தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.
இந்த படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் ‘லால் சலாம்’ என்ற படத்திலும் நடித்து வந்தார் ரஜினிகாந்த்.
இந்த படங்களைத் தொடர்ந்து லைக்கா தயாரிக்கும் ‘தலைவர் 170’ படத்தில் நடிக்க உள்ளார் ரஜினிகாந்த்.
இந்தப் படத்தை ‘ஜெய் பீம்’ புகழ் ஞானவேல் இயக்க உள்ளார். இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக முதலில் விக்ரம் நடிப்பார் என கூறப்பட்டது. அதன் பின்னர் அர்ஜுன் நடிப்பார் என தகவல்கள் வந்தன.
இந்த நிலையில் முக்கியமான கேரக்டரில் நடிகர் அமிதாப்பச்சன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அமிதாப் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் 1991 இல் வெளியான ‘ஹம்’ என்ற ஹிந்தி திரைப்படத்தில் இணைந்து நடித்தனர்.
தற்போது 32 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இது அமிதாப் நடிக்கும் நேரடி தமிழ் படமாகும். ஒருவேளை இந்த தகவல் உறுதியாகும் பட்சத்தில் அமிதாப் இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாவார் என எதிர்பார்க்கலாம்.
சில ஆண்டுகளுக்கு முன் அமிதாப் மற்றும் எஸ்.ஜே. சூர்யா இணைந்து ஒரு நேரடி தமிழ் படத்தில் நடித்தனர். அந்தப் படத்திற்கு ‘உயர்ந்த மனிதன்’ என்றும் தலைப்பிட்டு இருந்தனர். ஆனால் அந்த படம் டிராப் ஆகிவிட்டது குறிப்பிடத்தக்கது.
After 32 years Amitabh Bachchan and Rajini will act together in Thalaivar 170