ஐஸ்வர்யா ராஜேஷின் ‘ஃபர்ஹானா’ படத்திற்கு ‘யு/ஏ’ சர்ட்டிபிகேட்..!

ஐஸ்வர்யா ராஜேஷின் ‘ஃபர்ஹானா’ படத்திற்கு ‘யு/ஏ’ சர்ட்டிபிகேட்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ‘ஃபர்ஹானா’ படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

எஸ்.ஆர்.பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, கோகுல் பெனாய் ஒளிப்பதிவு மற்றும் VJ சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்கிறார்கள்.

ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படத்தில் ஃபர்ஹானா என்ற முஸ்லீம் பெண்ணாக நடிக்கிறார்.

இந்நிலையில், தணிக்கை குழுவில் ‘ஃபர்ஹானா’ படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழுடன் அனுமதி கிடைத்துள்ளது என தெரிய வந்துள்ளது.

இப்படத்தை ஜனவரி 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Aishwarya Rajesh’s ‘Farhana’ gets U/A certificate

வாரிசுகளுடன் பொங்கலை கொண்டாடிய ‘ஏகே 62’ பட இயக்குனர்…!

வாரிசுகளுடன் பொங்கலை கொண்டாடிய ‘ஏகே 62’ பட இயக்குனர்…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நயன்தாரா கடைசியாக ‘கனெக்ட்’ என்ற ஹாரர் த்ரில்லரில் நடித்தார்.

அவர் பாலிவுட்டில் அறிமுகமாகும் ‘ஜவான்’ படத்தின் ஷெட்யூலை விரைவில் முடிக்கவுள்ளார்.

நயன்தாராவும் அகமது இயக்கிய ‘இறைவன்’ படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்.

இதற்கிடையில், நடிகர் அஜித்துடன் விக்னேஷ் சிவன் தற்காலிகமாக ‘ஏகே 62’ படப்பிடிப்பை தொடங்க உள்ளார்.

நயன்தாரா தனது பிஸியான ஷூட்டிங் ஷெட்யூலில் இருந்து தனது மகன்களுடன் நேரத்தை செலவிட ஒரு சிறிய இடைவெளி எடுத்துள்ளார்.

இந்நிலையில், நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் திருமணத்திற்கு பிறகு தல பொங்கல் பண்டிகையை ஒன்றாக கொண்டாடினர்கள்.

மேலும், சமூக ஊடகங்களில், இயக்குனர் தனது மனைவி மற்றும் இரட்டை மகன்களுடன் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். குடும்பம் ஒன்று சேர்ந்து கொண்டாடும் முதல் பொங்கல் இதுவாகும்.

விக்னேஷ் சிவன் அவர்களை உயிர் மற்றும் உலகம் என்று அன்புடன் அழைக்கிறார்கள், அதாவது வாழ்க்கை மற்றும் உலகம்.

Nayanthara and Vignesh Shivan celebrated Thala Pongal

‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் முதல் ஷெட்யூலில் முடிந்தது..!

‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் முதல் ஷெட்யூலில் முடிந்தது..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், லட்சுமி மேனன் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த ‘ஜிகர்தண்டா’ படம் கடந்த 2014-ம் ஆண்டு ரிலீசானது.

இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ என்று அறிவித்தார் கார்த்திக் சுப்புராஜ்.

இப்படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மதுரையில் ஒரே ஷெட்யூலில் படத்தின் ஷூட்டிங் முடிந்து விட்டது. மொத்த படமும் 36 நாட்களில் படமாக்கப்பட்டுள்ளது.

ராகவா லாரன்ஸுடன் தான் இருக்கும் படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்ட எஸ்.ஜே.சூர்யா, “36 நாட்கள் ஏக் தாம் ஒர் ஷெட்யூல் ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் என்ன ஒரு அட்டவணை, என்ன ஒரு கான்செப்ட், என்ன ஒரு தொகுப்பு, என்ன ஒரு புகைப்படம், என்ன செலவு, என்ன தயாரிப்பு மதிப்பு இந்த வாய்ப்புக்கு மிக்க நன்றி. என கூறி இருந்தார்.

‘Jigarthanda Double X’ finished in the first schedule

அஜித்தின் ‘AK62’ அடுத்த படப்பிடிப்பின் புதிய அப்டேட்…!

அஜித்தின் ‘AK62’ அடுத்த படப்பிடிப்பின் புதிய அப்டேட்…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் ‘துணிவு’.

ஜனவரி 11 அன்று பொங்கல் விருந்தாக ரசிகர்களுக்கு திரையரங்குகளில் வெளியிடப்பட்டு மக்கள் மத்தியில் பெரும் பெற்றது.

அடுத்தாக, இயக்குனர் விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் ‘AK62’ படத்தில் நடிக்கவுள்ளார் அஜீத் குமார்.

இப்படத்தில் த்ரிஷா, சந்தானம் நடிக்க, அரவிந்த் சாமி வில்லனாக நடிக்கிறார்.

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி முதல் வாரத்தில் மும்பையில் தொடங்குகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பை 35-40 நாட்களில் முடிக்க திட்டமிட்டுள்ளது என உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Ajith’s ‘AK62’ shooting to begin from February in Mumbai

லைகா – ட்ரீம் வாரியர் – ரெட் ஜெயன்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் 18 படங்களை வாங்கிய நெட்ஃபிளிக்ஸ்

லைகா – ட்ரீம் வாரியர் – ரெட் ஜெயன்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் 18 படங்களை வாங்கிய நெட்ஃபிளிக்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் 2023-ம் ஆண்டில் தன்னிடமுள்ள உரிமம் உள்ள படங்களில் ஒரு பகுதியாக 18 படங்கள் குறித்தான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்தப் படங்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி முடித்த பின்னர் ரசிகர்கள் இதனை தங்கள் இல்லத்திரைகளில் நெட்ஃபிளிக்ஸ் வாயிலாக பார்த்து ரசிக்கலாம்.

தனது சமூகவலைதளப் பக்கங்களில் நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் இந்த 18 தலைப்புகளை அறிவித்துள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெட்ஃபிளிக்ஸில் வெளியான ‘பீஸ்ட்’, ‘நித்தம் ஒரு வானம்’, ‘டாக்டர்’ மற்றும் சமீபத்தில் வெளியான ‘கட்டா குஸ்தி’ ஆகிய படங்கள் உலகம் முழுவதும் ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற நிலையில், அடுத்து என்னென்ன படங்கள் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

தங்களுடைய லைன்-அப் படங்கள் குறித்து நெட்ஃபிலிக்ஸின் கண்டெண்ட் VP மோனிகா ஷெர்கில் பகிர்ந்து கொண்டதாவது…

“எங்களுடைய பார்வையாளர்கள் உள்ளூர் கதைகளில் இருந்து உலக படங்கள் வரை விரும்பிப் பார்க்கக் கூடியவர்கள் என்பதால் அவர்கள் விரும்புவதை தருவதற்கே நாங்கள் விருப்பப்படுகிறோம்.

‘பீஸ்ட்’, ‘நித்தம் ஒரு வானம்’, ‘டாக்டர்’ மற்றும் ‘கட்டா குஸ்தி’ ஆகிய படங்கள் உலகம் முழுவதும் பார்வையாளர்களிடையே பேசும் பொருளானது.

அதனால், இப்போது எங்களிடம் லைன்-அப்பில் உள்ள படங்களும் அது போன்று வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. பல ஜானர்களில் அமைந்துள்ள இந்தப் படங்களை தென்னிந்தியாவில் உள்ள பல திறமையான கலைஞர்கள் உருவாக்கி உள்ளனர்.

இந்தியாவைத் தாண்டி உலகின் ஒவ்வொரு மூலையிலும் இருக்கக்கூடிய அனைத்து பார்வையாளர்களுக்கும் படங்களைக் கொண்டு சேர்க்க வேண்டும் என திரைக்குப் பின்னால் டப்பிங், சப்டைட்டில் ஆகியவற்றிலும் கடின உழைப்பைக் கொடுத்துள்ளோம்” என்றார்.

*படங்களின் பட்டியல்:*

1. தயாரிப்பு நிறுவனம்: லைகா புரொடக்‌ஷன்,
டைட்டில் / புராஜெக்ட்: AK 62,
மொழி: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்

2. தயாரிப்பு நிறுவனம்: லைகா புரொடக்‌ஷன்,
டைட்டில் / புராஜெக்ட்: சந்திரமுகி 2,
மொழி: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்

3. தயாரிப்பு நிறுவனம்: லைகா புரொடக்‌ஷன்,
டைட்டில் / புராஜெக்ட்: புரொடக்ஷன் நம்பர் 20,
மொழி: தமிழ்

4. தயாரிப்பு நிறுவனம்: லைகா புரொடக்‌ஷன்,
டைட்டில் / புராஜெக்ட்: புரொடக்‌ஷன் நம்பர் 24,
மொழி: தமிழ்

5. தயாரிப்பு நிறுவனம்: லைகா புரொடக்‌ஷன்,
டைட்டில் / புராஜெக்ட்: புரொடக்‌ஷன் நம்பர் 18,
மொழி: தமிழ்

6. தயாரிப்பு நிறுவனம்: லைகா புரொடக்‌ஷன்,
டைட்டில் / புராஜெக்ட்: நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்,
மொழி: தமிழ்

7. தயாரிப்பு நிறுவனம்: விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்,
டைட்டில் / புராஜெக்ட்: ஆர்யன்,
மொழி: தமிழ், தெலுங்கு

8. தயாரிப்பு நிறுவனம்: விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்/ RT டீம் வொர்க்ஸ்,
டைட்டில் / புராஜெக்ட்: கட்டா குஸ்தி,
மொழி: தமிழ், தெலுங்கு

9. தயாரிப்பு நிறுவனம்: பேஷன் ஸ்டுடியோஸ்,
டைட்டில் / புராஜெக்ட்: இறைவன்,
மொழி: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி

10. தயாரிப்பு நிறுவனம்: பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் LLP,
டைட்டில் / புராஜெக்ட்: இறுகப்பற்று,
மொழி: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்

11. தயாரிப்பு நிறுவனம்: ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்,
டைட்டில் / புராஜெக்ட்: ஜப்பான்,
மொழி: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்

12. தயாரிப்பு நிறுவனம்: ஸ்டோன் பென்ச் ஃபிலிம்ஸ்
டைட்டில் / புராஜெக்ட்: ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்,
மொழி: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி

13. தயாரிப்பு நிறுவனம்: ரெட் ஜெயண்ட் மூவிஸ்,
டைட்டில் / புராஜெக்ட்: மாமன்னன்,
மொழி: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்

14. தயாரிப்பு நிறுவனம்: தி ரூட் / பேஷன் ஸ்டுடியோஸ்,
டைட்டில் / புராஜெக்ட்: ரிவால்வர் ரீட்டா,
மொழி: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்

15. தயாரிப்பு நிறுவனம்: YNOT ஸ்டுடியோஸ்,
டைட்டில் / புராஜெக்ட்: தலைகோதல்,
மொழி: தமிழ்

16. தயாரிப்பு நிறுவனம்: ஸ்டுடியோ க்ரீன்,
டைட்டில் / புராஜெக்ட்: தங்கலான்,
மொழி: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி

17. தயாரிப்பு நிறுவனம்: சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ்/ ஸ்ரீகரா ஸ்டுடியோஸ்/ ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ்
டைட்டில் / புராஜெக்ட்: வாத்தி,
மொழி: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்

18. தயாரிப்பு நிறுவனம்: சூப்பர் குட் ஃபிலிம்ஸ்,
டைட்டில் / புராஜெக்ட்: வரலாறு முக்கியம்,
மொழி: தமிழ், இந்தி

Netflix bought OTT rights of 18 tamil movies of 2023

BREAKING ‘பிச்சைக்காரன் 2’ பட சூட்டிங்கில் விபத்து.; ஏர் ஆம்புலன்சில் விஜய் ஆண்டனி.!?

BREAKING ‘பிச்சைக்காரன் 2’ பட சூட்டிங்கில் விபத்து.; ஏர் ஆம்புலன்சில் விஜய் ஆண்டனி.!?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் ஆண்டனி நடிப்பில் சசி இயக்கிய ‘பிச்சைக்காரன்’ படம் தெலுங்கில் மாபெரும் வெற்றியை பெற்றது.

இதனையடுத்து இந்த படம் தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு அங்கும் சூப்பர் டூப்பர் வெற்றியை கொடுத்தது.

எனவே தற்போது அதன் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.

இந்த படத்தின் நாயகன் விஜய் ஆண்டனியே இந்த படத்தை தயாரித்தும் இயக்கியும் நடித்தும் வருகிறார்.

தற்போது ‘பிச்சைக்காரன் 2’ படப்பிடிப்பு மலேசியாவில் லங்காவியில் நடந்து வருகிறது.

ஜனவரி 16 இன்று படப்பிடிப்பில் பெரும் விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன.

இதில் விஜய் ஆண்டனி மற்றும் கதாநாயகி இருவரும் படுகாயம் அடைந்ததாகவும் அவர்களை ஏர் ஆம்புலன்ஸ் மூலம் கோலம்பூருக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் மலேசியாவிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அங்குள்ள பிரபலமான மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Vijay Antony got injury at Pichaikkaran 2 spot

More Articles
Follows