விஜய்சேதுபதி மகளுக்கு வக்கிரமான பாலியல் மிரட்டல்..; மர்ம நபர் மீது வழக்குப் பதிவு

விஜய்சேதுபதி மகளுக்கு வக்கிரமான பாலியல் மிரட்டல்..; மர்ம நபர் மீது வழக்குப் பதிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்ரீலங்கா கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படமான ‘800’ என்ற படத்தில் முரளிதரன் கேரக்டரில் விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

ஆனால் இப்பபடம் அறிவிப்பு வெளியானதிலிருந்தே கடும் எதிர்ப்புகள் உருவானது.

தமிழினத்துக்கு துரோகம் செய்த முத்தையா முரளிதரன் கேரக்டரில் நடிக்கக் கூடாது என பல தரப்பினரும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

தமிழக அமைச்சர்களும் விஜய்சேதுபதி எதிர்கால நன்மை கருதி் நல்ல முடிவை எடுக்க வலியுறுத்தினர்.

எனவே விஜய் சேதுபதியை இந்தப் படத்திலிருந்து விலகிக் கொள்ளுமாறு அறிக்கை வெளியிட்டார் முத்தையா முரளிதரன்.

அவரது அறிக்கையை ரீட்வீட் செய்து “நன்றி.. வணக்கம்” என்று கூறி ‘800’படத்திலிருந்து விலகினார் விஜய் சேதுபதி.

இதனிடையில் விஜய் சேதுபதி மகளுக்கு Rithik (Handle: @ItsRithikRajh) என்ற ட்விட்டர் ஐடியில் இருந்து வக்கிரமான வார்த்தைகளுடன் ரேப் மிரட்டல் விடுக்கப்பட்டது.

அந்த மர்ம நபரின் செயலுக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்தன.

தற்போது, அந்த ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த நபர் மீது 3 பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இத்தகவலை சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

Actor Vijay Sethupathi’s Daughter Gets Rape Threat Over Muttiah Muralitharan Biopic “800 the movie”

vijay sethupathi daughter threat issue

கொரோனா ஊரடங்கில் 7வது முறையாக மோடி நாட்டு மக்களுக்கு உரை.; சொன்னது என்னென்ன..?

கொரோனா ஊரடங்கில் 7வது முறையாக மோடி நாட்டு மக்களுக்கு உரை.; சொன்னது என்னென்ன..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

PM Modiகொரோனா ஊரடங்கில் 7வது முறையாக பிரதமர் மோடி இன்று மாலை நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

அவரது பேச்சில் இடம்பெற்றவை…

* கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் தொடர்கிறது

* நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பியுள்ளது.

* அமெரிக்கா, பிரேசில் போன்ற நாடுகளோடு ஒப்பிடும்போது இந்தியாவில் இறப்பு விகிதம் குறைவாகவே உள்ளது

* ஊரடங்கு தளர்வு கொடுக்கப்பட்டிருக்கலாம்- ஆனால் வைரஸ் இன்னமும் இருக்கிறது என்பதை நாம் அனைவரும் மறந்து விடக்கூடாது.

* எப்போதெல்லாம் பொதுவெளியில் செல்கிறோமா அப்போதெல்லாம் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும்.

* திருவிழாக் காலங்களில் வியாபாரம் மெதுவாக சூடு பிடிக்கிறது

* பல்வேறு தேவைகளுக்காக மக்கள் சாலைகளில் கூட்டம் கூட்டமாக செல்கின்றனர்.

* மக்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும் வைரஸ் என்பது முற்றிலுமாக அழிந்து விடவில்லை

* பண்டிகை காலத்தை முன்னிட்டு நாம் அனைவரும் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

PM Modi urges caution during festivities, says coronavirus still here

‘ஜனகனமன’ பட சூட்டிங்கில் கொரோனா தொற்று..; பிரித்விராஜ் & படக்குழுவினர் தனிமை

‘ஜனகனமன’ பட சூட்டிங்கில் கொரோனா தொற்று..; பிரித்விராஜ் & படக்குழுவினர் தனிமை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Prithvirajகேரளா கொச்சியில் ஜனகனமன மலையாளப் பட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

படக்குழுவினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

இயக்குநரான டிஜோ ஜோஸும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாம்.

நடிகரும், தயாரிப்பாளருமான பிரித்விராஜ் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் தன்னை தானே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பாரி ஜாதம், வெள்ளித்திரை உள்ளிட்ட தமிழ் படங்களில் பிரித்விராஜ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Prithviraj tests positive for Covid-19

“சொன்னது நீதானா” பாடலுக்கு கவர் ட்ராக் உருவாக்கிய செந்தில்குமரன்

“சொன்னது நீதானா” பாடலுக்கு கவர் ட்ராக் உருவாக்கிய செந்தில்குமரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கனடா வாழ் தமிழ் கலைஞர்கள் மத்தியில் நன்கு பிரபலமானவர் பாடகர் மின்னல் செந்தில்குமரன். சமூகநல மற்றும் விலங்குகள் நல ஆர்வலராகவும் இருப்பவர். ‘மின்னல் இசைக்குழு’ என்கிற பெயரில் பல இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருபவர்.

பல வருடங்களுக்கு முன் ஸ்ரீதர் இயக்கத்தில், விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையில் வெளியான, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தில் இடம் பெற்ற, ‘சொன்னது நீதானா’ என்கிற பாடலுக்கு தற்போது புதிய வடிவிலான கவர் ட்ராக் அமைத்து தயாரித்து வெளியிட்டுள்ளார்.

Sonnathu Neethaana Cover Song Youtube Link: https://youtu.be/pIXiodqg_EI

தனது வசீகர குரலால் ரசிகர்களை கட்டிப்போட்ட பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா பாடிய இந்த பாடலின், மீள் உருவாக்க பாடலை பாடகி சாம்பவி ஷண்முகநாதம் என்பவர் பாடியுள்ளார். இந்த பாடலை பார்த்துவிட்டு, சுசீலா அவர்கள் பாடகி சாம்பவியை பாராட்டியதுடன், இந்த பாடலுக்கு கவர் ட்ராக் இசையமைத்த கார்த்திக் ராமலிங்கம் மற்றும் இந்த பாடலை தயாரித்த செந்தில்குமரன் உள்ளிட்ட அனைவருக்கும் தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் காணொளி மூலம் தெரிவித்துள்ளார்.

P. Susheela Blessing Youtube Link: https://youtu.be/IoLCkIr2xRg

இந்த பாடலை உருவாக்கியது குறித்து செந்தில்குமரன் கூறும்போது, “இந்த பாடல் என் அம்மா எப்போதும் விரும்பி பாடக்கூடிய பாடல். அதனால் சிறுவயதில் இருந்தே இந்த பாடலை நானும் ரசித்துக் கேட்டுள்ளேன். தற்போது இந்தப் பாடலுக்கான கவர் ட்ராக்கை உருவாக்க வேண்டும் என்று விரும்பினேன். அதற்கு காரணம் இந்த பாடலின் வழியாக ஒரு செய்தியை சொல்ல விரும்பினேன்.

பொதுவாகவே இந்த பாடலை கேட்கும்போது, ஏதோ ஒரு சோகப்பாடல் என்பது தான் பலரின் மனதிலும் தோன்றும். ஆனால், தான் இறந்து விட்டால் அதை நினைத்துக்கொண்டே, தன் மனைவி அவள் வாழ்க்கையே முடிந்துவிட்டதாக நினைக்கக்கூடாது. தனக்கு பிடித்த இன்னொருவரை மறுமணம் செய்து கொண்டு வாழ வேண்டும் என்கிற புரட்சிகரமான கருத்தை சொல்லியிருக்கும் பாடலாகத்தான் இதைப் பார்க்கிறேன்.

கடந்த பல வருடங்களாக இலங்கையின் வடக்கு கிழக்கில் நிவாரண உதவிகள் செய்வதற்காக களத்தில் இறங்கியபோது, பல விதவை பெண்மணிகளின் நிலையை நேரில் கண்டவன் என்கிற முறையில், இந்த பாடலை மீள் உருவாக்கம் செய்து எங்கள் சமுகத்திற்கு ஒரு செய்தியினை சொல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதனால் தான் பாடலின் முடிவில் “ஒரு புது தொடக்கம் எப்போதும் சாத்தியமானது” என்று முடித்துளோம் என்று கூறுகிறார் செந்தில்குமரன்.

Sonnathu Neethaana

Sonnathu Neethaana Cover Song by Senthil Kumaran

கேங்க்ஸ்டராக மாறும் பாபி சிம்ஹா – இயக்குநராகும் K.ராஜேஷ்வரின் மகன் விக்ரம் ராஜேஷ்வர்….

கேங்க்ஸ்டராக மாறும் பாபி சிம்ஹா – இயக்குநராகும் K.ராஜேஷ்வரின் மகன் விக்ரம் ராஜேஷ்வர்….

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bobby simha vikram rajeshwarதமிழ் சினிமாவில் தனித்துவமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிப்பவர்கள் சிலர் தான். அதில் பாபி சிம்ஹாவும் ஒருவர். தனக்கான கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும் அதில் தன் நடிப்புத்திறமையால் முத்திரை பதிப்பவர். தமிழ், தெலுங்கு என பிஸியாக இருக்கும் பாபி சிம்ஹா இப்போது புதிய படமொன்றில் மீண்டும் தன்னை நீருபிக்க தயாராகியுள்ளார்.
5 ஆண்டுகளுக்கும் மேலாக விளம்பரப்பட உலகில் பிரபலமான விக்ரம் ராஜேஷ்வர் இப்படத்தை இயக்கவுள்ளார்.இக்கதக்காக பாபி சிம்ஹாவை அணுகியுள்ளார் இயக்குநர் விக்ரம் ராஜேஷ்வர். கதையைக் கேட்டவுடன், நாயகனாக நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் பாபி சிம்ஹா.
தமிழ்த் திரையுலகில் முக்கியமான படங்களின் பட்டியல்களை எடுத்துக் கொண்டால், அதில் ‘அவள் அப்படித்தான்’, ‘கடலோர கவிதைகள்’ உள்ளிட்ட படங்கள் இடம்பிடிக்கும். அந்தப் படங்களின் கதைக்கு சொந்தக்காரரான K.ராஜேஷ்வரின் மகன் தான் விக்ரம் ராஜேஷ்வர்.
‘அவள் அப்படித்தான்’, ‘பன்னீர் புஷ்பங்கள்’, ‘கடலோர கவிதைகள்’, ‘சீவலப்பேரி பாண்டி’, மற்றும் பல படங்களின் கதை, திரைக்கதை,வசனம் எழுதியவர் K.ராஜேஷ்வர். அதுமட்டுமல்லாமல், ‘நியாய தராசு’, ‘அமரன்’, ‘துரைமுகம்’, ‘அதே மனிதன்’, ‘இந்திர விழா’ மற்றும் பல படங்களையும் K.ராஜேஷ்வர் இயக்கியுள்ளார்.
பாபி சிம்ஹா – விக்ரம் ராஜேஷ்வர் இணையும் கேங்க்ஸ்டர் படத்துக்கும் K.ராஜேஷ்வர் தான் கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிறார் இதன் மூலமே படத்தின் வெற்றி உறுதியாகிறது. தற்போது இதன் ஆரம்பக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 2021-ம் ஆண்டு தொடக்கத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்.
படக்குழுவினர் விவரம்:
கதை, திரைக்கதை, வசனம் – K.ராஜேஷ்வர்
இயக்குநர் – விக்ரம் ராஜேஷ்வர்
பி.ஆர்.ஓ – யுவராஜ்

Actor Bobby Simha’s next to be directed by Vikram Rajeshwar

அக்டோபர் 28 அன்று சுகாதார குழு.. தியேட்டர்கள் திறப்பதில் தாமதம்..; தடுமாறுகிறதா தமிழக அரசு.?

அக்டோபர் 28 அன்று சுகாதார குழு.. தியேட்டர்கள் திறப்பதில் தாமதம்..; தடுமாறுகிறதா தமிழக அரசு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

EPSஇன்று அக்டோபர் 20 காலை 11 மணிக்கு தமிழக முதல்வர் அவர்களை அவரது இல்லத்தில் திரையரங்க உரிமையாளர்கள் சங்க செயலாளர் ரோகிணி பன்னீர்செல்வம், பொருளாளர் இளங்கோவன் தலைமையில் திரையரங்க உரிமையாளர்கள் சந்தித்தனர்.

அனைத்து தொழில்நிறுவனங்களும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் குளிர்சாதன வசதியுடன் இருப்பதால் உடனடியாக அனுமதி வழங்க இயலவில்லை.

அக்டோபர் 28 அன்று சுகாதார குழுவின் கூட்டத்தில் இது சம்பந்தமாக விவாதித்து முடிவு எடுக்கப்படும் என முதல்வர் கூறியுள்ளார்.

இந்த சந்திப்பின்போது அபிராமி ராமநாதன், அம்பத்தூர் ராக்கி தியேட்டர் உரிமையாளர் ஹரி, சென்னை உட்லண்ட்ஸ் தியேட்டர் உரிமையாளர் வெங்கடேஷ், வேலூர் சீனிவாசன், ராமநாதபுரம் ரமேஷ் தியேட்டர் உரிமையாளர் ரமேஷ், சேலம் ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.

Theatre owners meet EPS on reopening of theatres

More Articles
Follows