இலங்கையில் பாட SPB அனுமதி கேட்டாரு..; விஜய்சேதுபதியை அச்சுறுத்தவில்லை.. பெண்களை திருமா இழிவுப்படுத்தவில்லை.. – சீமான்

இலங்கையில் பாட SPB அனுமதி கேட்டாரு..; விஜய்சேதுபதியை அச்சுறுத்தவில்லை.. பெண்களை திருமா இழிவுப்படுத்தவில்லை.. – சீமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

seemanசுதந்திர போராட்ட வீரர்களான மருதுசகோதரர்கள் 219-ஆவது நினைவு தினம் நாம் தமிழர் கட்சியினரால் அனுசரிக்கப்பட்டது.

அப்போது பேசிய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…

“பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியத்துக்கு இலங்கை கச்சேரியில் பாட SPB க்கு வாய்ப்பு வந்தபோது எதிர்ப்பு வருமோ என்று நினைத்து, “போய் பாடிட்டு வரட்டுமா டா தம்பி” என்று என்னிடம் கேட்டார்.

மனுஸ்மிருதியில் பெண்களை இழிவு படுத்தி பேசப்பட்டிருக்கிறது என்பதுதான் சொன்னாரே தவிர திருமாவளவன் பெண்களை இழிவாகப் பேசவில்லை.

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படத்தை இலங்கை மொழியில் எடுத்துக் கொள்ளுங்கள்.

ஆனால் எங்கள் தமிழ் பிள்ளை விஜய் சேதுபதியை வைத்து தமிழில் எடுப்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்றார்.

அவரின் எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாது என்பதால் அறிவுறுத்துனோம்.

அறிவுறுத்தல் இருந்ததே தவிர அச்சுறுத்தல் இல்லை”

இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.

NTK leader Seeman supports Thiruma Valavan’s statement

தமிழகத்தில் பள்ளிகள் கல்லூரிகள் திறப்பது எப்போது? முதல்வர் தலைமையில் ஆட்சியர்கள் ஆலோசனை

தமிழகத்தில் பள்ளிகள் கல்லூரிகள் திறப்பது எப்போது? முதல்வர் தலைமையில் ஆட்சியர்கள் ஆலோசனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

edappadi palanisamyகொரோனா தொற்று காரணமாக ஊரடங்கில் கடந்த 8 மாதங்களாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன.

தற்போது தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெக்கு வருகிறது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி மூலம் வகுப்பு எடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், 9 முதல் 12 வகுப்பு பள்ளிகளை திறந்து மாணவர்களின் பாட சந்தேகங்களை ஆசிரியர்கள் தீர்த்து வருகின்றனர்.

இதனையடுத்து தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது எப்போது? என்பது குறித்து முதலமைச்சர் தலைமையிலான மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் நாளை முடிவாக உள்ளதாக கூறப்படுகிறது.

முதலமைச்சர் தலைமையில் நாளை நடக்கும் கொரோனா தடுப்பு ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்கின்றனர்.

தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் அம்சங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாம்.

நாளை அக்டோபர் 28ல் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பள்ளிகள் முழுமையாக திறப்பது குறித்தும் மாணவர்களுக்கு விலையில்லா முகக்கவசங்கள் விநியோகம் குறித்தும் முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest update on schools and colleges re opening in TN

BREAKING இந்தியா முழுவதும் நவம்பர் 30 வரை ஊரடங்கை நீடித்தது மத்திய அரசு

BREAKING இந்தியா முழுவதும் நவம்பர் 30 வரை ஊரடங்கை நீடித்தது மத்திய அரசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

unlock 5கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது.

அதன்பின்னர் மாதம் மாதம் மத்திய அரசு ஊரடங்கை நீடித்து வந்தாலும் சில தளர்வுகளை அறிவித்து வருகிறது.

அதாவது பொருளாதார நடவடிக்கைகளுக்காக ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருகிறது.

அதன்படி அக்டோபர் 31ம் தேதி வரை இருந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, தற்போது நவம்பர் 30ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

செப்டம்பர் 30ம் தேதி வெளியான கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் நவம்பர் 30 வரை பொருந்தும் என்றும் அரசு விளக்கமளித்துள்ளது.

மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்கு எவ்வித கட்டுப்பாடு, முன்னனுமதி பெற அவசியம் இல்லை.

ஆனால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஊரடங்கை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.

மத்திய அரசை ஆலோசிக்காமல் மாநில அரசு தன்னிச்சையாக கட்டுப்பாடு விதிக்கக் கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

BREAKING : Lokdown extended to November 30

புரட்சி தலைவி தெரியும்.. புரட்சி செல்வி தெரியுமா.?.. PUBG பட பாடலில் விஜய் ஸ்ரீ செய்த வி(ந)ல்லத்தனம்

புரட்சி தலைவி தெரியும்.. புரட்சி செல்வி தெரியுமா.?.. PUBG பட பாடலில் விஜய் ஸ்ரீ செய்த வி(ந)ல்லத்தனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

aishwarya dutta‘தாதா 87’ படத்தில் 87 வயது சாருஹாசனை ஹீரோவாக்கிய போதே திரையுலக கவனத்தை ஈர்த்தவர் டைரக்டர் விஜய் ஸ்ரீ ஜி.

இவரின் அடுத்த படத்திற்கு ‘பொல்லாத உலகின் பயங்கர கேம்’ – PUBG எனப் பெயரிட்டுள்ளார்.

ரிலீசுக்கு தயாராகவுள்ள இந்த படத்தை கொரோனா ஊரடங்கால் ஒத்தி வைத்து தற்போது 2021 பொங்கலுக்கு வெளியிடவுள்ளனர்.

இந்த படத்தில் ஐஸ்வர்யா தத்தா, நடிகர் விக்ரமின் தங்கை அனிதாவின் மகன் அர்ஜூமன், அனித்ரா, ஆராத்யா, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன், சதீஷ் முத்து உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு லியாண்டர் மார்ட்டி இசையமைத்துள்ளார்.

இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி எழுதி, பாடிய ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ’ பாடல் நேற்று விஜயதசமி நேற்று ஆர்யா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.

இப்படத்தின் பாடல்களை
“டிரெண்ட் நிறுவனம்” வெளியிடுகிறது.

இப்படத்தின் மற்ற பாடல்கள் இசை தீபாவளியன்று வெளியாகிறது.

மேலும் பாடல் வீடியோவில் டெக்னீஷ்யன்ஸ் & பிஆர்ஓ உள்பட அவர்களின் பெயரும் போட்டோவும் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி ஒரு நல்ல விஷயத்தை செய்திருந்தாலும் கூடவே ஒரு வில்லத்தனத்தையும் செய்துள்ளார்.

‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ’ இந்த பாடலின் புரோமோ வீடியோவில் நடிகை ஐஸ்வர்யா தத்தாவிற்கு ‘புரட்சி செல்வி’ என்று பட்டமளித்துள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை புரட்சித் தலைவி என மக்கள் அழைத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ‘புரட்சி செல்வி’ என்ன என்ன பிரச்சினைகளை கிளப்பப் போகிறதோ.? பார்ப்போம்.

இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actress Aishwarya Dutta is now called Puratchi Selvi

BREAKING : திருமாவை கண்டிக்க தடையை மீறி ஆர்ப்பாட்டத்திற்கு சென்ற குஷ்பு கைது (வீடியோ)

BREAKING : திருமாவை கண்டிக்க தடையை மீறி ஆர்ப்பாட்டத்திற்கு சென்ற குஷ்பு கைது (வீடியோ)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விசிக தலைவர் திருமாவளவனை கண்டித்து சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த சென்றபோது ஈசிஆர் முட்டுக்காட்டில் குஷ்பு கைது செய்யப்பட்டார்.

சிதம்பரத்தில் விசிக தலைவர் திருமாவளவனை கண்டித்து போராட்டம் நடத்த நடிகை குஷ்பு அறிவித்திருந்தார்.

இதனால் தமிழ்நாடு காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த இன்று காலை சென்னையிலிருந்து கார் மூலம் ஈசிஆர் சாலை வழியாக சிதம்பரம் சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்.

BREAKING : Khushbu Sundar arrested near Muttukadu

அஜித்துடன் இணையும் யோகிபாபு..; ஹைதராபாத்தில் ஹை ஸ்பீட்டில் ‘வலிமை’

அஜித்துடன் இணையும் யோகிபாபு..; ஹைதராபாத்தில் ஹை ஸ்பீட்டில் ‘வலிமை’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith yogi babuவினோத் நடிப்பில் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’.

போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இத்திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடிக்கிறார்.

வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறார்.

மற்ற கலைஞர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகாமல் ரகசியம் காத்து வருகிறது படக்குழு.

தற்போது இப்பட சூட்டிங் ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்த வாரம் முதல் நடிகர் யோகி பாபுவும் இணைகிறார்.

அஜித்துடன் அவர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படலாம் எனத் தெரிகிறது.

Comedy actor Yogi Babu is a part of Thala Ajith’s Valimai

More Articles
Follows