எஸ்பிபி & அமிதாப் புறக்கணிச்சாங்களே… இதுவே கடைசி விளம்பரமாக இருக்கட்டும்..; விஜய்சேதுபதிக்கு த.தே.வி.இ. வேண்டுகோள்

எஸ்பிபி & அமிதாப் புறக்கணிச்சாங்களே… இதுவே கடைசி விளம்பரமாக இருக்கட்டும்..; விஜய்சேதுபதிக்கு த.தே.வி.இ. வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathi in 800அன்பிற்குரிய விஜய் சேதுபதி அவர்களே!
வணக்கம்.

நீங்கள் இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டு வீர்ர் முத்தையா முரளிதரன் வேடத்தில் ‘800’ திரைப்படத்தில் நடிப்பதாக ”முதல் தோற்ற விளம்பரங்கள்” (first look posters) வந்துள்ளன.

இவையே கடைசித் தோற்ற விளம்பரமாகவும் இருந்து விட்டால் நல்லது.

இதற்கு மேல் நீங்கள் இந்தப் படத்திலிருந்து விலகிய செய்தி தவிர வேறு எதுவும் வராமலிருக்க வேண்டும் என விரும்பும் தமிழர்கள் சார்பில் உங்களுக்கு இந்த மடல். உங்கள் முகவரி எனக்குத் தெரியாது.

ஆனால் எப்படியும் இந்த மடல் உங்கள் பார்வைக்குச் சென்று விடும் என்ற நம்பிக்கையுடன் எழுதுகிறேன்.

ஒரு நடிகர் என்ற முறையில் எந்தக் கதைமாந்தராகவும் நடிக்க உங்களுக்கு உரிமையுண்டு, அதுதான் உங்கள் ’தொழில் தர்மம்’ என்பதில் ஐயமில்லை. திரு முத்தையா முரளிதரனைப் பொறுத்த வரை உலக சாதனை புரிந்த ஒரு தலைசிறந்த கிரிக்கெட் வீர்ர் என்பதில் மறுப்புக்கே இடமில்லை. ஆக, அவராக நீங்கள் நடிப்பது உங்கள் இருவருக்குமே இயல்பாகப் பெருமை தரக் கூடியது என எடுத்த எடுப்பில் தோன்றத்தான் செய்யும்.

ஆனால், நீங்கள் நடிகர் என்பதோடு குறுகிய காலத்தில் தமிழ் மக்களின் அன்பைப் பெற்ற தமிழ்க் கலைஞராகவும் விளங்குவதற்கு உங்கள் நடிப்புத் திறன் மட்டுமே காரணமன்று. அறம் சார்ந்த முற்போக்குக் கண்ணோட்டமும் உடையவராகத் தமிழ் மக்களிடையே நீங்கள் கொண்டிருக்கும் படிமமும் சேர்ந்துதான் உங்களுக்குப் புகழ் சேர்த்துள்ளது எனக் கருதுகிறேன்.

முத்தையா முரளிதரன் கிரிக்கெட்டில் சுழற்பந்து வீச்சாளர் மட்டும்தான் என்றால் இந்த மடல் எழுத வேண்டிய தேவையே எழுந்திருக்காது.

2009 மே மாதம் முள்ளிவாய்க்காலில் உச்சம் கண்டதே சிங்கள அரசின் தமிழர் இனவழிப்பு, போரின் இறுதிக் கட்டத்தில் மட்டும் சற்றொப்ப ஒன்றரை இலட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்களே, குடும்பத்துடன் சரணடைந்தவர்கள் உட்பட பல்லாயிரம் தமிழர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டார்களே, இந்த உண்மைகள் எல்லாம் உங்களுக்குத் தெரியும், முத்தையா முரளிதரனுக்கும் தெரியும்.

ஆனால் இந்தக் கொடிய இனவழிப்பைத் தலைமையேற்று நடத்திய இராசபட்சேக்களுக்கு முரளி ஆதரவு தெரிவித்தவர் என்பது உங்களுக்குத் தெரியுமா? தமிழரான அவர் இனவழிப்பின் நிறைவை மகிழ்ந்து கொண்டாடி சிங்களப் பேரினவாதிகளுக்குத் தன் விசுவாசத்தைக் காட்டிக் கொண்டவர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஒன்றரை இலட்சம் உயிர்களை மாய்த்த கொலைகாரச் சாதனையை முத்தையா முரளிதரன் இரசித்துச் சுவைத்தார் என்பது தெரிந்த பின்னும் 800 விக்கெட்டுகளைச் சாய்த்த அவரது ’தூஸ்ரா’வை இரசிக்கவும் கொண்டாடவும் தமிழர்களுக்கு எப்படி மனம் வரும்? அருள்கூர்ந்து எண்ணிப்பாருங்கள் விஜய்!

ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனவழிப்புப் போர்க் காலத்தில் நடந்த போர்க் குற்றங்கள், மானிடப் பகைக் குற்றங்கள். மாந்தவுரிமை மீறல்கள் பற்றியெல்லாம் வந்துள்ள ஐநா அறிக்கைகள். மாந்தவுரிமைப் பேரவைத் தீர்மானஙகள், சேனல் நான்கின் ஆவணப் படங்கள்… இவை குறித்தெல்லாம் உங்களுக்குத் தெரியாமலிருக்காது என நம்புகிறேன்.

எவ்வளவு தரவுகள் தேவையானாலும் உங்களுக்கு அனுப்ப தமிழ் இளைஞர்கள் அணியமாய் உள்ளனர்.
உங்களைப் போன்றவர்களை இழந்து விடக் கூடாது என்ற அக்கறை தவிர வேறு நோக்கமில்லை.

நீங்கள் நினைக்கலாம், யாரோ சிலர் விடுக்கும் வேண்டுகோளை மதிக்க வேண்டுமா என. இல்லை, விஜய். இது உலகத் தமிழினத்தின் ஒன்றுபட்ட இதயத் துடிப்பு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

இலங்கையில் நடந்தது இனக்கொலை என்று தமிழகச் சட்டப் பேரவையும் சிறிலங்காவின் வட மாகாண சபையும் ஒருமனதாக இயற்றிய தீர்மானங்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

இலங்கையைப் புறக்கணிக்கும் கோரிக்கையின் தொடர்ச்சியாகத்தான் அப்போதைய முதலமைச்சர் மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள் சென்னையில் இலங்கை வீர்ர்கள் விளையாடும் ஐபிஎல் போட்டிகள் நடத்தத் தடை விதித்தார் என்பதை நினைவிற்கொள்ளுங்கள்.

இன்றளவும் சன் முதலாளி கலாநிதி மாறன் தனது ஐதரபாத் சன்ரைசர்ஸ் அணிக்குப் பந்துவீச்சுப் பயிற்சியாளராக விலைக்கு வாங்கி வைத்துள்ள முத்தையா முரளிதரனை அன்று தமிழகத்தின் சார்பில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளே விட மறுத்தார்.

இன்று அதே முரளிதரனின் படிமம் உங்கள் அரிதார வடிவில் தமிழ்நாட்டுக்குள்ளும் புலம்பெயர் தமிழுலகத்துக்குள்ளும் நுழையும் முயற்சி பத்துக் கோடித் தமிழர்களையும் இழிவுபடுத்துவதல்லவா?
விளையாட்டிலும் கலையிலும் அரசியல் கலக்கலாமா? என்று ஒரு கலப்படக் கும்பல் கிளம்பி வரும்.

அவர்களுக்கு நீங்கள் எடுத்துக்காட்ட வேண்டிய சில வரலாற்றுப் பக்கங்களை உங்கள் பார்வைக்குக் கொண்டுவர விரும்புகிறேன். “கொழும்புக் கொழுப்பைக் கரைக்கும் அரசியல் எது?” என்ற கட்டுரையில் தோழர் நலங்கிள்ளி புரட்டிக் காட்டும் அந்தப் பக்கங்கள் உங்கள் பார்வைக்கு:

தமிழகத்தில் அனைவரும் அறிந்த பெயர் மார்லான் பிராண்டோ. ஆலிவுட்டின் பெரும் நடிகர். சிவாஜி கணேசனைத் தமிழகத்தின் மார்லான் பிராண்டோ என்று தமிழ்த் திரைச் சுவைஞர்கள் போற்றிய போது, இல்லை, மார்லான் பிராண்டோதான் அமெரிக்காவின் சிவாஜி என்றார் அறிஞர் அண்ணா. மார்லான் பிராண்டோ நாயகனாக நடித்த ’காட்ஃபாதர்’ நீங்களும் பார்த்திருப்பீர்கள்.

இப்படிப்பட்ட நடிகர்தான் உலகத் திரைப்பட நடிகர்களுக்கும் இயக்குநர்களுக்கும் திரைக்கதை ஆசிரியர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் 1961இல் ஒரு கோரிக்கை விடுத்தார்.

ஒரு படத்துக்கு ஒப்பந்தமாகும் முன்பு அப்படத்தைத் தென்னாப்பிரிக்காவில் திரையிடக் கூடாதென ஒப்பந்தம் செய்து கொள்ளும்படி அவர்களைக் கேட்டுக் கொண்டார்.

ஏன் தெரியுமா? தென்னாப்பிரிக்க வெள்ளை நிறவெறி அரசு, கறுப்பின மக்களை எதிர்த்து இனஒதுக்கலைக் கடைப்பிடித்து வந்ததால் அந்த அரசை எல்லா வகையிலும் உலகமே புறக்கணித்தது.

இந்தப் புறக்கணிப்பில் ஆலிவுட்டும் சேர்ந்து கொண்டது. ஆலிவுட் கலைஞர்களில் வெள்ளையர்கள் பெரும்பான்மையாக இருந்தும் அவர்களைத் திரட்டி தென்னாப்பிரிக்காவுக்குப் பாடம் புகட்டியவர் மார்லான் பிராண்டோ.

அவ்வளவு பெரிய பாடம் இல்லையென்றாலும் முத்தையா முரளிதரன் போன்றவர்களின் இரண்டகத்துக்கு நீங்கள் சிறிய பாடமாவது புகட்டலாமே விஜய்?

இனஒதுக்கல் கோலோச்சிய காலத்தில் தென்னாப்பிரிக்கா சென்று இசை நிகழ்ச்சிகள் நடத்தி விட்டு வந்த தமிழக பக்திப் பாடகர் பித்துக்குளி முருகதாசை இந்திய அரசு நேரில் அழைத்துக் கண்டித்தது.

விளையாட்டுத் துறைப் புறக்கணிப்பால் தலைசிறந்த தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீர்ர்கள் கிரயம் பொல்லாக், பேரி ரிச்சர்ட்ஸ் போன்றோர் தங்கள் கிரிக்கெட் வாழ்வையே இழந்தனர். தம் வாழ்நாளில் ஒரே ஒரு சர்வதேச ஆட்டம் கூட அவர்களால் ஆட முடியவில்லை.

கிரிக்கெட் விளையாட்டின் வரலாற்றில் ஒப்பாரும் மிக்காருமில்லாத மட்டையடி வீர்ராக விளங்கியவர் யார் என்று முத்தையா முரளிதரனிடமே கேட்டுப் பாருங்கள், டான் பிராட்மன் என்ற விடை கிடைக்கும்.

பிராட்மன் 1971ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க அதிபர் ஜான் ஃபார்ஸ்டரைச் சந்தித்த போது, தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியில் கறுப்பின வீர்ர்களைச் சேர்த்துக் கொள்ளாமை குறித்துக் கேள்வி எழுப்பினார். அறிவில் பின்தங்கிய கறுப்பர்களால் எப்படி வெள்ளையர்கள் போல் அழகாகக் கிரிக்கெட் விளையாட முடியுமெனக் கிண்டலடித்தார் ஃபார்ஸ்டர்.

“நீங்கள் கேரி சோபர்ஸ் எனும் மாபெரும் கறுப்பினக் கிரிக்கெட்டர் பந்தடித்து ஆடும் ஒயிலையும் மிடுக்கையும் கண்டதில்லையா ஃபாஸ்டர்?” எனக் கேட்டார் பிராட்மன். நிறவெறியில் நீங்கள் முரண்டு பிடிக்கும் வரை ஆஸ்திரேலியக் கிரிக்கெட் அணி ஒருபோதும் தென்னாப்பிரிக்காவில் வாசல் மிதியாது என்று அறிவித்தார்.

மண்டேலா சிறையிலிருந்து மீண்டு வந்ததும், பிராட்மன் குறித்து அன்புடன் வினவினாராம்! விளையாட்டுத் துறையிலான இனஒதுக்கலைக் கைவிட்ட பிறகு தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியை நெல்சன் மண்டேலாவே இந்தியாவுக்கு அழைத்து வந்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

கிரகாம் கூச் தலைமையிலான இங்கிலாந்து அணி தடையை மீறி தென்னாப்பிரிக்கா செல்லலாம் என 1982இல் முடிவெடுத்தது.

இந்தப் பயணம் கலகப் பயணம் என்றும், பயணம் சென்றோர் கலக அணியினர் என்றும் அழைக்கப்பட்டனர்.

”ஆல்-ரவுண்டர்’ இயான் போதமைத் தவிர முழு வலிமையுடன் தென்னாப்பிரிக்காவில் களமிறங்கிய இந்த இங்கிலாந்து அணியினரை உலக ஊடகங்களும் அரசியல் தலைவர்களும் கடுமையாக எதிர்த்தனர். அவர்களைக் “கேவலமான பன்னிருவர்” என இங்கிலாந்து நாடாளுமன்றமே வண்ணித்தது.

அது மட்டுமல்ல, அந்த அணியினர் பன்னாட்டுக் கிரிக்கெட்டிலிருந்து மூன்றாண்டுக் காலத்துக்கு விலக்கி வைக்கப்பட்டனர். இங்கிலாந்தின் தலைசிறந்த மட்டையாளர்களில் ஒருவரான ஜெஃப்ரி பாய்காட் உள்ளிட்டோரின் கிரிக்கெட் வாழ்க்கை அத்துடன் முடிவுக்கு வந்தது.

வரலாற்றில் ஒரே ஒரு முறைதான் இந்தியா டேவிஸ் கோப்பை டென்னிஸ் இறுதிப் போட்டி வரை முன்னேறியது. அது 1974ஆம் ஆண்டு. விஜய் அமிர்தராஜ் ஒற்றையர் ஆட்டத்திலும், விஜய் ஆன்ந்த் உடன்பிறப்புகள் இரட்டையர் ஆட்டத்திலும் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்ததால் கோப்பை இந்தியாவுக்கே என்று நம்பப்பட்டது.

ஆனால் இந்த இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்த்து விளையாட வேண்டிய கட்டாயம். என்ன செய்வது? புறக்கணிப்பது தவிர வேறு வழியில்லை என்று இந்திய அரசு சொல்லி விட்டது.

பிற்காலத்தில் ஐநா துணைக்கூட்டம் ஒன்றில் விஜய் அமிர்தராஜ் இது பற்றிப் பேசினார். ”அப்போது ஏமாற்றமாக இருந்தாலும் இந்தப் புறக்கணிப்பு எவ்வளவு சரியானது என்பதைத் தெரிந்து கொண்ட போது பெருமைப்பட்டேன்” என்றார். விஜய் அமிர்தராஜுக்குக் கிடைத்த பெருமை சிறிதாவது விஜய் சேதுபதிக்கும் கிடைக்க வேண்டும் அல்லவா?

ஒப்புக் கொண்டதிலிருந்து இப்போது பின்னெடுப்பது உங்களுக்கு சங்கடமாகத் தெரியலாம், ஆனால் எதிர்காலம் உங்களைப் போற்றும் என்பதை எண்ணிப் பாருங்கள்.

விஜய் சேதுபதி அவர்களே! முத்தையா முரளிதரன் பற்றிய படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு ஒப்பந்தம் செய்த பின் எப்படிப் பின்வாங்குவது? என்று நீங்கள் தயங்கத் தேவையில்லை. நம் காலத்தின் தலைசிறந்த பூதியல் (இயற்பியல்) அறிவியலர் ஸ்டீபன் ஹாக்கிங் 2013ஆம் ஆண்டு இசுரேலில் ஒரு கல்வி ஒன்றுகூடலுக்கு வந்த அழைப்பை ஏற்றுக் கொண்டிருந்தார்.

இசுரேல் நாட்டின் அதிபரும் அதில் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் பாலத்தீனர்களுக்கு எதிராக இசுரேல் நடத்தி வரும் கொடுமைகளைக் கண்டித்து அவர் இம்மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என்று பல நண்பர்களும் கேட்டுக் கொண்ட போது அதை ஏற்று இசுரேல் செல்வதில்லை என்று அறிவித்தார். துயருற்ற பாலத்தீன மக்களுக்கு அவரால் முடிந்த ஒரு சிறு ஆறுதல்!

உங்கள் சக தமிழர்களுக்கு சிங்களப் பகை புரிந்த கொடுமைகளை நியாயப்படுத்திய ஒருவராக நடிக்க மறுத்து, விஜய், நீங்களும் தரலாமே சிறு ஆறுதல்?

அண்மையில் மறைந்த எஸ்.பி. பாலசுப்ரமண்யம் போன்ற தமிழ்நாட்டுத் திரை ஆளுமைகள் இலங்கை செல்ல ஒப்புக் கொண்டு பிறகு தமிழர்களின் வேண்டுகோளை ஏற்றுப் போகாமலிருந்த செய்தி தெரியுமா உங்களுக்கு?

அமிதாப் பச்சன் போன்ற வேற்றுமொழி ஆளுமைகளும் கூட தமிழர்களின் உணர்வை மதித்து இலங்கை நிகழ்ச்சிகளைப் புறக்கணித்தார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

சர்வதேச இந்தியத் திரைப்பட விழா சொதப்பியதே. நினைவுள்ளதா? இந்தி நடிகர்கள் கூட தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தார்கள். தமிழராகிய நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள்?

இனவழிப்புக்கு நீதி கோரித் தமிழினம் கடினமான நீண்ட போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கும் இக்காலத்தில் நீங்கள் எடுக்கும் முடிவு நீதியை மறுக்கும் இனக் கொலைக் குற்றவாளிகளுக்குத் துணைபோகும் இரண்டகருக்கு ஊக்கமளிப்பதாக இருந்து விடக் கூடாது என விரும்புகிறேன், விரும்புகிறோம்.

அன்புடன்,
தியாகு / பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்.
14/10/2020

Actor Vijay Sethupathi faces backlash over Muttiah Muralitharan biopic ‘800’

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் டி.ராஜேந்தர் தலைவர் பதவிக்கும் மன்னன் செயலாளர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர்

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் டி.ராஜேந்தர் தலைவர் பதவிக்கும் மன்னன் செயலாளர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

t rajendarதயாரிப்பாளர் சங்க தேர்தலில் திரு. டி.ராஜேந்தர் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். மன்னன் பிலிம்ஸ் திரு.மன்னன் செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறார். இவரது அணியில் இடம்பெறும் மற்ற நபர்கள் பற்றிய விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் எனக்கு தாய் வீடு. வரும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு நான்போட்டியிடுகிறேன். என்னுடன் மன்னன் செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறார் என்று டி.ராஜேந்தர் கூறினார்.

மேலும் 7 மாதங்களுக்கும் மேலாக முடிக்கிடக்கும் திரையரங்குகளை 50 சதவிதம் பார்வையாளர்களுடன் அனுமதிக்கலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது. பல நாட்களுக்கு பிறகு திறக்கப்படும் திரையரங்கு டிக்கேட்களுக்கு விதிக்கப்படும் 12% GST வரியை நமது பாரத பிரதமர் ரத்து செய்ய வேண்டும் என்றும் தண்ணீர் இல்லாத தாமரை போல்
வாடும் இந்திய திரையுலகை வாழ வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். மேலும் தமிழக முதல்வருக்கு 8% கேளிக்கை (LBT) வரியை ரத்து செய்யுமாறு கோரிக்கை வைத்தார்.

உலகம் முழுவதும் VPF (Virtual Print Fee கட்டணம் ரத்தாகி இரண்டு ஆண்டுகளாகிறது. ஆனால் நமது இந்திய நாட்டில் மட்டும் இந்த கட்டணம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த கட்டணம் முழுவதுமாக நிறுத்தப்பட வேண்டும் என்று கூறினார்.

T Rajendar to contest in Film Producer Council

‘காதல்’ படத்தின் 2ஆம் பாகமா?.. கருப்பன் டைரக்டரின் அடுத்த படம் ‘ஐஸ்வர்யா முருகன்’

‘காதல்’ படத்தின் 2ஆம் பாகமா?.. கருப்பன் டைரக்டரின் அடுத்த படம் ‘ஐஸ்வர்யா முருகன்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

’ரேனிகுண்டா’ & ‘கருப்பன்’ ஆகிய வெற்றிப்படங்களை இயக்கியவர் பன்னீர்செல்வம்.

இவரின் அடுத்த படத்தின் டைட்டில் ’ஐஸ்வர்யா முருகன்’ என வைக்கப்பட்டுள்ளது.

‘நான் தான் சிவா’ பட நாயகன் வினோத் கேசவன் நாயகனாக நடிக்க, வித்யா பிள்ளை நாயகியாக நடிக்கிறார்.

சூப்பர் ஹிட்டான காதல் படத்தில் பரத் & சந்தியா ஏற்ற கேரக்டர்கள் ஐஸ்வர்யா முருகன் கேரக்டர்களே படத்தின் பெயராக இருப்பதால் அந்த படத்தின் தொடர்ச்சியாக இருக்குமோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதன் டைட்டில் லுக்கை லிங்குசாமி வெளியிட பர்ஸ்ட் லுக்கை கௌதம் மேனன் வெளியிட்டுள்ளார்.

கணேஷ் ராகவேந்திரா என்பவர் இசையமைக்க அர்ஜுன் ஜனா என்பவரின் ஒளிப்பதிவு செய்கிறார்.

ஜான் ஆபிரகாம் என்பவரின் படத்தொகுப்பில் முகமது என்பவரின் கலை இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் அனைத்து பாடல்களையும் யுகபாரதி எழுதுகிறார்.

இந்த படத்தை மாஸ்டர்பீஸ் புரடொக்சன்ஸ் மற்றும் ராக்போர்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

aishwarya murugan first look

Director Gautham Menon unveiled the first look poster of Iswarya Murugan

BREAKING ராகவேந்திரா மண்டபத்திற்கு சொத்து வரி செலுத்த பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக வழக்கு; ரஜினிக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

BREAKING ராகவேந்திரா மண்டபத்திற்கு சொத்து வரி செலுத்த பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக வழக்கு; ரஜினிக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanthஇராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு ரூ. 6.50 லட்சம் சொத்து வரி செலுத்த வேண்டும் என மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதை எதிர்த்து ரஜினிகாந்த் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், பொதுமுடக்கம் காரணமாக திருமண மஹால் மூடியே கிடந்தது எனவும் அதனால் சொத்து வரியை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

மேலும் மாநகராட்சிக்கு இதுகுறித்த விளக்கம் அளித்து நோட்டீஸ் அனுப்பியும் இதுவரை மாநகராட்சி தரப்பில் பதில் இல்லை எனவும் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நோட்டீஸ் அனுப்பிய 10 நாட்களில் வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதாக நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

மேலும் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்யப்போவதாக எச்சரிக்கை விடுத்தார்.

அபராதம் விதிக்க நேரிடும் என்கிற ஐகோர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து வழக்கை வாபஸ் பெறுவதாக ரஜினிகாந்த் தரப்பு பதில்.

Madras High Court condemns actor Rajinikanth

தமிழ் பாரம்பரிய முறைப்படி பிறந்த நாள் கொண்டாடிய ‘கட்டில்’ டீம்

தமிழ் பாரம்பரிய முறைப்படி பிறந்த நாள் கொண்டாடிய ‘கட்டில்’ டீம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kattil Teamமேப்பிள் லீப்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இ.வி.கணேஷ்பாபு இயக்கி, கதாநாயகனாக நடிக்கும் கட்டில் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று நிறைவு பெற்றது.

திரையுலக ஜம்பவானாக விளங்கும் B.லெனின் அவர்கள் கதை,திரைக்கதை,வசனத்தை எழுதியிருப்பதுடன் இப்படத்தின் படத்தொகுப்பையும் மேற்கொள்கிறார்.

சிருஷ்டிடாங்கே கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன், இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் மருமகள் கீதா கைலாசம், தமிழகத்தின் முன்னணி ஓவியரான ஷ்யாம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தமிழேந்தி இன்று கட்டில் படக்குழுவினருடன் பிறந்த நாளை கொண்டாடினார்.

இவர் இப்படத்தின் இயக்குனர் மற்றும் கதாநாயகனான இ.வி.கணேஷ்பாபு அவர்களின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் பாரம்பரிய முறைப்படி விளக்கு ஏற்றி பிறந்த நாள் வாழ்த்துக்கள் பெற்றார் தமிழேந்தி. பின்பு இன்றைய நாகரிகத்தின் படி கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார்.

பிறந்த நாள் பாடலை இப்படத்தின் இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவா பாட, உடன் இப்படத்தில் நடித்திருக்கும் இ.வி.கணேஷ்பாபு, சிருஷ்டிடாங்கே, எடிட்டர் B.லெனின், கீதா கைலாசம் ஆகியோர் கலந்து கொண்டு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

‘இந்திய கலாச்சாரத்தின் பல்வேறு அடையாளங்களையும் தமிழ் பாரம்பரியத்தையும் ‘கட்டில்’ திரைப்படம் வெளிப்படுத்துவதோடு மட்டுமன்றி தன் மகன் பிறந்த நாளையும் தமிழ் பாரம்பரிய முறைப்படி விளக்கு ஏற்றி கட்டில் படக்குழுவோடு கொண்டாடியது என்றும் மறக்கமுடியாத நிகழ்வாகும். அதுவும் இன்று கட்டில் படப்பிடிப்பின் நிறைவு நாளில் அனைத்து முக்கிய கட்டில் படக்குழுவினரும் கலந்துக்கொண்டது தனி சிறப்பு’ என்று இப்படத்தின் கதாநாயகனும், இயக்குனருமான இ.வி.கணேஷ்பாபு தெரிவித்தார்.

வைட்ஆங்கிள் ரவிசங்கரன் கட்டில் படத்தின் ஒளிப்பதிவு செய்கிறார். “மெட்டிஒலி” சாந்தி நடனம் அமைத்திருக்கிறார்.

Director EV Ganesh Babu celebrates his son’s birthday in a Tamil culture

முத்தையா முரளிதரனாகவே மாறிய விஜய்சேதுபதி; அசத்தலான ‘800’ பர்ஸ்ட் லுக்

முத்தையா முரளிதரனாகவே மாறிய விஜய்சேதுபதி; அசத்தலான ‘800’ பர்ஸ்ட் லுக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு படம் குறித்த அறிவிப்பு உலகளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்குவது மிகவும் அரிதானது. உலகளவில் தலைசிறந்த ஆளுமைகளின் பயோபிக் மட்டுமே, அப்படியொரு எதிர்பார்ப்பை உருவாக்கும். இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர், மிகப்பெரிய ஆளுமையான முத்தையா முரளிதரன் பயோபிக்கை அறிவிப்பதில் மூவி ட்ரைன் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் டார் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் பெருமிதம் கொள்கிறது.

தமிழகத்தில் இருந்து ஆங்கிலேயர்களால் தேயிலை தோட்டத்தில் வேலை பார்க்க அழைத்து செல்லபட்டு அங்கு தினக்கூலிகளாக வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு குடும்பம் மிகவும் ஏழ்மையிலிருந்து தொடங்கி படிப்படியாக வளர்கிறது. அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் கஷ்டப்பட்டுப் படித்து, வளரும் போது கிரிக்கெட் மீது ஆர்வம் கொள்கிறான்.

அப்போது அவருக்கு சமூகத்திலிருந்து ஏற்படும் இன்னல்களை வெற்றிகரமாக கடந்து இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்கிறார். அதற்குப் பிறகு அவரை வளரவிடாமல் தடுக்க தடைகள் வரும் போது, ஒவ்வொரு தடையையும் தகர்த்து எறிகிறார். கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை உடைக்கும் போது நிறவெறி, பந்துவீச்சில் சர்ச்சை என சிக்குகிறார்.

அந்த தடையையும் தாண்டி உலக கிரிக்கெட் வரலாற்றில் 800 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைக்கிறார். அவர் தான் முத்தையா முரளிதரன்.

இந்தப் படம் பார்வையாளர்களுக்கு ஒரு உத்வேகத்தை அளிக்கும். எந்தவொரு தடைகள் வந்தாலும் தகர்த்தெறிய நம்பிக்கை அளிக்கக் கூடிய கதையாக வடிவமைத்துள்ளார் இயக்குநர் M.S. ஸ்ரீபதி. 800 விக்கெட்கள் வீழ்த்தி சாதனை படைத்திருப்பதால், இந்த முத்தையா முரளிதரன் பயோபிக் கதைக்கு கூட ‘800’ எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு.

முத்தையா முரளிதரனின் வாழ்க்கைக் கதையைக் கேட்டுவிட்டு தமிழகத்தின் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி உடனே நடிக்க ஒப்புக் கொண்டார். மேலும், அவருடைய உடலமைப்பும் முத்தையா முரளிதரனுக்கு நிறைய ஒத்துப் போகிறது. மிக ஆர்வமாக இந்தப் படத்தில் நடிப்பதற்கு தயாராகி வருகிறார்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியவை இன்று நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் – சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் வெளியிடப்பட்டது.

உலகளவில் கவனம் ஈர்த்து வரும் ஐபிஎல் போட்டிக்கு இடையே இந்த பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு மக்களுக்கு ஆர்வத்தை அதிகப்படுத்தியிருக்கிறது படக்குழு. ‘800’ படத்தின் மோஷன் போஸ்டரைப் பார்த்தாலே கதைக்களம் என்ன என்பதை அனைவராலும் யூகித்துவிட முடியும்.

‘800’ படத்தின் படப்பிடிப்பு 2021-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கவுள்ளது. இந்தியா, இலங்கை, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் மிகப்பிரம்மாண்டமாகக் காட்சிப்படுத்த இருக்கிறோம். ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், இசையமைப்பாளராக சாம் சி.எஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

விஜய் சேதுபதியுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மிக மும்முரமாக நடைபெற்று வருகிறது. முத்தையா முரளிதரனின் புகழை மனதில் வைத்து இந்தி, வங்காளம், சிங்களம் எனப் பல மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. ஆங்கில சப்டைட்டில்களோடு ஆங்கில வடிவமும் திட்டமிடப்பட்டுள்ளது.

தனது கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளது குறித்து முத்தையா முரளிதரன், “திரைக்கதை தயாரானவுடன், இதில் விஜய் சேதுபதியைத் தவிர வேறு யாரும் சிறப்பாகப் பொருந்த மாட்டார்கள் என்று நினைத்தோம். அவர் மிகவும் திறமையான நடிகர் என நான் நினைக்கிறேன்.

எனது பந்துவீச்சு முறையை அவர் கண்டிப்பாக அப்படியே செய்து காட்டுவார். அவர் மிக உயர்ந்த நடிகர்களில் ஒருவர் என்பதால் அவரை நான் முழுமையாக நம்புகிறேன். கண்டிப்பாக இந்தப் படத்தில் அவர் அற்புதங்களைச் செய்வார்” என்று தெரிவித்தார்.

முத்தையா முரளிதரனாக நடிக்கவுள்ளது குறித்து விஜய் சேதுபதி பேசுகையில், “அவரது கதையைக் கேட்டது, அவருடன் செலவிட்ட நேரம் எல்லாம் மிக நன்றாக இருந்தது. அவர் எங்கு சென்றாலும் அங்கு ஒரு முத்திரையை ஏற்படுத்தும் வசீகரமான ஆளுமை. அவரது வாழ்க்கை எனக்குப் பிடிக்கும்.

ஏனென்றால் ரசிகர்கள் அவரை களத்தில், ஆட்டத்தில் பார்த்திருக்கிறார்கள். ஆனால் ஒரு சிலர் தான் களத்தைத் தாண்டி அவரது ஆளுமையைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். மிகவும் போற்றத்தகுந்த, நேசிக்கத்தகுந்த மனிதர். மிகவும் அழகான மனிதர், அவரது கதை கண்டிப்பாக சொல்லப்பட வேண்டியது” என்று தெரிவித்தார்.

கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய ஆளுமையாக உள்ள முத்தையா முரளிதரன் சந்தித்த இன்னல்களை எப்படியெல்லாம் தாண்டி வெற்றியைத் தொட்டார் என்ற கதை, கண்டிப்பாக பார்வையாளர்களை உத்வேகத்தில் ஆழ்த்தும் என்பதில் சந்தேகமில்லை.

800 first look
First look of Makkal Selvan Vijay sethuapthi’s 800 out

More Articles
Follows