதை அறிந்தவுடன், எனது பணியை தீவிரப்படுத்த தொடங்கினேன்.

பேருந்து மற்றும் மண் சரிவு காட்சிகள் செட் அமைக்கப்பட்டு அதன் மூலம் படமாக்கப்பட்டாலும், படம் பார்ப்பவர்களுக்கு செட் என்பது தெரிய கூடாது மற்றும் பேருந்தில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களின் பதற்றம் ரசிகர்களும் வர வேண்டும், இந்த இரண்டையும் சரியாக செய்துவிட்டால் படம் நிச்சயம் ரசிகர்கள் மனதில் நின்றுவிடும் என்பதால், அதற்கான பணியில் தீவிரம் காட்டினேன். படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாக சுமார் 2 வருடங்கள் இப்படத்திற்காக நான் பணியாற்ற தொடங்கி விட்டேன். ஒவ்வொரு காட்சிகளையும் இப்படி தான் படமாக்க வேண்டும் என்று முடிவு செய்து அதை சரியான முறையில் திட்டமிட்டதும் சிறப்பான ஒளிப்பதிவுக்கு ஒரு காரணம்.

நயன்தாரா மேடம் போன்ற ஒரு பெரிய நடிகையை வைத்துக்கொண்டு பணியாற்றும் போது தேவையில்லாமல் அவர்களுடைய நேரத்தை வீணடிக்க கூடாது. அதே சமயம், தயாரிப்பாளர் திட்டமிட்ட நாட்களுக்குள் படத்தை முடிக்க வேண்டும், அதே சமயம் படமும் தரமாக இருக்க வேண்டும், என்ற பல சவால்கள் இருந்தது. அவற்றை சரியான முறையில் சமாளிக்க படப்பிடிப்புக்கு முன்பு 2 வருடங்களாக நான் மேற்கொண்ட பணிகள் அவற்றை சரியாக செய்ய எனக்கு பெரிதும் கைகொடுத்தது.

படம் முழுவதும் கேமராவை தோளில் வைத்து தான் காட்சிகளை படமாக்கினேன். இது ரொம்ப சிரமமான விஷயம் என்றாலும் படத்திற்கு அது தான் மிக முக்கியம். உயிருக்காக போராடும் ஒரு கதாப்பாத்திரத்தின் உணர்வுகளை ரசிகர்களிடம் கடத்த வேண்டும், அதேபோல் ஒரு பயணியின் பதற்றமான சூழ்நிலை மற்றும் பயம் போன்ற உணர்வுகளை மிக சரியாக ரசிகர்களிடம் கடத்த வேண்டும் என்பதால், நானும் பேருந்தில் சிக்கிக்கொள்ளும் ஒரு கதாப்பாத்திரமாகவே பணியாற்றினேன்.

படத்தை பார்த்த தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு சார், படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது. நிச்சயம் இந்த படம் எங்கள் நிறுவனத்திற்கு பெருமை சேர்க்கும் படமாக இருக்கும், என்று சொன்னது தான் எனக்கு கிடைத்த முதல் பாராட்டு. அதிலும் குறிப்பாக நயன்தாரா மேடம் படப்பிடிப்பின் போது இந்த கதைக்களத்தையும் அதை படமாக்குவதில் இருக்கும் சிக்கல்களையும் மிக சரியாக புரிந்துக்கொண்டு ஒத்துழைப்பது கொடுத்ததும், ஒவ்வொரு காட்சி நடித்து முடித்ததும் என்னிடம் ”ஒகேவா தமிழ்..” என்று கேட்டது என்னால் மறக்க முடியாது. எனது இந்த சிறப்பான பணிக்கு அவர்களுடைய ஒத்துழைப்பும் ஒரு காரணம்.” என்றார்.

மண்ணுக்குள் புதைந்த ஒரு பேருந்துக்குள் எப்படிப்பட்ட மாற்றங்கள் நிகழும் என்பதை லைட்டிங் மூலமாகவே வெளிப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் தமிழ் அகழன், பேருந்துக்குள் சிக்கிக்கொள்ளும் கதாப்பாத்திரங்கள் நேரம் நேரம் ஆக ஆக, அவர்களுடைய முக தோற்றம், உடல் மொழி போன்றவற்றையும் மிக கச்சிதமாக படமாக்கியிருப்பதால் தான் ’O2’ திரைப்படம் ரசிகர்களை எளிதில் சென்றடைந்திருக்கிறது.

அதுமட்டும் இன்றில், ஒரு பேருந்தில் நடக்கும் கதையை ரசிகர்களுக்கு சலிப்பு ஏற்படாத வகையில் ஒவ்வொரு காட்சிகளின் கோணத்தையும் வித்தியாசமான முறையில் காட்டியிருப்பதும் இப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம்.

18 நாட்களில் ’மன்மதலீலை’ படத்தின் முழு படப்பிடிப்பையும் முடித்து பாராட்டு பெற்ற ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன், ’O2’ படத்தின் மூலம் ஒளிப்பதிவில் மிகப்பெரிய உச்சத்தை தொட்டிருக்கிறார் என்றால் அது மிகை இல்லை. நிச்சயம் இந்த படத்தின் மூலம் பல அங்கீகாரங்களை மட்டும் இன்றி பல விருதுகளையும் ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன் பெறப்போவது உறுதி என்று ஊகடங்கள் பாராட்டி வருவதால், அவர் சந்தோஷமடைந்துள்ளார்.

“It’s heartwarming to receive all the appreciation for my two years of hard-working” – Cinematographer Thamizh A Azhagan.

தளபதி விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு ரூபாய். 9,25,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!!

தளபதி விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு ரூபாய். 9,25,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

“தளபதி விஜய்” அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி மாநில தலைமை
தளபதி விஜய் மக்கள் இயக்கம் மற்றும் அனைத்து தொகுதி தலைவர்கள், இளைஞர் அணி
தலைவர்கள், தொண்டரணி தலைவர்கள், மாணவரணி தலைவர்கள், கிளை மக்கள் இயக்க
தலைவர்கள், நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து 18.06.2022 (சனிக்கிழமை)
மாலை 6.00.மணியளவில் மறைமலை அடிகள் சாலை (சுதேசி மில் அருகில்) மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சுமார் ரூபாய்.9,25,000/-(ஒன்பது லட்சத்து இருபத்தைந்தாயிரம்) மதிப்பிளான செலவில் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி.N.ஆனந்து அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் 1000 நபர்களுக்கு தலா 5 கிலோ வீதம் அரிசியும், 925 பெண்களுக்கு
புடவையும், 225 குடும்பங்களுக்கு மளிகை பொருட்களும், 15 நபர்களுக்கு காது கேட்டும் கருவி,700 நபர்களுக்கு சர்க்கரையும், 200நபர்களுக்கு கடிகாரமும், 150 நபர்களுக்கு டிபன் பாக்ஸ்,5 நபர்களுக்கு ஆடு, 1 ஏழை மாணவருக்கு லேப்டாப், 25 நபர்களுக்கு ஐயன் பாக்ஸ்,
70 நபர்களுக்கு பிளாஸ்டிக் வாலி, 70 நபர்களுக்கு பிளாஸ்டிக் குடம், விளையாட்டு பொருட்கள் கிரிக்கெட் செட் 1 குழவிற்கும், 3 நபர்களுக்கு கேரம் போர்டு, 25 நபர்களுக்கு சேர்,100 மாணவ மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம், ஜாமன்டிரி பாக்ஸ் மற்றும் உப்பளம் தொகுதி அம்பேத்கர் சாலையில் உள்ள திரு. முத்துஜான் என்கிற நபருக்கு மருத்துவ உதவியாக ரூபாய்.10,000/-த்தையும், புதுச்சேரி மாநில செயலாளர் திரு.G.சரவணன் மற்றும் புதுச்சேரி மாநில தளபதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் முன்னிலையில் அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்ஸி. N.ஆனந்து அவர்கள் வழங்கினார்.

மேலும் இவ்விழாவில் மாநில நிர்வாகிகள் பொன்முடி, புதியவன், மோரீஸ், நிரேஷ்,
சார்லஸ், அமீன் மற்றும் தொகுதி தலைவர்கள் முத்தியால்பேட்டை ராமு, முதலியார்பேட்டை
மணிபாலன், ஊசுடு டேவிட், ராஜ்பவன் பிரதீபன், வில்லியனூார் பிரபு, உழவர்கரை ராஜசேகர்,
உருளையன்பேட்டை மணிவண்ணன், நெல்லித்தோப்பு செந்தில், காலாப்பட்டு தர்மா, அரியாங்குப்பம் வசந்த், லாஸ்பேட்டை சரவணன், இந்திராநகர் குமாரவேல், கதிர்காமம் வேல்முருகன், காமராஜர்நகர் விஜி, தட்டாஞ்சாவடி அருள், உப்பளம் முனியன், ஏம்பலம் மணிகண்டன், திருபுவனை கிருஷ்ணா, நெட்டப்பாக்கம் சுகுமார், மண்ணாடிப்பட்டு பாரதிதாசன், இளைஞரணி தலைவர்கள் உருளையன்பேட்டை பிரான்சிஸ், நெல்லித்தோப்பு செந்தில், உப்பளம் பேட்ரிக், ராஜ்பவன் பிரபு,உழவர்கரை அசோக், அரியாங்குப்பம் ஜீவா, காலாப்பட்டு மனோகர், கதிர்காமம் அருள்பாண்டி,வில்லியனூர் சுகுமார், திருபுவனை ராஜா, காமராஜர் நகர் சூர்யா, மணவெளி வசந்த், ஏம்பலம்,மதன், இந்திரா நகர் பார்த்திபன், தொண்டரணி தலைவர்கள் அரியாங்குப்பம் பிரபு, உப்பளம் சிவா
மற்றும் நிர்வாகிகள் உருளையன்பேட்டை பிரபு, நாகராஜ், சதீஷ், நரேஷ், வேலு, நெல்லித்தோப்பு
வேலு, விஷ்ணுகுமார் மாதவன், ராஜ்பவன் ஆனந்து, ஹரி, சந்துரு, வினோத், யுவராஜ்,
முதலியார்பேட்டை வரதன், பழனி, ஜெகன், கௌதம், முத்தியால்பேட்டை சுரேஷ், மகேஷ்,
சந்தோஷ், உப்பளம் ஐயப்பன், சுமன், அருள், வினாயகம், ஜார்ஜ், ஆனந்து, கண்ணன், உழவர்கரை
சுரேஷ், விஜய், ரியாஸ், அரியாங்குப்பம் ஜெகதீஷ், பிரதீவ், சிவா, செல்வா, மணிகண்டன்,
லாஸ்பேட்டை அந்தோணிராஜ், மணவெளி மணிகண்டன், பிரசாந்த், வில்லியனூர் அருண்குமார்,
சிவராமன், ஏம்பலம் அருள்மணி, கிருஷ்ணசாமி, மணிகண்டன், மற்றும் திரலான ரசிகர்கள்
தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

Rs. 9,25,000 worth of welfare activities by Vijay fans

என் பாடல்களில் தரம் இருக்கும்! வளரும் பாடலாசிரியர் தரன் நம்பிக்கை!

என் பாடல்களில் தரம் இருக்கும்! வளரும் பாடலாசிரியர் தரன் நம்பிக்கை!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அண்மையில் நயன்தாரா நடித்த ஓ2 படத்தில் பயணம் குறித்தான பாடல் ஒன்று இடம் பெற்றுள்ளது.

அதில் வரும் வரிகள்தான் இது.

காத்தோடுதான் காத்தாக மெதப்போம்
நீரோடுதான் நீராக கலப்போம்
இயற்கையின் மடியில் கொஞ்சம்
வா சோம்பல் முறிப்போம்…

இதை எழுதியவர் வளர்ந்து வரும் பாடலாசிரியர் தரன். இலக்கிய தரத்தோடு சினிமா பாடல்கள் வர வேண்டும். அதே நேரத்தில் எளிதான வரிகளை உள்ளடக்கியும் இருக்க வேண்டும் என்கிற முனைப்போடு பாடல்களை எழுதி வருகிறார் இவர்.

தமிழில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வரும் தரன், சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தில் எழுதிய ‘பக்கா மிடில் கிளாசுடா’ என்ற பாடல் மிடில் கிளாஸ் இளைஞர்களின் மோட்டிவேசன் பாடலாக இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. மேலும் இவர் ஜி.வி.பிரகாஷின் கடவுள் இருக்கான் குமாரு, திரிஷாவின் பரம்பத விளையாட்டு, எஸ் எஸ் குரமன் இசையில் பட்டதாரி உள்ளிட்ட சில படங்களில் பாடல்கள் எழுதியிருக்கிறார். நூற்றுக்கணக்கான தனியிசை ஆல்பங்களும் எழுதியிருக்கிறார்.

அயல்நாடுகளில் வாழும் நம் தமிழ்ச் சொந்தங்கள் தமிழில் பேசுவதோடு நின்றுவிடக் கூடாது. தமிழ் இலக்கண இலக்கியங்களை அறிந்து கொள்வதோடு, பிழையின்றி எழுத படிக்கவும் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார் தரன். அதற்காக கணிணி வழியாக அவர்களுக்குப் பாடம் சொல்லித் தருவதைக் கடந்த பல ஆண்டுகளாக வெற்றிகரமாகவும் செய்து வருகிறார்.

பாடலாசிரியர்களில் வைரமுத்துவையும் பட்டுக்கோட்டையையும் அதிகம் நேசிக்கும் தரன், தன் பாடல்களிலும் அப்படி ஒரு தரம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்.

ஓ2 படத்தைத் தொடர்ந்து யங் மங் சங், ரஜினி, சண்டக்காரி, சூப்பர் ஸ்டார், ஒன் டூ ஒன், எம்.ராஜேஷ் இயக்கத்தில் வரவிருக்கும் படம் என கைவசம் கணிசமான வாய்ப்புகளை வைத்திருக்கிறார் தரன். பாடலோடு மட்டுமல்லாமல் தற்பொழுது சன்னி லியோன், பிரியா மணி நடிக்கும் Quotation gang திரைப்படத்தில் வசனமும் எழுதிவருகிறார்

Emerging songwriter Dharan’s hope

More Articles
Follows