விடுங்க விஜய்சேதுபதி.. அதெல்லாம் வேணாம்..; முத்தையா முரளிதரன் அப்செட்

விடுங்க விஜய்சேதுபதி.. அதெல்லாம் வேணாம்..; முத்தையா முரளிதரன் அப்செட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathi as muttiah muralitharanஇலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘800’ படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

இலங்கையில் போர் நடைபெற்ற போது தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டவர் முத்தையா முரளிதரன் என்பதால் அந்த படத்தில் மக்கள் செல்வன் நடிக்க கூடாது என தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

இந்தநிலையில், இப்பட சர்ச்சைகள் குறித்து முத்தையா முரளிதரனே ஓர் அறிக்கை வெளியிட்டு விளக்கம் கொடுத்தார்.

நான் தமிழ் பற்றாளன் என்றெல்லாம் எவ்வளவோ சொல்லி பார்த்தார்.

ஆனாலும் எதிர்ப்புகள் ஓயவில்லை. அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட விஜய்சேதுபதி கூட இது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விகளை தவிர்த்தார்.

இந்தநிலையில், இப்பட சர்ச்சைகள் குறித்தும் விஜய்சேதுபதி இப்படத்தில் இருந்து விலகிட வேண்டி முத்தையா முரளிதரனே மீண்டும் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த விஜய்சேதுபதி.. நன்றி வணக்கம் என்பதை மட்டும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்த இரு செய்திகளை பார்த்த மக்கள் செல்வன் என் பெயரிட்ட சீனுராமசாமி தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது…

தனது ஹீரோ அந்தஸ்தை உயர்த்திக் காட்ட நினைக்காமல்
எப்போதும் போல எளிமையாக
நன்றி வணக்கம்
என்று தன்னை நாடி வந்தவருக்கு
விடை தந்து தமிழ் மக்களின் அன்புக்கு அமைதி வழியில் மேன்மை செய்த மக்கள்செல்வன் விஜய் சேதுபதிக்கு வாழ்த்துக்கள்.

என பதிவிட்டுள்ளார்.

Muthiah Muralidaran statement about 800 movie and Vijay Sethupathi reaction

muttiah muralitharan statement

என் கதையை எடுத்து உல்டா செய்து லாபம் சம்பாதிக்கும் கார்த்திக் சுப்பராஜ்..; அஜயன் பாலா அதிரடி புகார்

என் கதையை எடுத்து உல்டா செய்து லாபம் சம்பாதிக்கும் கார்த்திக் சுப்பராஜ்..; அஜயன் பாலா அதிரடி புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அமேசான் ஆன்லைன் ஓடிடி தளத்தில் ஓரிரு தினங்களுக்கு முன் வெளியாகியுள்ள ஆந்தாலஜி ‘புத்தம் புதுக் காலை’.

இதில் ஐந்து குறும்படங்கள் உள்ளன.

இதனை ராஜீவ் மேனன், கெளதம் மேனன், சுஹாசினி மணிரத்னம், சுதா கொங்கரா மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் இயக்கியுள்ளனர்.

இந்த ஆந்தாலஜி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

இதில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ‘மிராக்கிள்’ குறும்படத்தில் பாபி சிம்ஹா நடித்துள்ளார். இந்த படம் தான் நன்றாக உள்ளது என விமர்சனங்களை பெற்றது.

இந்த குறும்படம் தான் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

இந்தக் கதை தனது குறும்படத்தின் காப்பி என்று குற்றம்சாட்டியுள்ளார் அஜயன் பாலா.

இது தொடர்பாக தனது ஃபேஸ்புக் பதிவில் அஜயன் பாலா கூறியிருப்பதாவது:

“நேற்று நண்பர் இலங்கைவேந்தன் போன் செய்து உடனே அமேசானில் ‘புத்தம் புதுக் காலை’ படம் பாருங்க என பதட்டத்துடன் சொன்னார் . என்ன என கேட்டபோது அவர் சொன்ன தகவல் ஷாக்கா இருந்தது .

அதில் கடைசியாக் வரும் ‘மிராக்கிள்’ படம் அப்படியே நான் நடிக்க நிலம் நடிப்பு பயிற்சி மாணவர்களுக்காக கடந்த வருட இறுதியில் உருவாக்கி கரோனாவால் போஸ்ட் புரொட்க்‌ஷன் தாமதமாகி கடந்த மாதம் யூ-டியூப்பில் வெளியானது என் ‘சச்சின் கிரிக்கெட் கிளப்’ குறும்படம்.

இதன் கதையை அப்படியே சுட்டுவிட்டார்கள் என்றார் அவர். நானும் இரவே பார்த்தேன். என் கதையில் பத்து பேர் அவர்கள் கதையில் இரண்டு பேர். கதைக்களம் பகல் அதில் இரவு.

மற்றபடி பேராசை பெருநட்டம் எனும் என் கதைக்கருவும் பணத்தேவைக்காகத் தவறு செய்யப்போய் இருக்கும் பணத்தை கோட்டை விடுவதுமான கதை அமைப்பும் இறுதியில் டம்மி பணம் எனும் கதையின் முக்கிய திருப்பம் க்ளைமாக்ஸாக அமைந்திருப்பதும் அப்படியே இருக்கிறது.

படத்தில் நடித்துள்ள பாபி சிம்ஹா என் நட்பு வட்டத்தில் இருப்பவர். பன்னிரெண்டு வருடமாய் நன்கு பழகியவர். இதை சட்டப்பூர்வமாய் எதிர்கொள்ள வழி இருக்கிறதா தெரியவில்லை. ஒரு குறும்படத்தின் முக்கிய தகுதியே தனித்த ஐடியா தான். இருபது வருடமாய் போராடி படம் இயக்க முடியவில்லை. சரி ஒரு குறும்படமாவது எடுக்கலாம் என்று பார்த்தால் அதையும் உல்டா அடித்து ஓடிடிக்கு விற்று லாபம் சம்பாதிக்கும் அளவுக்கு தமிழில் கதை பஞ்சமா?

எத்தனை சிறுகதைகள் கொட்டிக் கிடக்கிறது. எத்தனை எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு ஏன் ஒரு எழுத்தாளனின் கதையை பயன்படுத்தும் எண்ணம் வருவதில்லை. சினிமாவுக்கு ஆரோக்கியமானதல்ல. சரி சுட்டார்களே ஒழுங்காகவாவது திரைக்கதை அமைத்தார்களா அதுவும் இல்லை. ஒரு டயரை திருடப்போகும் வீட்டிலும் சுமந்து செல்லும் லாஜிக் இல்லாத மொக்கை காட்சியெல்லாம் ஒரிஜினலாக சிந்திக்கும் படத்தில் வரவே வராது”

இவ்வாறு அஜயன் பாலா தெரிவித்துள்ளார்.

Miracle short film

Karthik Subbaraj’s miracle on OTT copied ?

‘மெர்சல்’ பட புரொடியூசருடன் இணைந்து ‘கண்ணாமூச்சி’ காட்டும் இயக்குனர் வரலட்சுமி

‘மெர்சல்’ பட புரொடியூசருடன் இணைந்து ‘கண்ணாமூச்சி’ காட்டும் இயக்குனர் வரலட்சுமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

varalaxmi kannamoochiஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் சின்
படத்தின் மூலம் வரலட்சுமி சரத்குமார் இயக்குனராகிறார்.

” கண்ணாமூச்சி” என்ற அந்த
படத் தலைப்பை அரசியல் சமூகம் மற்றும் திரை உலகை சார்ந்த 50 பெண் பிரபலங்கள் ஒரே சமயத்தில் வெளியிட்டனர்.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் விஜய் நடித்து மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை புரிந்த படம் ” மெர்சல்”
இது இந்த நிறுவனம் தயாரித்த 100வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிறுவனம் சார்பில் அதன் உரிமையாளரான என்.இராமசாமி அடுத்து ” கண்ணாமூச்சி” என்ற படத்தை தயாரிக்கிறார்.

இப்படம் மூலம் வரலட்சுமி சரத்குமார் இயக்குனராக அறிமுகமாகிறார்.

இந்த நிறுவனம் அறிமுகம் செய்யும் முதல் பெண் இயக்குனரும் இவர் தான்.

பல சவாலான வேடங்களை ஏற்று தனக்கென்று நடிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர் வரலட்சுமி சரத்குமார்.

இதுவரை ஏற்று நடிக்காத வேடமேற்று திரைக்கதை அமைத்து தனது முதல் படமாக “கண்ணாமூச்சி” படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுக்கிறார்.

இந்த படத்தின் தலைப்பான “கண்ணாமூச்சி” தலைப்பை இன்று (18.10.2020 ஞாயிறு)
காலையில் அரசியல், சமூகம், மற்றும் திரை உலகை சார்ந்த பெண் பிரபலங்கள் ஒரே சமயத்தில் வெளியிட்டு சாதனை படைத்தனர்.

படத் தலைப்பை வெளியிட்ட பெண் பிரபலங்கள் வருமாறு..

பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சங்கீதா விஜய், கிருத்திகா உதய்நிதி, ராதிகா சரத்குமார், குஷ்பு சுந்தர், சுகாசினி மணிரத்தினம், ஹேமா ருக்மணி, ரம்யா சுப்ரமணியம், ரேவதி, ஜோதிகா, சமந்தா, திரிஷா, சிம்ரன், சினேகா, தமன்னா, லட்சுமி ராய், ஹன்சிகா, டாப்சி, அபிராமி, சாய் பல்லவி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ரஜினிகாந்த், சுருதிஹாசன், அக்சராஹாசன், ஐஸ்வர்யா ராஜேஷ், ரகுல் ப்ரீத், கீர்த்தி சுரேஷ், ரெஜினா , காஜல் அகர்வால், மஞ்சிமா மோகன், அதிதிரவிசந்திரன், பாவனா, திவ்யதர்ஷினி (டி.டி.) சோனியா அகர்வால், ரம்யா நம்பீசன், சாயிஷா, அதிதிராவ் ஹைதிரி, ஆர்த்தி ரவி, லட்சுமி மஞ்சு, சுஜாதா, கீதாஞ்சலி, கிக்சோனு, சின்மயி, அப்சரா ரெட்டி, சாரதா ஸ்ரீநாத், பிருந்தா மாஸ்டர், வாசுகி, டைரக்டர் காயத்ரி, ஜோஷ்னா சின்னப்பா, சிபி ஸ்ரீதேவி, ஆகிய ஐம்பது பேர் தான் அவர்கள் இதுவும் ஒரு சாதனை தான்.

Actress Varalaxmi Sarathkumar turns director

நடிகன் நடிப்பதால் நாடு சீரழியாது.. ஆளக்கூடாதவர்கள் ஆண்டால் நாடு சீரழியும்.. – பேரரசு

நடிகன் நடிப்பதால் நாடு சீரழியாது.. ஆளக்கூடாதவர்கள் ஆண்டால் நாடு சீரழியும்.. – பேரரசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

perarasuஇலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘800’ படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

அந்த படத்தில் மக்கள் செல்வன் நடிக்க கூடாது என தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

இந்தநிலையில், இப்பட சர்ச்சை குறித்து இயக்குனர் பேரரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்….

முத்தையா முரளிதரன்
தமிழின துரோகி!
விடுதலை புலிகளுக்கு எதிரானவர்!

அவரின் வாழ்க்கை வரலாறு படமான ‘800’ திரைப்படத்தில் விஜயசேதுபதி நடிக்கக் கூடாது என்று இன்று தமிழ்ப் பற்றோடு பல
கண்டனக்குரல்கள்,
எதிர்ப்புக்குரல்கள்
இது வரவேற்கக்கூடிய விஷயம்தான்!

இன்று குரல் குடுக்கும் சில அரசியல்வாதிகள்
‘விடுதலை புலிகள்’ தீவிரவாத இயக்கம் என்று அறிவித்த கட்சியோடு கூட்டணி வைத்ததே, அப்பொழுது எங்கே போனது இந்த தமிழ்ப்பற்று?

தமிழர்கள் லட்சக்கணக்கில் கொன்று குவிப்பதற்கு இங்கு சில கட்சிகளே காரணமாக இருந்ததே அதற்கு எதிராக இந்தக் குரல்கள் ஏன் ஒலிக்கவில்லை???

விடுதலை புலிகளையும், ஈழ தமிழினத்தை அழிப்பதற்கு ஒரு தேசியக் கட்சி உறுதுணையாக இருந்ததே அதற்கு எதிராக இந்தக்குரல்கள் ஏன் ஒலிக்கவில்லை???

மூன்று மணிநேர சினிமாவிற்கு இவ்வளவு எதிர்க்கும் நீங்கள்,
தமிழினம் அழியக்காரணாம இருந்த சில கட்சியிடம் , ஆளுவதற்கு
தமிழ்நாட்டையே ஒப்படைக்க துடிக்கிறீர்களே!!!
இப்பொழுது எங்கே போனது உங்கள் தமிழ்ப்பற்று!

ஒருவர் வேடத்தில் ஒரு சினிமா நடிகன் நடிப்பதால் இந்த நாடு சீரழிந்து விடாது!
ஆனால் ஆளக்கூடாதவர்கள் ஆண்டால் இந்த நாடு சீரழிந்து விடும்!

இந்தப் பதிவு
முத்தையா முரளிதரன்க்கு ஆதரவானது அல்ல!
சில தமிழப்பற்று வேடதாரிகளுக்கு எதிரானது!
* பேரரசு*

Director Perarasu opens up on Muralitharan biopic

என் படம் நல்லாயில்லை என்றாலும் அதற்குரிய விமர்சனத்தை ஏற்றுக் கொள்வேன்.. – மிஷ்கின்

என் படம் நல்லாயில்லை என்றாலும் அதற்குரிய விமர்சனத்தை ஏற்றுக் கொள்வேன்.. – மிஷ்கின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mysskinஇன்று தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் புதிய அலுவலகத்தின் திறப்பு விழா விமர்சையாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் மிஷ்கின் அவர்கள் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி புது அலுவலகத்தை நல்ல முறையில் திறந்து வைத்தார்.

மிஷ்கின் பேசுகையில்…

சித்திரம் பேசுதடி படம் தொடங்கி இப்போது வரை என்னை வழிநடத்திச் சென்று கொண்டிருப்பது நீங்கள் மட்டுமே. எத்தனையோ ஏற்ற இறக்கங்கள் இருந்தும் என்னை கை பிடித்து கூட்டிச் சென்றது நீங்கள்தான்.

இன்று எனக்கு படம் சார்ந்த சில வேலைகள் இருப்பினும் இது எனது கடமையாக நினைத்து இந்த அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டேன்.

ஒவ்வொரு படம் வருகையிலும் உங்களின் விமர்சனங்களே எங்களை மேற்கொண்டு வழிநடத்திச் செல்கிறது.

விமர்சனங்களை எப்போதும் இயக்குனர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். நானும் அப்படித்தான் படம் நன்றாக இருந்தால் நல்ல விமர்சனங்களையும் நல்லா இல்லை என்றாலும் அதற்குரிய விமர்சனத்தையும் நிச்சயம் ஏற்றுக் கொள்பவன் . என்று கூறிய மிஷ்கின் தனது புதிய படம் குறித்து பகிர்ந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் எனது புதிய படம் குறித்து உங்கள் மத்தியில் பகிர்ந்து கொள்ள மிகவும் பெருமைப்படுகிறேன்.

பிசாசு 2 படத்தின் கதையை கூறி அதற்கு ஒப்புதலும் வாங்கி விரைவில் படம் துவங்க இருக்கிறது.

ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்க உடன் முற்றிலும் புதுமுகங்கள் நடிப்பில் இப்படம் உருவாக இருக்கிறது. இந்த நிகழ்வை முதற்கட்டமாக உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மேலும் சந்தோஷப்படுகிறேன். இந்த நாளில் உங்களுடன் இருந்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

எப்போதும் இந்த தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கத்துடன் இணைந்து என் முழு ஆதரவைக் கொடுப்பேன் என்றார்.

I accept both positive and negative reviews says director Mysskin

RAJINI FOR CHANGE… ரஜினி ரசிகர்களின் அதிரடி போஸ்டர்..; ஓ விஷயம் இதுதானா.?

RAJINI FOR CHANGE… ரஜினி ரசிகர்களின் அதிரடி போஸ்டர்..; ஓ விஷயம் இதுதானா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini for change postersகொரோனா ஊரடங்கில் மூடப்பட்ட தனது ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு சொத்து வரி குறித்து ரத்து விளக்கம் கேட்டு கோர்ட்டில் முறையீட்டு இருந்தார் ரஜினிகாந்த்.

சென்னை மாநகராட்சியில் முடித்துக் கொள்ள வேண்டிய விஷயத்திற்காக கோர்ட்டை நாடியதால் நீதிபதி எச்சரிச்சை விட பின் வழக்கை வாபஸ் பெற்றார் ரஜினிகாந்த்.

அதாவது… பொதுமுடக்கம் காரணமாக திருமண மஹால் மூடியே கிடந்தது எனவும் அதனால் சொத்து வரியை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

மேலும் மாநகராட்சிக்கு இதுகுறித்த விளக்கம் அளித்து நோட்டீஸ் அனுப்பியும் இதுவரை மாநகராட்சி தரப்பில் பதில் இல்லை எனவும் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நோட்டீஸ் அனுப்பிய 10 நாட்களில் வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதாக நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

மேலும் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்யப்போவதாக எச்சரிக்கை விடுத்தார்.

அபராதம் விதிக்க நேரிடும் என்கிற ஐகோர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து வழக்கை வாபஸ் பெறுவதாக ரஜினிகாந்த் தரப்பு பதிலளித்தனர்.

அதன்பின்னர் ரஜினி தரப்பில் ரூ. 6.50 லட்சம் சொத்து வரியை சென்னை மாநகராட்சியில் செலுத்தினர்.

இதனையடுத்து ரஜினி் இந்த விவகாரம் குறித்து ட்வீட் செய்துள்ளார்.

ராகவேந்திரா மண்டப சொத்து வரி…

நாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும்.

தவறைத் தவிர்த்திருக்கலாம்.

#அனுபவமே_பாடம்

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் ஒரு வால் போஸ்டரை ஒட்டி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளனர். அதில்…

RAJINI FOR CHANGE ரஜினி பார் சேஞ்ச் என வசனம் இடம்பெற்ற போஸ்டரை ரசிகர்கள் ஒட்டியுள்ளனர்.

Rajini for change posters seen across chennai

More Articles
Follows