நீதிமன்றத்தின் மௌனம் ஆபத்து.. பாதிக்கப்பட்டவங்களுக்கு நாம இருக்கோம்..; சூடு கிளப்பும் சூர்யா

நீதிமன்றத்தின் மௌனம் ஆபத்து.. பாதிக்கப்பட்டவங்களுக்கு நாம இருக்கோம்..; சூடு கிளப்பும் சூர்யா

சூர்யா தயாரித்து அவர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜெய் பீம்’.

ஞானவேல் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன், லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இது 1990களில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை கதையாக கொண்டுள்ளது.

அதாவது.. அப்பாவி பழங்குடி இன மக்களின் வாழ்க்கையைப் பற்றிய கதையாக இது உருவாகியுள்ளது.

பழங்குடி மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் வக்கீலாக சூர்யா நடித்துள்ளார்.

இதன் டீசர் கடந்தவாரம் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் அக்டோபர் 22 படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளனர்.

மக்கள் மீது போலீஸ் காட்டும் அராஜகம்.. அதிகாரம்… அடக்குமுறை என பரபரப்பாக உள்ளது. அதே சமயம் சூர்யா பேசும் சூடான வசனங்கள் அனல் பறக்க வைக்கும் வகையில் உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதில்… ‛‛பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு நீதி கிடைக்கணும், அதை தார்மீக நீதிமன்றம் உறுதி செய்யணும்.

தப்பு செய்பவர்களுக்கு ஜாதி, பணம் என நிறைய இருக்கு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நாம தான இருக்கோம்.

நீதிக்கு ஆதரவான வார்த்தைகளை விட அநீதிக்கு எதிரான நீதிமன்றத்தின் மவுனம் ஆபத்தானது” உள்ளிட்ட வசனங்கள் கவரும் வகையில் உள்ளது.

தீபாவளியை முன்னிட்டு நவம்பர்,2ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஜெய் பீம் திரைப்படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Suriya voluntarily acted in ‘Jai Bhim’, trailer looks powerful!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *