சிலம்பரசனுக்கு கழுத்தை நீட்டிய ‘பிக் பாஸ்’ பிரபலம்.? சொல்லவே இல்ல.??!!

சிலம்பரசனுக்கு கழுத்தை நீட்டிய ‘பிக் பாஸ்’ பிரபலம்.? சொல்லவே இல்ல.??!!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் டிவியில் வித்தியாசமான நிகழ்ச்சிகள் வித்தியாசமான தலைப்பில் ஒளிபரப்பாகும் என்பது நம் அறிந்த ஒன்றுதான்.

தற்போது ‘உ சொல்றியா.? ஊஹூம் சொல்றியா.? என்ற ஒரு நிகழ்ச்சியை மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா தொகுத்து வழங்கி வருகின்றனர்.

இதில் சிறப்பு விருந்தினர்களாக ஐஸ்வர்யா தத்தா, சாக்ஷி அகர்வால் மற்றும் அனிதா சம்பத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது..” உங்கள் வாழ்வில் உங்களைப் பற்றி கேள்விப்பட்டு நகைச்சுவையான செய்தி என்ன? என்று தொகுப்பாளர்கள் கேட்டனர்.

அதற்கு ஐஸ்வர்யா தத்தா பேசும்போது.. ” எனக்கும் சிம்புவுக்கும் திருமணம் என்ற செய்தி எனக்கே வந்தது என்று சிரித்துக் கொண்டே கூறினார்.

அதுபோல விராட் கோலி முதல் கேர்ள் பிரண்டு நான் தான் என்று அது வதந்தி கிளம்பியது என சாக்ஷி அகர்வால் கூறினார்.

இது தொடர்பான புரோமோ வீடியோ தற்போது இணையங்களில் வைரல் ஆகி வருகிறது.

2018-இல் நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா என்பது குறிப்பிடத்தக்கது.

Bigg boss celebrity talks about marriage with simbu

ஷங்கர் பட நடிகையின் திருமண தேதி அறிவிப்பு !

ஷங்கர் பட நடிகையின் திருமண தேதி அறிவிப்பு !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வியாழன் காலை மும்பை விமான நிலையத்தில் புகைப்படம் எடுக்கப்பட்ட கியாரா அத்வானி மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா ஆகியோர் தற்போது துபாயில் உள்ளனர். இந்த ஜோடி விரைவில் திருமணம் செய்து கொள்ள தயாராக உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் பிப்ரவரி 2023 முதல் வாரத்தில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். மேலும் அது பிப்ரவரி 6 ஆக இருக்கலாம் என சொல்லப்படுகிறது . இவர் ஷங்கர் இயக்கும் RC 15 படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

டி ஆர் ரெக்கார்ட்ஸ்.: பான் இந்தியா லெவலில் செல்லும் ‘சகலகலா வல்லவன்’

டி ஆர் ரெக்கார்ட்ஸ்.: பான் இந்தியா லெவலில் செல்லும் ‘சகலகலா வல்லவன்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இசை மூலம் பல படங்களுக்கு பிளாட்டினம் டிஸ்க் வாங்கிய இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர், கவிஞர் என்று பன்முகத்தன்மை கொண்ட ஆளுமையான சகலகலா வல்லவன் டி ராஜேந்தர் பான் இந்தியா இசையில் முதல் முறையாக ஒரு மியூசிக் ஆல்பம் வெளியிடுகிறார்.

இந்த தேச பக்தி ஆல்பத்தை தனது டி ஆர் ரெக்கார்டஸ் மூலம் தை மாதத்தில் வெளியிடவுள்ளார்.

இது குறித்து பேசிய டி ராஜேந்தர்…

“பிறக்கிறது ஆங்கில புத்தாண்டு 2023. புத்தாண்டு இது புத்துணர்வு தரும் ஆண்டாக, புதுமைமிக்க ஆண்டாக, பூரிப்பு தரும் ஆண்டாக, மக்களுக்கு மன மகிழ்ச்சி தரும் ஆண்டாக, மன அமைதி தரும் ஆண்டாக இருக்க எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்து எனது ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை அனைவருக்கும் தெரிவித்து கொள்கிறேன்.

புத்தாண்டு மலர்கின்ற இந்த தருணத்திலே எனது டி ஆர் ரெக்கார்ட்ஸ் என்ற ஆடியோ மற்றும் மியூசிக் வீடியோ மலர இருக்கின்றது என்கிற மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு தலை ராகம், வசந்த அழைப்புகள், ரயில் பயணங்களில், ராகம் தேடும் பல்லவி, நெஞ்சில் ஒரு ராகம், உயிருள்ளவரை உஷா, தங்கைக்கோர் கீதம், உறவை காத்த கிளி, மைதிலி என்னை காதலி, ஒரு தாயின் சபதம், என் தங்கை கல்யாணி, சம்சார சங்கீதம், சாந்தி எனது சாந்தி, எங்கள் வீட்டு வேலன், பெற்றெடுத்த பிள்ளை, ஒரு வசந்த கீதம், தாய் தங்கை பாசம், மோனிஷா என் மோனாலிசா, சொன்னால் தான் காதலா, காதல் அழிவதில்லை, வீராசாமி… இப்படி என் படவரிசைகளில் எத்தனையோ பாடல்கள் இசையில் ரெக்கார்ட் பிரேக் பண்ணியிருக்கின்றன.

கிளிஞ்சல்களுக்காக பிளாட்டினம் டிஸ்க் வாங்கினேன், பூக்களை பறிக்காதீர்கள், பூ பூவா பூத்திருக்கு, பூக்கள் விடும் தூது, கூலிக்காரன் இவை அனைத்தும் ரெக்கார்ட் பிரேக்.

இப்படி ரெக்கார்ட் பிரேக் செய்த நான், என்னுடைய கம்பெனிக்கு டி ஆர் ரெக்கார்ட்ஸ் என்கிற பெயர் வைத்துள்ளேன்.

நான் படத்திற்காக பாட்டெழுதியுள்ளேன், கழகத்திற்காக, கட்சிக்காக, ஏன் காதலுக்காக, பாசத்துக்காக கூட பாட்டெழுதியுள்ளேன்.

இப்பொழுது முதன் முதலாக இந்த பாரத தேசத்திற்காக ஒரு பாட்டு ‘வந்தே வந்தேமாதரம், வாழிய நமது பாரதம்’ என்கிற பாடலை அகில இந்திய கான்செப்டில் தமிழ் மற்றும் இந்தியில் உருவாக்கியுள்ளேன்.

தை திங்கள் பிறந்ததும் இதை வெளியிட இருக்கின்றேன்,” என்று கூறியுள்ளார்.

மேலும், தனது புதிய முயற்சிக்கு நாடெங்கிலும் உள்ள மக்கள் தங்களது பேராதரவை வழங்குவார்கள் என்று டி ஆர் நம்பிக்கை தெரிவித்தார்.

T Rajendhar to venture into pan-India music

TR to make his mark in Tamil and Hindi music world through his song Vande Vande Mataram Vaazhiya Namadhu Bharatham’

Legendary Director/Actor/Music Director #TRajendar to launch #TR_Records and to venture into Pan-India Music

Interesting Music Videos Coming soon..

@kuraltv @onlynikil #NM

Attachments area
Preview YouTube video Happy New Year 2023

‘லவ் டுடே’ பாணியில் செல்போனை மாற்றிய 4 ஜோடி லவ்வர்ஸ்..; விஜய்சேதுபதி ஆதரவு

‘லவ் டுடே’ பாணியில் செல்போனை மாற்றிய 4 ஜோடி லவ்வர்ஸ்..; விஜய்சேதுபதி ஆதரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

செல்போனை மையப்படுத்தி தயாராகியிருக்கும் ‘பொய்யின்றி அமையாது உலகு’

நடிகர் விவேக் பிரசன்னா – நடிகை சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘பொய்யின்றி அமையாது உலகு’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதனை விஜய் சேதுபதி தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

இயக்குநர் சக்திவேல் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘பொய்யின்றி அமையாது உலகு’. இதில் நடிகர்கள் விவேக் பிரசன்னா, டேனியல் ஆனி போப், அர்ஜுனன், பிரவீண் நடிகைகள் சாக்‌ஷி அகர்வால், ஸ்வயம் சித்தா, சஹானா, ஜமுனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

பிரசாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘இசை பேட்டை’ வசந்த் இசையமைத்திருக்கிறார்.

காமெடியுடன் கூடிய பொழுதுபோக்கு திரைப்படமாக தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை தியா சினி கிரியேசன்ஸ் மற்றும் ரூல்ஸ் பிரேக்கர்ஸ் புரொடக்சன் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜெகன் நாராயணன் மற்றும் சக்திவேல் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் முன்னோட்டத்தை படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.

படத்தை பற்றி இயக்குநர் பேசுகையில்…

‘நான்கு ஜோடிகள் கெட் டூ கெதர் சந்திப்பு ஒன்றில் சந்திக்கிறார்கள். இவர்கள் தங்களது செல்போனை வைத்துக்கொண்டு ஜாலியான விதிகளுடன் விளையாட தொடங்குகிறார்கள்.

அதாவது இந்த எட்டு பேரின் செல்போன்களுக்கு வரும் குறுஞ்செய்தியையும், அழைப்புகளையும் அனைவரும் அறிந்து கொள்ளும்படி வைத்திருக்க வேண்டும்.

இந்த நிபந்தனையுடன் நடைபெறும் அந்த விளையாட்டு, நகைச்சுவையாக தொடங்கி பல எதிர்பாராத சுவாரசியமான சம்பவங்களுடன் பயணிக்கிறது.

இந்த ஆண்டில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘லவ் டுடே’ படத்தைத் தொடர்ந்து செல்போனை மையப்படுத்திய திரைக்கதை என்பதால், இதற்கு இளம் தலைமுறையினரிடத்தில் வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறோம்.

நகைச்சுவையுடன் கலந்த ஃபீல் குட் படைப்பாக ‘பொய்யின்றி அமையாது உலகு’ தயாராகி இருக்கிறது” என்றார்.

First Look Poster of
#PoiIndriAmaiyathuuIagu released!

Sakshi Agarwal’s
‘#PoiIndriAmaiyathuuIagu’ First Look Poster is out!

வெற்றிமாறனின் அடுத்த இரண்டு படங்களின் சூப்பர் அப்டேட்!

வெற்றிமாறனின் அடுத்த இரண்டு படங்களின் சூப்பர் அப்டேட்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூரி சமீபத்தில் பகிர்ந்துள்ள புகைப்படத்தில் குழுவினர் துப்பாக்கிகளை பிடித்துக்கொண்டு படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளனர். வெற்றி மாறன் அவர்கள் மத்தியில் அமர்ந்திருப்பதைக் காணலாம். படத்திற்கு இசை இளையராஜா. பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் போன்ற நட்சத்திர நடிகர்கள் இடம் பெற்றுள்ளனர்.

மறுபுறம், வெற்றி மாறன், சூர்யாவை வைத்து வாடி வாசல் படத்தின் வேலைகளைத் தொடங்க உள்ளதாக தெரிகிறது. படத்தின் கதைக்களம் ஜல்லிக்கட்டைச் சுற்றி வருகிறது மற்றும் ஜெய் பீம் நடிகருடன் வெற்றி மாறனின் முதல் முயற்சியைக் குறிக்கிறது.

JUST IN சிம்பு – கௌதம் இணைந்த ‘பத்து தல’ பட ரிலீஸ் தேதி போஸ்டர் வெளியீடு

JUST IN சிம்பு – கௌதம் இணைந்த ‘பத்து தல’ பட ரிலீஸ் தேதி போஸ்டர் வெளியீடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு & கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள படம் ‘பத்து தல’..

ப்ரியா பவானி சங்கர் நாயகியாகவும் நடித்துள்ளார்.

கன்னடத்தில் வெளியான முஃப்தி படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.

‘சில்லுனு ஒரு காதல்’ படத்தை இயக்கிய ஒபேலி கிருஷ்ணா பத்து தல படத்தை இயக்கி வருகிறார்.

ஏ ஆர் ரகுமான் இசையமைக்க ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.

கன்னியாகுமரி பகுதியில் நடந்து வந்த ஷூட்டிங் நிறைவு பெற்ற நிலையில் தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த வருடம் கிறிஸ்துமஸ் விருந்தாக இந்த படம் வெளியாக இருந்த நிலையில் திடீரென்று தள்ளிப்போனது.

நேற்று இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்று டிசம்பர் 31ஆம் தேதி காலை 11 மணிக்கு அறிவிக்கப்படும் என தெரிவித்து போஸ்டரை வெளியிட்டு இருந்தனர்.

அதன்படி தற்போது 2023 மார்ச் 30ஆம் தேதி தியேட்டர்களில் ‘பத்து தல’ வெளியாகும் என் அறிவித்து போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

JUST IN Simbu – Gautham starrer ‘Pathu Thala’ release date poster released

More Articles
Follows