தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சூர்யாவின் சினிமா கேரியரில் நிறைய ஹிட் படங்களை சொன்னாலும் முக்கியமாக காக்க காக்க, வாரணம் ஆயிரம் ஆகிய படங்களை குறிப்பிட்டு சொல்லியே ஆக வேண்டும்.
சூர்யா – கவுதம் மேனன் கூட்டணிக்கு எப்போதுமே மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருப்பதால் இவர்கள் மீண்டும் இணைய மாட்டார்களா? என ரசிகர்கள் கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.
இவர்கள் இணையவுள்ளதாக அடிக்கடி செய்திகள் வந்தாலும் அவையனைத்தும் வதந்தியாகவே முடிந்து போனது.
ஆனால் தற்போது சூர்யா – கவுதம் மேனன் கூட்டணி இணைவது அதிகாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது.
கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் வெப் தொடரில் சூர்யா இணைந்திருக்கிறார். இந்த தகவலை பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் உறுதிசெய்துள்ளார்.
சூட்டிங் ஸ்பாட்டில் சூர்யா எனர்ஜியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தற்போது சூர்யா கை வசம் வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’, பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படம் என படங்கள் உள்ளன.
Suriya and Gautham Menon joins for a new web series
Shooting for @menongautham – it's a web film starring Suriya. @Suriya_offl . Great energy on sets today!
— pcsreeramISC (@pcsreeram) November 17, 2020