விஜய்சேதுபதி மகளுக்கு பாலியல் அச்சுறுத்தல் கொடுத்தவனின் அடையாளம் தெரிந்தது

விஜய்சேதுபதி மகளுக்கு பாலியல் அச்சுறுத்தல் கொடுத்தவனின் அடையாளம் தெரிந்தது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathi daughterஇலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படமான ‘800’ என்ற படத்தில் முத்தையா முரளிதரன் கேரக்டரில் விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

ஆனால் இப்பபடம் அறிவிப்பு வெளியானதிலிருந்தே கடும் எதிர்ப்புகள் உருவானது.

தமிழினத்துக்கு துரோகம் செய்த முத்தையா முரளிதரன் கேரக்டரில் நடிக்கக் கூடாது என பல தரப்பினரும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

தமிழக அமைச்சர்களும் விஜய்சேதுபதி எதிர்கால நன்மை கருதி் நல்ல முடிவை எடுக்க வலியுறுத்தினர்.

எனவே விஜய் சேதுபதியை இந்தப் படத்திலிருந்து விலகிக் கொள்ளுமாறு அறிக்கை வெளியிட்டார் முத்தையா முரளிதரன்.

அவரது அறிக்கையை ரீட்வீட் செய்து “நன்றி.. வணக்கம்” என்று கூறி ‘800’படத்திலிருந்து விலகினார் விஜய் சேதுபதி.

இதனிடையில் விஜய் சேதுபதி மகளுக்கு Rithik (Handle: @ItsRithikRajh) என்ற ட்விட்டர் ஐடியில் இருந்து வக்கிரமான வார்த்தைகளுடன் ரேப் மிரட்டல் விடுக்கப்பட்டது.

அந்த மர்ம நபரின் செயலுக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்தன.

தற்போது, அந்த ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த நபர் மீது 3 பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விஜய்சேதுபதி மகளுக்கு பாலியல் அச்சுறுத்தல் கொடுத்தவனின் அடையாளம் தெரிந்தது.

இலங்கையில் இருக்கும் அந்த இளைஞரை கைது செய்ய இண்டர்போலின் உதவியை நாட தமிழக காவல்துறை முடிவு என தகவல்கள் தெரிவிக்கின்றன.

TN Police ask interpol help to find srilankan youth who threaten vijay sethupathi daughter

மாஸ் & க்ளாஸ் நடிகர் ஜீவா..; சூப்பர் குட் ஃபிலிம்ஸின் 91வது படம் பற்றி சந்தோஷ் ராஜன்

மாஸ் & க்ளாஸ் நடிகர் ஜீவா..; சூப்பர் குட் ஃபிலிம்ஸின் 91வது படம் பற்றி சந்தோஷ் ராஜன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென் இந்திய சினிமா துறையில் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஒரு பெரும் வரலாறும், பெருமையும் இருக்கிறது.

தென்னக சினிமாவிற்கு பல தரமான கலைஞர்களை அந்நிறுவனம் தந்திருக்கிறது.

குடும்பங்கள் இணைந்து கொண்டாடும் வகையிலான படைப்புக்களை, உலக ரசிகர்களும் ரசிக்கும் வண்ணம், தொடர்ந்து தந்து வருகிறது. பெரும் வெற்றிப்பயணத்தை பல தசாப்தங்களாக தொடர்ந்து கொண்டிருக்கும் இந்நிறுவனம் ரசிகர்களை எந்த வகையிலும் ஏமாற்றாமல், அவர்கள் கொண்டாடும் படைப்புகளை, தரமான வடிவத்தில் தருவதில் முதன்மையாக இருக்கிறது.

சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவன தயாரிப்பாளர் திரு RB சௌத்ரி அவர்கள் தற்போது இந்நிறுவனம் சார்பில் ஒரு புதிய படத்தை தயாரிக்கவுள்ளார்.

ஜீவா முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை பிரபல இயக்குநர் சசியின் உதவியாளர் சந்தோஷ் ராஜன் இயக்குகிறார்.

தற்போதைக்கு இப்படம் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் “தயாரிப்பு எண் 91” எனக்குறிப்பிடப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு, தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் குழு கலந்து கொள்ள, எளிமையான பூஜையுடன் இன்று காலை ( அக்டோபர் 21, 2020 ) தொடங்கியது.

இயக்குநர் சந்தோஷ் ராஜன் இது குறித்து கூறியதாவது…

தென்னிந்திய சினிமாவின் மிகப்பெரும் ஆளுமைகளுள் ஒருவராக திகழும் திரு RB சௌத்ரி அவர்களின் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன், இயக்குநராக எனது திரைப்பயணம் துவங்குவது, மிகப்பெரும் மகிழ்ச்சியையும், பெருமையும் அளிக்கிறது.

பல பெரும் கலைஞர்களுக்கு, இயக்குநர்களுக்கு திரையுலகில் திறவுகோலாக, சூப்பர் குட் ஃபிலிம்ஸ் மூலம் வாய்ப்பளித்து, உருவாக்கிய பெருமை கொண்டவர் RB சௌத்ரி அவர்கள்.

அப்படியான நிறுவனத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்திருப்பது பெரும் ஆசிர்வாதம். இத்தருணம் உற்சாகத்தையும், சுற்றிலும் நிறைய நேர்மறை எண்ணங்களையும் என்னுள் விதைத்திருக்கிறது. வழக்கமாக ரசிகர்கள், நடிகர்களையும், இயக்குநர்களையும் பார்த்து, அவர்களை பின்பற்றி படம் பார்த்து வந்த முறையை, தகர்த்தெறிந்தது சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம்.

ஒரு தயாரிப்பு நிறுவனத்திற்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி, தரமான குடும்ப படங்களை, ரசிகர்கள் 100% சதவீதம் கொண்டாடும் வகையில் தொடர்ந்து தந்து வந்திருக்கிறது. எதிர்பார்ப்புகளை கூட்டுவது மட்டுமல்லாமல், அந்த எதிர்பார்ப்பை தவறாது பல தசாப்தங்களாக நிறைவேற்றி வந்திருக்கிறது. அதனால் தான் தென்னக சினிமாவின் முடிசூடா மன்னாக திகழ்கிறது சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம்.

நடிகர் ஜீவாவுடன் இணையவுள்ளது குறித்து கூறியபோது…

இது எனக்கு இரட்டை சந்தோஷ தருணம், ஜீவா அவர்கள் தமிழ் சினிமாவின் அரிய திறமைகளுல் ஒருவர். அவர் மிக ஆழமான படைப்புகளில் திறமையான நடிப்பை தந்தும், கமர்ஷியல் படங்களில் எளிதாக ரசிகர்களை கவர்ந்தும் சாதனை படைத்தவர்.

மாஸ் மற்றும் க்ளாஸ் எனும் இரண்டு திறமையும் கொண்டவர் அவர். இயக்குநர் சசி அவர்களின் “டிஷ்யூம்” படத்தில் உதவியாளராக பணிபுரிந்த போது படப்பிடிப்பில் நடிகர் ஜீவாவின் நடிப்பு திறமையை கண்டு வியந்திருக்கிறேன்.

அப்படத்தில் அவருடன் நெருக்கமாக பழகும் வாய்ப்பு கிடைத்தது. இயல்பிலேயே மிகவும் எளிமையான, கலகலப்பான மனிதர். சுற்றியுள்ளவர்களை தன் கலகலப்பான குணத்தால் எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார். எனது கதையையும் அப்படியானதொரு கதாப்பாத்திரத்தை கொண்டிருப்பதால் அவரை அணுகினேன்.

தற்போது தமிழ் சினிமாவில் முன்ணனி நடிகராக வளர்ந்து, இந்திய அளவிலான முக்கிய நடிகராக மாறிவிட்ட போதிலும், அவர் அதே எளிமையுடனே தான் பழகுகிறார்.

இது தான் எந்த ஒரு இயக்குநரும் அவருடன் பணிபுரிய விரும்பும் குணமாக இருக்கிறது. இந்த படத்தை இயக்கும் வாய்ப்பு, எனக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரும் ஆசிர்வாதம். மேலும் இப்படம் தரப்போகும் மிகச்சிறந்த அனுபவங்களுக்காக காத்திருக்கிறேன்.

காஷ்மீரா பர்தேஷி மற்றும் ப்ரயாகா நாக்ரா இப்படத்தின் நாயகிகளாக நடிக்கிறார்கள் அவர்களோடு VTV கணேஷ், சித்திக், ஷா ரா மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கவுள்ளார்கள்.

தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்

இசை – ஜிமிக்கி கம்மல் புகழ் ஷாநவாஸ் ரெஹிமான்

ஒளிப்பதிவு – சித்தார்த் ராமசுவாமி

படத்தொகுப்பு – ராகவேந்திரன் எனும் ஶ்ரீகாந்த்

சண்டைப்பயிற்சி – R. சரவணன்

கலை இயக்கம் – R. மோகன்

உடை வடிவமைப்பு – வாசுகி பாஸ்கர்

உடைகள் – கணேஷ்

ஒப்பனை – சண்முகம்

புகைப்படங்கள் – அன்புராஜ்

போஸ்டர் டிசைன்ஸ் – கபிலன்

புரடக்‌ஷன் மேனேஜர் – நாகராஜ்

புரடக்‌ஷன் டிசைனர் – ஶ்ரீநாத். R

Actor Jiiva’s next film to be directed by Santhosh Rajan and produced by super good films

super good films jiiva film

தெலங்கானா வெள்ள நிவாரணம்: சிரஞ்சீவி மகேஷ் பாபு தலா ரூ. 1 கோடி நிதி.; மற்ற நடிகர்கள் எவ்வளவு..?

தெலங்கானா வெள்ள நிவாரணம்: சிரஞ்சீவி மகேஷ் பாபு தலா ரூ. 1 கோடி நிதி.; மற்ற நடிகர்கள் எவ்வளவு..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

chiranjeevi mahesh babuதெலங்கானா வெள்ள நிவாரணத்துக்கு நடிகர்கள் பலரும் நிதியுதவி அளித்துள்ளார்கள்.

கடந்த வாரம் ஹைதராபாத் மற்றும் தெலங்கானா மாநிலத்தின் பல பகுதிகளில் வரலாறு காணாத வகையில் பலத்த மழை கொட்டி தீா்த்தது.

ஹைதராபாதில் 1917-ஆம் ஆண்டுக்கு பிறகு 20 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

பல இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்த விபத்தில் பலர் பலியாயினா்.

மேலும், மழை காரணமாக ரூ.5,000 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

தெலங்கானாவில் கடந்த ஒரு வாரமாக நீடித்து வரும் கனமழைக்கு 70 பேர் உயிரிழந்துவிட்டதாக அந்த மாநில அமைச்சர் கே.டி.ராமராவ் தெரிவித்துள்ளார்.

1908-ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போது பதிவான மழையின் அளவு இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள மழை வெள்ளம் காரணமாக தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த 37,000 பேர் அப்புறப்படுத்தப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை கிரேட்டர் ஹைதராபாத் மாநகராட்சி (ஜிஎச்எம்சி) மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் 33 பேர், பிற மாவட்டங்களில் 37 பேர் என மொத்தம் 70 பேர் உயிரிழந்துள்ளனர் என்றார்.

இந்நிலையில் வரலாறு காணாத இயற்கைச் சீற்றத்தைச் சந்தித்து வரும் தெலங்கானா மாநில மக்களுக்கு திரை உலகம் நேசக்கரம் கொடுத்து உதவி வருகிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண நிதியாக ரூ. 1 கோடி வழங்குவதாகப் பிரபல நடிகர் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.

அதேபோல நடிகர் மகேஷ் பாபுவும் ரூ. 1 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளார்.

பிரபல நடிகர்கள் நாகார்ஜூனா, ஜூனியர் என்டிஆர் ஆகியோர் தலா ரூ. 50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்கள்.

Telugu actors pledge donations for Hyderabad Flood Relief activities

விடுதலைப் புலிகள் மீதான அரசின் தடை நீக்கம்.; விரைவில் அறிவிப்பு

விடுதலைப் புலிகள் மீதான அரசின் தடை நீக்கம்.; விரைவில் அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

LTTEஇங்கிலாந்து நாட்டில் விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது.

இத்தடையை நீக்க கோரி கடந்த 2018-ல் தமிழீழ அரசாங்கம் கடிதம் அனுப்பியது.

இக் கடிதம் அந்நாட்டின் உள்துறை செயலாளர் சஜித் ஜாவித் எம்.பிக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

ஆனால் கடந்தாண்டு அந்த கோரிக்கையை நிராகரித்தார்.

இதனால் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் புலிகள் மீதான தடைக்கு எதிராக மேல்முறையீட்டு வழக்கை தொடர்ந்து.

இந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

தீர்ப்பில், ‘விடுதலைப் புலிகள் மீதான இங்கிலாந்தின் அரசின் தடை தவறானது’ என்று தீர்ப்பளித்தது.

எனவே தடை நீக்கம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.

LTTE removed from terrorist blacklist by European Court

தமிழக அரசின் பண்டிகை கால சலுகை..; இரவில் கடைகளை திறந்து வைக்கும் நேரம் நீடிப்பு

தமிழக அரசின் பண்டிகை கால சலுகை..; இரவில் கடைகளை திறந்து வைக்கும் நேரம் நீடிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

TN shopsகொரோனா ஊரடங்கில் மார்ச் & ஏப்ரல் மாதங்களில் முழுமையாக கடைகள் அடைக்கப்பட்டன.

அதன் பின்னர் மே ஜுன் ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் ஊரடங்கு மெல்ல மெல்ல தளர்வு செய்யப்பட்டு எல்லாக் கடைகளையும் திறக்க அரசு அனுமதி அளித்தது.

அதேபோல் கடை திறக்கும் நேரமும் நீட்டிக்கப்பட்டன.

தற்போது 9 மணி வரை மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்பட அனுமதி அமலில் உள்ளது.

இந்த நிலையில் தற்போது நேரம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

நாளை அக்டோபர் 22 முதல் தமிழகத்தில் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை இரவு 10 மணி வரை நீட்டித்தது தமிழக அரசு.

பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் நேர நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

TN to allow shops, restaurants to be open till 10 p.m. from 22nd october

நவம்பர் 2 முதல் பள்ளிகள் திறப்பு.. ஆசைப்பட்டா ஆன்லைன் க்ளாஸ்..; முதல்வர் உத்தரவு

நவம்பர் 2 முதல் பள்ளிகள் திறப்பு.. ஆசைப்பட்டா ஆன்லைன் க்ளாஸ்..; முதல்வர் உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

school reopen in apகொரோனா ஊரடங்கில் மூடப்பட்ட பள்ளிகள் திறப்பது குறித்து ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தன் உத்தரவில் தெரிவித்துள்ளதாவது…

நவம்பர் 2 முதல் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும்.

பள்ளிகள் காலையில் மட்டுமே செயல்படும், ஆனால் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட வேண்டும்

இந்த ஷிப்ட் முறை வகுப்புகள் நவம்பர் மாதத்திற்கு மட்டும் செயல்படுத்தப்படும்.

கொரோனா கோவிட் -19 நிலைமையை அடிப்படையாகக் கொண்டு டிசம்பர் மாதத்திற்கான முடிவு எடுக்கப்படும்.

ஒவ்வொரு வகுப்புக்கும் மாற்று நாட்களில் பாடம் நடத்தப்பட வேண்டும்.

1,3,5,7 வகுப்புகளுக்கு ஒரு நாளில் பள்ளி பாடங்கள் நடைபெறும், 2, 4, 6, 8 ஆம் வகுப்பு மாணவர்கள் அடுத்த நாள் வகுப்புகளில் நடைபெறும்.

பள்ளியில் 750 க்கும் அதிகமான மாணவர்கள் இருந்தால், மூன்று நாட்களுக்கு ஒரு முறை மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.

பள்ளிக்கு நேரில் செல்ல விரும்பாத மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலமே பாடம் நடத்தப்படும்.

இவ்வாறு ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

AP schools reopen date announced

More Articles
Follows