‘காபி வித் காதல்’ OTT ரிலீஸ் தேதியை அறிவித்தார் சுந்தர் சி ..!

‘காபி வித் காதல்’ OTT ரிலீஸ் தேதியை அறிவித்தார் சுந்தர் சி ..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுந்தர்.சி இயக்கத்தில் காதல் மற்றும் காமெடி கலந்த படம் ‘காபி வித் காதல்’.

இந்த படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா,யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், திவ்யதர்ஷினி, அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் நடித்து இருந்தனர்.

இப்படம் நவம்பர் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது, ​​காபி வித் காதல் படத்தின் OTT வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

ZEE5யில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் டிசம்பர் 9 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்தார் சுந்தர்.சி.

காபி வித் காதல்

Sundar C announces ‘Coffee with Kadhal’ OTT release date

அமீரின் ‘உயிர் தமிழுக்கு’ உரிமையை கைப்பற்றிய சிம்பு படத்தயாரிப்பாளர்

அமீரின் ‘உயிர் தமிழுக்கு’ உரிமையை கைப்பற்றிய சிம்பு படத்தயாரிப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மாநாடு’ படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து ஜீவி-2 படத்தை தயாரித்து வெளியிட்ட சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரடக்ஷன் நிறுவனம் தற்போது இயக்குநர் ராம் இயக்கத்தில் ‘ஏழுகடல் ஏழுமலை’ மற்றும் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிக்கும் ‘ராஜாகிளி’ ஆகிய படங்களை தயாரித்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது இயக்குநர் அமீர் கதாநாயகனாக நடித்துள்ள ‘உயிர் தமிழுக்கு’ என்கிற படத்தை வெளியிடும் உரிமையை கைப்பற்றியுள்ளார் சுரேஷ் காமாட்சி.

மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா இந்த படத்தை தயாரித்துள்ளதுடன் அவரே இந்த படத்தை இயக்கியும் உள்ளார்.

உயிர் தமிழுக்கு

அமீர், சாந்தினி ஶ்ரீதரன், ஆனந்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி மற்றும் பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

‘உயிர் தமிழுக்கு’ படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்ய, அசோக் சார்லஸ் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். இந்தப் படத்திற்கு மொலோடி கிங் வித்யாசாகர் இசையமைத்துள்ளார்.

பாடல்களை பா.விஜய் எழுத, அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தின் வசனங்களை பாலமுரளி வர்மன் மற்றும் அஜயன்பாலா இருவரும் இணைந்து எழுதியுள்ளனர்.

இந்தப்படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

உயிர் தமிழுக்கு

*நடிகர்கள்*

அமீர், சாந்தினி ஶ்ரீதரன், ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி

*தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்*

தயாரிப்பு ; மூன் பிக்சர்ஸ்

வெளியீடு ; வி ஹவுஸ் புரொடக்சன்

இயக்கம் ; ஆதம்பாவா

இசை ; வித்யாசாகர்

ஒளிப்பதிவு ; தேவராஜ்

படத்தொகுப்பு ; சார்லஸ்

பாடல்கள் ; பா.விஜய்

வசனம் ; பாலமுரளி வர்மன் மற்றும் அஜயன்பாலா

தயாரிப்பு மேற்பார்வை ; R.S.வெங்கட்

நிர்வாக தயாரிப்பு ; B.மகேஷ்

மக்கள் தொடர்பு ; A.ஜான்

உயிர் தமிழுக்கு

Suresh Kamatchi to release Ameers Uyir Thamizhukku

தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் இணைந்த சிவராஜ்குமார்..!

தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் இணைந்த சிவராஜ்குமார்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.

இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் மற்றும் நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளனர்.

இப்படத்தில் தனுஷ் உடன் இணைந்து சிவராஜ்குமார் நடிப்பதாக கூறப்பட்டது.

சிவராஜ்குமார் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதை சிவராஜ்குமார் ஒரு ஊடக உரையாடலில் வெளிப்படுத்தினார்.

இந்நிலையில், தனுஷின் மூத்த சகோதரனாக மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், சிவராஜ்குமார் ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருவது குறிப்பிட்டதக்கது.

Shivarajkumar join Dhanush’s ‘Captain Miller’

சாய் தரம் தேஜின் 15வது படத்திற்கு ஜூனியர் என்டிஆர் ஆதரவு

சாய் தரம் தேஜின் 15வது படத்திற்கு ஜூனியர் என்டிஆர் ஆதரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சாய் தரம் தேஜின் 15வது படத்தின் Title Glimpse இல் ஜூனியர் என்டிஆரின் கம்பீர குரல் இருக்கும் என்று தயாரிப்பாளர்கள் திங்களன்று தெரிவித்தனர்.

‘ஆர்ஆர்ஆர்’ நட்சத்திரத்தின் ஆதரவிற்கு ‘பிரதி ரோஜு பாண்டேஜ்’ நடிகர் நன்றி தெரிவித்தார்.

“உங்கள் மீது அதிக அன்பு, தாரக். நான் உங்களிடம் வந்தபோது நீங்கள் என்னை ஏற்றுக்கொண்ட விதத்திற்கு ஒரு நன்றி.

நடிகராக மாறுவதற்கு முன்பு உங்களை சந்திக்க வந்த பழைய நாட்களைப் போல உணர்ந்தேன்.

உங்கள் குரல் எங்கள் #SDTitleGlimpse க்கு பெருமை என்று நடிகர் ட்வீட் செய்து அறிவித்தார்.

இயக்குனராக மாறிய புரொடக்சன் மேனேஜர்.; ‘என்ஜாய்’ மூலம் எச்சரிக்கை

இயக்குனராக மாறிய புரொடக்சன் மேனேஜர்.; ‘என்ஜாய்’ மூலம் எச்சரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எல்.என்.எச். கிரியேசன், லட்சுமி நாராயணன் தயாரிப்பில் புதுமுகங்கள் நடிப்பில் நகைச்சுவை கலந்த படமாக உருவாக்கப்பட்டுள்ள படம் ‘என்ஜாய்’.

சமூக ஊடகங்களின் அபார வளர்ச்சியும் அதனூடாக ஏற்பட்ட சுதந்திரமும், கருத்து வெளிப்பாட்டு நன்மைகளையும், சீரழிவுகளையும் நிகழ்த்தியே நகர்கிறது. இந்த கதை.

இந்த தொழிநுட்ப வளர்ச்சியின் பிடிக்குள் அகப்படும் மூன்று இளைஞர்களும் இளம்பெண்களும் வளர்ச்சிக்கான பாதையாக இதனைப் பயன்படுத்தினார்களா இல்லை சீரழிவுக்குள் சிக்கி சிதறடிக்க பட்டார்களா என்பதே என்ஜாய் சொல்லும் கதை.

இளைஞர்களுக்கே உரித்தான அவர்களது பேசு மொழியான பதின்ம பருவத்து நகைச்சுவையோடு கலந்து சொல்லப்பட்டிருக்கும் இந்தக் கதை, சிரிக்கவும் வைக்கும். சிந்திக்கவும் தூண்டும்.

சமூகம் கொண்டுள்ள தளைகளை உடைத்து விடும் ஆயுதமாகவும் இருக்கும்.

இளைஞர்கள் கொண்டாடினால் தான் எந்த படமும் வெற்றிபெரும் – ‘என்ஜாய் ‘ படம் இளைஞர்கள் கொண்டாடும் படமாக இருக்கும் என்கிறார். அறிமுக இயக்குனர் பெருமாள் காசி.

பல படங்களுக்கு புரொடக்சன் மேனேஜராக பணியாற்றிய பெருமாள் காசி ‘என்ஜாய்’ படத்தின் மூலம் இயக்குனராகியிருக்கிறார்.

ஒளிப்பதிவு –
KN அக்பர்,

இசை – KN ரயான் .

எடிட்டர் – மணி குமரன்.

பின்னணி இசை- சபேஷ்- முரளி.

பாடல்கள் – விவேகா, உமாதேவி.

நடனம்- தினேஷ்.

சண்டை- டேஞ்சர்மணி

கலை- சரவண அபிராமன்.

நடிகர்கள்-

மதன்குமார்,
டான்சர் விக்னேஷ்,
ஹரீஸ்குமார்,
நிரஞ்சனா,
ஜீவி அபர்ணா,
சாய் தன்யா,
ஹாசின்,
சாருமிசா.

என்ஜாய்

perumal kasi turned Director of enjoy movie

20வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 12 தமிழ் படங்கள்

20வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 12 தமிழ் படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

20வது சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 15 முதல் துவங்கி டிசம்பர் 22 வரை நடைபெறவுள்ளது.

சர்வதேச திரைப்பட விழா குறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னை அண்ணா சாலையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் நடைபெற்றது.

அதில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழ் படங்கள் வரிசை இதோ..

ஆதார்,
பிகினிங்,
கார்கி,
இரவின் நிழல்,
கசடதபற,
பபூன்,
கோட் Goat,

இறுதிபக்கம்,
மாமனிதன்,

நட்சத்திரம் நகர்கிறது,
ஓ 2,
யுத்த காண்டம்,

ஆகிய 12 தமிழ் படங்கள் சென்னை திரைப்பட விழாவில் போட்டிக்கு தேர்தெடுக்கப்பட்டுள்ளது.

12 Tamil movies selected for Chennai internation Film Festival

Tamil Film Competion List and Indian Panoram screening List்

More Articles
Follows