கிரிக்கெட்டராக முத்தையாவை தெரியும்.. அதை தாண்டி 800-ல் நிறைய இருக்கு – மஹிமா

கிரிக்கெட்டராக முத்தையாவை தெரியும்.. அதை தாண்டி 800-ல் நிறைய இருக்கு – மஹிமா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை 800 என்ற பெயரில் திரைப்படமாக ஸ்ரீபதி இயக்கியுள்ளார்.

இதில் மதுர் மிட்டல் மற்றும் மகிமா ஜோடியாக நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற நடிகை மஹிமா நம்பியார் பேசுகையில்…

“என்னுடைய கரியரில் மிகச்சிறந்த படமாக இது இருக்கும் என நம்புகிறேன். ஹீரோவுடைய பயோபிக் எனும்போது எனக்கு குறைந்த காட்சிகளே இருக்கும். இருந்தாலும், நான் நடித்த சில காட்சிகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.

இது முத்தையா முரளிதரனின் கதை மட்டுமல்ல. விளையாட்டு, இலங்கையின் கதையும் இது. டிரெய்லர் பார்த்த பிறகு அவரின் கதையை மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என ஆர்வமாக இருப்பதாகப் பலரும் என்னிடம் கூறியுள்ளனர். படத்தை நானும் இன்னும் முழுதாக பார்க்கவில்லை. கிரிக்கெட்டராக முத்தையாவை தெரிந்த பலருக்கும் அதையும் தாண்டி அவரைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள இந்தப் படம் நிச்சயம் உதவும்.

மதுர் இந்தப் படத்திற்காக நிறைய உழைத்துள்ளார். இயக்குநர் ஸ்ரீபதி, தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், படக்குழுவுக்கு நன்றி” என்றார்.

நடிகர் மதுர் மிட்டல் பேசியதாவது…

“என்னைப் போன்ற வளர்ந்து வரும் நடிகருக்கு முத்தையா சாரின் கதாபாத்திரம் நடிக்கக் கிடைத்திருப்பது மிகப்பெரிய விஷயம்.

இயக்குநர் ஸ்ரீபதி, மஹிமா, ஆர்.டி. சார் அனைவருக்கும் நன்றி. படத்தில் பல முக்கியமான தருணங்களை நீங்கள் நிச்சயம் விரும்புவீர்கள். படம் பார்த்து விட்டு சொல்லுங்கள்” என்றார்.

Apart from cricketer lot of things in 800 movie says Mahima

முத்தையா முரளிதரனின் பயோபிக்கை வெளியிடுவது இரட்டிப்பு மகிழ்ச்சி.. – சக்திவேலன்

முத்தையா முரளிதரனின் பயோபிக்கை வெளியிடுவது இரட்டிப்பு மகிழ்ச்சி.. – சக்திவேலன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை 800 என்ற பெயரில் திரைப்படமாக ஸ்ரீபதி இயக்கியுள்ளார்.

இதில் மதுர் மிட்டல் மற்றும் மகிமா ஜோடியாக நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன் பேசுகையில்…

“முத்தையா முரளிதரனின் பயோபிக் வெளியிடுவது இரட்டிப்பு மகிழ்ச்சி. ’இந்தப் படத்தை நீங்கள்தான் வெளியிட வேண்டும் என நாங்கள் முடிவு செய்து விட்டோம். நீங்கள் நினைப்பதை விட சிறப்பாக வந்துள்ளது’ என கிருஷ்ண பிரசாத் சார் சொன்னார்.

இந்தப் படம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய ரிலீஸாக இருக்கும். மிகப்பெரிய வெற்றியடையும்”. என்றார்.

இயக்குநர், நடிகர் கிங் ரத்தினம் பேசுகையில்..

“என்னை அர்ஜூன் கதாபாத்திரத்திற்கு தேர்ந்தெடுத்த இயக்குநர் ஸ்ரீபதிக்கு நன்றி. நானும் ஒரு கிரிக்கெட் பைத்தியம். முரளி அண்ணாவின் தம்பியும் நானும் ஒரே ஸ்கூலில் படித்தோம்.

அவரின் வளர்ச்சியை கூட இருந்து பார்த்தவர்கள் நாங்கள். இந்தப் படம் இலங்கையில் உள்ள 60 தமிழ்க் கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது.

இலங்கை சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷம் இந்தப் படம். இலங்கையில் சொல்லப்பட வேண்டிய நிறைய கதைகள் உள்ளது. இதற்கு இந்திய சினிமா நிச்சயம் ஆதரவு கொடுக்கும் என நம்புகிறேன்” என்றார்.

Its double happy for me says Sakthivelan at 800 movie event

போர்க்கள பகுதியில் இருந்தவர் முத்தையா.; அவரின் கதையை சொல்வது எளிதானது அல்ல – ஸ்ரீபதி

போர்க்கள பகுதியில் இருந்தவர் முத்தையா.; அவரின் கதையை சொல்வது எளிதானது அல்ல – ஸ்ரீபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இலங்கையின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன், சர்வதேச கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய தனித்துவமான கிரிக்கெட் சாதனையைப் படைத்துள்ளார்.

அவருக்குப் பிறகு வேறு எந்த கிரிக்கெட் வீரரும் இந்த சாதனையை முறியடிக்கவில்லை. தற்போது இவரது வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ‘800’ என்ற படம் தயாராகி வருகிறது.

மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கியுள்ளார். இதில் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ புகழ் மதுர் மிட்டல் மற்றும் மஹிமா நம்பியார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

புக்கர் பரிசை வென்ற ஷெஹான் கருணாதிலக்க இப்படத்தில் இணை கதாசிரியராக பணியாற்றியுள்ளார். இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று (08.09.2023) சென்னையில் நடந்தது.

இதில் கலந்து கொண்ட இயக்குநர் எம்.எஸ்.ஸ்ரீபதி பேசியதாவது…

“முத்தையா சார் சிவில் வார் நடந்த ஒரு இடத்தில் இருந்து வந்துள்ளார். அது சாதாரணமானது கிடையாது. அதனால், இவர் கதையை சொல்வதும் அத்தனை எளிதாக இல்லை.

நிறைய பொறுப்பு இருந்தது. அவரது பூர்வீகம், குழந்தைப் பருவம், குடும்பம் என வாழ்க்கை வரலாறு அனைத்தையும் தெரிந்து கொண்டேன். நிறைய சவால்களைத் தாண்டி இந்தப் படத்தை எடுத்து முடித்து வெளியிட உள்ளோம். உங்கள் ஆதரவு நிச்சயம் தேவை”.

ஒளிப்பதிவாளர் ஆர்.டி. ராஜசேகர் பேசியதாவது, “கிரிக்கெட் எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு. அப்படி இருக்கும் போது முத்தையா சாருடைய படம் நான் செய்வேன் என எதிர்பார்க்கவே இல்லை. பின்பு படம் ஆரம்பித்ததும் ஒரு சிறு தடங்கல் வந்தது. மீண்டும் மதுர் மிட்டலுடன் ஆர்மபித்தது மகிழ்ச்சி. அவர் அப்படியே முத்தையா போலவே இருந்தார். எந்தவிதமான தடையும் இல்லாமல் படத்தை முடித்தோம். வழக்கமான கிரிக்கெட் படத்தைப் போல அல்லாமல் அவரது வாழ்க்கையும் இதில் இருக்கும். உங்களுக்கும் நிச்சயம் பிடிக்கும்” என்றார்.

காஸ்ட்யூம் டிசைனர் பூர்த்தி…

“காஸ்ட்யூம் டிசைனராக எனக்கு இப்படி ஒரு கிரிக்கெட் படம் கிடைத்ததில் பெருமையாக உள்ளது. என்னுடைய முதல் கிரிக்கெட் படம் என்பதால் இது என் மனதிற்கு நெருக்கமான ஒன்று. படத்தைப் பார்த்து விட்டு சொல்லுங்கள்”.

ஆக்‌ஷன் கோரியோகிராஃபர் அசோக் பேசியதாவது…

“முதலில் இயக்குநர் ஸ்ரீபதிக்கு பெரிய நன்றி. படத்தில் கதைக்கு தேவையான இரண்டு ஸ்டண்ட் உள்ளது. நிச்சயம் படம் உங்களுக்கு பிடிக்கும்”.

ஸ்ரீஹரி மூவிஸ் கிருஷ்ண பிரசாத், “சமீபத்தில் ‘யசோதா’ படம் செய்தோம். இயக்குநர் ஸ்ரீபதி எங்கள் மகன் போல. இந்தியா மட்டுமல்லாது, உலகம் முழுவதும் இந்தப் படத்தை வெளியிடுகிறோம். உணர்ச்சிகரமான படமாக வந்துள்ளது. வெறும் கிரிக்கெட் படமாக மட்டுமல்லாமல் அதற்கு பின்னால், சிறுவயதில் இருந்து ஒரு மனிதனுடைய போராட்டமாக இந்தப் படம் இருக்கும். படக்குழுவினருக்கு வாழ்த்துகள்” என்று பேசியுள்ளார்.

Its not easy to film Muthaiah Muralidharan biopic says Sripathy

படம் பார்த்ததுக்கு நீங்கதான் கார் கொடுக்கணும்.. கிண்டல் அடித்த MP..; ஓட்டு போட்டவர்களுக்கு என்ன செஞ்சிங்க என கேள்வி.?

படம் பார்த்ததுக்கு நீங்கதான் கார் கொடுக்கணும்.. கிண்டல் அடித்த MP..; ஓட்டு போட்டவர்களுக்கு என்ன செஞ்சிங்க என கேள்வி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஜெயிலர்’ படத்தின் மிகப்பெரிய வெற்றியை அடுத்து நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு ஒன்றரை கோடி மதிப்பிலான கார்களை பரிசாக வழங்கி இருந்தார் அந்த படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன்.

இந்த வீடியோக்களும் புகைப்படங்களும் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.

இதேபோன்று பல திரைப்பட தயாரிப்பாளர்களும் தங்கள் ஹீரோ மற்றும் இயக்குனர்களுக்கு பரிசளித்து உள்ளனர்.

(கமல் தயாரிப்பு நடித்த ‘விக்ரம்’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து அந்த படத்தின் இயக்குனர் லோகேஷக்கு உயர்ரக கார் ஒன்றை கமல்ஹாசன் பரிசளித்து இருந்தார்.)

தற்போது ரஜினியின் ‘ஜெயிலர்’ படம் அமேசான் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிலையில் நேற்று (செப்.08) காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் மறைமுகமாக ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், “நேற்று இரவு ஒரு தமிழ் திரைப்படம் பார்த்தேன். அந்த திரைப்படம் பார்த்ததற்கு படத்தின் தயாரிப்பாளர் எனக்கு ஒரு சொகுசு காரை பரிசாக அளித்திருக்க வேண்டும்” என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

அவர் எந்த படத்தை பார்த்தார் என குறிப்பிடவில்லை.

இதனையடுத்து நெட்டிசன்கள் பலரும் அவர் ‘ஜெயிலர்’ படத்தைத்தான் சொல்கிறார் என்று கூறி அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

நீ எம்பி ஆகி மக்களுக்கு ஒன்னும் செய்யல.. இப்படி படம் மட்டும் பார்த்துட்டே இரு

Sir,

As an elected MP from #Sivagangai LS Constituency, why you have to be gifted a luxury car for watching a movie? 🤔

Had you done any favour for the movie producer for the movie production and it’s sucessful release?

#Kollywood #PoliticsToday

சார் அப்டி பார்த்தா உங்களுக்கு ஓட்டு போட்டதுக்கு சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி மக்களுக்கு நீங்க தான் ஆளுக்கு ஒரு கார் வாங்கி தரணும்.

அடுத்தவர் வெற்றியை, வேண்டுமென்றே தேவையில்லாம நக்கலடித்து பெயர் வாங்கலாம்னு நெனச்சி இப்படி கீழ்த்தரமான பதிவை போட்டு உங்கள நீங்களே அசிங்கப்படுத்திக்கறீங்க!

If dbt, ask your Dad on the real power of Superstar & your Dad was behind him those days. Don’t forget your past.

இவ்வாறு பல பதிவுகளை போட்டு தங்கள் கருத்துக்களை தொண்டர்களும் ரசிகர்களும் கூறி வருகின்றனர்.

Social media trolls MP Karti Chidambaram

OFFICIAL த்ரிஷா நடித்துள்ள ‘தி ரோட்’ படத்தின் ரிலீஸ் அப்டேட்

OFFICIAL த்ரிஷா நடித்துள்ள ‘தி ரோட்’ படத்தின் ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை த்ரிஷா கடைசியாக ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

த்ரிஷா தற்போது ‘தி ரோட்’ (the road) என்ற படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தை அருண் வசீகரன் எழுதி இயக்கியுள்ளார்.

இப்படத்தில் சந்தோஷ் பிரதாப், ஷபீர், மியா ஜார்ஜ், வேல ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சாம் சிஎஸ் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் மதுரையில் கடந்த 2000 ஆம் ஆண்டின் துவக்கத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது.

இந்நிலையில், ‘தி ரோட்’ படம் வரும் அக்டோபர் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

trisha’s ‘the road’ movie releasing on october 6th

நடிகர் மாரிமுத்து மரணத்திற்கு இதான் காரணமா.? ஜோசியர் சாபம் பலித்ததா.?

நடிகர் மாரிமுத்து மரணத்திற்கு இதான் காரணமா.? ஜோசியர் சாபம் பலித்ததா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று செப்டம்பர் 8ம் தேதி நடிகர் மாரிமுத்து காலமானார். அவர் ‘எதிர்நீச்சல்’ டிவி சீரியலுக்காக டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்ட காரணத்தினால் மரணம் அடைந்தார்.

சில மாதங்களுக்கு முன் அவர் ஒரு தனியார் டிவி நடத்திய ஒரு நிகழ்வில் பங்கேற்றார். அப்போது.. “தான் ஒரு நாத்திகவாதி. கடவுளை நம்பாதவன் என்றெல்லாம் பேசி இருந்தார். அந்த வீடியோக்கள் வைரலானது.

அந்த விவாத நிகழ்ச்சியில்.. “ஜோசியருக்கும் நடிகர் மாரிமுத்துக்கும் விவாதம் வந்தபோது.. உங்களுக்கு இடுப்புக்கு மேலே உடலில் ஒரு பிரச்சனை இருக்கிறது என தெரிவித்து இருந்தார்.

அதற்கு மாரிமுத்துவோ எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.. நான் ஆரோக்கியமாக இருக்கிறேன்.. இடுப்புக்கு மேலே இதயம்தான் இருக்கிறது. அது நன்றாகவே ஓடிக் கொண்டிருக்கிறது என தெரிவித்திருந்தார்.

ஆனால் தற்போது மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரணம் அடைந்து விட்டதால் அந்த வீடியோவை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.

உங்களுக்கு இதயத்தில் பிரச்சனை இருந்துள்ளது.. அதனால்தான் தற்போது அது உங்கள் உயிரை பறித்து விட்டது எனவும் சிலர் கருத்து தெரிவித்து சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

Reason behind Director Actor Marimuthu death

More Articles
Follows